search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95936"

    வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் பத்மினி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது41). இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வந்து தனது மகனுடன் வசித்து வந்தார். புதுவையில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலைபார்த்து லட்சுமி குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே லட்சுமிக்கு நெஞ்வலி மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்தும் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு மகன் தூங்கிய பின்னர் லட்சுமி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு தினகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தவளக்குப்பம் அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே ஆண்டியார்பாளையம் காலனியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது57). பிளம்பராக வேலைசெய்து வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில் ஒரு மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இதற்கிடையே வீரப்பன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி ஜெயா கண்டிக்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் நேற்றும் வீரப்பன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி ஜெயா மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்று வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்தால் திருமணத்தை எப்படி நடத்துவது என்று கண்டித்தார்.

    இதையடுத்து வீரப்பன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். வழக்கம்போல் கணவர் மிரட்டுவதாக எண்ணி ஜெயா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி வீரப்பன் தீவைத்து கொண்டார்.

    உடல் முழுவதும் தீபரவியதால் வலியால் வீரப்பன் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்து வீரப்பனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகர்கோவிலில் இன்று கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). தொழில் அதிபர். இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார்.

    இவரது வீடு 3 மாடி கொண்ட பங்களா வீடு ஆகும். இங்கு சுப்பிரமணி, அவரது தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோர் வசித்து வந்தனர்.

    வழக்கமாக சுப்பிரமணி காலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கி விடுவார். இன்று காலை நீண்டநேரமாகியும் கடையை திறக்க செல்லவில்லை. இதனால் கடையில் வேலைபார்க்கும் ஊழியர் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். கதவை பலமுறை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் சுப்பிரமணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டு படுக்கையறையில் சுப்பிரமணி, ருக்மணி, ஹேமா, ஷிவானி ஆகிய 4 பேரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாக கிடந்தனர். இரவில் அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 4 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    குடும்பத்துடன் தற்கொலை செய்த தொழில் அதிபர் சுப்பிரமணி தொழிலுக்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வேதனையில் சுப்பிரமணி, தானும் வி‌ஷம் குடித்து குடும்பத்தினருக்கும் கொடுத்து தற்கொலை செய்து இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சுப்பிரமணியின் மகள் ஷிவானி, ஹோமியோ டாக்டருக்கு படித்து வந்தார். 

    பென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த காணப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டீக்கடை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது30). இவருக்கும் திருப்பூரை சேர்ந்த தனலட்சுமி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி திருப்பூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேட்டு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர் அருகே இன்று கார்-லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கீழமாயனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 70). இவர் தனது  உறவினர்களான சாலப்பட்டியை  சேர்ந்த நவீன், கீழமாயனூர் கோமதி, அருணா மற்றும் மேலவெளியூர் முருகேசன் மற்றும் 1 வயது குழந்தை கிஷோக் ஆகியோருடன் இன்று காலை முசிறி ஈச்சங்கோட் டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர்.

    லாலாப்பேட்டை மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது அந்த வழியாக எதிரே திருச்சியில் இருந்து கரூர் நோக்கி மினி லாரி வந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த குழந்தை கிஷோக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    மற்றவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதுகுறித்த தகவல் அறிந்த தும் லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிய வர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நவீன், கோமதி, அருணா ஆகியோர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந் தது. முருகேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து லாலாப்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று முதுகலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள படிக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டவாறு ஒரு மாணவர் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு இன்று காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் அளித்தனர்.

    விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாணவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு பட்டதாரி என்ற முதல்கட்ட தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், உயிரிழந்த மாணவர் பெயர் ரிஷி ஜோஷ்வா (24) என்பதும் அவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் இன்றிரவு தெரியவந்தது.

    எம்.ஏ. ஆங்கிலம் பயின்றுவந்த ரிஷி ஜோஷ்வா, சில நாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நேற்றைய செமஸ்ட்டர் தேர்வை எழுதாமல் தவறவிட்டதாகவும் அவரது சகமாணவர்கள் தெரிவித்தனர்.

    தனது மரணத்துக்கான காரணத்தை ஆங்கில பேராசிரியர் ஒருவருக்கு ஏற்கனவே அவர் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
    கிருஷ்ணகிரியில் மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது பெண். இவர் காவேரிபட்டணம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி அன்று வீட்டில் தனது தந்தையிடம் மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கிடைக்கவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தந்தை எனது மகளை கிருஷ்ணகிரி அருகேயுள்ள கட்லுக்குட்டப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் இளவரசன் (வயது23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    தர்மபுரி அருகே 4 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் வெள்ளோலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி அம்பிகா (வயது30). இவர்களுக்கு சுமித்ரா (14) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுமித்ரா அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த  போது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மதிகோன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது41) உள்பட 15 பேர் ஒரு வேனில் சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். வேனை அதே பகுதியை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று வேன்டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த செல்வகுமார், விஜயா(52), லட்சுமி(42), ராணி(52) இலஞ்சியம்(50), கனக வள்ளி((50), கலைசெல்வி(40)வேன் டிரைவர் கதிரேசன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    பாபநாசத்தில் தாய் வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    பாபநாசம் நகர சுத்தி தொழிலாளர் காலனியில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேரி (27). கணவன்-மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் முருகானந்தம் அதே தெருவில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி மேரி கணவர் முருகானந்தம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் பிரேதத்தை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் ராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த முகமது கனி (வயது 38) என்பவர் தலைமையில் பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (41), எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த மைதீன் (51), திருச்சியை சேர்ந்த முகமது ரபீக் (37) ஆகிய ஆண்கள் ஒரு குழுவாகவும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கற்பகம் (45) என்பவர் தலைமையில் திருச்சியை சேர்ந்த ஷமீம் பேகம் (45), நாகூரம்மா (40), கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (41), மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி (55) ஆகிய பெண்கள் ஒரு குழுவாகவும் வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இவர்கள் 9 பேர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அனைவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    பின்னர் அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 5 பெண்கள் உள்பட 9 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 9 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்பில் இருந்து வந்த 10 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 365 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை அவர்கள் யாருக்காக கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 10 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கழனிவாசலில் அரசின் சார்பில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மேலப்பனையைச் சேர்ந்த செந்தில் (வயது 37) என்ற கட்டிடத் தொழிலாளி ஈடுபட்டு வருகிறார்.

    வழக்கமாக இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக செந்தில் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு செந்தில் தண்ணீர் தொட்டியின் மேலே சென்று தூங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்த அவர், தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றுள்ளார்.

    அப்போது நிலை தடுமாறி செந்தில் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×