search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தது கடவுள் கொடுத்த பரிசு என்று நடிகை சாக்‌ஷி அகர்வால் கூறியிருக்கிறார். #Kaala #SakshiAgarwal
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார்.

    இப்படம் குறித்து சாக்‌ஷி அகர்வால் கூறும்போது, ‘ரஜினி சார் படத்தில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நான் வெளிநாடுக்கு சென்ற போது அங்கு இருப்பவர்கள் ரஜினியை பார்த்திருக்கீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது நான் பார்த்ததில்லை என்று கூறினேன். ஆனால், இப்போது அவருடன் படத்திலேயே நடித்திருக்கிறேன் என்பது கடவுள் கொடுத்த பரிசாக கருதுகிறேன். ரஜினியின் நடிப்பை கண்டு பிரமித்தேன். முதலில் அவருடன் நடிக்க பயந்தேன். பின்னர், அவருடன் பழகிய பிறகு அந்த பயம் போய் விட்டது.



    இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானா பட்டேகர் மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் என்னுடன் பேசிக்கொண்டே, ஒரு படம் வரைந்தார். அது அந்த படப்பிடிப்பு தளத்தின் செட்டை அப்படியே பத்து நிமிடத்தில் வரைந்தார். நான் பேசுவதை கவனித்துக் கொண்டே படத்தையும் திறமையாக வரைந்தார். இவருடைய நடிப்பு வேற லவலில் இருந்தது.

    இயக்குனர் பா.இரஞ்சித் தான் இப்படத்தின் தலைவன். இவர் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருப்பார். அதுபோல், இந்த படத்திலும் அனைவருக்குமே சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். எனக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது நீங்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். நான் யாருக்கு ஜோடி என்பதையும் தற்போது சொல்ல முடியாது.



    படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் தனுஷை படப்பிடிப்பின் போது நான் பார்க்கவே இல்லை. ஆனால், இசை வெளியீட்டு விழாவில் தான் பார்த்து பேசினேன். அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். இவரது நடிப்பு ஹாலிவுட் வரை சென்றிருப்பது பெருமை.

    காலா திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. ஜூன் 7ம் தேதி ரசிகர்களை போல் நானும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்றார்.
    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கதிராமங்கலம் போராட்ட காட்சிகளை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. #Kaala #Rajini
    அரசியல் களத்தில் ரஜினி வேகம் எடுத்து இருக்கும் சூழ்நிலையில் அவரது படத்திலும் நடப்பு அரசியலை குறிக்கும் வசனம், காட்சிகள் அமைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் வரும் ஜுன் 7-ந் தேதி வெளியாகிறது. ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்து உள்ளார்.

    ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லர் நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் ரஜினியின் உணர்ச்சி கரமான நடிப்பு, காமெடி, காதல், கோபம் என பன்முக நடிப்பை காட்டும் காட்சி களும் நானா படேகரின் வில்லத்தன காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

    ரஜினி கூடி இருக்கும் மக்களை பார்த்து ‘நம் உடல் தான் நமது ஆயுதம். எல்லோரும் போராட வாருங்கள்’ என்று அழைக்கும் காட்சியும் டிரெய்லர் இறுதியில் ’நிலம் உங்களுக்கு அதிகாரம். எங்களுக்கு வாழ்க்கை’ என்று அரசியல்வாதியை பார்த்து பேசும் வசனமும் இடம்பெற்று இருக்கிறது.

    ரஜினி மும்பை தாராவி பகுதியில் வாழும் மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்து இருக் கிறார் டிரெய்லர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 25லட்சம் பேர் பார்வையாளர்களை பெற்று வலைதள டிரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. 

    டிரெய்லரில் ஒரு காட்சியில் போராடும் மக்களை காவல்துறையினர் தாக்கும் காட்சி உள்ளது. அதில் ஒரு பெண்ணை பின்புறத்தில் இருந்து கடுமையாக தாக்குகிறார் காவல் அதிகாரி ஒருவர்.

    இது அப்படியே கதிராமங்கலம் போராட்டத்தில் பெண்களை காவல்துறையினர் தாக்கிய காட்சியை நினைவுபடுத்தியது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

    கடந்த ஆண்டு கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் குழாய்களால் தங்கள் நிலம் பாதிக்கப்படுவது என்று மக்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தில் ஒரு பெண்ணை காவலர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பானது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த காட்சி என்கிறார்கள்.
    நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், 7 வருடங்களுக்கு முன்பு இந்த நாளை மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். இப்படம் ஜூன் 7ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல், இன்று காலா படத்தின் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் காலா என்ற ஹேஷ் டேக்குக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள காலா எமோஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 



    இந்த நாளையும் 7 வருடங்களுக்கு முன்பு இதே நாளையும் என்னால் மறக்க முடியாது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். 7 வருடங்களுக்கு முன்பு 28-5-2011 அன்றைய தினத்தில் அப்பா உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். கடவுளின் அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் சில தினங்களில் உயிர் திரும்பினார். மக்களின் பிரார்த்தனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. 7 வருடங்களுக்கு பின்பு இன்று உங்கள் அன்புடன் காலா கொண்டாட்டம்’ என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். #Sterlite #Rajini
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார். இதற்கு அரசியல்வாதிகளும், முக்கிய பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, ‘போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’ என்றார்.
    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய டிரைலரில் பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. #Kaala #Rajini #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

    இந்த நிலையில், ரிலீசை முன்னிட்டு படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மெர்சல் படத்திற்கு பிறகு காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் காலா என்ற ஹேஷ் டேக்குக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள காலா எமோஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு காலா படத்தின் புதிய டிரைலரை வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்தார். சில பிரச்சனைகள் காரணமாக 7.15 மணியளவில் வெளியானது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

    குறிப்பாக, நிலம் உனக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை என்று பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் அவரது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். #Kaala #Rajinikanth
    பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காலா படத்தில் ரஜினியுடன் நடித்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று நடிகை ஈஸ்வரி ராவ் கூறியிருக்கிறார். #Kaala
    ரஜினிக்கு ஜோடியாக காலா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார் ஈஸ்வரிராவ். காலா படம் பற்றி ஈஸ்வரி ராவ் கூறும்போது ‘இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

    ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று முன்னணி கதாநாயகிகள் எல்லோரும் காத்துக்கொண்டிருக்க எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ரஞ்சித் அழைத்து தேர்வு வைத்தார். ஆனால் ரஜினி படம் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருந்தார். என்னுடைய காட்சிகள் பெரும்பாலும் தாராவியில் படமாக்கப்பட்டன.

    படத்தில் நான் நிறைய நகை அணிந்து இருப்பேன். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டது இல்லை. காலா படத்திற்கு பிறகும் இதுவரை எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.
    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் ரசிகர்களுக்கு இன்று இரவு சிறப்பு விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

    இந்த நிலையில், ரிலீசை முன்னிட்டு படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மெர்சல் படத்திற்கு பிறகு காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் காலா என்ற ஹேஷ் டேக்குக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள காலா எமோஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு காலா படத்தின் புதிய டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். இதனை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் அவரது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். #Kaala #Rajinikanth
    ஜி.எஸ்.டி, ஸ்டிரைக்கால் மிகவும் பாதிப்படைந்து இருக்கும் தமிழ் சினிமா ரஜினி, கமல் படங்களை பெரிதும் நம்பி இருக்கிறது. #Rajini #Kamal
    தமிழ் சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே கடும் இழப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெளியாகும் படங்களுக்கு ஒரு வாரம் தான் அதிகபட்ச ஆயுள். வெற்றி வெற்றி என்று கூறிக்கொள்ளும் படங்கள் கூட கணக்கு போட்டு பார்த்தால் இறுதியில் இழப்பை தான் சந்திக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் ஜி.எஸ்.டி, டிக்கெட் விலை அதிகரிப்பு, 48 நாட்கள் வேலை நிறுத்தம் என்று மூன்று காரணங்கள் சினிமாவை பாதித்தன.

    டிக்கெட் விலை அதிகரிப்புக்கு பின் இரண்டு வாரங்கள் திரையரங்குகள் ஈ ஓட்டின. பின்னர் வெளியான விக்ரம் வேதா படம் ஓடியதால் தமிழ் சினிமா சற்று நிமிர்ந்தது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் பட வெளியீடு நிறுத்தமும் அமலுக்கு வந்தது. வேலை நிறுத்தம் முடிந்து படங்கள் வெளியாக தொடங்கினாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து, இரும்புத்திரை இரண்டு படங்கள் தான் வெற்றி பெற்றன.

    ஆனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே நிமிர வேண்டும் என்றால் ரஜினி, கமல், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாக வேண்டும். அந்த எதிர்பார்ப்பை ரஜினியின் காலாவும், கமலின் விஸ்வரூபம் 2 படமும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கிறது தமிழ் சினிமா.



    ரஜினிக்கு காலா, 2.0, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று மூன்று படங்களும் கமலுக்கு விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 என்று மூன்று படங்களும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. திட்டமிட்டபடி இந்த 6 படங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியானாலே போதும். தமிழ் சினிமா மீண்டும் வலுவானதாக மாறிவிடும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் நடந்து வருவதால், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ திரைப்படம் தள்ளி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Kaala
    ரஜினி நடித்து சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். தூத்துக்குடி கலவரம்-துப்பாக்கி சூடு காரணமாக அந்த முடிவை ரஜினி ரத்து செய்துவிட்டார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார். பொதுவாக ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு அவரது படத்துக்கான விளம்பர வேலை என்ற ரீதியில் எப்போதுமே விமர்சிக்கப்படும்.

    எனவே தனது அரசியல் அடியை ரஜினி கவனமாக எடுத்து வைக்கிறார். ரஜினி நடிப்பில் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்று நில உரிமைக்காக போராடும் போராளியாக ரஜினி நடித்திருக்கிறார். படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கலவரத்தால் பற்றி எரியும் சூழ்நிலையில் ‘காலா’ படத்தை வெளியிடுவது பிரச்சினையை உண்டாக்கும். மேலும் விமர்சனங்களும் கிளம்பும் என்று ரஜினி யோசிக்கிறார்.

    இந்த வாரம் ஆந்திராவில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டு இருந்தார். அவற்றை தள்ளிப்போட்டு விட்டார். இதே நிலை நீடித்தால் பட வெளியீட்டையும் தள்ளி வைக்க ரஜினி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முதல் கட்டமாக சர்வதேச விநியோகஸ்தர்களுடன் ரஜினி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
    ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது 78 வயது ரசிகையை கவுரவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். #Rajini #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும், அரசியல் பணியிலும் தீவிரம் காண்பித்து வருகிறார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.

    ரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு இன்னுமொரு உதாரணம் நடந்திருக்கிறது. 

    திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. இவருக்கு வயது 78. தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.

    ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.

    இது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தாவை தன் இல்லத்துக்கு இன்று வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது களப்பணிக்கு கவுரவம் தந்தார்.
    தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி ரஜினி, கமலால் அரசியல் செய்ய முடியாது என்று சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார். #ShatrughanSinha #KamalHaasan #Rajinikanth
    சென்னை:

    இந்தி மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் நண்பர். சினிமாவுக்கு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சத்ருகன் சின்ஹா பா.ஜ.க. தலைமை மீது மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

    தற்போது பீகார் மாநில பா.ஜ.க.வின் அதிருப்தி எம்.பி.யாக உள்ளார். மத்திய மந்திரியாகவும் இருந்தவர். ரஜினி, கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்குள் நுழைவதை கடுமையாக தாக்கி உள்ளார். அவர் கூறியதாவது:-



    ‘ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள், தெளிவான திரைக்கதையோடு தான், அரசியல் களத்தில் குதித்திருப்பார்கள் என, நம்புகிறேன். அவர்கள் அரசியலில் இறங்குவதற்கு முன் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் என கூறியிருப்பேன். அதில் இருக்கும் கண்ணிவெடிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பேன்.

    காரணம், அவர்கள் நினைப்பதை போல அரசியல் என்பது ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல. தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி இவர்களால் அரசியல் செய்ய முடியாது’ .

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்ருகன் சின்ஹா ரஜினிக்கு நெருக்கமான நண்பர். சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்‌ஷி சின்ஹா ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர். இதே சத்ருகன் சின்ஹா தான் கடந்த 2017 மே மாதம் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பா.ஜ.கவை ஆதரிக்க கூடாது. தனிக்கட்சி தான் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #ShatrughanSinha #KamalHaasan #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், தயாரிப்பாளர் தனுஷ் மீது கோபமடைந்துள்ளனர். #Kaala #Rajini #Dhanush
    ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் 7 ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் காலா. படத்தை தனுஷ் தயாரித்து இருக்கிறார். இன்னும் 20 நாட்களே இருப்பதால் படத்துக்கான விளம்பர வேலைகள் தொடங்கி மும்முரமாக நடைபெறுகின்றன. கடந்த 9 ஆம் தேதி சென்னையில் 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.

    ஆந்திர ரஜினி ரசிகர்கள் என்ற சமூக வலைதளத்தில் நேற்று பகிரப்பட்ட ஒரு செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செய்தியில் ’நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இன்னும் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் சின்ன விளம்பரம் கூட இல்லை. தெலுங்கில் படம் இன்னும் வினியோகமும் ஆகவில்லை. தயாரிப்பு தரப்பின் மோசமான திட்டமிடல் இது. காலா படத்தின் பாடல்களும் ஆந்திர மக்களை இன்னும் வந்து சேரவில்லை’ என்று பகிரங்கமாக ட்விட்டரில் எழுதி அதில் தனுஷ், தனுஷின் தயாரிப்பு நிறுவனம், லைக்கா, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரையும் இணைத்திருக்கிறார்கள்.

    இதேபோல் மும்பை ரஜினி ரசிக மன்றத்தினரும் இந்தி காலா படத்துக்கான விளம்பர வேலைகளை ஏன் இன்னும் தொடங்கவில்லை? என்று தனுசை கேட்டு வருகிறார்கள். இது குறித்து தெலுங்கு ரஜினி ரசிகர் ஒருவரிடம் கேட்டோம். ‘ரஜினி படம் என்பது மற்ற சாதாரண படங்களை போல பத்தோடு பதினொன்று அல்ல.



    ரஜினி படம் வெளியாகிறது என்றால் இந்தியாவில் உள்ள தமிழ் ரசிகர்கள் எல்லோருமே கொண்டாடுவார்கள். லிங்கா படத்தின் நிகழ்ச்சிக்கு ரஜினி ஐதராபாத் வந்தபோதே சென்னை அளவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். ஆனால் காலா படத்தின் ஆந்திர வினியோகம் இன்னும் கொடுக்கப்படவே இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் ஆந்திராவில் படத்தின் விளம்பர வேலைகளும் தொடங்கவே இல்லை. ஆந்திர மக்களுக்கு காலா படத்தின் பாடல்களோ வெளியீட்டு தேதியோ சென்றடையவில்லை. ஜூன் மாதத்தில் வேறு எந்த புதிய படமும் இல்லை. எனவே காலா படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய வைக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தனுசால் அது கனவாக போய்விடுமோ என்று அச்சமாய் இருக்கிறது’ என்றார்.
    ×