search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96033"

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த 2 திருவிழாக்களின் போதும் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசனவிழா வருகிற 14-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    தொடர்ந்து 15-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவையொட்டி கோவில் கிழக்கு கோபுர வாசலில் பந்தல் போடும் பணி நடைபெற்று வருகிறது.
    பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.
    * ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன. அவை:- காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்).

    * பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

    * சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளை கொண்ட அற்புத தலம் இது.

    * இங்குள்ள நடராஜ பெருமானின் சன்னிதிக்கான, கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

    * இத்தலத்தில் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் இறைவன் அருள்பாலிக்கிறார். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங் களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    * சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி, தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

    * திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிதம்பரம் திருத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். எனவே அந்த நால்வரின் குரு பூஜையும், இந்த ஆலயத்தில் பெரிய திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    * சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா மிகவும் முக்கியமானது.

    * முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, நட ராஜரை துதித்து வழிபடுவார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுப்பாராம்.

    * சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது.

    * சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்த குளம் அருகில் சிறு தூண் நடப்பட்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால், ஆலயத்தின் 4 ராஜ கோபுரங்களையும் தரிசிக்க முடியும்.

    * சிதம்பரம் ஆலயம் என்றதுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த ஆலயத்தின் மூலவர் நடராஜர் என்பதாகத்தான் நினைப்பு வரும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்ததும் நடராஜரைத் தேடியே ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த ஆலயத்தின் மூலவர், லிங்க வடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    நடராஜ பெருமானுக்கு சதயம், திருவாதிரை உள்ளிட்ட 6 நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி சதயம் நட்சத்திர நாளான நேற்று நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. நடராஜ பெருமானுக்கு சதயம், திருவாதிரை உள்ளிட்ட 6 நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி சதயம் நட்சத்திர நாளான நேற்று மாலை 4.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    முன்னதாக நடராஜர் சன்னதியில் விநாயகர் பூஜை, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. அதையடுத்து 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
    எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கிறது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.

    எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கிறது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.

    நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை நீங்கள் காண முடியும்.

    நடராஜர் படத்தை திருவாதிரையன்று பூஜையறையில் வைத்து சிவபுராணம் படித்தால் கலைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்புக் கிட்டும். தட்சிணாமூர்த்தி படத்தை உத்ரம் நட்சத்திரன்று வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் ஞானம் சித்திக்கும்.

    துளசி மாடம் மட்டும் கிழக்குப் பக்கம் நின்று மேற்குப் பார்த்தபடி பூஜை செய்யும்படி அமைக்க வேண்டும். துளசியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.
    திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜ பெருமான் சிதம்பரத்துக்கு முன்பே இங்கே நடனமாடியதால் அந்த பெயர் பெற்றுள்ளது.
    திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜ பெருமான் சிதம்பரத்துக்கு முன்பே இங்கே நடனமாடியதால் அந்த பெயர் பெற்றுள்ளது. இதால் இக்கோவிலில் தில்லைச் சிதம்பரம் போன்றே நடராச சபை அமைந்துள்ளது. ஸ்படிலிங்கமும் ரகசியமும் இங்கு உள்ளன. அன்றாடம் ஸ்படிக லிங்கத்திற்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும், பஞ்ச கிருத்திய பூஜைகளும் நடைபெறுகின்றன.

    ஆடல் வல்லானின் அழகிய திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் பல. இவர் காலில் 14 உலகங்களை குறிக்கும் 14 சதங்கைகளுடைய காப்பு அமைந்துள்ளது. பிரணவம் முதல் இறுதியாகவுள்ள 81 பதமந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் அமைந்த அரைஞாண் இடுப்பில் திகழ்கின்றது.

    முடிந்துவிட்ட 28 யுகங்களை குறிக்கும் 28 எலும்பு மணிகள் கோத்து கட்டிய ஆரத்தையும் இவர் அணிந்துள்ளார். தலையில் மயில்பீலியும் மீன்வடிவில் கங்கையும், இளம்பிறையும் ஊமத்தம்பூவும், வெள்ளேருக்கும் சூடியுள்ளார்.

    சோடச கலைகளை உணர்த்தும் 16 சடைகளும் நடராசரிடம் இருப்பதை காணலாம். 15 சடைகள் தொடங்குகின்றன ஒன்று கட்டியுள்ளது. தோளில் ஒரு சிறு துண்டும், இடையில் புலித்தோல் அணிந்தும், இருகைகளில் உடுக்கை தீப்பிழம்பும் ஏந்தியுள்ளார். காலின் கீழ் முயலகனுடன் காட்சியளிக்கின்றார்.
    இந்த தனி சன்னதி சற்று இருட்டாகத்தான் உள்ளது. பக்தர்கள் நடராஜ பெருமானை உற்று நன்கு பார்த்தால் மேற்கண்ட அணிகலன்களை கண்டு ரசிக்கலாம்.
    ஆடல் கலையில் தேர்ச்சிபெற ‘ஆடலரசன்’ என்று வர்ணிக்கப்படும் தில்லைக் கூத்தனை, அவர் நடராஜப் பெருமானாக வீற்றிருக்கும் பஞ்ச சபைகளுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.
    ஆயக்கலைகள் அறுபத்து நான்கில், நடனக்கலையும் ஒன்று. பரதக்கலை என்பது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் கலை மட்டுமல்ல, விரல் அபிநயங்களாலும், விழிகளின் அசைவுகளினாலும், உடலின் நளின பாவத்தாலும், முகபாவனையாலும் கருத்துக்களையும், நவரசங்களையும் எடுத்துரைக்கும் அற்புதமானதாகும். அந்த ஆடல் கலையில் தேர்ச்சிபெற ‘ஆடலரசன்’ என்று வர்ணிக்கப்படும் தில்லைக் கூத்தனை, அவர் நடராஜப் பெருமானாக வீற்றிருக்கும் பஞ்ச சபைகளுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    தில்லையில் பொன்னம்பலம், மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை, திருவாலங்காட்டில் ரத்தினசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய ஐந்து சபைகள் உள்ளன. இந்த சபைகளுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நாட்டிய சபாக்களில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்து புகழ்கூடும்.
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்றது. இதில் சுவாமி நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆனந்த நடனமாடி அளித்த தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் கண்டுகளித்தனர்.
    பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். உலக புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும்.

    ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். மறுநாள் ஆயிரங்கால் மண்டபம் என்னும் ராஜசபையில் மூலவர் ஆனந்த நடராஜர், அம்பாளுடன் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி, இந்தாண்டுக்கான ஆனிதிருமஞ்சன விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 25-ந்தேதி இரவு தெருவடைச்சான் உற்சவமும், நேற்று முன்தினம் ஆனி திருமஞ்சன தேரோட்டமும் நடைபெற்றது. இதில் மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

    ஆனி திருமஞ்சன விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தரிசன விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங் கால் முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சாமிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. பின்னர், பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. நான்கு வீதிகளின் வழியாக சென்ற பஞ்சமூர்த்திகள் கோவில் உள்ளே மதியம் 2.10 மணிக்கு வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நடனப்பந்தல் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, சித்சபையில் உற்சவ ஆச்சாரியார் தலைமையில் மண்டகப்படி பிரசாத படையல் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பின்னர், மதியம் 2.50 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மூலவர் சன்னதிக்கு செல்லும் மகா தரிசன நிகழ்வு நடந்தது. அப்போது, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் மூன்று முறை ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை கண்ட அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை விண் அதிர எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    மேலும், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தரிசன விழாவையொட்டி அய்யப்ப சேவா சங்கம், விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்,மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில் தேரோடும் வீதிகளில் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 
    பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.
    நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்.

    1)மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபய ஹஸ் தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

    2) கீழிருந்து மேலாக முதலில் தூக்கிய திருவடியையும், அபயஹஸ்தத்தையும், திரு முகத்தையும் தரிசிக்க வேண்டும்.

    இவ்வாறு 2 வழிகளில் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

    நடராஜர் ஓம் என்ற பிரணவ மந்திர வடிவில் காட்சி அளிக்கிறார். அவருக்கு துணையாக சிவகாமி அம்மன் அருள் செய்கிறார். இந்த நடராஜரும், சிவகாமியும் நாம் பார்க்கும் போது 2 உருவங்களாக தெரிந்தாலும் தத்துவப்படி அவர்கள் ஒன்றாக இணைந்தே அருள்செய்கிறார்கள். உதாரணமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவனும்-சக்தியும் இணைந்தே காட்சி அளிக்கின்றனர்.

    பரத கலையை கற்றுக்கொடுப்பவர்களும், பரத கலையை கற்றுக்கொள் பவர்களும் மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் சிதம்பர நடராஜரை முன்னுதாரணமாக வைத்து வணங்குகிறார்கள். தங்களுடைய வீடுகள், வரவேற்பு அறைகளில் நடராஜர் சிலையை வைத்து மகிழ்கிறார்கள்.

    இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்தியாவின் சார்பில் நம்நாட்டு அடையாள சின்னமாக நம்முன்னோர்கள் நடராஜர் சிலையையே பரிசாக அளிக்க அனுமதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    சைவ சமயத்துக்கு உருவகமாக 2 திருவுருவங்கள் பழக்கத்தில் உள்ளன. முதலில் சிவலிங்க வழிபாட்டை கூறலாம். சிவலிங்கத்துக்கு சிறப்பு உருவமாக சிதம்பரம் நடராஜர் சிலையை நம்முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள் என்பது மேன்மையான சிறப்பாகும்.

    மேலும் பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.

    பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

    தகவல்:

    வெங்கடேசதீட்சிதர்
    சிதம்பரம் நடராஜர் கோவில்.
    செல்: 98944-06321.
    இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.
    இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
    ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
    விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
    விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
    ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

    - சிதம்பர பஞ்சாக்ஷர மந்திரம்

    பொதுப் பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலத்திற்கு பெயர் பெற்ற இடமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 16-ந் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

    இந்த நிலையில், நேற்று ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சித்சபையில் இருந்து கனக சபைக்கு எழுந்தருளினர்.

    இதையடுத்து சுவாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் முன்னும், பின்னுமாக நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து, 21 படிகள் வழியாக கீழவீதி தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தது. தேர் மண்டபத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் கோவில் பொது தீட்சிதர்கள் முன்னிலையில் மண்டகபடி பூஜை நடைபெற்றது. பின்னர், காலை 7.10 மணியளவில் ஆனந்தநடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். காலை 8.10 மணியளவில் விநாயகர் தேரை பக்தர்கள் முதலில் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.

    பின்னர் காலை 8.30 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதியில் 5 தேர்களும் வலம் வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது. தேர் மேலவீதி கஞ்சித்தொட்டிமுனை சந்திப்பில் நிறுத்தப்பட்டபோது, பருவதராஜகுல சமுதாயம் சார்பில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரருக்கு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் தேர்கள் அனைத்தும் நிலையை வந்தடைந்தது.

    தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

    ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணி முதல் 6 மணி வரை மூலவர் ஆனந்தநடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு ரகசிய பூஜை நடக்கிறது. இதையடுத்து, திருஆபரண அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு மேல் மகா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. 
    ஆனி திருமஞ்சன தினத்தன்று விரதமிருந்து நடராஜரை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும்.
    ஆனி திருமஞ்சன தினத்தன்று விரதமிருந்து நடராஜரை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும். மக்கள் நல்ல பயனை அடைவார்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஆண்-பெண் இருபாலரின் திருமணம் போன்ற வைபவங்கள் நடக்கும்.

    இந்த ஆனியை தொடர்ந்து ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என மாதங்கள் வளர்ந்து வரும். அந்த காலங்களில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.

    அனைத்து பக்தர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற கூடிய ஆனி திருமஞ்சன மகாஅபிஷேகத்தில் தங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ஆனி திருமஞ்சன வழிபாடு சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நடராஜர் சன்னதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.
    கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடலரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். மேலும் அன்றைய தினம் சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல் இறை வழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை.

    அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லை கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும் ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும்.

    அதற்கு உகந்த நாள் ஆனி மாதம் 6-ம் நாள். அதாவது 20-6-2018 (புதன்கிழமை) உத்திர நட்சத்திரத்தில் ஆனி உத்திர தரிசனமும், நடராஜர் அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. ஓடி ஓடி சம்பாதிக்கும் நமது வாழ்க்கையை, மற்றவர்கள் பார்த்து வியக் கும் விதத்தில் அமைத்துக் கொள்ள நடராஜர் தரிசனம் வழிகாட்டுகிறது.

    நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருக்கும். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழ வேண்டும். மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் இந்த விழா நடைபெறுகின்றது.

    மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறது. எனவே கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற மாணவச் செல்வங்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் முதன்மை பெற வழிவகுக்கும்.

    சிவராத்திரி அன்று சிவனை நாம் வழிபடும் போது இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.

    ‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், கரிசனத்தோடு வந்து காட்சி கொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்
    தாள்வாழ்க!
    கோகழி ஆண்ட குறு மனிதன் தாள்வாழ்க!
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க!
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

    என்று இறைவனைநாம் வாழ்த்திப் பாடினால் நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். நாம் வாழ்வாங்கு வாழ வாழ்வை வெல்ல, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றிவணங்க வேண்டுமென்று மாணிக்கவாசகர் எடுத்துரைக்கின்றார். அல்லல் பிறவியறுப்பவனை, சொல்லற்கு அரியனை, தில்லையுள் கூத்தனை, தென்பாண்டி நாட்டானை நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனை, ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும்.

    அன்றைய தினம் சிவபிரானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில், பால் அபிஷேகம் பார்த்தால் நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல் வந்துகொண்டே இருக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். எனவே அந்த அற்புத தரிசனம் தரும் ஆனி மாதம் ஒரு அபூர்வ மாதமாகும். அகிலத்து மாந்தர்களுக்கு அனைத்து நலன்களையும் தரும் வழிபாட்டிற்குரிய மாதம் இதுவாகும். மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகை கண்ணார காண்பதற்காகவே என்கிறார்கள் சான்றோர்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    ×