search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96049"

    கேழ்வரகில் களி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கோதுமை மாவிலும் களி செய்யலாம். இந்த களி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்,
    உப்பு - சிறிது,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 3 கப்.



    செய்முறை :

    கோதுமை மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

    அடிகனமான கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவினை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

    கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.

    சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

    சத்தான கோதுமை மாவு களி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    அவலில் புட்டு, பாயாசம், உப்புமா என்று பல்வேறு உணவுகளை செய்து இருப்பீங்க. இன்று எலுமிச்சை அவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 கப்
    எலுமிச்சை - 1
    பெருங்காயத் தூள் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 1
    வெங்காயம் - 2
    வேர்க்கடலை - கால் கப்
    கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை சில நிமிடங்கள் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    பின்பு வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அதில் வேர்க்கடலையை கொட்டி கிளறிவிடவும்.

    பின்னர் அவல், உப்பு சேர்த்து கிளறுங்கள்.

    வெந்ததும் கீழே இறக்கி எலுமிச்சை சாறை ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று வெஜிடபிள், அவல் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 கப்
    தயிர் - 1 கப்
    வெள்ளரிக்காய் - 1 சிறியது
    பச்சைமிளகாய் - 2
    தக்காளி - 2
    கேரட் - 1 சிறியது
    சின்ன வெங்காயம் - 5
    பால் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெள்ளரிக்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி கொள்ளவும்.

    கழுவிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பால் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் அதனுடன் தயிர், உப்பு, துருவிய காய்கறிகள், அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வெஜிடபிள் அவல் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    தக்காளிப்பழம் - 2,
    மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.

    அடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.

    நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.

    சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் காலையில் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று கிவி பழத்தை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிவி - 2
    கோதுமை பிரெட் - 3
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.

    கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும்.

    தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கிவி பிரெட் சாண்ட்விச் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் ரவா ரோஸ்ட் செய்வது போலவே வீட்டிலேயும் எளிய முறையில் செய்யலாம். இன்று வீட்டில் ரவா ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    அரிசி மாவு - 1 1/2 கப்
    மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 5
    முந்திரி - 15



    செய்முறை :

    கொத்தமல்லி, முந்திரி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.

    சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ரவா ரோஸ்ட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats) - அரை கப்
    கேரட் -  1
    பீன்ஸ் - 5
    பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி
    வெங்காயம் - 1 சிறியது
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
    சீரகம் -  அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 2 1/2 கப்



    செய்முறை :

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.

    மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.

    கஞ்சியை கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறவும்.

    குறிப்பு :

    கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் .
    சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இன்று சிறுதானியங்களை சேர்த்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    புட்டு மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சாமை - 1 கப்
    தினை - 1 கப்
    வரகு - 1 கப்
    குதிரைவாலி - 1 கப்
    கேழ்வரகு - 1 கப்
    கம்பு - 1 கப்
    சோளம் - 1 கப்

    புட்டு மாவு தயார் செய்யும் முறை

    சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். சிறுதானியப்புட்டு மாவு தயார்.

    இந்த மாவினை காற்று புகாத டப்பாவில் அடைத்து சுமார் மூன்று மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.



    புட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சிறுதானிய புட்டு மாவு - 1 கப்
    தேங்காய் - ½ மூடி (மீடியம் சைஸ்)
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் - 3
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை :

    தேவையான அளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறுதானியப் புட்டு மாவை போட்டு அதனுடன் உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கட்டி விழாமல் உதிரியாகப் பிசிறவும். புட்டு மாவானது உதிரியாகவும், ஈரப்பதத்துடனும் இருக்குமாறு செய்ய வேண்டும்.

    பின் ஈரப்பதமான மாவினை ஒன்றுபோல் அழுத்திவிட்டு துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பின் புட்டு மாவினை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்த புட்டு மாவினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

    சுவையான சிறுதானிய புட்டு தயார்.

    விருப்பமுள்ளவர்கள் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக மண்டை வெல்லத்தை கலந்து புட்டு தயார் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் பனிவரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகில் சத்தான கார அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு - 1 கப்.
    கடலைப்பருப்பு - கால் கப்.
    துவரம் பருப்பு - அரை கப்.
    காய்ந்த மிளகாய் - 8.
    உப்பு - தேவையான அளவு.
    சோம்பு - 2 ஸ்பூன்.
    பெருங்காயம் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    வெங்காயம் - 2.
    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    ஊற வைத்த பொருட்களை மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

    சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - தேவையான அளவு,
    கேரட் - 3,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்து தோசை மாவை விட சற்று திக்காக கரைத்து புளிக்க விடவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, துருவிய கேரட் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும், மாவை கல்லில் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    ஊத்தப்பத்தின் மீது, கலந்து வைத்துள்ள கேரட், வெங்காய, மிளகாய் கலவையை தேவையான அளவு தூவி, நன்கு வேக விடவும்.

    தோசை ஒரு பக்கம் வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைக்கவும்.

    இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம் ரெடி!

    கேழ்வரகு - கேரட் ஊத்தப்பத்தை தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகளுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். இன்று தூதுவளை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தூதுவளை கீரை - அரை கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து - கால் கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    இஞ்சி, மிளகாய் விழுது - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    தூதுவளை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசி, உளுந்து இரண்டையும் மூன்று மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வெந்தயத்தையும் ஊறவைத்து அதனுடன் தூதுவளை சேர்த்து அரைத்து மாவு சேர்க்க வேண்டும்.

    பின்னர் மாவு கலவையுடன் உப்பு சேர்த்து சில மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

    அதன் பிறகு மாவுடன் இஞ்சி மிளகாய் விழுதை கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான தூதுவளை தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×