search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96002"

    பேஷன் உலகில் மினி ஸ்கர்ட்டுக்கு எப்போதுமே நிரந்தரமான ஒரு இடமுண்டு. அதிலும் சில மினி ஸ்கர்ட் வகைகளுக்கு எப்போதுமே பெண்களிடம் வரவேற்பு அதிகம்.
    பேஷன் உலகில் மினி ஸ்கர்ட்டுக்கு எப்போதுமே நிரந்தரமான ஒரு இடமுண்டு. அதிலும் சில மினி ஸ்கர்ட் வகைகளுக்கு எப்போதுமே பெண்களிடம் வரவேற்பு அதிகம். கொஞ்சம் ஒல்லி பெல்லி, அழகிய கால்கள் இருக்கும் பெண் என்றால் யோசிக்காமல் மினி ஸ்கர்ட்டை தேர்வு செய்யலாம்.

    காலம் தாண்டி  மறையாமல் நிற்கும் ஃபேஷன் ட்ரெண்ட்களில் இந்த மினி ஸ்கர்ட்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நமக்கு பொருத்தமான  டாப்களுடன் மேட்ச் செய்து கொண்டால் ஹாட் குயினாக போஸ் கொடுக்கலாம்.

    காக்டெயில் பார்ட்டி, பகல் நேர கொண்டாட்டங்கள் என எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடிய வகையிலானது தான் இந்த கிரேப் மினி ஸ்கர்ட்.

    எம்பிராய்டரி ஜாக்குவர்டு ஸ்கர்ட்

    ஸ்கர்ட் முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்குவர்டு ஸ்கர்ட் பெண்களுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கும். அதேசமயம் இந்த எம்பிராய்டரி போடப்பட்ட ஸ்கர்ட்டுகளைத் தங்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறு மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்.



    ரைப்டு மினி ஸ்கர்ட்

    இந்த ஸ்கர்ட் அணிந்தவுடன் நீங்கள் உங்களுடைய பள்ளிப் பருவத்துக்கே சென்றவிட்டது போல் தோன்றும். இந்த ஸ்கர்ட்டுக்குப் பொருத்தமாக கூல் கிராபிக் டி-சர்ட்டுகளை அணியலாம்.

    ஏ - லைன் ஸ்கர்ட்

    இந்த ஏ - லைன் ஸ்கர்ட்டுகள் 1970 களில் மிக பிரபலமாக இருந்தன. அவை இப்போது மீண்டும் ஃபேஷன் உலகில் காலடி எடுத்து வைத்துள்ளன.

    ஸ்டிரைப்டு ஸ்கர்ட்


    செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமான கோடுகள் கொண்ட மினி ஸ்கர்ட்டுகள் மிகச் சிறந்த சாய்ஸ். இந்த ஸ்டைல் பார்ப்பவர்களை உடனே உங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும்.
    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் பெண்கள் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் தான்
    காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு பெருங்குழப்பமே இருக்கும். ட்ரெடிஷனல் உடையில் மார்டன் லுக் கொடுக்க சில டிப்ஸ்…

    ப்யூர் காட்டன் :

    மற்றவரக்ளை விட உங்களை தனித்துவமாய் காட்டிடும். எளிமையான உடையாக இருந்தாலும் டிசைனர் சாரியை விட இந்த ப்யூர் காட்டன் ரிச் லுக் கொடுக்கும். சற்று பருமனாக இருப்பவர்கள் ப்யூர் காட்டன் தவிர்த்திடுங்கள்.

    போச்சம்பள்ளி :

    காட்டன் சேலைகளை இந்த வகை மிகப்பிரபலம் இதில் வரும் சில ஜியோமெட்ரிக் வடிவங்கள் பார்ப்போரை கவர்ந்திடும். காட்டனுடன் சிறிது சில்க் சேர்ந்த துணியென்பதால் விரைப்பாக இல்லாமல் சற்றும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும்.

    பூம்காய் சேலை :

    இந்த வகை சேலை ஒரிசா மாநிலத்தில் மிகப்பிரபலம். சேலை முழுவதும் சின்ன சின்ன மீன்கள் இருப்பது போன்ற டிசைன் இருக்கும். வெற்றியையும், ஆரோக்கியத்தையும் பறை சாற்றும் விதமாக இந்தவவை சேலையை அணிகிறார்கள்.



    இதில் மீனைத் தவிர பூக்கள்,மயில் என பல்வேறு டிசைன்கள் வந்துவிட்டன.எத்தினிக் லுக் வேண்டுமென்றால் இதனை தேர்வு செய்யலாம்.

    டண்ட் சேலை :

    பெங்காலி காட்டன் சேலையான இது க்ரிஸ்ப்பாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பலரது ப்ர்ஸ்ட் சாய்ஸ் இது தான். இதில் பயன்படுத்தியிருக்கும் நூல் மிகவும் மெலிதாக இருப்பதால் ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காதி சேலை:

    கைத்தறி சேலைகளான இதனை ஃபேப்ரிக் சில்க் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்டனில் விரைப்பான லுக் கொடுப்பதால் பார்ட்டிகளுக்கு அணிந்து சென்றால் தனியாக தெரிந்திடும். அதே போல இதில் பெரிய கண்களை உறுத்தும் டிசைன்கள் இருக்காது.

    தாக்ககை சேலை :

    பங்கலாதேஷில் உள்ள தாக்காவிலிருந்து வருகின்ற சேலை இது. இங்கிருந்தே ப்ளைன் த்ரட் வொர்க் கொண்ட சேலைகளும் வருகிறது. தங்க நிறத்தில் ஜரிகை வேலைகள் நிரம்பியிருக்கும் அந்த சேலையை ஜம்தனி தாக்கை என்றும் அழைக்கப்படும். டிசைனர் சேலைக்கான லுக் இதில் கிடைத்திடும்.

    பசப்பள்ளி சேலை :

    ஒடிசாவின் கைத்தறி சேலை வகை இது. இதில் பெரும்பாலும், செக்டு பேட்டர்ன் தான் வரும். இந்த டிசைனில் ஒரு சேலை தயாரிக்கு ஒரு மாதம் வரை ஆகும் மற்ற சேலைகளை ஒப்பிடுகையில் இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் இதன் எலகண்ட் லுக்கிற்கு தாரளமாக கொடுக்கலாம்.
    சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.
    சேலை என்றாலே அதை நூலால் நெய்யப்பட்ட காந்தம் எனலாம். சேலைகள் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பெரிதும் கவர்கின்றது.

    என்ன தான் மெடி, சுடிதார், ஜீன்ஸ் என ஆயிரம் உடைகள் வந்தாலும், சேலை கட்டி வீதியில் உலாவரும் பெண்கள் வெளிப்படுத்தும் அழகே அழகுதான்.

    அதனால் தான் கவியரசு வைரமுத்து ‘சேலைச் சோலையே...’ என்று பாடி சேலையை சோலைக்கு ஒப்புமைப்படுத்தி மகிழ்கிறார். இன்னொரு கவிஞர்கூட, காஞ்சிப் பட்டு உடுத்திக் கஸ்தூரிப் பொட்டுவைத்து நேரில் தோன்றும் பெண்ணொருத்தி தேவதைபோல் தோற்றமளிப்பதாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

    அன்றாடம் சேலையின் பெருமைகள் நமது செவிகளில் தேன் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற சேலைகளுக்கு, அவை தோன்றி வளர்ந்து முழுமை பெற்றதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைத் தெரிந்துகொள்ள நமக்கெல்லாம் ஆவல் பிறக்கிறதல்லவா?

    சேலை, சீலை, சீரை இந்த மூன்று சொற்களுமே பண்டைக்காலத்தில் துணி என்ற பொதுவான பொருளையே குறிப்பதாக விளங்கின. இப்போதுதான் அவை பெண்கள் தங்கள் இடையில் தொடங்கி உடல் முழுவதும் சுற்றிக்கொள்ளும், ஆடை வகையாகக் கருதப்படுகிறது.

    இந்தியப் பெண்கள் பின்பற்றும் சேலை அலங்காரம் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்ணுடைகளிலும் தலைசிறந்ததாகப் புகழப்படுகின்றது.

    இந்தியாவில் பெண்கள், சேலை உடுத்திக்கொள்வது எப்போது தோன்றியது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆதியில் பெண்கள் தங்கள் இடையில் சொருகிக் கொண்ட சிறுதுணி வளர்ச்சியடைந்து சேலையாக மாறி இருக்காலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் பெண்கள் தற்போது அணியும் கண்ணைக் கவரும் சேலை முறை ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே தோன்றியது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம்.

    பண்டைக்காலத்தில் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடுகளான சுமேரியா, அசிரியா, எகிப்து பகுதிகளில் (ஏறக்குறைய கி.மு. 3500-ம் ஆண்டு) பயன்படுத்தியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற ஒரு சேலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அது இந்தியச் சேலை வகையைப் போலவே தோற்றமளிக்கிறதாம்.

    ஆதியில் பெண்கள், இடையை மறைக்க ஒரு துணியையும், மார்பை மறைக்க தாவணி போன்றதொரு துணியையும் பயன்படுத்தியிருக்கலாம். முந்தானை அணியும் முறை வேதகாலத்திலேயே உண்டாகியிருக்கலாம். தார்போட்டுக்கட்டும் பழக்கம் மத்திய இந்தியாவில் தோன்றி தென்னாட்டுக்குப் பரவியதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



    டாக்டர் குரியே என்பவர் சேலையின் வளர்ச்சிக் காலத்தை மூன்று பிரிவாகப்பிரிக்கிறார். ஆதிகாலம் முதல் கி.மு. 320 வரை முதல் பிரிவு. இக்காலத்தின் இறுதியில் தோன்றிய சிற்பங்களும் இலக்கியங்களும் தார்போட்டுக்கட்டும் முறை, தார் போடாமல் கட்டும் முறை, சேலை ரவிக்கை அணியும் முறை ஆகிய மூன்று வகைகளில், பெண்கள் சேலையை உடுத்தி வந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றன.

    இரண்டாவது காலம் கி.மு. 320-ல் இருந்து கி.பி. 320 வரை. இக்காலத்தில்தான் முன்கொசுவம் வைத்துக் கட்டும்முறை, குடகு முறை பாவாடை-தாவணி அணியும் முறை ஆகியவை தோன்றியதாம்.

    மூன்றாவது பிரிவு கி.பி. 320-ல் இருந்து 1100 வரை உள்ள காலத்தை உள்ளடக்கியது. நிலப்பகுதியின் சூழ்நிலைக்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்றாற்போல் சேலை அணியும் முறையில் பல மாறுதல்கள் தோன்றியது இக்காலத்தில் தான்.

    ராஜசேகரர் என்பவர் 10-ம் நூற்றாண்டில் இருந்து சேலை கட்டும் முறையை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார். ஒன்று, முன் கொசுவம் வைத்து, இடையில் உடுத்தி முந்தானையை இடத்தோளில் போட்டுக் கொள்ளுதல். இவற்றில் வங்காளம், குஜராத் பகுதிகளில் முந்தானை இடும் முறை மாறுபடுகின்றது.

    இரண்டாவதாக, தார் போட்டுக் கட்டும் முறை. இம்முறை மராட்டியத்திலும், மத்திய இந்தியாவிலும் அதிகமாக் காணப்படுகிறது. மூன்றாவது, பாவாடை, தாவணி அணியும் முறை. இதில் சேலையின் அளவு குறைந்தும், பாவாடை பெரியதாகவும் காணப்படும். அடுத்தது, ஆதிவாசிகளும், மலைவாழ் மக்களும் உடுத்தும் அகலம் குறைந்த சேலை முறை.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், ராஜசேகரர் கூறிய நான்கு முறைப்படிதான் சேலை கட்டும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தற்போது பெண்கள் ஒரே மாதிரி சேலை உடுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். தார்போட்டுக் கட்டும் பழைய முறைகள் முற்றிலும் இந்தியாவில் அழிந்துவிடவில்லை. ஆனால் முன் கொசுவம் வைத்துக் கட்டும் முறையையே இளம்பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    இறுதியாக புதுமைகள் விரும்பும் தமிழ் பெண்களுக்கு ஒரு செய்தி. சேலை என்பது நீங்கள் உடம்பில் சுற்றிக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆடைவகை மட்டுமல்ல. அது நமது பாரம்பரியம். அது நமது கலாசாரம். அது உங்களைத் தமிழ் இனப் பெண்கள் என்று உலகமே அறிந்து புரிந்து கொள்ளப் பயன்படும் அடையாளமும்கூட.

    தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக அன்னிய முறை ஆடைகளையே பெரிதும் விரும்பி அணிகிறார்கள். புதுமைகளை வரவேற்க வேண்டியதுதான்.

    ஆனால், அவை நம் அடையாளங்களையே அழித்து ஒழித்துவிடக்கூடிய அளவுக்கு ஆதரவு கரம் நீட்டலாமா? சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.
    துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிக்கு மத்தியில் உள்ள சிறு நகரமே கத்வால். இந்நகரம் கைத்தறி நெசவுக்கு மிகவும் பிரபலமானது. அதாவது கத்வால் பட்டு சேலை என்றாலே அதன் புகழ் அறிய வரும். கத்வால் சேலைகள் அழகிய சரிகை வேலைப்பாடு, நன்கு நெய்யப்பட்டு குட்டு பார்டர்கள் என்பது எடை குறைந்தவாறு சுலபமாக பராமரிக்க கூடிய வேலையாகவும் விளங்குகிறது. அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.

    கத்வால் சேலையை நெய்பவர்கள் என்பவர் இந்து தெய்வங்களுக்கு நெசவு செய்து தந்த ஜிவேஷ்ஹர் மகராஜ் வழி வந்தவர்களாம். இச்சேலை என்பது பெரும்பாலும் பண்டிகை மற்றும் விழாக்களுக்கு மட்டும் பயன்படுத்த ஏற்ற சேலையாக நெய்யப்பட்டன. அதாவது இறையம்சம் பொருந்திய சேலையாகவே கத்வால் சேலைகள் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட கத்வால் சென்டர்-மூலமே இதன் சிறப்பு இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம்.

    கத்வால் சேலை என்பது ஜரிகை பேட்டர்ன் தனியாகவும், சேலை தனியாகவும், குட்டு பார்டர் தனியாக நெய்யப்பட்டு பின் இணைக்கப்படுகிறது. முழு புடவை என்பது பருத்தி நூலால் நெய்யப்பட்டு அதன் பார்டர்கள் மட்டும் தூய்மையான மல்பெரி பட்டு மற்றும் டஸ்ஸர் பட்டுகளால் நெய்யப்படுகிறது.

    கத்வால் சேலை நெய்யும் முறை என்பது “குப்படம்” என கூறப்படுகிறது. இதன் பார்டர் நெய்யும் ஸ்டைல் “கும்பம்” என கூறப்படுகிறது. கத்வால் சேலைகள் மிகவும் எடை குறைவானவை. இந்த முழு சேலையை அப்படியே மடித்து கொண்டே வந்தால் ஒரு தீப்பெட்டி அளவிற்கு கொண்டு வரமுடியும். பட்டு நூல் மற்றும் பருத்தி நூல் இணைந்தவாறு கத்வால் சேலைகள் நெய்யப்படுகின்றன. நாகரிக வடிவமைப்புடன் அனைத்து வயதினரும் அணிய ஏற்றவாறு அழகுடன் கத்வால் சேலைகளின் உருவாக்கம் உள்ளன.



    வண்ணமயமான கத்வால் சேலைகள்

    அனைத்து வண்ணங்களிலும் அழகிய கத்வால் சேலைகள் கிடைக்கின்றன. இயற்கை நிறச்சாயல் மற்றும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் வண்ண சிறப்பு என்றவகையில் கத்வால் சேலைகள் சிறப்பிடம் பெறுகின்றன. மாறுபட்ட வண்ண சேர்க்கை மற்றும் உலகளாவிய சிறப்பை பெறும் வகையில் இருவகை வண்ண கலவை என புதிய வடிவில் கத்வால் சேலைகள் வந்துள்ளன.

    சேலையில் பதியப்படும் உருவங்கள், சிற்பங்கள் என்பவை கோவில் சின்னங்கள், பூக்கள், இயற்கை வடிவங்கள் என்பதுடன் நவீன கணினி வடிவமைப்புகளாக கணித உருவங்கள் போன்றவை பதியப்படுகின்றன. சரிகை வேலைப்பாடு என்பது தங்க சரிகை மற்றும் வெள்ளி சரிகை கொண்டவாறு நெய்யப்படுகின்றன. பார்டர் மற்றும் புட்டா பகுதிகள் பட்டு நூல் பின்னணியில் நெய்யப்படுவதால் சரிகையின் ஜொலிப்பு அழகுடன் வெளிப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகளிலும் விரும்பப்படும் கத்வால் சேலைகள்

    அதிக மவுசு மற்றும் விற்பனை பொருளாக கருதப்படும் கத்வால் சேலைகள் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக விரும்பப்படுகிறது. மிக சிறப்புமிகு பரிசளிப்பு பொருளாக கத்வால் சேலைகள் இருப்பதுடன், நிறைய சேலைகள் எடுத்து சென்றாலும் எடை அதிகம் இருக்காது என்பதும் மிக முக்கிய காரணமாக உள்ளது. கத்வால் சேலையை பராமரிப்பது சுலபமானதாக உள்ளதாலும் அனைவரும் அதிகமாக விரும்புகின்றனர். வீட்டில் கத்வால் சேலையை துவைக்கும்போது முதல் மூன்று முறை வெறும் தண்ணீரில் மட்டும் அலசி காய வைத்திட வேண்டும். அதன் பின்னரே குறைவான சோப்புதூள் போட்டு துவைத்து கொள்ளலாம். அதுபோல் அதிக சூரிய ஒளி படும்படி காய வைக்காமல் சற்று நிழலில் காய வைப்பது சிறந்தது.

    கத்வால் சேலைகள் என்பது சிகோ சேலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. கத்வால் சேலைகள் அதில் உள்ள கைவினை நெசவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் முக்கிய விழாவிற்கு என பிரத்யேக ஆர்டர் மூலம் நெய்யப்படும் சேலைகளின் விலை மிக கூடுதலாக இருக்கும். சுமார் ரூ.10,000/- லிருந்து ஆரம்பிக்கும் கத்வால் பட்டு சேலைகள், பருத்தி சேலை எனும்போது சற்று விலை குறைவாகவே காணப்படுகிறது. 
    பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பெண்களின் பட்டுப்புடவைகளின் நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.
    காஞ்சிப்பட்டு முதல் பனாரஸ் பட்டு வரையில் பட்டு என்றாலே புடவைதான் நினைவிற்கு வரும். ஆனால் பட்டு நூலில் கண்ணை கவர்ந்து மனதை கொள்ளை கொள்ளும் நகைகள் பிரமிப்பூட்டுபவை. பெண்கள் தாங்கள் அணியும் பட்டுபுடவைக்கு ஏற்ப நகை அணிய விரும்பும் போது தங்க நகையையே விரும்புவர். ஆனால் தங்க நகைகளில் புடவைக்கு ஏற்ற நிறங்களில் அணிவது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

    பல வண்ண கற்கள் பதித்த கவரிங் நகைகள் போட்டாலும் அவை விலையுயர்ந்த பட்டுப்புடவைக்கு ஜோடியாவது சற்று சிரமம் தான். ஆனால் பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பட்டுப்புடவைகளின் அதே நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.

    பட்டு நூல் நகைகளின் வரலாறு :

    பட்டு நூல் நகைகள் வட இந்திய பகுதிகளில் தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. பெரு நாட்டில் பட்டு நூல் நகைகள் அதிகம் பிரசித்தம். அதே வகை நகைகள் கொடைகானலில் உள்ள பழங்குடி பெண்கள் செய்து விற்று வந்தனர். ஆனால் தற்போது இளம் பெண்கள் விரும்பி அணிவதால் இந்நகைகள் பல இணையதள கடைகளில் விற்கப்படுகின்றன.

    புதிய டிசைன்கள் புராதனம் இணைந்து...

    பொதுவாக நகைகளில் பாரம்பரியத்தன்மை கொண்டவை ஆன்ட்டிக் வகைகள், சிறு ஆன்ட்டிக் மணிகள், ஆன்ட்டிக் தொங்கட்டான், ஜிமிக்கி, பென்டன்ட் போன்றவைகளை பயன்படுத்தி செய்யப்படும் பெரிய நெக்லஸ், ஜிமிக்கி, கழுத்தணிகள், வளையல்கள் போன்றவை மிகவும் கம்பீரமாக இருக்கும். இவற்றின் இடையே பட்டு நூல் சுற்றிய மணிகள் மிகவும் எடுப்பாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.

    வெள்ளை நிற கற்கள், முத்துக்கள், மணிகள் போன்றவைகளும் இந்த நகைகளில் செய்யப்படும் நகைகள் தூரத்தில் பார்த்தால் தங்க நகைகள் போலவே தோற்றமளிக்கின்றன. பொதுவாக பட்டுப்புடவையின் நிறங்கள் தனித்தன்மையுடன் இருக்கும். இவற்றிற்கான ப்ளவுஸ் துண்டை எடுக்கும் போது அதே நிறங்கள் பொதுவாக கிடைப்பதில்லை. ஆனால் பட்டு நூலுனால் செய்யப்படும் நகைகள் புடவையின் நிறத்திற்கு வாந்தமாக பொருந்தி விடுகிறது.

    பொடி முத்துக்கள் கொத்து கொத்தாக கோர்க்கப்பட்டு செயின் இடையேவும், இம்முத்துக்களால் ஆன காது வளையின் கீழ்புறம் தொங்கும் ஜிமிக்கியிலும், இதே முத்தக்கள் கொண்ட வளையல்களின் இடைஅயவும் பட்டு நூலினால் சுற்றப்பட்ட மணிகள் போர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் நகைகள் மிகவும் அழகாகவும் பட்டு புடவைகள் மட்டுமின்றி சுடிதார், ஜீன்ஸ், குர்தாவிற்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது. மிகவும் எடை குறைவாகவும், பெரிய அளவிலும், விலை குறைவாகவும் கிடைக்கும் இந்த நகைகள் இளம் பெண்களின் மனம் கவர்ந்த நகையாக இருக்கும்.

    ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன.
    ஆண் குழந்தைகளின் அழகே அவர்கள் அணியும் ஆடையை வைத்தே மேம்படுகிறது. பெரிய ஆண் மகன்கள் அணிகின்ற அதே வகை ஆடைகளை அணிந்தாலும் லிட்டில் சார்ம்ஸ், குட்டி இளவரசன் என்றவாறு உருவாக்க ஆடைகளின் வடிவமைப்பு கூடுதல் அழகுடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்கென ஆடை வடிவமைப்பாளர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிக மெனகெட்டு புதிய ஆடைகளை வடிவமைத்து தருகின்றனர்.

    ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன. இதில் பிரகாசமான வண்ணம் மற்றும் அழுத்தமான உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள் அதிகளவு ஆண் குழந்தைகளை கவர்கின்றன. தற்போது ஆண் குழந்தைகள் ஆடைகளில் கார்ட்டூன் உருவங்கள் பதித்த டீ-ஷர்ட்ஸ், ஸ்மார்ட் ஷர்ட்ஸ், அசத்தலான சூட்ஸ், தீம் ஆடைகள், நேரு கோட் ஆடைகள் போன்றவை அதிக பிரபலமானவையாக திகழ்கின்றன.

    கம்பீரமான தோற்றமளிக்கும் கோட் சூட்ஸ்

    பெரியவர்களுக்கு உருவாவது போன்றே அதிக பொலிவு மற்றும் அதிக வனப்புடன் கூடிய கோட் சூட்ஸ் ஆண் குழந்தைகளுக்கு தைக்கப்படுகின்றன. முக்கை அமைப்புடன் கூடிய புல் சூட் பிளேசர் மற்றும் அதற்கேற்ற பேண்ட் போன்றவாறு கிடைக்கின்றன அதுபோல் அழகிய வண்ணச்சட்டை, டை மற்றும் மார்பு பக்கத்தில் மட்டும் அணியகூடிய கோட் போன்றவையும் கிடைக்கின்றன. பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற கோடுகள் போட்ட வித்தியாசமான அமைப்புடன் கம்பீரமாக தோற்றமளிக்க செய்யும் கூடிய கோட் சூட்களும் கிடைக்கின்றன. இதில் உட்புற சட்டைக்கு பதிலாக டீ-ஷர்ட் இணைப்பு வழங்கப்படுகிறது.



    கார்ட்டூன் உருவ டீ-ஷர்ட்கள்

    குழந்தைகள் என்றாலே கார்ட்டூன் உருவங்களைதான் அதிகம் பிடிக்கும். எனவே ஆண் குழந்தைகள் அணிய ஏற்ற விதவிதமான கார்ட்டூன் உருவம் பிரிண்ட் செய்த டீ-ஷர்ட் உருவாக்கப்படுகின்றன. சில விலங்குகளின் வித்தியாசமான வடிவம், டிஸ்னி கார்ட்டூன் உருவங்கள், ஓகி, டோரா, பேட்மேன், சோட்டாபீம், ஹனுமன் போன்றவை அழகிய வண்ண சேர்ப்புடன் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-ஷர்ட்கள் வருகின்றன. இத்துடன் கார்ட்டூன் உருவங்கள் டீ-ஷர்ட் மீது எம்போஸ் மற்றும் உருவ அமைப்புடன் தொங்கும் வகையிலும் டீ-ஷர்ட் வருகின்றன.

    சூப்பரான ஸ்மார்ட் சட்டைகள்

    ஆண் குழந்தைகளுக்கு என வித்தியாசமான பேட்டர்ன் மற்றும் தையல் அமைப்புகளுடன் சட்டைகள் வருகின்றன. பிரிண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டைகளின் பாக்கெட் மற்றும் கை பகுதிகள் அதிக வித்தியாசத்துடன் தெரிவதற்கு என பிரத்யேகமான பட்டன் மற்றும் பிற இணைப்புகளுடன் சட்டை வருகின்றன. இந்த சட்டைகள் ஒற்றை நிறம் மற்றும் பல வண்ண கலப்புடன் பூக்கள், நேர்கோடு, குறுக்கு கோடு உள்ளவை போன்று உருவாக்கப்படுகின்றன. ஒரு வண்ண துணியமைப்பு மீது வேறு வண்ண துணியில் பூக்கள் மற்றும் இலைகள் செய்யப்பட்டு அதன் மீது இணைப்பு செய்யப்பட்ட சட்டை அதி அற்புதமான வடிவமைப்பு. மெல்லிய லேஸ் அமைப்பு உருவங்கள் சட்டை மீது பிரியாதவாறு தைக்கப்பட்டுள்ளன.

    ராஜகம்பீர ஷெர்வாணிகள்

    பிறந்த நாள், பண்டிகை மற்றும் பொது விழாக்களுக்கு அணிய ஏற்றவாறு இளவரசன் போல் தோற்றமளிக்கும் ராஜகம்பீர ஷெர்வாணிகள் கூடுதல் பொலிவுடன் உருவாக்கம் பெறுகின்றன. கண்ணை கவரும் பளபளப்பு, மெத்தென்ற மேற்புற நீளமான சட்டை அதன் மீது அழகிய எம்பிராய்டரி மற்றும் சரிகை வேலைப்பாடுகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. பிட்டு, ஜார்ஜெட், ஷிப்பான் துணிகளின் பளபளப்புக்கு ஏற்றவாறு வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆண் குழந்தைகளின் அட்டகாச தோற்றத்தை பொலிவு செய்யும் வண்ணம் ஆடை மேல் அணிய சில புது உபகரணங்கள், பதக்கங்கள், செயின்கள் போன்றவை தரப்படுகிறது. எனவே ஆண் குழந்தைகளின் ஆடை அணிவகுப்பு என்பது பலவிதமான வடிவங்கள், வண்ணம், தனிப்பட்ட கூடுதல் தையல்கள் கொண்டவாறு அழகுடன் உருவாகின்றன. 
    போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.
    இக்கத் நெசவு என்பது பழங்காலம் முதல் இந்தியா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்துள்ள கலைநயம் கொண்ட வடிவமைப்பு. இந்த நெசவின் மூலம் கிடைக்கும் வண்ண டிசைன் லேசாக அலைந்தது போன்ற வடிவத்தில் அழகிய வண்ணக் கலவைகளில் வித்தியாசமாக காட்சியளிக்கும். போச்சம்பள்ளி புடவைகளில் பெரும்பாலும் இந்த இக்கத் டிசைனை பார்க்கலாம். காட்டன் மற்றும் பட்டுத் துணிகளில் கைகளால் நெய்யப்படும் நெசவு முறையே இக்கத் ஆகும்.

    இக்கத் நெய்யப்படும் முறை

    இக்கத் நெசவு முறை மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பம் கொண்டதாகும். துணியை நெய்துவிட்டு வர்ணம் தேய்க்கும் வழக்கமான முறையில் இது நெய்யப்படுவது இல்லை. அதேபோல் நூல்கண்டுகளை முழுமையாக வர்ணம் தோய்த்து இரண்டு பல வர்ண நூல்களை கொண்டு நெய்யும் முறையிலும் இது நெய்யப்படுவது இல்லை. நூல்கண்டுகளில் டிசைன்களின் வர்ணங்களுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சாயம் தோய்க்கப்படுகிறது. இப்படி டிசைனிற்கு ஏற்ப சாயம் தோய்க்கப்பட்டு நூல் கண்டுகள் தோய்க்கப்பட்டு காய வைக்கப்பட்ட பின் தறியில் கோர்க்கப்பட்டு நெய்யப்படுகிறது. துணியை நெய்து முடிக்கும்போதுதான் அந்த டிசைனே வெளிப்படும். நூலை பாவு மற்றும் குறுக்கிழையில் சரியாக பொருத்துவதும் நிறங்களை அதற்கான இடங்களில் துல்லியமாக வைப்பதும் மிகவும் கஷ்டமான ஒன்று. இதில் சிறுபிழை ஏற்பட்டால் டிசைன் சரியாக வராது.



    இக்கத் நெய்தலின் வகைகள்

    பாவு நூலில் மட்டும் சாயம் பூசப்பட்டு, குறுக்கிழை ஒரே நிறத்தில் இருக்கும் படியாக வைத்து நெய்வது ஒரு வகையாகும். இதன் டிசைன் அதிகமாக அலைந்ததுபோல், வர்ணங்கள் சற்று மங்கலாகவும் தோற்றமளிக்கும். பாவு மற்றும் குறுக்கிழை இரண்டிலுமே ஆங்காங்கு வர்ணசாயம் தோய்த்து, காயவைத்து பின் நெய்யப்படும் புடவை இரட்டை இக்கத் நெய்தல் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் நெய்யப்படும் வடிவங்கள் நிறுத்தமாகவும், நிறங்கள் சற்றே அடர்த்தியாகவும் இருக்கும். போச்சம்பள்ளி மற்றும் புட்டபக்கா புடவைகளில் இந்த வகை இக்கத் நெய்தல் தான் பயன்படுத்தப்படுகிறது.

    பாவு ஒரே நிறத்தில் வைத்துக்கொண்டு குறுக்கிழையை மட்டும் இக்கத் முறையில் சாயம் தோய்த்து நெய்யப்படும் ஒரு வகையும் உண்டு. இது சற்றே கடினமாக இருக்கும். குறுக்கிழையில் உள்ள சாய வேறுபாடே டிசைனை நிர்ணயம் செய்கிறது. எனவே அவ்வப்போது தறியை சரிசெய்து டிசைனை கொண்டு வரவேண்டும்.

    புடவை வாங்கினோம், அழகாய் இருக்கிறது, உடுத்திக் கொண்டோம் என்றில்லாமல் இம்மாதிரி கைத்தறியில் உள்ள மனித உழைப்பையும், ரசனையையும், தொழில்நுட்ப அறிவையும் உணர்ந்து கொள்ளும்போது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிறது. 
    ஆண்கள் விரும்பி அணிகின்ற ஆடை வகைகளில் ஒன்று டெனிம் ஆடைகள். டெனிம் ஆடைகள் ஆண்களின் அலங்கார அணிவகுப்பு மற்றும் கச்சிதமான, கவுரவமான ஆடைகளாக திகழ்கின்றன.
    ஆண்கள் விரும்பி அணிகின்ற ஆடை வகைகளில் ஒன்று டெனிம் ஆடைகள். டெனிம் ஆடைகள் ஆண்களின் அலங்கார அணிவகுப்பு மற்றும் கச்சிதமான, கவுரவமான ஆடைகளாக திகழ்கின்றன. அதிக பயன்பாட்டிற்கு ஏற்ற டெனிம் துணிரகங்கள் என்பது இன்டிகோ நீலம் மற்றும் பிரிண்ட் கொண்டவைகளாக உள்ளன. இதனை அணிவதே ஆண்களுக்கு அலாதி பிரியம்.

    இந்த டெனிம் துணியில் தற்போது விதவிதமான சட்டைகள் அனைத்து விழாக்கள் மற்றும் சாதாரணமாக அணிய ஏற்ற வகையில் வருகின்றன. நீலம் மற்றும் கருப்பு பிரதான நிறங்களாக கொண்டு அதில் சில மாறுபட்ட வடிவமைப்பு, உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு ஆடவர் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வண்ணம் டெனிம் சட்டைகள் கிடைக்கின்றன.

    அனைத்து பருவ காலங்களிலும் அணிய ஏற்ற சட்டையாக திகழும் டெனிம் சட்டைகள் கண்கவர் பல விதமான டிசைன்களில் கிடைக்கின்றன. ஒரிஜினல் டெனிம் சட்டைகள் சிலாசர் புராசால் உடன் கூடிய ரோப் டையிங் முறையில் வடிவமைப்பு செய்யப்படுகின்றன. கடினமான டெனிம் துணி சட்டைகள் பார்க்க பளபளப்புடன் திகழாது என்ற போதும் அணியும் ஆடவர்களுக்கு கம்பீர தோற்றத்தை தருகின்றது. டெனிம் சட்டைகள் சாதாரணமான நீலநிறத்தை தவிர்த்து விதவிதமான வண்ண சாயம் கொண்டவாறு கிடைக்கின்றன.

    டீசல் வாஷ் டெனிம் சட்டைகள்

    கருநீல டெனிம் சட்டையில் டீசல் வாஷ் டிசைன் என்பது வெள்ளை கோடுகள் மற்றும் புள்ளிகள் போன்ற சாயலை உருவாக்குவது சாதாரணமான சட்டை வகையில் அணிய ஏற்றவாறு உள்ளது. ‘வி’ டிசைன் கொண்டு திக் பார்டர் கொண்ட ஷோல்டர் பகுதியுடன் இந்த சட்டை தைக்கப்பட்டுள்ளது.

    கோர் கோல் வாஷ் டெனிம் சட்டைகள்

    கருப்பு நிற சட்டையில் சாம்பல், பழுப்பு என்று மாறி மாறி சிதறுவது போன்ற அமைப்பே கோர் கோல் வாஷ் சட்டையாகும். சாம்பல் நிற சாயலுடன் துள்ளலான சட்டையாக திகழும் இதனை கருப்பு மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்களுக்கு அணிய ஏற்றது. கச்சிதமான சட்டை என்பதுடன் அணிந்தவர் ஆறுமையை மேம்படுத்தும் வகையில் உள்ளது.



    பேன்சி டெனிம் சட்டைகள்:-

    டெனிம் சட்டை மற்றும் பிரிண்டட் சட்டை இரண்டும் சேர்த வகையே பேன்சி டெனிம் சட்டைகள். நீல நிற கேஷ்வல் டெனிம் சட்டையில் சாம்பல், நீலம், சிகப்பு நிற பூ வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. டெனிம் சட்டையில் பேன்சி பிரிண்ட்கள் எம்பிராய்டரி மற்றும் வண்ண அச்சுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு கண்கவர் சட்டையாக அணிந்து கொள்ளாம்.

    பின்னல் டெனிம் சட்டைகள்

    ஒரு வித்தியாசமான சட்டை வகையாக காணும் இந்த டெனிம் சட்டைகள் பாதி பகுதி டெனிம் துணி பிளைனாக இருப்பதுடன் ே-6ால்டர் மற்றும் ஸ்லிவ் பகுதிகள் பின்னபட்ட துணிவகையில் காணப்படுகிறது. டெனிம் துணி வகையில் ஸ்வெட்டர் போன்ற பின்னப்பட்ட பகுதி மேற்புரத்திலம் கீழ்புர சாதாரண சட்டை பகுதியும் கொண்ட பின்னல் டேனிம் சட்டைகள் வருகின்றன.

    காலர் இல்லாத டெனிம் சட்டைகள்


    தற்போதய நவீன நாகரீகமே காலர் இல்லாத சட்டைகள் அணிவதே. அது போல் டெனிம் சட்டைகளும் வருகின்றன. வட்டவடிவமான பட்டை பார்டர் கழுத்தை ஒட்டி பார்க்கும் படி தைக்கப்படும் இச்சட்டைகள் கிடைக்கின்றன. கழுத்து பகுதி பட்டை பார்டர் என்பது சில சமயம் வேறு நிறத்தில் உள்ளவாறு தைத்து வருகின்றன. அணிகின்ற ஆடவருக்கு அழகிய தோற்றத்துடன் கச்சிதமான சட்டையாகவும் காலர் இல்லாத சட்டை திகழ்கிறது.

    சுருக்கம் நிறைந்த டெனிம் சட்டைகள்

    கல்லூரி மாணவர்கள் விரம்பி அணிகின்ற சுருக்கம் கொண்ட டெனிம் சட்டைகள் நீல நிற டெனிம் சட்டையில் அனைத்து பகுதிகளிலும் குறுக்கு நெடுக்குமாக சுருக்கங்கள் வல கொண்டவாறு இந்த சட்டை உருவாக்கப் பட்டுள்ளது. அதி நவீன நாகரீகத்திற்கு ஏற்ற டெனிம் சட்டை ஆடவர் மனங்கவர்ந்த சட்டைகளாக விளங்குகின்றன. 
    பிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது.
    இளம் பெண்கள் விரும்பி அணிகின்ற ஆடைகளில் பிரபலமான ஒன்று பிராக். பொதுவாக ஆசிய நாடுகள் பலவற்றிலும் பிராக் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலும் பிராக் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. முன்பு மேலை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பிராக் குழந்தைகளை குட்டி தேவதையாக காண்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

    பிராக் தற்போது இளம் பெண்கள் உயரத்திற்கு ஏற்ப வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு கால்முட்டி வரை நீண்ட குட்டை பிராக் மற்றும் மிக நீளமான பிராக் என்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டது. முன்பு சின்ரெல்லா மற்றும் பார்பி பிராக் தான் மிக பிரபலமானதாக அமைந்தது. தற்போது இந்தியாவில் அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்ற வகை அதிக பிரபலமான பிராக் வகையாக உள்ளது. புதிய அனார்கலி பிராக் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    கிழக்கத்திய நாடுகளில் மிக பிரபலமான அம்பர்ல்லா பிராக், அதுபோல் டபுள் பிராக், காலிதார் பிராக், கவுன் ஸ்டைல் பிராக் போன்றவாறு பல வடிவமைப்பு செய்யப்பட்டன. அம்பர்ல்லா பிராக் என்பது இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு வகை ஆடை. இந்திய வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு பிராந்திய மற்றும் நாகரீகத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்பு திறனை மேம்படுத்தி உருவாக்கம் செய்தனர். இதனால் அம்பர்ல்லா பிராக் என்பது சாதாரண மாடல் முதல் அதி ஆடம்பரமான மாடல் என்றவாறு பல விற்பனைக்கு வந்தன.

    அனார்கலி அம்பர்லா பிராக்ஸ்

    அம்பர்லா பிராக்ஸ் என்பதை அடிப்படையாக கொண்ட பல ஆடைகள் துணை பிரிவுகளாக உருவாக்கம் பெற்றன. அதில் வடகத்திய ஆடை வகையான அனார்கலி என்பது இணைந்த அம்பர்ல்லா பிராக்ஸ் கூடுதல் கவர்ச்சி மற்றும் மேம்பட்ட எம்பிராயிடரி போன்றவை செய்யப்பட்டவாறு உருவாக்கப்பட்டன. பொதுவாக முன்பு அம்பர்ல்லா பிராக்ஸ் இணையாக பைஜாமா பேண்ட் போன்றவைகளையும் அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளது.



    குடை போல் விரியும் ஆடை வடிவமைப்பு

    அனார்கலி அம்பர்ல்லா பிராக்களின் அழகே அதில் செய்யப்படும் எம்பிராயிடரி மற்றும் ஜொலிக்கும் பார்டர்கள் தான் கழுத்து மற்றும் மேல் சட்டை பகுதிகளில் அதிகபடியான எம்பிராயிடரி பார்டர்கள் கூடுதல் பொலிவை தர பேன்சி லேஸ்கள் மற்றும் பனாரஸி பார்டர் என பல பொலிவு தன்மைகள் செய்யப்படுகின்றன. அதுபோல் கீழ்புற பகுதி முழுவதும் அதிக விரிவுடன் குடை மாதிரி விரிய ஏற்ற அமைப்பு மற்றும் பெரிய சரிகை பார்டர்கள் கொண்டவாறு அழகிய குடை அமைப்பில் இருக்கின்றன. அனார்கலி ஆடையின் அழகே கைப்பகுதியில் மெல்லிய சல்லடை துணி அமைப்பு இணைந்து இருப்பதுதான் சில மாடல்கள் கைபகுதியில் துணி இன்றியும் காணப்படும்.

    விதவிதமான வண்ண சாயல்களுடன்

    அடர்த்தியான மற்றும் லைட் நிறங்களில் மேற் சட்டை அமைப்பு மற்றும் அதற்கேற்ற நிறத்தில் பேண்ட் போன்றவை இணைந்த ஆடை. இதில் பேண்ட் பகுதிகள் மிக சாதாரணமாகவே இருக்கும். மேல் சட்டை அமைப்பான அனார்கலி அம்பர்ல்லா பிராக்தான் அதின வடிவமைப்பு மற்றும் பொலிவு தன்மை கொண்டதாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதிகமான எம்பிராயிடரி மற்றும் பார்டர்கள் உள்ளவாறு, குறைந்த அளவில் மெல்லிய லேஸ் மற்றும் பூ தையல் போட்ட பார்டர் கொண்ட பிராக்களும் கிடைக்கின்றன.

    விழாக்காலங்கள் மற்றும் பண்டிகைக் காலத்திற்கு என்றால் அதிக ஜொலிப்பும், பளபளப்பும் கொண்ட பிராக் சரியாக இருக்கும். ஜார்ஜெட் பருத்தி, நௌான், டூபியான், பட்டு போன்ற பல துணிவகைகளில் உருவாக்கப்பெறும் பிராக்கள் அதன் வடிவமைப்புக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன. ஆடம்பர தோற்ற மளிக்கும்.கற்கள் பதித்த பார்டர் வைத்த பிராக்கள் அதிக விலை கொண்டவை. சிறு குழந்தை அணிந்த சுழலும், குடை அமைப்பு பிராக்- தற்போது இளம் பெண்கள் மனதை கவரும் வகையில் சில மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அனார்கலி அம்பர்ல்லா பிராக் என்பது இன்றைய பெண்கள் ஆடையில் புதிய டிரெண்ட்- ஆக விளங்குகிறது. 
    பெண்கள் அணியும் குர்தா அல்லது குர்தி என்பது சுடிதார், ஜீன்ஸ், பேன்ட் என்று எதன் மீதும் போட்டுக் கொள்ளக்கூடிய ஒரு ஆடை. இந்த வருடத்தில் சில புதிய டிசைனர் குர்திகளைப் பற்றி பார்ப்போம்.
    பெண்கள் அணியும் குர்தா அல்லது குர்தி என்பது சுடிதார், ஜீன்ஸ், பேன்ட் என்று எதன் மீதும் போட்டுக் கொள்ளக்கூடிய ஒரு ஆடை. இதன் மாடல்கள் அவ்வப்போது இளம் பெண்களின் ரசனைக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும். இந்த வருடத்தில் சில புதிய டிசைனர் குர்திகளைப் பற்றி பார்ப்போம்.

    அம்ப்ரெல்லா கட் டிசைனர் குர்தி

    இந்த டிசைன் பெரும்பாலும் ஜார்ஜட் துணியில், காலர் கழுத்து கொண்ட மாடலாக இருக்கிறது. இக்குர்தி முட்டி வரை நீண்டு அங்கு அரை வட்டமாக குடை போல் வெட்டப்பட்டிருக்கும். இந்த வடிவத்திற்கு பல வித பிரண்ட் கொண்ட துணியே எடுப்பாக இருக்கும். மிக மெல்லிய துணியில் ஆன இக்குர்தி இளம் பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

    கைட் (காற்றாடி) டிசைனர் குர்தி

    இது மிகவும் வித்தியாசமான கோணத்தில் தைக்கப்பட்டிருக்கும் டிசைனாக இருக்கிறது. இந்த குர்தி இடுப்பு வரை சாதாரணமாக வந்து இடுப்பிலிருந்து கீழே வரும் பகுதி முக்கோண வடிவில் இருக்கும் இந்த முக்கோண பகுதி கால் முட்டி வரையோ அல்லது கணுக்கால் வரையிலோ நீண்டிருக்கலாம்.

    ஹை-லோ டிசைனர் குர்தி

    இந்த மாடல் குர்தி முன்புறம் குட்டையாகவும், இருபுறங்களிலும் நீண்டும் பல அடுக்குகளாக இருக்கும். இது நீண்ட அகலமான முழு நீள ஸ்கர்ட் போலவும் முன்புற நடுப்பகுதி மட்டும் குட்டையாகவும் இருக்கும்.

    ட்ரையோ கட் குர்தி

    சிறு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரையில் பலரையும் கவரும் டிசைனாக இந்த குர்தி இருக்கிறது. உட்புற துணி நீளமாக கால் முட்டி வரையிலோ அல்லது கணுக்கால் வரையிலோ இருக்கும். அதன் மேல் உட்புற துணியின் வண்ணத்திற்கு மாற்றான நிறத்தில் வரும் மேற்புற துணி முன்புறம் ஒரு துண்டாகவும், மற்ற இரு புறமும் இரண்டு துண்டாகவும் பிரிந்து நீண்டிருக்கும். இது பெரும்பாலும் சில்க், சில்க்-காட்டன், ரா-சில்க், டஸ்ஸர் போன்ற துணிகளில் போடும்போது அழகாக இருக்கும்.



    பேட்-விங் டிசைன்

    இது கிட்டத்தட்ட ‘கஃப்தான்’ மாடல் போல் தோன்றும். சிறகை விரித்த வெளவால் போல் தோற்றம் தரும் இந்த டிசைன் அணிந்துக் கொள்ள சவுகரியமாக இருக்கும். மெல்லிய துணிகளில் பல வண்ணங்களும், சிறு பூக்களும் நிறைந்த ஃப்ளோரல் டிசைன் கொண்ட துணிகளில் தைக்கப்படும்போது இந்த குர்தி மிக அழகாக இருக்கும்.

    ஃப்ராக் டிசைன்

    இது சிறு பெண்கள் அணியும் ஃப்ராக் போல தோற்றம் தரும். மேலேயிருந்து இடுப்பு வரையில் உடலோடு ஒட்டியும், அதற்கு கீழே மடிப்புகளுடன் அகன்றும் ஃப்ராக் போல தோற்றம் தரும் இந்த குர்தி. இதற்கு கால்களோடு ஒட்டி இருக்கும் டைட் ஃபிட் பேன்ட் போட்டால் எடுப்பாக இருக்கும்.

    லேபர்ட் டிசைன்

    இது பல அடுக்குகளாக இடுப்பிலிருந்து கால் முட்டி வரையிலோ, கணுக்கால் வரையிலோ நீண்டிருக்கும். இந்த குர்தியை பிரன்ட் எதுவும் இல்லாமல் ப்ளெயின் துணியில் போட்டாலும் கூட அழகாக இருக்கும். மிகவும் தளர்வாக இந்த டிசைன் வயதான பெண்களுக்கும் கூட பொருத்தமாக இருக்கும்.

    விங்ஸ் டிசைன்

    இந்த மாடல் குர்தி இரண்டு துணிகளால் ஆனது. நடுப்பகுதி பூக்கள் அல்லது பிரிண்ட் போட்ட துணியால் தைக்கப்பட்டிருக்கும். உடலின் இருபுறமும் ப்ளென் துணியில், முன்புற துணி அளவிற்கு இடுப்பிற்கு சற்று கீழே வரை நீண்டு அதன் பின்பு அப்படியே நீண்டு கணுக்காலிற்கு சற்று மேலே வரையில் வந்து தொங்கும். முன் மற்றும் பின்புற துணிகள், உடலின் இருபுறமும் இது மாதிரி தொங்கும்போது பார்ப்பதற்கு இறக்கை போல் இருக்கும். இது ஒரு வித்தியாசமான டிசைன் என்று சொல்லலாம். 
    பெண்களே ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.
    ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பழமொழி. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நம்முடைய முன்னோர்கள் ஆடைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல தத்துவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவரது ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விஷயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால்தான் சில ‘ஜவுளிக்கடைகள்’ இப்போது ‘ஜவுளிக் கடல்’ களாக மாறிவருகின்றன. இந்த அளவுக்கு ஆடைகளை வாங்கும் போது கவனம் செலுத்தும் நாம் அதனை பராமரிக்கும் விஷயத்தில் விழிப்புணர்வாக இருக்கிறோமா என்றால் இல்லை.

    விலையுயர்ந்த துணிகளை வாங்குகிற நமக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துணியை எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்றும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் பார்ப்போம். ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை (துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில்) பார்த்து படித்துக்கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டுமா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன்படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கலாம்.



    1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல மின்ன வைக்கலாம். டிடர்ஜென்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது. உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜென்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம். சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும்.

    இதனால் ஆடைகளின் நிறம் மங்காது. சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே பெண்களே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது. ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.
    ×