search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தை அடுத்து, தனுஷை வைத்து படம் பா.இரஞ்சித் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #PaRanjith #Dhanush
    கபாலி முடிந்த பிறகு மீண்டும் இரஞ்சித் ரஜினியை இயக்குவாரா? என்று சலசலப்பு எழுந்தது. ஆனால் உடனே ரஜினி - இரஞ்சித் கூட்டணி அமையக் தனுஷ் தான் காரணமாக இருந்திருக்கிறார். தனுஷ் தான் கதையை கேட்டு ரஜினியிடம் அனுப்பியதோடு தாமே தயாரிக்க முன்வந்தார். 

    இரஞ்சித்தின் இயக்கமும் ஒருங்கிணைப்பும் பிடித்து போனதால் தனக்கும் ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டிருக்கிறாராம். இரஞ்சித்துக்காக நீண்ட காலமாக சூர்யாவும் காத்திருக்கிறார்.

    அடுத்தடுத்து ரஜினி படம் இயக்கியதால் சூர்யாவை காத்திருக்க வைத்திருந்தார் இரஞ்சித். எனவே அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு பின்னர் தனுசை வைத்து இயக்கலாம். காலா வெளியீட்டிற்கு பின்னர் தான் இது உறுதிபடுத்தப்படும். 

    அனேகமாக இரஞ்சித் தனுஷ் இணையும் படமும் அரசியல் படமாகவே இருக்கலாம். தனுஷ் ஏற்கனவே கொடி என்ற அரசியல் படத்தில் நடித்தாலும் சமூகம் சார்ந்த படங்களில் அதிகம் நடித்ததில்லை. எனவே இரஞ்சித்திடம் அவர் பாணியிலேயே கதை தயார் செய்ய சொல்லியிருக்கிறாராம்.
    அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கும் கோவை மண்டலத்தில் பலமாக காலூன்ற ரஜினியும், கமலும் திட்டமிட்டுள்ளனர். #RajiniMakkalMandram #MakkalNeedhiMaiam
    சென்னை:

    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குவது கோவை மண்டலம் தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வென்று ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமே கொங்கு மண்டலம் தான்.மொத்தம் உள்ள இடங்களில் 90 சதவீத இடங்களை அ.தி.மு.க. வென்றது.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கவுண்டர் இன மக்கள் அதிகமாக உள்ளனர். கொங்கு மண்டலத்தில் இருந்து மட் டும் 47 எம்.எல்.ஏக்களும், 9 எம்.பி.க்களும் வெற்றி பெற்றனர். இதனாலேயே தி.மு.க.வால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.



    ஜெயலலிதா இருந்தவரை ரஜினி அரசியலில் நுழைவது பற்றி முடிவே எடுக்கவில்லை. கமல் அரசியலை பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் இருவருமே இப்போது வேகம் எடுக்கிறார்கள்.

    கட்சியை தொடங்காமலேயே மன்றத்தின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் ரஜினி கோவையில் தான் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின்னர் கோவை மண்டலத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இளைஞரணி நிர்வாகிகளுடனான ஆலோசனையை வெளியில் அறிவித்தவர்கள் இதனை ரகசியமாகவே வைத்திருந்தார்கள்.

    கோவையில் மாநாடு நடத்தினால் கூட்டம் சேர்க்க முடியுமா? என்பது குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். கோவையில் பா.ஜ.க.வுக்கும் செல்வாக்கு உள்ளது. இதன் மூலம் அந்த கட்சியின் வாக்குகளை கவரவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

    இதை அறிந்த கமலும் கோவை மண்டலத்தில் தான் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். கமல் கட்சி தொடங்கிய உடன் முதல் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு தான் சென்றார். இதனால் கோவை மண்டலத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. #RajiniMakkalMandram #MakkalNeedhiMaiam

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்ப இருக்கிறது. #Kaala #Rajini
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. படத்தை ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்திருக்கிறார். ஜுன் 7 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இதுவரை வெளியான ரஜினி படங்களை விட காலா படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். காரணம் ரஜினி அரசியலில் இறங்கிய பின் வெளியாகும் முதல் படம் என்பது தான். 

    படத்திலும் அரசியல் கருத்துகள் இருப்பதால் இப்போதே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்நிலையில் இப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாகுமா? என்பதில் தான் சிக்கல் நீடிக்கிறது. ரஜினி கர்நாடகத்தை சேர்ந்தவர். ஆனால் தமிழ்நாட்டில் தான் நடிகர் ஆனார். தமிழின் முன்னணி நடிகராக நீடித்து அரசியலில் இறங்கும் அளவுக்கு செல்வாக்கு ஆனார். 

    ரஜினி அரசியலில் இறங்கியபோதே காவிரி பிரச்னையில் ரஜினி எந்த பக்கம் ஆதரிப்பார் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரோ சொந்த மாநிலத்தைவிட்டு விட்டு தமிழ்நாட்டை ஆதரித்தார். அண்மையில் நடந்த காவிரி மேலாண்மை வாரியத்திற்கான போராட்டத்திலும் கலந்துகொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகள் ரஜினி படம் வெளியாகும் தேதிக்காக காத்திருக்கிறார்கள். எனவே கர்நாடகாவில் காலா வெளியாகுமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    இப்போதுதான் கர்நாடக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் புதிய அரசு ஆட்சி அமைக்கும். எனவே காலா வெளியீட்டு நேரத்தில் இரண்டு மாநிலங்களிலுமே காவிரி பிரச்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் காலா வெளியிட கடும் எதிர்ப்பு எழ வாய்ப்புண்டு. 



    பாகுபலி வெளியீட்டு சமயத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார் என்ற காரணத்தால் வெளியிட விடாமல் பிரச்னை செய்தார்கள். பின்னர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால் படம் வெளியானது. அதுபோல ரஜினியும் வருத்தம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழலாம். எது எப்படியோ ஜுன் முதல் வாரத்தில் காலா வெளியீடு பரபரப்பை ஏற்படுத்தும். இப்போதே கர்நாடக கன்னட அமைப்புகளில் சில இதற்கான திட்டமிடலில் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
    காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார். #cauveryissue

    கோவை:

    பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு அதனை உறுதி செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என முதல்-அமைச்சர் கூறி இருக்கும் கருத்தை வழி மொழிகிறேன்.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். நாளை வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயமான முறையில் தீர்வு கிடைக்கும்.

    எஸ்.வி. சேகரை பொறுத்தவரை அவர் பாரதீய ஜனதாவில் உறுப்பினராக இருந்தாலும் தீவிரமாக பணியாற்றியது இல்லை. அவர் தான் பதிவிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.

    வேறு ஒருவர் பதிவை படிக்காமல் பதிவு செய்து விட்டேன் என தெரிவித்து உள்ளார். அவருக்கு இந்த பதிவை அனுப்பியது யார்? என்பதை கண்டு பிடிக்காமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆடிட்டர் குருமூர்த்தி பாரதீய ஜனதா நலன் விரும்பி. ரஜினிக்கும் நல விரும்பியாக உள்ளார். பாரதீய ஜனதாவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என குருமூர்த்தி கூறிய கருத்து குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    தேனி மாவட்டம் போடியில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது. திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேர் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறதே? என நிருபர்கள் கேட்ட போது, ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். இதற்கு மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். #cauveryissue

    ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை ரஜினிகாந்த் நேற்று சந்தித்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி மாவட்ட இளைஞரணி செயலாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன் நேற்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



    இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்களை வருகிற 13-ஆம் தேதி சந்தித்து ரஜினிகாந்த்  ஆலோசனை நடத்த இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடக்கும இந்த சந்திப்பில் தமிழக - புதுச்சேரி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கிற்கு, சென்னை ஐகோர்ட்டு தடை விதிக்க மறுப்பளித்துள்ளது. #Kaala #Rajini #Rajinikanth
    சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கரிகாலன் என்ற படத்திற்கான தலைப்பை கடந்த 1996 முதல் 2006 வரை நான் முறையாக பதிவு செய்து புதுப்பித்து வந்தேன். இடையில் புதுப்பிக்கவில்லை.

    இந்நிலையில் திடீரென என்னுடைய தலைப்பை வைத்து நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தற்போது காலா என்ற கரிகாலன் என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். நான் என்னுடைய தலைப்பை புதுப்பிக்க வில்லை என்பதால் அந்த தலைப்பை வேறு ஒருவருக்கு மாற்றிவிட்டதாக சங்க நிர்வாகிகள் காரணம் கூறுகின்றனர். அதுபோல காலா என்ற கரிகாலன் படத்திற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ‘இந்த வழக்கு தொடர்பாக போதுமான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்ய வில்லை. எனவே காலா என்ற கரிகாலன் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.



    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு வக்கீலின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க வில்லை. வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, எதிர் தரப்புக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
    தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் ரஜினிகாந்த். #Rajini #Rajinikanth #Kaala
    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான பாடல்களை நேற்று இணையதளத்தில் தனுஷ் வெளியிட்டார். மேலும் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில் ரஜினி பேசும்போது, ‘இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. 
    நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் அரசியல் இருக்கும். கபாலி இரஞ்சித் படம். ஆனால், காலா என்னுடைய படமாகவும், இரஞ்சித் படமாகவும் இருக்கும் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து பேசிய ரஜினி, அரசியல் பற்றி பேசுவேன் என்று அனைவரும் எதிர்ப்பார்க்கிறீர்கள். நான் என்ன செய்வது இன்னும் தேதி வரவில்லையே. கடமை இருக்கும். நேரம் வரும் போது அரசியல் பற்றி பேசுகிறேன். கடவுள் ஆசிர்வாதத்துடன், மக்கள் ஆதரவுடன் தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம் பிறக்கும். என்று பேசினார்.



    இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்த்துபோல், ரஜினி எதுவும் பேச வில்லை. முக்கிய அறிவிப்பை வெளியிட வில்லை. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. 
    ×