search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96151"

    கெலவரப்பள்ளி அணை பாலத்துக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ள யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்ட பள்ளி அருகே உள்ள தைலக்காட்டில் நேற்று 4 யானைகள் புகுந்தன.

    ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் தைலக்காட்டில் சுற்றிவிட்டு ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் புகுந்தது.

    அங்கிருந்து அந்த யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். முடியவில்லை. யானைகள் புகுந்ததால் முத்தாலி கிராமமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

    இந்த நிலையில் அந்த யானைகள் இன்று காலை முத்தாலி கிராமத்தில் இருந்து புறப்பட்டு கெலவரப்பள்ளி அணைக்கு வந்து குளியல் போட்டன. தற்போது அந்த யானைகள் கெலவரப்பள்ளி அணை பாலத்துக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

    யானைகள் நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதிக்கு கிராமமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். #tamilnews
    பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் மதியழகனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #Kumki2
    கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 

    படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

    படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி படப்பிடிப்பிற்கு பிறகு கும்கி 2 படப்பிடிப்பு தான் அங்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை.. அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி.. இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம். நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம் என்றார் பிரபுசாலமன். இந்த படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



    இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். #Kumki2 #NivethaPethuraj

    தேவாரம் பகுதியில் மக்னா யானை மீண்டும் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் மக்னா யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளது.

    எனவே இந்த யானையை வனத்துறையினர் விரட்டவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து தனிப்படை வந்தது. இருந்தபோதும் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

    தற்போது இந்த மக்னா யானையின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தோட்டத்திற்குள் புகுந்த மக்னாயானை மாமரங்களை பிடுங்கி வீசியது. அப்பகுதியில் இருந்த மாட்டுக் கொட்டகையை சேதப்படுத்தி சென்றுவிட்டது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் ஜீவனா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

    மக்னா யானையின் அட்டகாசத்தால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். எனவே இந்த யானையை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்திஉள்ளனர்.

    கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது.
    பெருமாள்மலை:

    கொடைக்கானல் அருகே புலியூர் ஒத்தமரசெட் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கால்நடை டாக்டர் ஹக்கீம் மற்றும் வனத்துறையினர் அந்த யானையை மீட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் இறந்தது பெண் குட்டி யானை. 2 வயதுடைய இந்த யானை இறந்து சுமார் 10 நாட்கள் இருக்கும்.

    இந்த யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது மர்மமான முறையில் இறந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த குட்டி பெண் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், கொடைக்கானல், புலியூர், பேத்துப்பாறை, அஞ்சுவீடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் புலியூர் அகண்ட பள்ளம் பகுதியில் பெண் காட்டு யானை இறந்துள்ளது.

    எனவே யானைகள் விவசாய நிலங்கள் புகாமல் இருக்க வனத்துறையினர் நிரந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையில் மோர்தனா வன பகுதியை யொட்டி உள்ள போடியப்பனூர் கிராமத்திற்குள் நேற்று இரவு 5 யானைகள் புகுந்தன.

    சாமி என்பவர் வாழை தோப்பிற்குள் புகுந்த யானை கூட்டம் அங்கு வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தது.

    இது குறித்து தகவலறிந்த வனசரக அலுவலர் சங்கரய்யா, வனவர் அரி, உள்ளிட்ட வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேள தளம் அடித்தும் யானை கூட்டத்தினை வன பகுதியில் விரட்டியடித்தனர்.

    யானைகள் மீண்டும் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    பொதுமக்களை மிரட்டி வரும் மக்னா யானையை பிடிக்க வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பெரம்பட்டி, சாக்கலூத்து ஆகிய பகுதிகளில் மக்னா யானை விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் உடனே பிடித்து கேரளாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து வேட்டை தடுப்பு காவலர் குழு வந்துள்ளது.

    இவர்கள் முதல் கட்டமாக யானையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கால் தடம், சத்தம், இரை நடைவேகம், சாணம் ஆகியவற்றை வைத்து ஒற்றை யானை மக்னா யானை அல்ல. பெண் யானை என முடிவு செய்துள்ளனர். ஆனால் யானை எதற்காக ஆக்ரோ‌ஷமாக சுற்றித் திரிகிறது. என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

    ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக தேனி மாவட்ட கலெக்டர், வன அதிகாரி ஆகியோர் எடுத்த முடிவின் படி மத்திய வன அதிகாரியின் உத்தரவுக்காக இந்த வேட்டை தடுப்பு குழுவினர் காத்திருக்கின்றனர். உத்தரவு கிடைத்தவுடன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    முதுமலை வளர்ப்பு யானை முகாமில் கேரளாவை சேர்ந்த 3 யானைகளுக்கு கும்கி பயிற்சி தொடங்கியது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானை, நோய்வாய்படும் யானைகள் பிடிக்கபட்டு இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கபட்டு வரும் நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த, நீலகண்டன்(வயது 22), சூரியன்(20), சுரேந்திரன்(20) ஆகிய 3 யானைகள் கும்கி பயிற்சி பெற முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து இந்த 3 யானைகளும் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டன. பின்னர் பயிற்சிக்காக யானைகள் அங்குள்ள உணவு கூடத்திற்கு அழைத்து வரபட்டன. பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சண்முகப்பிரியா, கேரள மாநில முத்தங்கா வனக்கோட்ட வன அலுவலர் சாஜன், கோவை மண்டல வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை அளித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த 3 யானைகளுக்கும் 90 நாட்கள் கும்கி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் யானைகளை ஆற்றில் குளிக்க வைத்தல், அத்துடன் காட்டு யானைகளை விரட்டுதல், ரோந்து செல்லுதல், மரங்களை தூக்கி செல்லுதல், பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுதல் என பல்வேறு வகையான கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்றனர்.

    இந்த பயிற்சிகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பாகன்கள், மருத்துவர்கள் அளிக்க உள்ளனர். நேற்று நடைபெற்ற பயிற்சி தொடக்க விழாவில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை களஇயக்குனர் புஸ்பாகரன், வனச்சரகர்கள் தயானந், சிவக்குமார், காந்தன், மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தேவாரத்தில் உயிர் பலி வாங்கிய மக்னா யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம், போடி மெட்டு, பொட்டிபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் தோட்டத்துக்கு வரும் இந்த யானை விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன் பொதுமக்களையும் விரட்டி வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேகர் என்ற தோட்ட தொழிலாளியை அடித்துக் கொன்றது. இந்த யானை இது வரை 9 பேரை காவு வாங்கிய பிறகும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தோட்ட தொழிலாளி சேகர் உயிரிழந்த பிறகு அவரது உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மற்ற யானைகள் நடமாட்டம் இப்பகுதியில் இருந்த போதும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் மக்னா யானை மட்டும் தொடர்ந்து உயிர்களை பலி வாங்கி வருகிறது.

    எனவே இந்த யானையை மயக்க மருந்து கொடுத்து வேறு பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தார்.

    ஆனால் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று இரவு மீண்டும் மக்னா யானை அதே பகுதியில் புகுந்து தென்னை மற்றும் பலா தோட்டங்களை சேதப்படுத்தி சென்றது.

    எனவே தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரவு நேரங்களில் தோட்டங்களில் யாரும் தங்க வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யானையின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி தேவாரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குடியாத்தம் அருகே உள்ள நீரோடையில் விழுந்து பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக, ஆந்திர வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர எல்லையில் உள்ளது. ஆந்திர வனச்சரகத்திற்குட்பட்ட கவுண்டன்யா யானைகள் சரணாலயம் மிக அருகிலேயே இருக்கிறது.

    இங்கு இருந்து குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டப்பல்லி உள்ளிட்ட கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்யும்.

    மோர்தானா நீரோடையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும். நேற்று ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் மோர்தானா நீரோடையில், யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.

    இதுகுறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஜி.பி.எஸ். மூலம் ஆய்வு செய்ததில் யானை இறந்துகிடந்த பகுதி தமிழக-ஆந்திர வனப்பகுதி எல்லையில் இருந்தது.

    இதனால், ஆந்திர வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எல்லை பிரச்சினை காரணமாக, யானை உடலை அகற்றுவது யார்? என்பதில் முரண்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் முருகன், குடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா தலைமையில் தமிழக வனத்துறையினர் மற்றும் ஆந்திர வனத்துறையினர் இன்று காலை மோர்தானா நீரோடை பகுதிக்கு வந்தனர்.

    யானை உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. சுமார் 40 வயது இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்க மோர்தானா நீரோடைக்கு வந்துள்ளது.

    அப்போது தவறி விழுந்து நீரோடையில் இறந்துள்ளது என தமிழக-ஆந்திர வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், யானையின் அழுகிய உடலில் இருந்து பெரிய புழுக்கள், சதை துணுக்குகள் நீரோடையில் கலந்து மோர்தானா அணைக்கு செல்கிறது.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீரோடையில் கிடந்த யானையின் உடலை தமிழக- ஆந்திர வனத்துறையினர் அகற்றினர். மேலும், யானை இறப்பு குறித்து இருமாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilnews
    பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு சிறுவனுக்கும், குட்டி யானைக்கும் இடையேயான நட்பை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகி வருவதாக இயக்குநர் கூறியிருக்கிறார். #Kumki #PrabhuSolomon
    கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - லஷ்மி மேனன் நடிப்பில் உருவான `கும்கி' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது. 

    இந்த நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு முதல் உருவாக்கி வருகிறார் பிரபு சாலமன். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    படம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் பேசும் போது, 

    கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்றார். ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2 படத்தின் கதையாக உருவாகி வருகிறது.  



    இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் அனுமதி கிடைக்கல, அனுமதி கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக கும்கி 2 இருக்கும்.



    வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்றார் பிரபுசாலமன்.

    இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். #Kumki #PrabhuSolomon
     
    யானை தாக்கி சிறுவன் பலியானதை கண்டித்து வயநாட்டில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது குறித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் புலியாளம். இங்கு வசித்து வருபவர் சந்திரன். முதுமலை புலிகள் காப்பகத்தில் நெலாக் கோட்டை சரகத்தில் வனக்காப்பளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் மகேஷ் (11). இவர் பள்ளி விடுமுறையில் முதுமலை அடுத்துள்ள கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயம் பொன்குழி பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இவர்களது வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அங்கு மகேஷ் மற்று சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டு யானை மகேசை தாக்கியது. இதில் அவன் அதே இடத்தில் இறந்தான். முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பின் புலியாளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    பொன் குழி பகுதியில் அடிக்கடி காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தவறி விட்டனர் என காங்கிரசார் குற்றம் சாட்டினார்கள்.

    வனத்துறையினரை கண்டித்து இன்று கேரள மாநிலம் வயநாட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
    தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை நாசம் செய்து வருகின்றன.

    இதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்கள் ஏந்தியும் விரட்டி வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக போளூவாம்பட்டி வனசரக பகுதியில் 5 வயது குட்டி யானையுடன் பெண் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் இந்த யானைகள் நேற்று நள்ளிரவு தொண்டாமுத்தூர் அருகே உள்ள சின்ன ஆறு பகுதியில் நஞ்சம்மாள் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தின்றது. பின்னர் தோட்டத்து வீட்டிற்கு வந்தது. வீட்டில் நஞ்சம்மாளும், அவரது பேரனும் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். வீட்டின் கதவை யானைகள் உடைத்தது.

    யானைகள் சத்தம் கேட்டதும் நஞ்சம்மாளும் அவரது பேரனும் பீரோவின் பின்னால் ஒளிந்து கொண்டனர். பின்னர் யானைகள் நஞ்சம்மாள் வீட்டின் வெளியே வைத்திருந்த புண்ணாக்கு மூட்டையை உடைத்து புண்ணாக்கை தின்று விட்டு அங்கிருந்து சென்றது.

    இன்று காலை சின்ன ஆறு பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றி வந்தது. அப்போது 25 வயது மதிக்க தக்க வாலிபர் அந்த வழியாக நடந்து சென்றார்.

    அவரை பெண் யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போளூவாம் பட்டி வன சரக அலுவலர் பழனிராஜா மற்றும் வன ஊழியர்கள் சின்ன ஆறு பகுதிக்கு சென்றனர். யானை தாக்கி இறந்த வாலிபர் உடலை பார்வையிட்டனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.யானை தாக்கி இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×