search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96073"

    புதுவை முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
    புதுவை முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், விசேஷ அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து, இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி துரை பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
    தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன. இந்த நாளில் நடந்த தெய்வ திருமணங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன.

    * மீனாட்சி-சுந்தரேசுவரர், முருகன்-தெய்வானை, ஆண்டாள்-ரங்கமன்னார், ராமர்-சீதா தேவி திருமணங்கள் பங்குனி உத்திர திருநாளில் நடந்தன.

    * முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, அய்யப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திரத்தன்று பிறந்தனர்.

    * சிவபெருமான், தனது நெற்றிக்கண் கொண்ட நெருப்பினால் சாம்பலாக்கிய பின், ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை எழுப்பியதும் பங்குனி உத்திர நாளில்தான்.

    * இந்திராணியை பிரிந்து, பின்னர் கடும் விரதம் மேற்கொண்ட தேவலோக அதிபதி இந்திரன் மீண்டும் மனைவியை அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * மகாலட்சுமி உத்திர விரதத்தை அனுசரித்து தான் மகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.

    * 27 கன்னியர்களை தனது மனைவிகளாக சந்திரன் ஏற்றுக் கொண்டதும் பங்குனி உத்திர தினத்தில் தான்.

    * காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.
    பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
    பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு விட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

    திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி.

    சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

    மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார்.

    மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

    அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை’’ ஆயிற்று.
    தன் மகன் போல் உள்ள பக்தன் நந்திக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம் கொண்டார் திருவையாறு ஐயாறப்பன். பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம்பிரகாசைக்கும் திருமழப்பாடியில் திருமணம் நடந்தது.
    பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம்பிரகாசைக்கும் திருமழப்பாடியில் திருமணம் நடந்தது. தன் மகன் போல் உள்ள பக்தன் நந்திக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம் கொண்டார் திருவையாறு ஐயாறப்பன். புலிக்கால் முனிவரான வியாக்ர பாத முனிவரின் மகள் சும்பிரகாசைக்கும் ஐப்பேசன் என்ற பெயருடைய நந்தி தேவருக்கும் சிறப்பாகத் திருமணம் செய்வித்தார். இதற்கு எல்லாரும் அவரவர் பங்குக்கு சில செலவுகளை ஏற்றுக் கொண்டனர்.

    பழமும், பூவும், நெய்யும், குண்டலங்களும் கொடுத்ததுடன் வேதியர்களையும் அனுப்பி திருமணத்தை சிறப்பாக நடத்த உதவினர். இப்படி திருமணம் நடத்தி சிறப்பித்தவர்களக்கு நன்றி கூறினார் நந்திதேவர். இந்த நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப்பெயர்.

    ஏழு ஊர்களுக்கும் சென்று நன்றி கூறி, அவர்களின் மரியாதைகளை ஏற்றபின், இரு பல்லக்குகளுடன் அந்த ஏழு ஊர்களின் பெருமான்களும் பிராட்டியும் உடன் வந்த திருவையாறு அடைவார்கள். பின் எல்லா ஊர்பெருமான்களும் கல்யாண தம்பதிகளிடமும் பிரபஞ்ச தம்பதிகளிடமும் (சிவ-பார்வதி) விடை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர் போய்ச் சேருவார்கள்.

    முதல் ஊர் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத் துறை, தொடர்ந்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், இறுதியாக திருவையாறு என ஏழு ஊர்களுக்கும் செல்வது தான் இவ்விழா.

    இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக்காரர்கள், நாயனக்காரர்கள் எல்லாரும் போவார்கள். எல்லா இடங்களிலும் இசை, நாதஸ்வரம், குசல விசாரிப்புகள், விருந்து உபசாரம் கேளிக்கை, கொண்டாட்டம் என உற்சாகமாகவும் கோலா கலமாகவும் இவ்விழா நடைபெறும்.
    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க நடந்தது.
    பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா உள்ளிட்டவை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவராய நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம் செய்து 6 கலசங்கள் வைத்து கலசபூஜை, மாங்கல்யபூஜை, ஸ்கந்த யாகம், சுப்ரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணத்திற்கான சடங்குகள் நடைபெற்றன.



    பின்னர் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7.10 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ ‘வீர வேல் முருகனுக்கு அரோகரா’ ‘ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனைக்கு பின் ஓதுவார்கள் தேவாரம் பாடினர். பின்னர் கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண விழா நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சுந்தரமூர்த்திசிவம், சந்திரமவுலி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் மாணிக்கவேல், மேலாளர் உமா, சவுமிய நாராயண கவராய நாயக்கமார் கட்டளை உறவின்முறை தக்கார் பாலகிருஷ்ணன், தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் வெங்கிடுசாமி, நிர்வாகிகள் பரமானந்தம், பரசுராமன் மற்றும் 11 ஊர் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா வையொட்டி இன்று (புதன்கிழமை) மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் இன்று (புதன்கிழமை) மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி மாப்பிள்ளை கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வெள்ளி யானையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருக்கல்யாணத்தையொட்டி, இன்று காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் சுவாமி புறப்பாடும், மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் சவுமியநாராயண கவர நாயக்கர் மண்டபம் வந்தடைதலுக்கு பின் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்களும், கலச அபிஷேகமும் நடைபெற்று, மாலை 6.30 மணிக்கு கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளுகிறார்.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல், பகல் 12.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 9 மணிக்கு தந்தப்பல்லக் கில் திருஉலா காட்சியும், அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருஉலா காட்சியும் நடைபெறுகிறது.

    23-ந்தேதி காலை 7.30 மணிக்கு வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் திருஉலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிக்கு பின் இரவு 10 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் திருஉலா காட்சியும், 24-ந் தேதி காலை 7.20 மணிக்கு அபிஷேக, ஆராதனைக்குப் பின் புதுச்சேரி சப்பரத்தில் கிரிவீதி உலாவும், காலை 10.25 மணிக்கு சாந்து மண்டகப்படியும், இரவு 7 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் திருஉலாவும், இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை புஷ்பவனேசுவரர்-சவுந்திர நாயகிஅம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கண்ணூஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு சுவாமிகளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்பு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்திற்கு சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். அப்போது மண்டபத்திற்கு அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் சுவாமி எழுந்தருளினார். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க மதியம் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பிரசாதமாக வழங்கப்பட்ட புதிய மஞ்சள் கயிற்றை, திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்கள் கழுத்தில் அணிந்துகொண்டனர். விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் புஷ்பவனேசுரவர் மற்றும் சவுந்திரநாயகி அம்மன் தனித்தனி தேரில் நகரில் வீதி உலா வருகின்றனர். ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    நேற்று திருப்புவனம் பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய அளவிலான சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் வாகன பவனி, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை போன்றவை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் பறக்கையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடந்தது.

    மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளத்தாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    முன்னதாக பிரதோஷத்தையொட்டி ரிஷப வாகனத்தில் சிவனையும், கருட வாகனத்தில் பெருமாளையும் அமர செய்து, கோவில் சுற்றுபிரகாரத்தை 3 முறை சுற்றி வந்தனர். தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவில் சுசீந்திரம் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனை வைத்தனர். தொடர்ந்து தாணுமாலயசாமி கையில் இருந்த திருமாங்கல்யம் அறம் வளர்த்த நாயகி கழுத்தில் கட்டப்பட்டது. திருமணத்துக்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் இருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாண விழா முடிந்தவுடன் பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன், நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற்று வந்தது. இந்த கோவிலில் 575-வது திருக்கல்யாண விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு பறக்கையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடக்கிறது.

    அம்மன் மணப்பெண் கோலத்தில் ஆஸ்ராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்படுவார். மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளத்தாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

    இரவு 8.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனை வைப்பர். தாணுமாலயசாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க, மணியோசை ஒலிக்க, பெண்கள் குலவையிட, பக்தர்கள் பக்திகோஷம் எழுப்ப அறம் வளர்த்த நாயகி கழுத்தில் கட்டப்படும்.

    திருமணத்துக்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் இருப்பார். திருக்கல்யாண விழா முடிந்தவுடன் பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன்பின்னர், சுவாமியும் அம்மனும் பக்தர்களுக்கு காட்சிதர எழுதருளுவர். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன், நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
    பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கோவிலூர் தேகளச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்தியாக உள்ள தேகளச பெருமாளுக்கு ஆண்டு தோறும் மாசிமகத்தன்று கடலூர் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும். அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற தீர்த்தவாரிக்கு கடந்த 14-ந்தேதி தேகளச பெருமாள் திருக்கோவிலூரில் இருந்து புறப்பட்டார். 19-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர், தேகளசபெருமாள், பண்ருட்டி மேலப்பாளையம், இந்திரா காந்தி சாலை, பஸ் நிலையம், காந்திரோடு வழியாக நேற்று முன்தினம் மாலை வரதராஜபெருமாள் கோவிலை வந்தடைந்தார்.

    இதையடுத்து தேகளச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் மற்றும் பொதுமக்கள் சீரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளச பெருமாள் எழுந்தருளினார். இதையடுத்து வேத மந்திரங்கள் ஓத, மேள, தாளத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றிரவு 8.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீர்த்தக்குடம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் மேலாளர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலும் நடைபெறுகிறது. 
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், அரோகரா கோஷம் முழங்க முத்துக் குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில், வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து 16 வகை அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்ச கவ்யபூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகையான சீர்வரிசை பொருட் கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஆராதனையும், அதன் பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து வள்ளி-தெய்வானைக்கு பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், வேத மந்திரங்கள் முழங்க திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை கோவிலில் கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் பூஜை முறை குருக்கள் செய்தனர்.

    தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருவுலா காட்சி நடைபெற்றது. வெள்ளிரதம் நான்கு ரத வீதிகளில் உலா வந்து இரவு 10.30 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×