search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பான்யா, தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா (வயது 24). இங்கிலாந்திற்கு எதிரான 3வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.  நேற்று நடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பாண்ட்யா சிறப்புடன் செயல்பட்டார்.

    அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி20 போட்டிகளை வேடிக்கையான ஒன்றாகவே நான் காண்கிறேன்.  பந்து வீச்சில் யார்கர்களுக்கு பதிலாக வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.

    நான் ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன் என்பதனை உறுதி செய்து கொள்கிறேன். அது எனக்கு உதவிடுகிறது என கூறியுள்ளார்.

    எனது பந்து வீச்சில் முதல் ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்ட தருணத்தினை நான் நினைவில் கொள்கிறேன்.  நான் இயல்புடனேயே இருந்தேன்.  நீங்கள் சரியான தொலைவில் பந்து வீசினால் விக்கெட்டுகளை கைப்பற்றி, மிக பெரிய அளவில் ரன்கள் விட்டு கொடுப்பதனை நிறுத்திடலாம் என அவர் கூறியுள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது. #India #t20Series
    புதுடெல்லி:

    இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு  சாதனைகளையும் படைத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றது.



    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கை - வங்காள தேசத்துடன் முத்தரப்பு தொடரிலும், தென் ஆப்ரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் டி-20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #India #t20Series
    பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

    பட்லர் 34 ரன்களும், ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

    இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். லோகேஷ் ராகுல் 19 ரன்களில் அவுட்டானார்.

    மறுபுறம், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். அவர் டி20 போட்டிகளில் மூன்றாவது சதமடித்து அசத்தினார். அவருக்கு கோலி ஒத்துழைப்பு கொடுத்தார். கோலி 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ரோகித்துடன் சேர்ந்து அதிரடியாக ஆடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

    இறுதியில், இந்தியா 18. 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வென்றது. ரோகித் சர்மா 100 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா வென்றார். அத்துடன் தொடரையும் 2-1 என கைப்பற்றி அசத்தியது. #ENGvIND #EnglandvIndia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற உள்ள கால்இறுதி ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WorldCup2018

    சமரா:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் 3-வது மற்றும் 4-வது கால்இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    சமரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுவீடன் ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோவை (3-0) வென்று ஜெர்மனியிடம் (1-2) தோற்று, கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1) அணிகளை வென்று பெல்ஜியத்திடம் தோற்று (0-1) இருந்தது. 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டிஷூட்டில் தான் வென்றது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி சுவீடனின் அதிரடியை சமாளிப்பது சவாலானது. அந்த அணி பின்களத்தில் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து- 8, சுவீடன்-7-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து அணியில் ஹாரிகேன் முதுகெலும்பாக இருக்கிறார். ஸ்டெர்லிங், லிங்கார்டு போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். சுவீடன் அணியில் கிரண்விஸ்ட், போர்ஸ்பெர்க், பெர்த் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    ரஷியா ‘லீக்’ ஆட்டத்தில் சவுதி அரேபியா (5-1), எகிப்து (3-1) அணிகளை தொடர்ந்து உருகுவேயிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.

    குரோஷியா அணி தோல்வி அடையவில்லை. 2-0 என்ற கணக்கில் நைஜீரியாவையும், 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவையும், 2-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கை பெனால்டிஷூட் அவுட்டில் வீழ்த்தியது.

    குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். இதேபோல கோல்கீப்பர் அகிள்பீவ் முதுகெலும்பாக இருக்கிறார். குரோஷியா அணியில் மோட்ரிச், மென்டிச், ரகட்டிச் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய போட்டியில் குரோஷியா 1 ஆட்டத்தில் வென்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. #WorldCup2018

    கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி. #ENGvIND
    கார்டிஃப்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  விக்கெட் இழப்புக்கு  ரன்கள் எடுத்துள்ளது. தோனி ரன்களும், பாண்ட்யா ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இறங்கினர்.

    உமேஷ் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்க்காரர்களை வெளியேற்றினார். ராய் 15 ரன்னிலும், பட்லர் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 9 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருபுறம் நிதானமாக ஆடினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து டி 20 தொடர் 1-1 சமனிலையில் உள்ளது. 
    #ENGvIND #EnglandvIndia
    கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND
    கார்டிஃப்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார்.



    அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 32 ரன்களும், பாண்ட்யா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. #ENGvIND #EnglandvIndia
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND
    கார்டிப்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித்தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கார்டிப் நகரில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    முதல் ஆட்டத்தை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. லோகேஷ் ராகுல் கடந்த போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.


    அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, ரெய்னா, டோனி ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

    குல்தீப் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்தை கடந்த போட்டியில் நிலை குலைய வைத்தார்.



    இதேபோல யசுவேந்திர சாஹல், உமேஷ்யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். நாளை போட்டிக்கான அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.

    மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    பட்லர், ஜேசன்ராய் ஆகியோரை தவிர எந்த பேட்ஸ்மேனும் ரன்களை குவிக்கவில்லை. இதேபோல பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கவில்லை. இதனால் இந்த இரண்டையும் சரி செய்யும் வகையில் ஆட வேண்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்தியாவை வீழ்த்த போராடும்.

    இரு அணிகளும் இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. தலா 6 போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டமும் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 2 டெலிவிசன்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #ENGvIND
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.

    அந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது.
    இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன.

    மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

    நான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமனிலை ஆனது.

    இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    லோகேஷ் ராகுலின் அதிரடி, குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய வீரர்களை குல்தீப் யாதவ் தனது சுழல் பந்தில் சீக்கிரமாக வெளியேற்றினார். இதனால் 107 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுக்ள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.



    இதையடுத்து, 161 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா இறங்கினர்.

    தவான் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால், அடுத்து இறங்கிய லோகேஷ் ராகுல் தனது அதிரடியை ஆரம்பித்தார். இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரோகித் சர்மா 32 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி 18.2 ஓவரில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி சதமடித்தார். லோகேஷ் ராகுல் 101 ரன்னுடனும், விராட் கோலி 20 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND #EnglandvIndia
    கொலம்பியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.
    இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.

    அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஹேல்ஸ் 8 ரன்னில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 95 ஆக இருந்தது.

    ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 107 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவர் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வில்லி 15 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, 160 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா விளையாடி வருகிறது. #ENGvIND
    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. #ENGvIND
    மான்செஸ்டர்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) மான்செஸ்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை வென்ற கையுடன் இந்த போட்டியில் இந்திய அணி களம் காணுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரை வென்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் களம் இறங்கும்.

    இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானதாகும். எனவே இந்த போட்டி தொடர் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

    20 ஓவர் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 5 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணி 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

    இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், டேவிட் வில்லி, டேவிட் மலான். #ENGvIND
    ×