search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.எல்.ராகுல்"

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் இருந்த கே.எல். ராகுல், முதல் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என அபார வெற்றி பெற்றது.

    அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. இந்த டெஸ்டில் இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

    டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்திய கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டியிலும் அசத்த காத்திருந்தார். ஆனால், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கான்பூர் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.
    ஐசிசி டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.
    துபாய்:

    சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
     
    இந்திய கேப்டன் விராட் கோலி 8-வது  இடத்துக்கு பின்தங்கினார். மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறினார். 

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் நீடிக்கின்றனர்.

    ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

    நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பஞ்சாப் அணியின் ராகுலும், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும் தங்களது ஜெர்சிக்களை மாற்றி அணிந்து கொண்டனர். #IPL2018 #KLRahul #HardikPandya #MIvKXIP

    மும்பை:

    மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

    இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் 94 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அவரால் பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர்.

    அப்போது பஞ்சாப் அணியின் ராகுலும், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும் சிறிது நேரம் உறையாடினர். அதைத்தொடர்ந்து இரு வீரர்களும் தங்களது ஜெர்சிக்களை மாற்றிக்கொண்டனர். ராகுல் மும்பை அணியின் ஜெர்சியையும், பாண்டியா பஞ்சாப் அணியின் ஜெர்சியையும் அணிந்து கொண்டனர்.



    பொதுவாக கால்பந்து போட்டிகளில் வீரர்கள் இதுபோன்று ஜெர்சிக்களை மாற்றிக்கொள்வது வழக்கம். ஆனால் கிரிக்கெட் போட்டியில் இரு வீரர்களும் இதுபோன்ற செயலில் ஈருபட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். #IPL2018 #KLRahul #HardikPandya #MIvKXIP 
    ×