search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    சிரியாவில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் பயங்கரவாதி சமிமா பேகத்தின் குழந்தை நிமோனியா தாக்கி பலியானார்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், இளம்பெண் சமிமா பேகம் (வயது 19). இவரது கணவர் யாகோ ரீடிஜ்க். இவர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.

    சமிமா பேகம், கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போடுவதற்காக லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்றார்.

    அவர் கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் சிரியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் தனது 2 நண்பர்களுடன் காணப்பட்டதாக தெரிய வந்தது. அவர் லண்டன் திரும்ப விரும்பியதாகவும், ஆனால் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் சமிமா பேகத்துக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு ஜாரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அந்தக் குழந்தை, நிமோனியா தாக்கி இறந்து விட்டது. இதை சிரிய ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

    குழந்தையின் இறப்பு குறித்து தந்தை யாகோவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிரியாவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போட்டு வந்தவர்தான்.
    இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. #INDWvENGW
    இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் வியாட் 24 ரன்களும், டாமி பியூமோன்ட் 29 விக்கெட் கீப்பர் எமி எல்லன் ஜோன்ஸ் 26 ரன்களும் எடுத்தனர்.

    அதன்பின், 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 58 ரன் எடுத்தார். மிதாலி ராஜ் 30 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3- 0 என கைப்பற்றியது.
    #INDWvENGW
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சாம்பில்லிங்ஸ் 47 பந்தில் 87 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோ ரூட் 40 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை மளமள என்று இழந்தது. அந்த அணி 11.5 ஓவரில் 45 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மயர், பிராத் வெயிட் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். ஜோர்டான் 4 விக்கெட்டுட் வில்லி, ஆதில் ரஷீத், புளுனகெட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் 2-வது குறைந்த பட்சஸ்கோர் இதுவாகும். #WIvsENG
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் இரு சாதனைகளை படைத்துள்ளார். #ENGvWI #ChrisGayle
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 97 பந்துகளில் 11 பவுண்டரி, 14 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்து இந்த ஆட்டம் பலன் இல்லாமல் போனாலும் அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

    கெய்ல் 55 பந்தில் சதத்தை எடுத்தார். 88-வது ரன்னை தொட்ட போது அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்தார். 288 ஒருநாள் போட்டியில் விளையாடி 10,074 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.01 ஆகும். 25 சதமும், 50 அரை சதமும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன் குவித்துள்ளார். 10 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற பெருமையை கெய்ல் பெற்றார்.

    லாரா 289 ஆட்டத்தில் விளையாடி 10,405 ரன் எடுத்துள்ளார். அவரது சாதனையை கெய்ல் உலககோப்பை போட்டியில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலககோப்பை போட்டியோடு ஒருநாள் ஆட்டத்தில் ஓய்வு பெற போவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    நேற்றைய ஆட்டத்தில் 14 சிக்சர்கள் அடித்தன் மூலம் கெய்ல் சர்வதேச போட்டியில் 500 சிக்சர்களை எடுத்தார். டெஸ்ட் (98), ஒருநாள் போட்டி (305), 20 ஓவர் ஆட்டம் (103) ஆகிய மூன்றிலும் சேர்த்து 506 சிக்சர்கள் விளாசி உள்ளார்.

    இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மார்கன் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் ஆவார். நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மொத்தம் 24 சிக்சர்கள் அடித்து உலகசாதனை படைத்தது. #ENGvWI #ChrisGayle
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. #ENGvWI
    செயின்ட் ஜார்ஜ்:

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். கேப்டன் மோர்கன் (103 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (150 ரன், 77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்) சதமும், பேர்ஸ்டோ (56 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (82 ரன்) அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 24 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் விளாசப்பட்ட அதிகபட்ச சிக்சர் இது தான். இதற்கு முன்பு இதே தொடரில் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 23 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

    பின்னர் 419 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ENGvWI
    ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார். #BrexitDeal #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். #BrexitDeal #TheresaMay 
    இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை நடக்கிறது. #INDvsENG
    மும்பை:

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அளித்த பேட்டியில், ‘உலக சாம்பியனான இங்கிலாந்து அணி மிகவும் வலுவானதாகும். எனவே நாம் நம்பிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும். 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டி முடிவு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டி தொடரில் இருந்து முடிந்த வரை அதிக புள்ளிகள் பெற முயற்சிப்போம்’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள் அடித்ததன் மூலம் அதிக சிக்சர் அடித்த பாகிஸ்தான் வீரர் அப்ரிடியை இவர் முந்தியுள்ளார். #WIvEnd #ChrisGayle #Afridi
    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த சகீத் அப்ரிடி 476 சிக்சர் அடித்து முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் சேர்த்து அவர் இதை எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் 476 சிக்சருடன் அதே நிலையில் இருந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள் அடித்தார். முதல் சிக்சர் மூலம் அவர் அப்ரிடியை முந்தினார்.

    39 வயதான கிறிஸ்கெய்ல் 488 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 444 போட்டியில் அவர் இதை எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் 287 சிக்சர்களும், டெஸ்டில் 98 சிக்சர்களும், 20 ஓவர் போட்டியில் 103 சிக்சர்களும் அடித்துள்ளார். #WIvEnd #ChrisGayle #Afridi
    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 சிக்சர்கள் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. #ENGvWI

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 சிக்சர்கள் அடித்தது. இது புதிய சாதனையாகும். ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் புதிய சாதனை நிகழ்த்தியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல் 12 சிக்சர்களும், பிராவோ 4 சிக்சர்களும், ஆஸ்தரே நர்ஸ் 3 சிக்சர்களும், கேப்பெல், ஹோப், ஹெட்மயர், தேவேந்திர பிஷூ தலா ஒரு சிக்சரும் அடித்தனர். #ENGvWI
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 361 ரன் இலக்கை எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது ஒருநாள் போட்டி வரலாற்றில் 3-வது சிறந்த சேசிங் சாதனையாகும். #ENGvWI

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் 361 ரன் இலக்கை எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் வெற்றிகரமான சேசிங்கில் 3-வது சிறந்த சாதனையாகும்.

    2006-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன் இலக்கை எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதே முதல் சாதனையாகும். 2016-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 372 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது 2-வது நிலையாகும். #ENGvWI
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜேசன்ராய், ஜோரூட் ஆகியோரது சதத்தால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ENGvWI
    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்தது.

    கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 129 பந்தில் 3 பவுண்டரி, 12 சிக்சர்களுடன் 135 ரன் குவித்தார். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய கெய்ல் முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். ஹோப் 64 ரன்னும், டாரன் பிராவோ 40 ரன்னும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷீத் தலா 3 விக்கெட்டும் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி 361 ரன் இலக்கை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றது. அந்த அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர், ஜேசன்ராய், ஜோரூட் ஆகியோரது சதத்தால் இந்த வெற்றி எளிதில் கிடைத்தது.



    ஜேசன் ராய் 85 பந்தில் 123 ரன்னும் (15 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோரூட் 97 பந்தில் 102 ரன்னும் (9 பவுண்டரி) கேப்டன் மார்கன் 51 பந்தில் 65 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஹோல்டர் 2 விக்கெட்டும், தேவேந்திர பிஷூ, தாமஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நாளை (22-ந்தேதி) நடக்கிறது. #ENGvWI
    ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #JallianwalaBagh #BritishGovernment
    லண்டன்:

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இதன் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக, இங்கிலாந்தில் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நூற்றாண்டையொட்டி, இங்கிலாந்து அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் தெரசா மேவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 2 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

    இந்நிலையில், இந்த படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதிலும், மன்னிப்பு கோரிக்கை எழுந்தது. இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து மந்திரி பரோனஸ் அன்னபெல் கோல்டி, மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஏற்கனவே கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், நூற்றாண்டு நினைவு தினத்தை கவுரவமான முறையில் அனுசரிக்கப் போவதாகவும் அவர் கூறினார். 
    ×