search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவடி"

    சோலைமலை முருகன் கோவிலுக்கு 108 மயில் காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையின் சார்பாக 108 முருகபக்தர்கள் மயில்காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டு கொன்னையூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிபட்டி வழியாக உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோவி லுக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்தனர். அங்கு கோவிலின் 4 பிரகாரங்களிலும் மேள தாளம் முழங்க பக்தர்கள் காவடியுடன் ஆடிப்பாடி மூலவர் சன்னதியை அடைந்து சாமிதரிசனம் செய்தனர்.

    சாமிக்கு திருஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு பால், பழம், பன்னீர், தேன், புஷ்பம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின்னர் சர்வ அலங்காரத்தில் சாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் தங்கத்தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வழிபாடு சபையின் தலைவர் பொன்.முத்துவிநாயகம், பொருளாளர் டி.ஏ.சேகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த முருக பக்தர்களை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.

    தமிழ் கடவுளான முருகனுக்கு செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    தமிழ் கடவுளான முருகனுக்கு செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்த காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

    அகஸ்திய முனிவர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்தமலையில் உள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

    அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் கம்பில் கட்டி தன் தோளின் இருபுறமும் காவடிபோல தொங்க எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் பழனியில் நிலை பெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

    அதன்படி பழனி அருகே வந்து கொண்டிருந்த இடும்பன் காவடிகளை வைத்து விட்டு சற்று ஓய்வு எடுத்தான். ஓய்வெடுத்து விட்டு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதை கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

    ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, கோபம் அடைந்த இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான். இதை கண்ட அகஸ்தியர் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது.

    முருகப்பெருமானின் சிறப்புகள் பெற்ற இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும். விவசாயம் மேன்மையடையும். உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும் மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.
    வைகாசி விசாக திருவிழாவையொட்டி மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி புறப்பட்டு சென்றது.
    வைகாசி விசாக திருவிழாவையொட்டி மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பறக்கும் வேல்காவடி செல்லும் விழா கடந்த 18-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முதல்நாள் காலை கணபதிஹோமம், மாலை திருவிளக்கு பூஜை, தீபாராதனை, நலத்திட்ட உதவி வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடந்தது. 19-ந்தேதி காலை தீபாராதனை, மாலை நையாண்டிமேளம், வேல்தரித்தல், இரவு 8 மணிக்கு பூக்குழி இறங்குதல், அன்னதானம், காவடி பெரும் பூஜை ஆகியவை நடைபெற்றது.

    நேற்று காலை 7.30 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அங்கு தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் பிள்ளையார் கோவில் வந்தடைந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு நாசிடோல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து, 4 மணிக்கு பறக்கும் வேல்காவடி பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    ×