என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95936"

    • உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 15ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல் (வயது 30 ). நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த செல்வத்துரை, செல்வகுமார், சதீஷ் உள்பட 10 மீனவர்கள் படகில் சென்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இந்திய கடற்படையினர் சந்தேகம் அடைந்து படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நேரத்தில் மழை பெய்ததாலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும் இந்த எச்சரிக்கையை கவனிக்காமல் படகு சென்றது.

    இதனால் மேலும் சந்தேகமடைந்த இந்தியா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர் வீரவேல் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து படகு அருகில் வந்த இந்திய கடற்படையினர் தாங்கள் சுட்டது தமிழக மீனவர்தான் என்பதை உணர்ந்து உடனடியாக வீரவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த நிலையில் மீனவர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் , கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள்? முறைப்படி எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    தற்கிடையே துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வீரவேலுடன் மீன் பிடித்த சக மீனவர்கள் 9 பேரும் கரைக்கு திரும்பினர். பின்னர் உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர்களில் சிலர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்காணிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் தற்பொழுது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது வேதனை அளிக்கிறது. துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்திற்கு பின்னர் இந்திய கடற்படையினர் சிலர் எங்களை கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கினர். எதனை கடலில் தூக்கி போட்டீர்கள் என விசாரித்தனர். நாங்கள் ஒன்றுமே போடவில்லை என எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.

    மேலும் படகு முழுவதும் சோதனை இட்டனர். அதன் பின்னரே படகில் இருந்து அவர்கள் வெளியேறினர். எங்களுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றோம். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மீனவர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளது. விசாரணை முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தெற்குதெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி தனகுமாரி (வயது 33). சம்பவத்தன்று இவர் தென்னமநாட்டில் இருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். தஞ்சை ரெயிலடியில் இறங்கிய தனகுமாரி தான் வைத்திருந்த ஹேண்ட்பைக்கை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த சிறிய பையையும் அதில் இருந்த 5 பவுன் தங்க நகையையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பையை அபேஸ் செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இது குறித்து தனகுமாரி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டை அருகே அரியமங்கை ரெயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உடல் சிதறி கிடப்பதாக தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு சம்பத்குமார், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் சென்னை-திருச்சி சோழன் விரைவு ரெயில் அவர் மீது மோதி இருக்கலாம் என தெரியவந்தது.

    இருப்பினும் அவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே ஓடும் பஸ்சில் நர்சிடம் சில்மி‌ஷம் செய்ததால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

    விருதுநகர்:

    திருச்சுழி அருகேயுள்ள சிலுக்குபட்டியைச் சேர்ந் தவர் வேல்லட்சுமி (வயது 28). இவர் அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    வேலை முடிந்து ஊருக்கு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தார். அதே பஸ்சில் காவலாளியாக வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவரும் பயணம் செய்தார். அவர் வேல்லட்சுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து வேல்லட்சுமி தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். பஸ் நிறுத்தத்தில் வேல்லட்சுமியின் உறவினர்கள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினர். இது குறித்து கருப்பசாமி தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் காயமடைந்தனர்.

    இது குறித்து எம்.ரெட்டியபட்டி போலீசில புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த இவர் திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவரிடம் டாஸ்மாக் பார்களை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நெல்லையப்பன் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் அவர் அளித்த மரண வாக்குமூலம் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவர் தலைமறைவாக இருந்தார். காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

    அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 4 வாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் கலெக்டர் ஆபீசில் வன அதிகாரி மனைவி 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    ஆற்காடு தாலுகா பூகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா அமிர்தி வனச்சரக அலுவலராக பணியாற்றினார். தற்போது சஸ்பெண்டாகி உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி மெர்லின்மாலதி (38). அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி மெர்லின்மாலதி மனு கொடுத்தார். அதில் தனது கணவர் ராஜா, வனத்துறையில் வேலை பார்த்து வந்தார்.

    தற்போது சஸ்பெண்டு செய்யபட்டுள்ளார் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார். இது பற்றி கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்.

    இதுபற்றி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தேன் ஆனால் விசாரணைக்கு வரவில்லை. அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மெர்லின்மாலதி மகன்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மெஞ்ஞானபுரம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தண்டுபத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். நேற்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. 

     இதேபோல் அப்பகுதியை சேர்ந்த லிங்கம், சுதாகர் ஆகியோர் வீடுகளிலும் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சமீப காலமாக இந்த பகுதி வீடுகளில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே இது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    காதல் தோல்வியால் மனமுடைந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மலைக்கோட்டை:

    கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா வயலூர் குடித்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ராதிகா (வயது 20). இவர்  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வி.என்.நகர் 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். 

    இந்தநிலையில் நேற்றிரவு வீட்டிற்கு சென்ற ராதிகா, திடீரென அங்குள்ள ஸ்டோர் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் ராதிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர்.  அப்போது அவருக்கும், குளித்தலை வயலூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, கடந்த ஒரு வாரமாக ராகுல், ராதிகாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். காதல் தோல்வியால் மனமுடைந்த ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது60). இவர் நேற்று மாலை தண்ணீர் பிடிப்பதற்காக நடுப்பட்டி சாலையை கடந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பழனியம்மாளை மீட்டு தருமபுரி அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். 

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனியம்மாள் பரிதாபமான உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே சிறுவன் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி

    தருமபுரியை அடுத்த கொடுத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஜெயம்ரவி என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். மாதேஷ் வீட்டில் அவரது மகன் ஜெயம்ரவி வசித்து வந்தார். சம்பவத்தன்று மஞ்சுளாவின் உறவினர்கள் சிறுவன் மாதேசை கடத்தி சென்றுவிட்டனர்.

    இது குறித்து மாதேஷ் கொடுத்த புகாரின்பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே திருச் சிற்றம்பலம் கூட்டு ரோடு சப்தகிரி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். டிரைவர். இவரது மனைவி அமுதமொழி (வயது 32).

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே ஆறுமுகத்துக்கும், அவரது மனைவி அமுதமொழிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அமுதமொழி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதமொழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகையில் இரவு நேரத்தில் செல்போனில் பேசியதால் தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை சமத்துவபுரம் பாப்பாத் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவரது மனைவி வெண்ணிலா (37). இவர்களது மகன் பரத் (20). கூலித் தொழிலாளி.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு பரத், வீட்டுக்கு வந்தார். அப்போது தாய் வெண்ணிலா , செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த பரத், இரவு நேரத்தில் யாரிடம் பேசி கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இதனால் தாய்- மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து வெண்ணிலா வாக்குவாதம் செய்து பேசிக்கொண்டே இருந்ததால் பரத் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் திடீரென வெண்ணிலாவை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் பரத்தை கைது செய்தனர்.

    செல்போனில் பேசிய தாயை பெற்ற மகனே தாக்கி கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×