search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோமம்"

    தேப்பெருமாநல்லூர் வேதாந்தநாயகி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை சோம வார 108 சங்காபிஷேக வழிபாட்டை முன்னிட்டு விஸ்வநாத சாமிக்கு ஏகாதச ருத்ர மகாயாகம் தொடங்கியது.
    கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் வேதாந்தநாயகி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை சோம வார 108 சங்காபிஷேக வழிபாட்டை முன்னிட்டு விஸ்வநாத சாமிக்கு ஏகாதச ருத்ர மகாயாகம் தொடங்கியது.

    நேற்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடங்கள் புறப்பட்டது. ஆலய அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு ருத்ர மகா யாக பூஜைகளை செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பஞ்சகவியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய 11 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் 108 சங்காபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு ருத்ர மகா யாக ஏற்பாடுகளை ேகாவில் உதவி ஆணையர் சி. நித்யா மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி யாக சாலையில் ருத்ர ஜபம், ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதினம், ஹாரதி ஆகியவை நடந்தது.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று ருத்ர யாகம் தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை யாக சாலையில் ருத்ர ஜபம், ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதினம், ஹாரதி ஆகியவை நடந்தது. மாலை பூஜை, ஜபம், ஹோமம், ருத்ராத்ரிஷதி, வில்வார்ச்சனை, நிவேதினம், விசேஷ தீபாராதனை, ஆரத்தி நடந்தது.

    நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் போகலா அசோக்குமார், கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதியில் இருந்து நடந்து வந்த காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நேற்று நிறைவடைந்தது.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று கோவில் யாக சாலையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை யாகம், மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், மாலை கலச ஸ்தாபனம், பூஜை, ஜபம், ஹோமம், நைவேத்தியம், ஆரத்தி ஆகியவை நடந்தது.

    அதில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஹோம மகோற்சவத்தின் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்), சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடத்தில் யாக பூஜை நடைபெற்றது. பூஜையில் மூட்டை மூட்டையாக மிளகாய் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
    கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. இங்கு ஐப்பசி மாத அமாவாசையையொட்டி உலக நன்மை வேண்டி யாக பூஜை நடைபெற்றது.

    இதனை மடத்தின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார். பூஜையில் மூட்டை மூட்டையாக மிளகாய் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் மந்திரங்கள் ஓதி பூஜை நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    நெல்லிக்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    நெல்லிக்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவிலில் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி திதி அன்று வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, நேற்று முன்தினம் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மிளகாய் (நிகும்பலா) யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் ராமு, முருகன் ஆகியோர் செய்திருந்தனர். 
    ஆயுஷ் ஹோம பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் விரைவில் நல்ல குணம் பெறுவார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
    மனிதர்களுக்கு சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தரும் தேவதை ஆயுர் தேவதையாகும். இந்த ஆயுர் தேவதையின் அருளாசிகளை பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் ஆயுஷ் ஹோமம் ஆகும். ஆயுஷ் ஹோமத்தை வருடத்திற்கு ஒரு முறை தங்களின் இல்லங்களில் செய்வதால் வீடுகளில் இருக்கின்றன தீய சக்திகள் அனைத்தும் நீங்கி, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு பல நன்மைகளை தருகிறது.

    ஆயுஷ் ஹோமத்தை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினத்தில் ஆயுஷ் ஹோமத்தை செய்வது சால சிறந்தது. இந்த ஹோம பூஜை செய்வதற்கு அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரமே சிறந்த நேரமாக இருக்கிறது. இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வதால் அனைவரும் வாழ்வில் நன்மையான பலன்களை பெறலாம்.

    அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜெபித்து இந்த ஆயுஷ் ஹோமத்தை செய்வதால் உங்கள் வீடுகளில் இருக்கின்ற எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும். ஹோம பூஜை முடிந்த பிறகு ஹோம அஸ்தி மற்றும் பூஜை செய்யப்பட்ட குங்குமம், சந்தனம் பிரசாதம் தரப்படும். அதை உங்கள் பூஜையறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் திலகமிட்டு வர உங்களை பீடித்திருக்கும் அத்தனை தோஷங்களும் நீங்கும்.

    ஆயுஷ் ஹோம பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் விரைவில் நல்ல குணம் பெறுவார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். உங்களின் உயிர்க்கு ஏற்படவிருக்கின்ற கண்டங்கள், ஆபத்துகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். இனி வரும் காலங்களில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்.
    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும்.
    விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது, கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கூட கணபதியை வணங்கிய பிறகே, எந்த செயலையும் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்ததாக சொல்லும் இடமே தற்போது ‘அச்சிறுபாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இந்த ஊர் இருக்கிறது.

    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பாகவும் கணபதி ஹோமம் செய்வார்கள். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட கணபதி ஹோமம் செய்யலாம்.

    கணபதி ஹோமத்தை `விநாயகர் வேள்வி' என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் சொல்லி, அவரை புகழ்ந்து பக்திப் பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி, மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பு.
    திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை சுதர்சன ஹோமம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
    மதுரையை அடுத்த திருமோகூரில் உள்ள காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. தென்மாவட்ட அளவில் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் சக்கரத்தாழ்வார் கோவிலில் சுதர்சன ஹோமம் 30-வது ஆண்டு விழா மற்றும் திருமஞ்சனம், திவ்ய நாம பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை அனுக்ஞை, புண்யாக வாசனம், கும்ப பூஜை தொடங்கி நடைபெறும்.

    தொடர்ந்து 10.30 மணிக்கு சுதர்சன ஹோமம் நடைபெறும். அதனுடையே நரசிம்மர் ஹோமமும், சக்த ஹோமமும் நடைபெற உள்ளது. இதையடுத்து மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை சுதர்சன ஹோம பூர்ணாகுதி அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாராதனம் நடைபெற இருக்கிறது. விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் காரியங்கள் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.
    எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் காரியங்கள் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.

    கணபதி ஹோமத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் செய்வது இன்னும் கூடுதல் பலன்களைத்தரும். தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட்டால் ராஜ வசியம், அரசு பதவிகளைப் பெறலாம்.

    திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெற்று வளமோடு வாழ நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    எடுத்துக் கொண்ட மந்திரம் சித்தி பெற வேண்டுமானால் நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தால் தொட்டதெல்லாம் ஜெயம் தான். பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும். நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    கடன் தொல்லையாலும், வறுமையாலும் வாடுபவர்கள் கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் அவற்றிலிருந்து விடுபடலாம். கணபதி ஹோமத்தை பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.

    உங்களால் கணபதி ஹோமம் நடத்த முடியாவிட்டால் கணபதி ஹோமம் நடைபெறுகிற இடங்களுக்குச் சென்று ஹோமத்துக்குத் தேவையான முழுத்தேங்காய், பழவகைகள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், மலர் வகைகள், தாமரை மலர், சிவப்பு வஸ்திரம் போன்றவற்றை அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வழங்கலாம். இது கணபதியின் கடைக்கண் பார்வைபட வழிவகுக்கும்.
    ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும்.
    ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவ ராசியும் தன் வினைகளுக்கு உரிய பலன்களை அனுபவித்துதான் தீர வேண்டும். என்றாலும், ஹோமங்கள் செய்வதன் மூலமும், பிற இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதன் மூலமும் விசேஷ நற்பலன்களைப் பெற முடியும்.

    வழிபாட்டு முறைகளில் ஹோமங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய வேண்டு மானால், அதற்குரிய ஹோமத்தை செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தைப் பெற முடியும். கோவைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், கோவை செல்லும் ரயிலில்தான் ஏறி அமர வேண்டும். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால், கோவைக்குப் போக முடியாது. அது போல நாம் எந்த தெய்வத்தை நினைத்து - என்ன பிரார்த்தனையை வைக்கிறோமோ, அதைக் கட்டாயம் அந்த தெய்வம் நிறைவேற்றித் தந்து விடும்.

    என்ன ஒன்று... நம் பிரார்த்தனையில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும். சஞ்சலங்கள் இருக்கக் கூடாது. இன்றைக்கு ஹோமங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான ஹோமங்கள் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம், வாஸ்து ஹோமம் என்று ஏகப்பட்டவை இருந்தாலும் ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு விதமான பலனை நமக்கு அருளுகின்றன.

    தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

    எல்லா ஹோமங்களையும் நாம் வசித்து வரும் வீடுகளில் செய்ய முடியாது. வீட்டில்தான் ஹோமங்கள் அனைத்தையும் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை (வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் தங்களால் வீட்டில் ஹோமம் செய்ய முடியவில்லையே என்று ஏங்க வேண்டாம். அத்தகையவர்கள் தங்களால் முடிந்த வழிபாட்டை மனபூர்வமாக இறைவனுக்கு செய்தாலே போதும்).

    தேச நன்மை கருதியும், நாம் வசிக்கும் ஊரின் நலன் கருதியும் ஆலயங்கள், மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் பிரமாண்ட அளவில் ஹோமங்கள் நடக்கும்போது நம் சக்திக்கு முடிந்த வழிபாட்டுப் பொருட்களை வாங்கி அங்கே அர்ப்பணிக்க வேண்டும்.

    எதுவுமே வாங்கித் தர முடியாதவர்கள், தங்களால் முடிந்த உடல் உழைப்பைக் கொடுக்க லாம். அதற்கு ஈடு இணை இல்லை. ஆலயம் மற்றும் பொது இடங்களில் ஹோமங்கள் நடத்தப்படும்போது அதன் பலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹோமத்தின் சங்கல்பதாரர் என்று ஒருவர் இருந்தாலும், இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே அதற்குண்டான பலன் கிடைக்கிறது. 
    ×