search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    இங்கிலாந்து அணி இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அலஸ்டர் கூக் தெரிவித்துள்ளார். #AlastairCook #England #WorldCup2019
    லண்டன்:

    உலககோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்குகிறது. இந்த முறை இங்கிலாந்து உலக கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அலஸ்டர் கூக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி தற்போது ஒருநாள் போட்டியில் மிகவும் அபாரமாக ஆடிவருகிறது. அணியில் உள்ள 15 வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். ஒவ்வொருவரது பங்களிப்பும் நன்றாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.



    இவ்வாறு கூக் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இதுவரை உலககோப்பையை வென்றது கிடையாது. 1939, 1987, 1992-ல் அந்த அணி இறுதிப்போட்டியில் தோற்று இருந்தது. #AlastairCook #England #WorldCup2019
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 232 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #WIvENG
    செயின்ட் லூசியா:

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 485 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோரூட் 122 ரன்கள் எடுத்தார்.

    485 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் ஆடியது. இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    வெஸ்ட்இண்டீஸ் 69.5 ஓவரில் 252 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 232 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரோஸ்டன் சேஸ் தனி ஒருவராக போராடி அடித்த சதம் பலன் அளிக்காமல் போனது. அவர் 102 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 34 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன், மொய்ன் அலி தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், மார்க்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்டிலும் ஏற்கனவே தோற்று தொடரை இழந்துவிட்டது. தற்போது பெற்ற இந்த வெற்றி ஆறுதலானது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை வெஸ்ட்இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 20-ந்தேதி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடக்கிறது. #WIvENG
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்னில் சுருண்டது. மார்க்வுட் 41 ரன் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். #WIvENG
    செயின்ட் லூசியா:

    வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐ லெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 277 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. பென் ஸ்டோக்ஸ் 79 ரன்னும், பட்லர் 67 ரன்னும் எடுத்தனர். கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல், அல்ஜாரி ஜோசப், பவுல் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 47.2 ஓவர்களில் 154 ரன்னில் சுருண்டது. கேம்பெல் அதிகபட்சமாக 41 ரன்னும், டவுரிச் 38 ரன்னும் எடுத்தனர். மார்க்வுட் 41 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். மொய்ன் அலி 4 விக்கெட்டும், ஸ்டூவாட் பிராட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    123 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.  #WIvENG


    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. #WIvENG
    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியா நகரில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் ஆகியோர் இறங்கினர். ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய டென்லி 20 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்து. 



    தொடர்ந்து இறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்தனர்.

    முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 67 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பால் 2 விக்கெட்டும், கேப்ரியல், ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #WIvENG
    இங்கிலாந்தின் நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்கள், தானாக பனி உருளைகளாக மாறி உருண்டு வந்த காட்சி காண்போரை வியக்க வைத்துள்ளது. #Raresnowrollers
    மால்பாரோ:

    இங்கிலாந்தில் உள்ள மால்போரோ பகுதியில் பனித்துகள்கள் நிலப்பரப்பின் மீது படிந்து, காண்பதற்கு வெள்ளை கம்பளம் போல் காட்சி அளிக்கின்றது.

    மால்போரோ பகுதியில் இருக்கும் காடுகளில் பணி புரிபவர்  பிரையன் பேய்ஸ் (51), வழக்கம்போல் பணிக்காக அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பனி உருளைகள் உருண்டு கொண்டு வந்துள்ளது. இதனை கண்ட பேய்ஸ் உடனடியாக புகைப்படம் எடுத்தார். இது வண்டி சக்கரத்தினைப்  போன்று, நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்களினால் உருவாகியுள்ளது.

    அப்பகுதியில் யாரோ இதனை செய்திருக்கலாம் என முதலில் எண்ணியுள்ளார். ஆனால் அருகில் சென்று பார்த்தபோது எவ்வித கால் தடங்களும் இல்லாததையடுத்து இயற்கையாக உருவானதை உணர்ந்தார். நிலப்பரப்பில் இருந்த பனிதுகள்களின் மீது காற்று வேகமாக வீசியதால், படர்ந்திருந்த பனிதுகள்கள் ஒருங்கிணைந்து உருளைகளாக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுவரை இதுபோன்ற அதிசயத்தை கண்டதில்லை எனவும், இந்த உருளைகளின் நடுவே பார்த்தபோது சூரியனின் ஒளி அற்புதமாக பிரதிபலித்ததாகவும்  பேய்ஸ் தன் அனுபவத்தினை உற்சாகத்துடன் தெரிவித்தார். மேலும் இந்த உருளைகள் குறிப்பிட்ட தொலைவை கடந்து தானாக உடைந்து மீண்டும் நிலப்பரப்பில் பனிதுகள்களாக கலந்ததாகவும் அவர் கூறினார்.  #Raresnowrollers
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கடைசி டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvENG #JasonHolder #ICC
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்டில் வென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.



    இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் ஐ.சி.சி. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதனால் பிராத்வெயிட் அந்த டெஸ்டுக்கு கேப்டனாக இருப்பார். ஹோல்டர இடத்தில் கீமோ பவுல் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG #JasonHolder #ICC
    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. #WIvENG
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீசில் விளையாடி வரும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 3 போட்டி கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க டெஸ்டில் முதல் இன்னிங்சில் வெறும் 77 ரன்னில் சரண் அடைந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அந்த அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. ஜோ டென்லி அறிமுக பேட்ஸ்மேனாக இடம் பெறுகிறார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணிக்கு திரும்புகிறார்.

    மொத்தத்தில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்கும் வகையில் எழுச்சி பெறுமா? அல்லது மறுபடியும் அடங்கிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #WIvENG

    பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக எம்.பி.க் களுக்கான அடுத்த மாத விடுமுறையை ரத்து செய்ய தெரசா மே அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BrexitLaw #UKGovernment #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற (பிரெக்ஸிட்) முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலை பெற்றார். இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் பேசத் தீர்மானித்துள்ளார்.

    மார்ச் 29-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக தனிச்சட்டம் உருவாக்கி ஒப்புதல் பெற வேண்டும். எனவே ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிக நேரத்தை செலவிட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

    ‘பிரெக்ஸிட்’ தொடர்பான விவாதத்திற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு எம்.பி.க் களுக்கான அடுத்த மாத விடுமுறையை ரத்து செய்யவும் தெரசா மே அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BrexitLaw #UKGovernment #TheresaMay
    உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது. #india #Richest
    லண்டன்:

    சர்வதேச முகவாண்மை நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    அதன்படி நடப்பு 2019-ம் ஆண்டில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் 6-வது இடத்தை பெற்றுள்ளது.


    இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால் மக்களின் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக பி.டபிள்யூ.சி. தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்தும், பிரான்சும் முறையே 5 மற்றும் 6-வது இடத்தில் இருந்தன. தற்போது ‘பிரக்ஸிட்’ பிரச்சனையில் இங்கிலாந்து உள்ளது. இதனால் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களுக்கு இடையேயான மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

    2 நாடுகளுமே சமமான மக்கள் தொகையை கொண்டது. இருந்தாலும் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இங்கிலாந்தை 7-வது இடத்துக்கு தள்ளிவிட்டு 6-வது இடத்திலேயே பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

    பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி தலா 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன. #india #Richest
    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #QueenElizabeth #Philip
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (97). இவர் நார்போக் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ‘லேண்ட் ரோவர்’ காரை தனியாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினார்.

    அதில் எதிரே மற்றொரு காரில் வந்த 2 பெண்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பினார். அப்போது அவர் ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்தார்.

    இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்கும் முன்பு நேற்று முன்தினமும் இவர் ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டினார்.

    சாண்டரிங்காம் பகுதியில் புதிய லேண்ட் ரோவர் காரை ஓட்டிச்சென்ற அவரை போலீசார் பார்த்தனர். இளவரசர் என தெரிந்ததும் அவரை வழிமடக்கி தடுத்து நிறுத்தினர். பின்னர் ‘சீட் பெல்ட்’ அணியும்படி அறிவுறுத்தினர்.



    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்மூலம் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். #QueenElizabeth #Philip
    மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

    இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறியதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. #TheresaMay

    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தின் தனித் தன்மையை காப்பாற்றும் வகையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது.

    ஏற்கனவே இது சம்பந்தமாக மக்களிடம் எடுக்கப்பட்ட ஓட்டெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று மக்கள் வாக்களித்தார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் இது சம்பந்தமாக ஐரோப்பிய யூனியனுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மீது அதிருப்தி நிலவி வருகிறது. சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களே அவர் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

    எனவே அவருக்கு எதிராக கடந்த வாரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கன்சர்வேட்டிவ் கட்சி விதிகள்படி சொந்த கட்சி எம்.பி.க்களே பிரதமர் மீது கட்சி ரீதியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும்.

    அந்த அடிப்படையில் அவர் மீது கட்சிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. எனவே தெரசா மே பதவி தப்பியது.

    ஐரோப்பிய யூனியன் விவகாரம் தொடர்பாக இந்த மாதம் 11-ந்தேதி எம்.பி.க்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதை அடுத்த மாதம் 14-ந்தேதி வரை பிரதமர் ஒத்தி வைத்தார். இதுவும் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் தெரசாமே மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி இப்போது தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் கூறும்போது பிரதமர் தெரசா மே நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    எனவே அவர் பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார். இதனால் தான் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். இங்கிலாந்தின் அனைத்து எம்.பி.க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் எனறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த தீர்மானம் எப்போது ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட வில்லை. ஆனால் சொந்த கட்சி எம்.பி.க்களிலேயே பலர் தெரசா மேக்கு எதிராக இருப்பதால் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 650. அதில் தெரசா மேவின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 317 எம்.பி.க்களும், எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 257 எம்.பி.க்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. #TheresaMay

    ×