search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் தங்கத்தினை ஜீன்ஸில் வைத்து கடத்திய பெண்ணை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Goacustomsaction #womenarrested
    பனாஜி:

    கோவா விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    அப்போது அந்த பெண், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை ஜீன்ஸ் உடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட தங்க பேஸ்ட் 590 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 18,08,840 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Goacustomsaction #womenarrested

    சேலத்தில் தங்கம், வெள்ளி வாங்கி தருவதாக கூறி நகைக்கடை அதிபரிடம் ரூ. 7½ கோடி மோசடி செய்த தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவை சேர்ந்தவர் துளசிராம். இவரது மகன் லட்சுமிகாந்த் (வயது 26). இவர் மொத்தமாக வெள்ளி, தங்கத்தை வாங்கி ஆபரணமாக செய்து, விற்பனை செய்து வருகிறார்.

    இவர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான், பேர்லேண்ட்ஸ் ஏ.ஏ.தெருவில் உள்ள என்.எஸ். வில்லியன் பெயரில் நகைக்கடை நடத்தி வரும் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் சிங்கவி ஆகியோரிடம் இருந்து மொத்தமாக வெள்ளி, தங்கம் வாங்கி தொழில் செய்து வந்தேன். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி வரை தங்கம், வெள்ளி மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக வங்கி மூலம் ரூ.7 கோடியே 58 லட்சத்து 36 ஆயிரத்து 750 அவர்களிடம் செலுத்தினேன்.

    இதனை தொடர்ந்து அவர்கள் தங்கம், வெள்ளி ஆகியவை கொடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் மரியமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத்தில் 24 காரட் தங்க இழைகளால் மூடப்பட்ட ஸ்வீட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. #RakshaBandhan
    அகமதாபாத்:

    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டினை வடமாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள இனிப்பு கடை ஒன்று வித்தியாசமான அதே வேளையில் பிரம்மாண்டமாக ஒரு ஸ்வீட்டை தயார் செய்துள்ளது. 

    பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் 24 காரட் தங்க இழைகளால் மூடப்பட்டுள்ள இந்த ஸ்வீட் ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ‘வழக்கமாக பயன்படுத்தும் சில்வர் இழைகளுக்கு பதிலாக தங்க இழைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்வீட்டை விரும்பி வாங்கிச்செல்கின்றனர்’ என கூறியுள்ளார் கடை உரிமையாளர். 
    ×