search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    ‘இங்கிலாந்து மண்ணில் தோல்வி பற்றி கவலைப் படாமல் இந்திய வீரர்கள் ஜாலியாக காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்’ என்று முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதும் இப்படி தான் கேட்டார்கள். அதற்கு நான் இங்கிலாந்துக்கு சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து சென்று காபி அருந்தி மகிழ்வேன். என்னுடைய சிந்தனை வித்தியாசமானது’ என்று பதில் அளித்தார்.



    அவரது இந்த கூற்றை இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சந்தீப் பட்டீல் கேலி செய்து சாடியுள்ளார். பட்டீல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்க்கும் போது விராட் கோலியின் கருத்தை இந்திய வீரர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல் தான் தோன்றுகிறது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் உண்மையிலேயே நல்ல காபி குடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறார்கள் போலும்.

    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் இணைந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாள் பயிற்சி ஆட்டத்தையும் 3 நாட்களாக குறைத்து விட்டார்கள். இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து கவாஸ்கர், தெண்டுல்கர், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

    தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அசாதாரணமான திறமை கொண்டவர்கள். நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது அதை அறிவேன். ஆனால் இப்போது களத்தில் ஏதோ அறிமுக போட்டி போன்று பயந்து கொண்டு விளையாடுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல் கிரிக்கெட் ஒரு குரூரமான விளையாட்டு. இங்கு எதுவும் நிலையானது கிடையாது. முந்தைய நாள் ஹீரோவாக இருப்பவர்கள், இன்று ஜீரோவாகி விடுவார்கள். இந்த இங்கிலாந்து பயணத்தில் ஏற்கனவே 70 சதவீதம் போட்டி முடிந்து விட்ட நிலையில் நாம் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டதாக இந்திய கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார். #ViratKohli #ENGvIND

    லண்டன்:

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன் எடுத்தது. இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 396 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 289 ரன் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ரன்னுக்குள் சுருண்டது.

    தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட்கோலி  கூறியதாவது:-

    நாங்கள் விளையாடிய ஆட்டத்தை நினைத்து எந்த வகையிலும் பெருமை கொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு விட்டோம்.

    நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது தோல்விக்கு நாங்கள் தகுதியான அணி தான். நாம் விளையாடி கொண்டிருக்கும் போது வானிலை பற்றி சிந்தித்து கொண்டிருக்க முடியாது.

    வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தையும், வானிலையையும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எங்களை ரன் எடுக்க விடாமல் சிறப்பாக செயல்பட்டனர். அணியில் வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

    எனது முதுகுவலி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் குணமடைந்து விடுவேன் என்றார்.

    நம்பர்-ஒன் அணியான இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முற்றிலும் திணறிவிட்டனர்.

    மேலும் வீரர்கள் தேர்விலும் தவறு செய்துவிட்டனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினர்.

    குல்தீப் யாதவுக்கு பதிலாக இன்னும் ஒரு வேகப் பந்து வீச்சாளருடன் களம் இறங்கி இருக்கலாம். இந்த போட்டியில் குல்தீப் யாதவ் வெறும் 1 ஓவர் மட்டுமே வீசி இருந்தார்.

    முதல் டெஸ்ட்டில் இந்தியா போராடியே தோற்றது. ஆனால் 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன், லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson
    லண்டன்:

    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, இந்தியா இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இந்தியா 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

    இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜயை டக் அவுட்டாக்கினார் ஆண்டர்சன். இது லார்ட்ஸ் மைதானத்தில் அவரது 100-வது விக்கெட்டாகும். இதன்மூலம் ஆண்டர்சன் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    தனி மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் வரிசையில் ஆண்டர்சன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இலங்கையின் கண்டி மற்றும் கல்லே மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய 19 வயதுக்கு உள்பட்டோர் அணி வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்தின் வெளியே ரேடியோ விற்பனை செய்துள்ளார். #ENGvIND #Lords #ArjunTendulkar
    லண்டன்:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார். தற்போது, இங்கிலாந்து எம்.சி.சி ஜூனியர் அணியில் பயிற்சி எடுத்து வரும் அவர், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியின் போது பந்துவீசி வருகிறார்.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது, லார்ட்ஸ் மைதான ஊழியர்களுக்கு ஆடுகள பராமரிப்பில் அர்ஜுன் உதவி செய்தார். 

    மழையால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மைதானத்தை உலர வைக்கும் பணியில் ஊழியர்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் உதவி புரிந்துள்ளார். இதனை லார்ட்ஸ் மைதானம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    மேலும், லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அர்ஜுன் டெண்டுல்கர் நேற்று ரேடியோக்களை விற்றார். இதை பார்த்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அர்ஜுனிடம் பெரும்பாலான ரேடியோக்கள் விற்றுவிட்டன. சில மட்டுமே கையிருப்பில் உள்ளன எனக் கூறியுள்ளார்.


    இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்சின் அபார சதத்தால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

    2ம் நாளான நேற்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
     
    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.



    இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதலில் ஷமியின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    அதன்பின், பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோவ் 93 ரன்களில் அவுட்டானார்.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இங்கிலாந்து அணி 81 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் கரன் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
    இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #UK # citizenship
    லண்டன்:

    இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது.

    இந்த நிலையில் தற்போது குடியுரிமை கட்டணம் 1,012 பவுண்ட்ஸ் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பெறாத இங்கிலாந்து இளைஞர்களால் உயர்கல்வியில் நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

    மேலும் குடியுரிமை பெறாமல் வளரும் குழந்தைகள் பாதுகாப்பின்மையை உணர்வார்கள். தனது நண்பர்களுக்கு இருக்கும் உரிமை தனக்கு இல்லாததை மெதுவாக புரிந்து கொள்வார்கள்.

    இது அவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த கட்டண உயர்வானது மிக குறைந்த வருமானம் ஈட்டும் புலம் பெயர்ந்த குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும்.

    அவர்களை கடனாளியாக்கி பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். #UK #citizenship
    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது

    அதன்பின் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.



    இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது.
     
    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆண்டர்சன், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை அறிவிக்கை தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #test
    லண்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று 2-வது நாள் ஆட்டம் அரை மணி நேரத்துக்கு முன்பாக (இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்றும் மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.



    லண்டனில் வானிலை அறிவிக்கையின்படி காலையில் வெயில் அடிக்கும் என்றும், பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் போட்டி தொடங்கினாலும் இடையில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது. #ENGvIND #INDvENG #test
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. #ENGvIND #INDvENG
    லண்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 0-1 என்ற கணக்கில் பின் தங்கி இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி வெற்றி கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் டெஸ்டில் இந்திய அணி 194 ரன்னை இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி தோற்றது ஏமாற்றமே. கேப்டன் விராட்கோலியை தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் திறமையை வெளிப்படுத்தவில்லை. அவர் தனி ஒருவராக போராடினார். இறுதியில் பலன் இல்லாமல் போனது.

    தொடக்க வீரர்களான தவான், முரளிவிஜய், ரகானே, ராகுல் ஆகியோர் சரியாக ஆடவில்லை. இதனால் இந்த டெஸ்டில் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ஆடினால் ராகுல் கழற்றிவிடப்படுவார்.



    முதல் டெஸ்டில் அஸ்வினின் சுழற்பந்து அபாரமாக இருந்ததால் இன்றைய டெஸ்டில் இந்தியா 2 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே விராட்கோலி முடிவு செய்வார்.

    2 சுழற்பந்து வீரர் தேவைப்பட்டால் உமேஷ் யாதவ் நீக்கப்படுவார். அவர் இடத்தில் ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறுவர்.

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. கபில்தேவ், டோனி தலைமையில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அந்த வரிசையில் கோலி இணைந்து சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியால் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.



    அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. #ENGvIND #INDvENG
    இந்தியாவுக்கு எதிராக வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார். #ENGvIND #BenStokes
    லண்டன்:

    இந்தியாவுக்கு எதிராக வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் சோபிக்க தவறிய டேவிட் மலான் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மதுபான விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணையை ஆல்-ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக புதுமுக பேட்ஸ்மேன் 20 வயதான ஆலி போப் மற்றும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:-

    அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், சாம் குர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாமி போர்ட்டர். #ENGvIND #BenStokes
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
    இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் எழுதியிருப்பதாவது:-தோல்விக்கு அணியின் கேப்டனை விமர்சிப்பதும், வெற்றி பெற்றால் கேப்டனை பாராட்டுவதும் கிரிக்கெட்டில் சகஜம். தோல்வியால் துவண்டு போய் உள்ள இந்திய வீரர்களுக்கு விராட் கோலி புது நம்பிக்கை கொடுக்க வேண்டும். அவரால் மட்டுமே அவர்களது மனநிலையை மாற்ற முடியும்.

    அவர் தங்கள் அணி வீரர்களுடன் உட்கார்ந்து பேச வேண்டும். என்னால் ரன் குவிக்க முடிகிறது என்றால் உங்களாலும் ஏன் முடியாது என்று எடுத்து கூற வேண்டும். களம் இறங்கி பயமின்றி விளையாடும்படி அறிவுறுத்த வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று கங்குலி அதில் கூறியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
    பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியின் 1000-மாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரின்  எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவை விட இங்கிலாந்துக்குதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கிலாந்து 1877-ம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த டெஸ்ட் இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க 1000-வது டெஸ்ட் ஆகும்.

    இந்த டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் இந்தியாவை 31 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி இதுவரை 1000 டெஸ்ட் போட்டிகளில் 358-ல் வெற்றியும், 297-ல் தோல்வியையும், 345 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது.

    எட்ஜ்பாஸ்டனில் இதுவரை இங்கிலாந்து 1902-ல் இருந்து 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 28 போட்டிகளில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவும் செய்துள்ளது.

    1000-வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×