search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96049"

    சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானபொருள்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1ஸ்பூன்
    முந்திரி - சிறிதளவு
    நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

    சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் ஊறவைத்த சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.

    கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, ப.மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த அரிசி - பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

    சத்து நிறைந்த சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வித விதமான பூரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து சூப்பரான ருசியான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்
    தக்காளி - 4
    காய்ந்த மிளகாய் - 3
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் ப.மிளகாய், தக்காளியை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் ஆறியதும் தோலூரித்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய் விழுது, நெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் மாவை பூரிகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான தக்காளி பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - 1 கட்டு
    கோதுமை மாவு - 1 கப்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
    ப.மிளகாய் - 1
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெண், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பசலைக்கீரை பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கேழ்வரகு சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    தேங்காய்த்துருவல் - தேவையான அளவு
    நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.

    மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும்.

    பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.

    தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் சத்துமாவில் இடியாப்பம் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சத்து மாவு - ஒரு கப்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சத்து மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும்.

    மாவு நன்றாக ஆறியதும் இதனுடன் எண்ணெய், உப்பு, வெந்நீர் விட்டு இடியாப்ப மாவு போல பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இதனை, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம். ஹெல்தியான இந்த இடியாப்பம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பித்தம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரைத்த பீட்ரூட் விழுது - அரை கப்
    தோசை மாவு - இரண்டு கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    தோசை மாவுடன் அரைத்த உப்பு, பீட்ரூட் விழுதை தேவைகேற்ப சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.

    அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பத்தை விட மெல்லியதாக ஊற்றி விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் தோசையை எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான பீட்ரூட் தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 2 கப்
    வெந்தயக்கீரை - 1 கட்டு,
    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 3,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

    வதக்கிய கீரையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த வெந்தயக்கீரை இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு இனிப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வெல்லம் அல்லது கருப்பட்டி - 3/4 கப்,
    தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிது,
    பொடித்த முந்திரி - சிறிது,
    நெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    வெல்லக்கரைசல் சற்று கெட்டியானதும், இத்துடன் தேங்காய்த்துருவல், கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், நெயில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    சிவப்பு அவல் - 1 கப்,
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு,
    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
    வெங்காயம் - 2
    காய்ந்தமிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
     
    அவலை சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் நல்லெண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அவல், உப்பு சேர்த்து, ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்றாக கிளறி, சிறு தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்.

    தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.
     
    சூப்பரான சிவப்பு அவல் உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையை வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளக்குருணை - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    தேங்காய்த்துருவல் - 3/4 கப்
    பொடித்த வெல்லம் - 3/4 கப்
    நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன்
    வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்
    நெய் - சிறிது



    செய்முறை :

    முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.

    அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

    பின் மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவைக்கவும்.

    கெட்டி வெல்லப்பாகில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்.

    சுவையான சோள ரவை புட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மதியம் பள்ளிக்கு கொடுத்தனுப்ப சுவையான வித்தியாசமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    சீரகம் - கால் டீஸ்பூன்
    கோதுமை மாவு - 2 கப்
    மஞ்சள் தூள் -  கால் சிட்டிகை,
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    குடைமிளகாய் - 1
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    உருளைக்கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

    சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×