search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96106"

    காட்பாடி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த கல்லூரி மாணவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்.

    காட்பாடி:

    காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). சிக்கன் கடை வைத்திருந்தார். இவரது மனைவி நிர்மலா. மகன்கள் சுரேஷ், பிரபு (19).

    கடந்த மாதம் நிர்மலா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அந்த பெண்ணுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கண்ணன் வீட்டில் இருந்தார். அப்போது பிரபு கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் கண்ணண் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த கண்ணன் துடிதுடித்து இறந்தார்.

    கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன் பிரபு விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தந்தையை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி சரணடைந்தார்.

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தந்தையை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொத்தவால்சாவடியில் கொள்ளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொத்தவால்சாவடி, ஆறுமுகம் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று மாலை அவர் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. இது பற்றி கொத்தவால் சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தர்‌ஷன் கொள்ளையடித்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து தர்‌ஷனை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகை-பணம் மீட்கப்பட்டது. கைதான தர்‌ஷன் மறைமலை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடன் பிரச்சினை காரணமாக கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விவசாய கல்லூரி ஊழியர் கீழே விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது58). ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் அய்யனார் சம்பவத்தன்று காலை பணிக்கு வந்தார். அப்போது தலைசுற்றல் காரணமாக மயங்கி விழுந்தார்.

    இதில் அய்யனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக அய்யனாரின் மனைவி ஆயம்மாள் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் மனமுடைந்த மன்னார்குடி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சடகோபன் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் பாலமுருகபாரதி (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் சென்னையில் வசிக்கும் தனது அத்தை மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்வதாக பேசி வந்தனர். இதற்கிடையே திருமணம் குறித்து இருதரப்பு பெற்றோர் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அத்தை மகள், கடந்த 19-ந்தேதி சென்னையில் வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி தற்கொலை செய்த சம்பவத்தால் பாலமுருகபாரதி மிகவும் மனமுடைந்து இருந்து வந்தார்.

    இதையடுத்து நேற்று மாலை மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடம் மீது அவர் ஏறினார். பின்னர் திடீரென மாடியில் இருந்து குதித்தார்.

    இதில் அவருக்கு கழுத்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாலமுருக பாரதியை அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கனூர் அருகே கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மணலிப்பட்டு காலனி கோரைக்கேணி பாதை பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகள் அனுசுயா (வயது21). இவர் பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படித்து முடித்து தற்போது புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த அனுசூயா கடந்த சில நாட்களுக்கு முன்பு வார விடுமுறையில் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    சம்பவத்தன்று காலை அனுசுயா தனது பெற்றோரிடம் விடுதி சென்று விட்டு பின்னர் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அனுசுயா விடுதிக்கும் செல்லவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனை அறிந்த அவரது பெற்றோர் அனுசுயாவை உறவினர் வீடு மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர் ஆனால் எங்கும் அனுசுயா இல்லை.

    இதையடுத்து வீரமுத்து தனது மகள் மாயமானது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கேளம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கம் அருகே உள்ள கழிப்பட்டூர் பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்த போது 35 கிராம் எடை உள்ள சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது.

    விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அமலேஷ், சாய் கிரண், சுகேஷ் என்பது தெரிந்தது. சிறிய கஞ்சா பொட்டலங்களை ரூ. 500-க்கு விற்க கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான கல்லூரி மாணவர்கள் 3 பேரும் உல்லாசமாக செலவு செய்வதற்காக கஞ்சா கடத்தி விற்றதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள், வட மாநிலத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் மாணவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்-யார்? கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, நீலகிரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். #TNRain #SchoolClose
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    இந்தநிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை  அளிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (6/10/2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    இதேபோல, நீலகிரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    திருவள்ளூர் அருகே கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரங்கநாதன் நகரை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் சங்கீதா(27). இவர் திருப்பாச்சூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவி சங்கீதா மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி ஹனுமந்த புரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் உமாமகேஸ்வரி (20) அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி கல்லூரிக்கு சென்ற உமா மகேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை தேடி வருகின்றனர். #tamilnews
    சென்னையில் 25 கல்லூரிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    சென்னை:

    குமாரராணி மீனா முத்தையா கல்லூரி சார்பில் 13-வது எம்.ஏ.எம். முத்தையா குமாரராஜா நினைவு தங்க கோப்பைக்கான கல்லூரிகள் இடையிலான கைப்பந்து, கோ-கோ, போட்டிகள் சென்னையில் நடத்தப்படுகிறது.

    தேசிய அளவிலான கைப்பந்து (ஆண்கள்), மாநில அளவிலான கோ-கோ (இருபாலர்) போட்டிகள் அடையாறில் அந்த கல்லூரி மைதானத்தில் நாளை (19-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம்., லயோலா, செயிண்ட் ஜோசப் (கேரளா), ஜெயின் பல்கலைக்கழகம் (பெங்களூர்) உள்பட 25 அணிகளும், கோ-கோ ஆண்கள் பிரிவில் 22 கல்லூரிகளும், பெண்கள் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்கின்றன. நாக்அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1 லட்சம் ஆகும். மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளரும், குமாரராணி மீனா முத்தையா கல்லூரி உடற்கல்வி இயக்குனருமான ஏ.பீட்டர் மரியா அந்தோணி தெரிவித்துள்ளார். #tamilnews
    துரைப்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் போலி பே.டி.எம். செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Arrest #FakePaytmCheating

    சென்னை:

    கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவது வழக்கம்.

    இப்போது பே.டி.எம். செயலி மூலமாகவும் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. சிறிய வணிக நிறுவனங்களில் தொடங்கி பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் பே.டி.எம். செயலி பயன் பாட்டில் உள்ளது. பொருட்களை வாங்கிய பின்னர் செல்போனில் உள்ள பே.டி.எம். செயலியை பயன் படுத்தி வியாபாரிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தலாம்.

    இந்த டிஜிட்டல் பரிவர்த் தணையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. பே.டி.எம்.செயலியை போலியாக உருவாக்கி அதன் முலம் பொருட்களை வாங்கி ரூ.30 ஆயிரம் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை துரைப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் வேல்ராஜ். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வாலிபர்கள் சென்று பொருட்கள் வாங்கினர். இதற்காக பே.டி.எம். செயலியை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் பணமும் செலுத்தினர்.

    ஆனால் பணம் வாங்கிய 3 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து உரிமையாளர் வேல்ராஜின் வங்கி கணக்குக்கு பணம் போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சூப்பர் மார்க் கெட்டுக்கு மீண்டும் பொருட்கள் வாங்க வந்த போதே பிடிபட்டனர். அவர்களது பெயர் யசாங், கிரண்குமார், செல்லி.

    இதில் கிரண்குமாரும், யசங்கும் கல்லூரி மாணவர்கள். பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் சென்னையில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இன்னொரு வாலிபரான செல்லி கேரளாவை சேர்ந்தவர். பி.டெக் முடித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். #Arrest #FakePaytmCheating

    கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். #Studentstir #bus

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அரசு பாலி டெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது.

    தருமபுரி மாவட்ட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தருமபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு மாணவர்கள் பேருந்தில் செல்ல வேண்டும்.

    ஆனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் நகர பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படுவதால் மாணவர்களால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

    அதனால் சரியான நேரத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வர காலை, மாலை இரண்டு வேலையும் பேருந்துகள் இயக்கக்கோரி இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்கு வரத்துத்துறை அதிகாரிகள், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது கல்லூரிக்கு பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    பின்னர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Studentstir #bus

    கரூரில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆசிரியர் களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி மாணவ, மாணவிகள் அசத்தினர்.
    கரூர்:

    ஆசிரியராக பணியாற்றி சிறந்த கல்வியாளராக திகழ்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி கரூர் பசுபதிபாளையம் அருகே கொளந்தாகவுண்டனூரில் உள்ள தேவி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் தங்களது குருவான ஆசிரியர்களை வணங்கி அவர்களுக்கு பேனா உள்பட பல்வேறு பரிசுகளை வழங்கி அசத்தினர். ஆசிரியர் தினத்தையொட்டி வகுப்பறை, பள்ளி வளாகம், நாம் வாழும் குடியிருப்பு பகுதி உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த கருத்துகளை மாணவர்கள் நாடகம் மூலம் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை சார்பில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. தேர்வு நெறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை பேராசிரியர் குணசேகரன் வரவேற்று பேசினார். இதில், கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், கல்வி பயிலும் மாணவர்கள் வெறும் பாடத்தை படிப்பதோடு மட்டும் நின்று விடாமல் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். தற்போதைய நவீன உலகில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்டவை மாணவர்களையும், இளைஞர்களையும் ஆட்கொண்டிருக்கிறது. எனவே, மாணவர்கள் பலரும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக மாறி வருகின்றனர். எனவே அவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாகும்.

    வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் விவசாயம் சார்ந்த படிப்புகளில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது நீதிபோதனைகளுடன் கூடிய கதையை எடுத்துக்கூறி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்துறை தலைவர் மாரியம்மாள், பேராசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல, கரூரில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்வி பயிலும் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக் கப்பட்டது 
    ×