search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96048"

    கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கரண்டி
    முட்டை - 2
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    மிளகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.

    முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). தோசையின் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.

    ஒருபுறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

    வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் பாதியளவு வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்

    கடைசியாக மிளகு - சீரகப் பொடி, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்.

    சூப்பரான கொத்து தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் கீமாவில் கோலா உருண்டை, கிரேவி, புலாவ் செய்து இருப்பீங்க. இன்று மட்டன் கீமா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - தேவையான அளவு
    மட்டன் கொத்துகறி - 150 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பட்டை - 1
    கிராம்பு - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான மட்டன் கீமா தோசை ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த கோதுமை பேன் கேக். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 2,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :


    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை காய வைத்து மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மசாலா தோசை, பொடி தோசை, ரவா தோசை என பலவிதமான தோசைகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குதிரைவாலி அரிசி, தக்காளி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 4 கப்
    உளுந்து - 1 கப்
    தக்காளி - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணிநேரம் ஊறவைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 4 மணிநேரம் புளிக்க விடவும்.

    தக்காளி, இஞ்சி, சீரகத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை புளித்த மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது சத்துமாவு பாசிப்பருப்பு அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - அரை கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    பூண்டு - 2,
    கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
    மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பாசிப்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காயவைத்து, மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

    அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, ரவை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    அரிசி மாவு - கால் கப்
    ரவை - அரை கப்
    ப.மிளகாய் - 1
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகை இரண்டாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.

    கரைத்த மாவை அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த கேழ்வரகு ரவா தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட், தக்காளி சேர்த்து சத்தான கலர்புல்லான தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை அரிசி - 1 கப்
    புழுங்கல் அரிசி - 1 கப் [வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்]
    தக்காளி - 1
    கேரட் துருவியது - இரண்டு கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - சிறிது  
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு.



    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக இதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான கேரட் - தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரை, கேரட் இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :


    தோசை மாவு - ஒரு கப்,
    நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப்,
    கேரட் துருவல் - ஒரு கப்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை:

    பாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.

    ஆறியபின் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    தோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

    சத்தான பாலக் - கேரட் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
    வெங்காயம், தக்காளி - தலா 1,
    கொத்தமல்லி -  சிறிது,
    தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
    கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.

    பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×