search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95995"

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    திருப்பதி :

    கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு திருப்பதியில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் உண்டியல் வருவாய் கணிசமாக குறைந்தது. அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாயும் குறைந்தது.

    இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளையொட்டி பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது திருப்பதியில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் உண்டியல் வருமானமும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் முதல் உண்டியல் வருவாய் ரூ.2 கோடியை தாண்டியது.

    ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

    கடந்த 30-ந்தேதி ரூ.3.56 கோடியும், 31-ந்தேதி ரூ.2.79 கோடியும், 1-ந்தேதி ரூ.2.77 கோடியும், 2-ந்தேதி ரூ.2.83 கோடியும் வசூலானது. அதிகபட்சமாக நேற்று ரூ.4.16 கோடி உண்டியல் வசூலானது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக உண்டியல் வருவாய் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது. நேற்று 30,379 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,327 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது. ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி 20,924 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதனால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    இந்தாண்டு தீபாவளியையொட்டி நாளை காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சாமிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி தீபாவளி ஆஸ்தானம் கொண்டாடப்படும்.

    இந்தாண்டு திருப்பதியையொட்டி நாளை காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சாமிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

    ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் கோவில் அருகே காட்சி அளிக்கின்றன.

    இதில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு பிரத்தியோக பூஜைகள் தீபாராதனை நடைபெறுகிறது.

    இதையடுத்து மாலை கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 32,365 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,681 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
    திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.
    திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.

    ஏழு தீர்த்தங்கள்: திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை, குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி என்பவையாகும்.

    ஏழு பெயர்கள்: பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டாலும் திருமலைவாசனுக்கு ஏழு முக்கிய பெயர்கள் இருக்கின்றன. அவை : ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி ஆகியனவாகும்.

    ஏழு தலை ஆதிசேஷன்: ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரம்மோத்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் `பெத்தசேஷ வாகனம்’ என்ற ஏழுதலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.

    ஏழு இடங்கள்: கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சாமி சன்னதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.

    ஏழு கலச ராஜகோபுரம்: திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு ஏழு உலகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏழு மகிமைகள்: திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை, சீனிவாச மகிமை, தல மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.
    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருடசேவை விழா நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வரதராஜபெருமாளையும், அங்குள்ள தங்க பல்லி, வெள்ளி பல்லி மற்றும் கீழ்தளத்தில் பெருந்தேவி தாயாரையும், சக்கரத்தாழ்வாரையும் மனமுருகி தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய விழாவான கருடசேவை விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. கோவிலில் இருந்து வரதராஜபெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்டினர். அங்கு திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். அதிகாலை 5 மணிக்கு கோபுர வாசலில் வந்தபோது, வானத்தில் கருடன் சுற்றி சுற்றி வட்டமிட்டு பக்தர்களை நெகிழ செய்தது.

    பின்னர் சாமி கருட வாகனத்தில் டி.கே.நம்பி தெரு, விளக்கடி கோவில் தெரு, ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு வழியாக பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் பெருமாளை மனமுருகி வழிபட்டனர்.

    பின்னர் அங்கு இருந்து புத்தேரி தெரு, வழியாக கச்சபேஸ்வரர் கோவில் அருகே சென்றது. அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பெருமாளை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து நாட்டு சர்க்கரையுடன் கற்பூர தீபாராதனை காட்டினர்.

    காஞ்சி சங்கரமடம் வந்தபிறகு கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து செங்கழுநீரோடை வீதி வழியாக பூக்கடை சத்திரம், 4 ராஜ வீதிகள் வழியாக மூங்கில் மண்டபம் வந்தடைந்தது. மூங்கில் மண்டபத்தில் இருந்து காந்திரோடு வழியாக பெருமாள் கருட வாகனத்தில் கோவிலை சென்றடைந்தார்.

    கருடசேவை திருவிழாவையொட்டி நேற்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், முருககேசன், குமரன், செந்தில்குமார் உள்பட திரளானோர் விழாவில் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் தரிசித்தனர்.

    பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் தியாகராஜன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
    திருப்பதி செல்பவர்கள் முதலில் வராகப் பெருமாளை வணங்கிய பின்னரே, சீனிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற மரபு இன்றளவும் உள்ளது.
    திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாசப் பெருமாள் தங்குவதற்கு இடம் அளித்தவர், புஷ்கரணியின் அருகில் உள்ள வராகப் பெருமாள் என்பது ஐதீகம். எனவே திருப்பதி செல்பவர்கள் முதலில் வராகப் பெருமாளை வணங்கிய பின்னரே, சீனிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற மரபு இன்றளவும் உள்ளது.

    வடஇந்தியாவின் சாளகிராமம், புஷ் கரம், நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் தென்னகத்தின் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போன்று ஸ்ரீமுஷ்ணமும் தானே உருவான சுயம்புமூர்த்தியை கொண்ட திவ்யதேசமாகும். ரிபு என்ற முனிவர் 12 ஆண்டுகள் ஸ்ரீவராகரை நோக்கி தவமிருந்து வராக தரிசனத்தைப் பெற்றதுடன், உபதேசமும் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
    திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய விழுப்புரம் வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் வளர்ந்துள்ளன.

    இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவில் விலை போவதால் இதனை வெட்டி கடத்தும் கும்பல் அதிக அளவில் உள்ளனர்.செம்மர கடத்தலை தடுக்க செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கல்யாண் டேம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது செம்மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கொண்டிருந்ததை கண்டு அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் 2 வாலிபர்கள் சிக்கனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 10 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாதையன் மகன் ஆண்டி (30) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் தருமன் (32) என தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு நாளில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
    திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் 2 நாட்களாக நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 6 மணியளவில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    அங்குள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தில் வைத்து உற்சவர்களுக்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8.30 மணியளவில் நாராயணகிரி பூங்காவில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அத்துடன் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவடைந்தது.

    நிகழ்ச்சியில் திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி லட்சுமிகாந்தம், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பதி மலைப் பாதையில் ஆந்திர அரசு பஸ் கவிழ்ந்து பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.

    திருமலை:

    திருப்பதியிலிருந்து திருமலைக்கு 2-ம் மலைப்பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.

    பஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளான நேற்று முன்தினம் இரவு உற்சவரான கோவிந்தராஜசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்தநிலையில் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவரான கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவரான கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் அம்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஊர்வலத்தின் முன்பாக கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவில் துணை நிர்வாக அதிகாரி வரலட்சுமி, உதவி நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கரரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை உற்சவர் கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    அதன்படி திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியதையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து 132 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் 17 கிலோ 800 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது. காணிக்கையாக வழங்கப்பட்ட பொருட்கள் கோவிந்தராஜசாமி கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னர் ஊர்வலமாக கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
    திருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அடுத்த சூர்யாபேட்டையை சேர்ந்தவர் மாதவி (வயது 34). இவருக்கு கார்த்திக் (18) என்ற மகன் உள்ளார். மாதவி கடந்த 2 ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் குணமடையாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாதவி தன்னுடைய மகன் கார்த்திக்குடன் ஸ்ரீசைலம் மலை பகுதியில் உள்ள சாட்சி கணபதி கோவிலுக்கு நேற்று வந்தார்.

    பின்னர் தான் தயாராக கொண்டு வந்த பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து தன்னுடைய மகன் கார்த்திக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.

    பின்னர் தனது உறவினர்களுக்கு போன் செய்து எனக்கு கேன்சர் நோய் உள்ளதால் நான் இனி பிழைக்க மாட்டேன். அதனால் நானும் என்னுடைய மகனும் பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

    இதுகுறித்து உறவினர்கள் ஸ்ரீசைலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சின்னய்யா மற்றும் போலீசார் விரைந்த வந்து மயங்கி கிடந்த தாய் மகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களை சோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துகாணப்படும். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து அலைமோதுகிறது.

    நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 78,630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 32,158 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் மையத்தில் காத்திருந்த பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ரூ.2 கோடியே 86 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. #TirupatiTemple
    உத்தரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். #Tirupati #YogiAdityanath
    திருமலை:

    உத்தரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்து ஆலய மரியாதையுடன் லட்டு, தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    கலியுகத்தின் தெய்வமாக திருப்பதி பாலாஜி அருள்பாலித்து வருகிறார். பெருமாளை இன்று தரிசித்து வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    உலக நன்மைக்காகவும் மக்கள் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். இன்று உலக அரங்கில் இந்தியா முன்னணியில் இருக்கின்றது. ஏழுமலையான் அருளால் இந்த நிலை தொடர வேண்டும் என்றார். #Tirupati #YogiAdityanath
    ×