search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டதால் அவர்களுக்கு வெற்றி வசமானது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். #INDvsENG #ViratKohli
    லண்டன்:

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

    இதற்கிடையே, நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து 3-1 என வென்று, தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில், கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டதால் அவர்களுக்கு வெற்றி வசமானது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறுகையில், முந்தைய நாள் இரவில் இந்த டெஸ்டில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால் நாங்கள் விரும்பிய மாதிரி தொடக்கம் கிடைக்கவில்லை. பந்து வீச்சில் அவர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். எல்லா பெருமையும் இங்கிலாந்து வீரர்களையே சாரும். கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டனர். 2-வது இன்னிங்சில் அவர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். #INDvsENG #ViratKohli
    சவுத்தாம்டனில் நடைபெற்றும் வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாராவின் சிறப்பாக சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.



    குக் 12 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 36 ரன்னிலும், மொயின் அலி 9 ரன்னிலும், ஜோ ரூட் 48 ரன்னிலும், பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். 

    ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்பாக ஆடி அரை சதமடித்ததுடன், 69 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. சாம் குர்ரன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இந்தியா சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும்ம் எடுத்துள்ளனர். இங்கிலாந்து தற்போது 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #INDvsENG
    இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி வேகமாக 6000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். #INDvsENG #ViratKohli
    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார்.

    இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். தனது 70வது டெஸ்டில் விளையாடி வரும் விராட் கோலி தனது 119வது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டினார். முதலிடத்தில் சுனில் கவாஸ்கர் உள்ளார்.

    மிக குறைந்த இன்னிங்சில் 5000 ரன்னிலிருந்து 6000 ரன்களை கடந்துள்ளார். முன்பு 1000 ரன்களை கடந்ததை விட தற்போது வெறும் 14 இன்னிங்சில் கடைசி 1000 ரன்களை கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #INDvsENG #ViratKohli
    சவுத்தாம்டனில் நடைபெற்றும் வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் புஜாராவின் சிறப்பான சதத்தால் இந்திய அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த குர்ரன் நிதானமாக ஆடினார். இந்த் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல் 19 ரன்னும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் வெளியேறினர்.

    இதன்பின் ஜோடி சேர்ந்த புஜாராவும், கோலியும் நிதானமாக ஆடினர். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கோலி 46 ரன்களில் அவுட்டானார். 

    புஜாரா சிறப்பாக ஆடி 132 ரன்கள் சேர்த்து இறுதியில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. கடைசி விக்கெட்டுக்கு புஜாராவும், பும்ராவும் 46 ரன்கள் சேர்த்தனர். இறுதியில், இந்தியா 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. குக்கும் ஜென்னிங்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 ஓவர் முடிவில் 6 ரன்கள் எடுத்துள்ளது. #INDvsENG
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். #ENGvIND #JaspritBumrah
    சவுதம்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று சவுதம்டனில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 86 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் மொய்ன் அலி, சாம் குர்ரன் ஜோடி சரிவில் இருந்து மீட்டது.

    சாம்குர்ரன் 78 ரன்னும், மொய்ன்அலி 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து 76.4 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த்சர்மா, முகமது சமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. ஷிகா தவான் 3 ரன்னுடனும், லோகேஷ் ராகவ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    நேற்றைய போட்டியில் காலை வேளையில் நன்கு வெயில் அடித்தது. இதனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாகதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பந்தை நன்கு ஸ்விங் செய்து இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியதாவது:-

    நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது. இதன் காரணமாகவே விரைவில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #JaspritBumrah
    இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். #INDvsENG
    லண்டன்: 

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

    முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி டாஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து கேப்டன் ரூட் 4 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 250-வது விக்கெட் ஆகும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் இஷாந்த் சர்மா படைத்தார். கபில்தேவ் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். #INDvsENG
    சவுத்தாம்டனில் நேற்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்துள்ளது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி டாஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த குர்ரன் நிதானமாக ஆடினார். இந்த் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆட்டநேர முடிவில் இந்தியா 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி19 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 11 ரன்னுடனும், தவான் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #INDvsENG 
    சவுத்தாம்டனில் இன்று தொடங்கும் நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்துடனான தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. #ENGvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    தொடர்ந்து, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிப்பர்.

    இந்திய பேட்டிங்கில் விராட் கோலி 2 சதம், 2 அரை சதத்துடன் 440 ரன் குவித்துள்ளார். சராசரி 73.33 ஆகும். புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர். இதேபோல ஹர்த்திக் பாண்டியாவும் கடந்த டெஸ்டில் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ‌ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இறங்குவது அதற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. வெற்றி பெற முடியாவிட்டாலும் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே, இந்த டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. #ENGvIND
    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND #INDvENG #ViratKholi
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்னும், இங்கிலாந்து 161 ரன்னும் எடுத்தன.

    168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 521 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 317 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதன் முலம் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி சவுதம்டனில் தொடங்குகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்னும், 2-வது இன்னிங்சில் 103 ரன்னும் எடுத்து இந்திய கேப்டன் விராட்கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்ட மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு முழுமையான டெஸ்ட் போட்டியாக இருந்தது.

    ஒரு பேட்ஸ்மேனாக என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். அதை களத்தில் செய்து காட்டினோம். அதன் பின் பந்து வீச்சாளர்கள் தங்களது பணியையும் கச்சிதமாக செய்தனர்.

    பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தனர். ஸ்லிப் பகுதியில் கேட்சுகளை துல்லியமாக பிடித்ததால் இப்போட்டியில் வெற்றி பெற்றோம்.

    இத்தொடரில் வேகமாக வீசக்கூடிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தியர்களாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இன்னும் நிறைய டெஸ்டில் விளையாடும் போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவாகுவார்கள்.

    டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று நம்புகிறோம். 0-2 என்ற கணக்கில் இருந்து 3-2 என்ற கணக்கில் தொடரில் வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று வெற்றி பெற விரும்புகிறோம். இந்த உத்வேகத்தை எஞ்சிய இரு டெஸ்டிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #ViratKholi
    3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால், அந்நாட்டு மண்ணில் வெற்றி பெற்ற 6-வது இந்திய கேப்டன் என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார். #ENGvIND #Viratkohli
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 323 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 521 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்று நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 62 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து அதன் ஜோஸ் பட்லர்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி தாக்கு பிடித்து விளையாடிது. ஜோஸ் பட்லர் தனது முதல் சதத்தை அடித்தார். 106 ரன்னில் அவுட் ஆனார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்தனர்.

    அதன்பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. பேர்ஸ்டோவ் (0). கிறிஸ் லோக்ஸ் (4), பென்ஸ்டோக்ஸ் (62), பிராய் (20) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்து இருந்தது. ரஷித் 30 ரன்னிலும், ஆன்டர்சன் 8 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இன்று 5-து மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியா வெற்றிக்கு இன்று ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை விரைவிலேயே கைப்பற்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து மண்ணில் அஜித் வடகேர், கபில்தேவ், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 1932-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா 1971-ம் ஆண்டு முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது.

    அஜித்வடகேர் தலைமையிலான இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்தியா 2 டெஸ்டில் (லார்ட்ஸ், மற்றும் சிட்னி) வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    2002-ம் ஆண்டு கங்குலி தலைமையில் சிட்னி டெஸ்டில் வெற்றி கிடைத்தது. 2007-ம் ஆண்டு ராகுல்டிராவிட் தலைமையிலான இந்தியா 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் (1-0) கைப்பற்றியது.

    2014-ம் ஆண்டு டோனி தலைமையில் இந்தியா லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை ருசிக்க போகும் 6-வது இந்திய கேப்டன் விராட்கோலி என்ற சிறப்பை பெற போகிறார். #ENGvIND #Viratkohli
    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விதி மீறிய காரணத்தால் இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad
    டிரண்ட் பிரிட்ஜ்:

    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் விளையாடிய இந்திய அணி விராட் கோலி, ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டத்தின் இரண்டாவது நாளில் பிராடு வீசிய பந்தில் ரிஷப் பந்த் ஆட்டம்
    இழந்தார். அப்போது, பிராடு அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டதாக தெரிகிறது. இது விதிமுறைகளை மீறியது.

    இதனால், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad
    டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் வெற்றி உறுதியாகியது. #ENGvIND #INDvENG
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதால் முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இரண்டாவது இன்னிங்சில் கோலியின் சிறப்பான சதத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்து இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை தந்தனர்.

    இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார்.

    இறுதியில், அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடி 50 ரன்கள் சேர்த்தனர். பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.

    இதையடுத்து, பும்ரா 29 ஓவரில் 89 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நாளில் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் இந்தியாவின் வெற்றியை பும்ரா உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
    ×