search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது.

    அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா விராட் கோலிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் ஒன்று, இரண்டு ரன்களை எடுத்தார்.

    விராட் கோலி 51 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார்.இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து இறங்கிய மொகமது ஷமி டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து இஷாந்த் சர்மா 11 ரன்களில் அவுட்டானார்.

    இறுதி வரை ஹர்திக் பாண்ட்யா போராடினார். அவர் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது.

    அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார். இந்தியா விரைவில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது அஸ்வினை தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் ஊக்கப்படுத்தியது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. #ENGvIND #DineshKarthik #Ashwin
    பர்மிங்காம்:

    பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் முரளிவிஜய் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அஸ்வின் வீசிய ஒரு பந்தில் தடுமாறினார். இதை கவனித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ‘நல்லாயிருக்கு அஸ்வின்....போடு மாமா....போடு மாமா...அடுத்த 3 பந்தையும் அப்படியே போடு மாமா. என்ன பண்றான்னு பார்க்கலாம் ”என்று அஸ்வினை நோக்கி தமிழில் உரக்க கத்தினார். அவரது பேச்சு ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் தெளிவாக கேட்க முடிந்தது.

    களத்தில் நின்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு புரியக்கூடாது என்பதற்காக தினேஷ் கார்த்திக் இவ்வாறு தாய்மொழியில் பேசியுள்ளார். அதே சமயம் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோருக்கும் தினேஷ் கார்த்திக்கின் அழகிய தமிழ் உரையாடல் புரியாமல் விழித்தனர். தினேஷ் கார்த்திக்கின் தமிழ் பேச்சு சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. #ENGvIND #DineshKarthik #Ashwin
    இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடக்க உள்ள நிலையில் டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி சாதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
    பர்மிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதன் 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் இன்று தொடங்கியது.

    டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே.

    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. அஜீத் வடேகர், கபில்தேவ், ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் மட்டுமே தொடரை வென்றுள்ளது.

    கடைசியாக இங்கிலாந்தில் ஆடிய 2 டெஸ்ட் தொடரிலும் தோல்வியே ஏற்பட்டது. டோனி தலைமையிலான அணி 2011-ல் 0-4 என்ற கணக்கில் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. 2014-ல் 1-3 என்ற கணக்கில் இழந்தது.

    டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி முத்திரை பதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரது ரன் குவிப்பை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது.

    இங்கிலாந்து அணி கடைசியாக பாகிஸ்தானுடன் மோதிய டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது. இந்திய அணி கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது. #ENGvIND #INDvENG
    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டித் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது. #ENGvIND #TestSeries
    பர்மிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டித் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    2007-ம் ஆண்டுக்கு பிறகு 2 முறை ஆடிய டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. இதனால் இந்த முறை விராட்கோலியின் படை இங்கிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடும்.

    11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு கேப்டன் கோலிக்கு கடும் சவாலாக இருக்கும்.

    தவான், புஜாரா மோசமான நிலையில் இருப்பது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தும். கோலி, முரளிவிஜய், ரகானே, ராகுல் ஆகியோரது பேட்டிங்கை பொறுத்து அணியின் நிலை இருக்கிறது.

    தொடக்க வீரர் வரிசையில் இருந்து தவான் கழற்றிவிடப்படலாம். முரளிவிஜய்யும், ராகுலும் தொடக்க வீரராக ஆடலாம்.

    இதேபோல விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக், ரிசப் பாண்ட் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம். தினேஷ்கார்த்திக் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது.

    வேகப்பந்து வீரர் புவனேஸ்வர்குமார் ஆடாதது பாதிப்பே. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இதனால் உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது‌ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள்.

    சுழற்பந்து வீரர் தேர்வு தலைவலியை ஏற்படுத்தும். அஸ்வின், ஜடேஜா, குல்தீப்யாதவ் ஆகியோரில் இருவர் இடம் பெறுவார்கள். குல்தீப்யாதவ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என்பதால் அவர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஜடேஜா நீக்கப்படலாம்.

    இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் நெருக்கடி கொடுக்கலாம். அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர் ஆவார். 540 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதேபோல ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

    பேட்டிங்கில் கேப்டன் ஜோரூட், கூக், பட்லர், பேர்ஸ்டோவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.

    டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), முரளிவிஜய், தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது ‌ஷமி, குல்தீப்யாதவ், ‌ஷர்துல் தாகூர், பும்ரா.

    ஜோரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், மோயின் அலி, ஜோஸ் பட்லர், ஸ்டூவரட் பிராட், பென் ஸ்ரோக்ஸ், ஆதில் ரஷீத், ஜானி பேர்ஸ்டோவ், கூக், கீட்டன் ஜென்னிங்ஸ், சாம் குர்ரன், டேவிட் மலன், ஜேமி போர்ட்டர். #ENGvIND #INDvENG #TestSeries
    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் வடேகர், கபில்தேவ், டிராவிடுடன், விராட் கோலியும் இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvENG #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து மண்ணில் இந்தியா 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 1971-ம் ஆண்டு (1-0) அஜித் வடேகர் தலைமையிலும், 1986-ம் ஆண்டு (2-0) கபில்தேவ் தலைமையிலும், 2007-ம் ஆண்டு (0-1) டிராவிட் தலைமையிலும் கைப்பற்றி இருந்தது. இவர்களோடு விராட் கோலியும் இணைவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.



    இரு அணிகளும் நாளை மோதுவது 118-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 117 போட்டியில் இந்தியா 25 டெஸ்டிலும், இங்கிலாந்து 43 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 49 போட்டி ‘டிரா’ ஆனது. #INDvENG #ENGvIND #ViratKohli
    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் அடைந்துள்ளார். #ENGvIND #Ashwin
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் அடைந்துள்ளார். எஸ்செக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டபோது அஸ்வின் கையில் காயம் அடைந்தார். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் குணமடைந்து விடுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் காயத்தால் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #Ashwin
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். #ENGvIND #AdilRashid #MichaelVaughan
    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

    இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 1½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் அணியில் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டது கேலிக் குரியது.

    உள்ளூரில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஒருவரை நாம் அணியில் சேர்த்து இருக்கிறோம். அவர் சிறப்பாக செயல்படுவாரா? மாட்டாரா? என்பதை மறந்து விடுவோம். ஆனால் இந்த முடிவை நான் கேலியதாகதான் பார்க்கிறேன்.



    ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆதில் ரஷீத் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #AdilRashid #MichaelVaughan
    தாய்லாந்தில் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #ThaiCaveBoys #TherasaMay
    லண்டன்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் அனைவரும் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  

    எண், 10 டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை அந்நாட்டு பிரதமர் தெரசா மே சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #ThaiCaveBoys #TherasaMay
    16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன் மோதுகிறது. #WomensHockeyWorldCup
    லண்டன்:

    14-வது உலக கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் இன்று (21-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 5-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, தென் கொரியா, இத்தாலி, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், தென் ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும். மற்ற 4 அணிகளும் ‘பிளே ஆப்’ சுற்று மூலம் தேர்வு பெறும். ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். 8 அணிகள் பிளே ஆப் சுற்றில் ஆடும்.

    இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா- அயர்லாந்து மோதுகின்றன.

    உலக கோப்பை மகளிர் ஹாக்கியில் விளையாடும் இந்திய அணி விவரம்:



    கோல் கீப்பர்கள் சவிதா, ரஞ்சனி.

    சுனிதா லக்ரா, தீப்கிரேஸ், தீபிகா, குர்ஜித்கபூர், ரீனா கோக்கர்.

    நடுகளம்: நமீதா டாபோ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேகா கோயல், நவ்ஜோத்கபூர், நிக்கி பிரதான்.

    முன்களம்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா, நவ்நீத் கவூர், லால் ரேம் ஷிமி, உதிதா,

    உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நெதர்லாந்து அதிகபட்சமாக 7 முறை (1974, 1978, 1983, 1986, 1990, 2006, 2014) சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

    அர்ஜென்டினா (2002, 2010, ஆஸ்திரேலியா (1994, 1998), ஜெர்மனி (1976, 1981) ஆகிய அணிகள் தலா 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன.

    இந்திய அணி 1974-ம் ஆண்டு 4-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். #WomensHockeyWorldCup
    டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என அஸ்வின் கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இதில் முதல் 3 போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று உள்ளனர். பொதுவாக இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும்.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான். 3 பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    இங்கிலாந்து அற்புதமாக இடம். அங்கு சென்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்ல அணியாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை அங்கு சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நாம் செயல்படுவதுதான் முக்கியம்.

    நீண்ட டெஸ்ட் தொடரில் உத்வேகத்தை தொடர்ந்து காட்டுவது மிக முக்கியம். அதை செய்து காட்டி விட்டால் நல்ல பயன் அளிக்கும். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி தேர்வு நாளை நடக்கிறது. முகமதுசமி, ரிஷப்பாண்டுக்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

    இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நாளை (18-ந்தேதி) அல்லது 19-ந்தேதி நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேகப்பந்து வீரர் பும்ரா காயம் காரணமாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கு உடல் தகுதி பெறுவது சந்தேகம்.

    இதனால் அவரது இடத்தில் முகமது‌ஷமி இடம் பெறலாம் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதால் முகமது ‌ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    டெஸ்ட் அணிக்கு முதல் நிலை விக்கெட் கீப்பரான விர்த்திமான்சகா காயத்தில் உள்ளார். இதனால் வங்காதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அவர் ஆடவில்லை. தினேஷ்கார்த்திக் அவர் இடத்தில் இடம் பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தினேஷ்கார்த்திக் டெஸ்டில் ஆடி இருந்தார்.



    தற்போது அவருடன் மேலும் ஒரு விக்கெட் கீப்பர் அணியில் தேர்வு செய்யப்படலாம். ரிசப் பாண்ட், பார்த்தீவ் பட்டேல், சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். இதில் ரிசப்பாண்டுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இதேபோல சுழற்பந்து வீரர்களில் ஒருவர் தேர்வு பெறலாம். குல்தீப்யாதவ் அல்லது யசுவேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம். டெஸ்ட் அணியில் அஸ்வின், ஜடேஜா சுழற் பந்தில் முத்திரை பதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
    ×