search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தில் அவருக்கு ஜோடியாகும் வாய்ப்பை பிரபல நடிகை தவறவிட்டதாக கூறியிருக்கிறார். #Petta #Rajini
    சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

    மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது. 



    மாடலிங் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார் மீரா மிதுன். மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார்.

    ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் திரிஷா என சமீபத்தில் தான் மீராவுக்கு தெரியவந்திருக்கிறது.



    அதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன். அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.
    ரஜினியை வைத்து லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள். #Lingaa
    கன்னட சினிமாவை சேர்ந்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் தீவிர ரஜினிகாந்த் ரசிகர். இவர் ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    மேலும் இவர் கன்னட படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 6 மணி முதல் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



    பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வீடு உள்பட 60 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் பட தயாரிப்பிலும் ஈடுபட்டவர். #Lingaa
    பாகுபலி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ராஜமவுலி, ரஜினியை வைத்து நான் படம் இயக்கினால் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கும் என்று கூறியிருக்கிறார். #Rajamouli #Rajinikanth
    தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமைந்திருக்கும். ராஜமவுலி தெலுங்கு நடிகர்களை வைத்து மட்டுமே படத்தை இயக்கியுள்ளார்.

    தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து படம் இயக்கும் அவர், அதற்கு அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்தி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமவுலியிடம் நீங்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் உங்கள் தேர்வு ரஜினியா இல்லை கமலா? என கேள்வி கேட்கப்பட்டது.



    அதற்கு ராஜமவுலி நான் ரஜினியை வைத்துதான் படம் இயக்குவேன். நான் அவருடன் இணையும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் விசில் பறக்கும்’ என்று பதில் அளித்துள்ளார். #Rajamouli #Rajinikanth
    பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக், ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் என்று கூறியிருக்கிறார். #Petta #NawazuddinSiddiqui
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீசாக இருக்கிறது.

    இந்நிலையில், தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நவாசுதீன் சித்திக், ரஜினி பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “ரஜினிகாந்தின் எளிமைதான் அவரை ரஜினிகாந்தாக வைத்துள்ளது. அவர் இன்று இருக்கும் நிலைக்கும் அவரது எளிமைதான் காரணம்.

    நிஜவாழ்வில் அவர் எளிமையாக இருப்பதால்தான், திரையில் அவரால் ஒரு ஆளுமையாக இருக்க முடிகிறது. ரஜினியின் ஈர்ப்பு அற்புதம். ஒரு காட்சியில் அவர் எழுந்து நின்று ஸ்டைலாக நடப்பதைப் பார்த்தே சுற்றி இருப்பவர்கள் கைதட்ட தொடங்கி விட்டார்கள். சிறுவயதிலிருந்து நிறைய ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் பாதித்துள்ளது.



    அதை நான் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படத்திலும் ஒரு காட்சியில் முயற்சித்து இருந்தேன். ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போது, யாருக்குமே அவர் வருவது தெரியாது. அவர் வேலை முடித்துவிட்டுக் கிளம்பும்போதும் அப்படித்தான்” என்று கூறி இருக்கிறார்.
    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் விளம்பரம் மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸில் இடம் பெற்றிருக்கிறது. #Petta #Rajini #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.

    மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் "DRIFT Challenge 2018" கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார். 

    மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. 



    மேலும், ”இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிச்சயம் ஊக்குவிக்கும்.” என்று பெருமையோடு கூறுகிறார் மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர் மாலிக்.
    பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சஞ்சிதா ஷெட்டி, அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு பிடிக்கு என்று பேட்டியளித்துள்ளார். #SanchitaShetty
    சூது கவ்வும் படம் மூலம் கவனிக்க வைத்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து இருக்கும் ஜானி படம் வெளியாகி உள்ளது. அவர் அளித்த பேட்டி:

    இது ஒரு விறுவிறுப்பான திரில்லர். படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைக்கும்.

    பிரசாந்த்?

    அவர் செம ஜாலி டைப். நடிக்கிறதுக்கு முன்னாடி நானும் எல்லோர் மாதிரி அவரோட ரசிகைதான். ஆனா, `ஜானி’யில அவர்கூட நடிச்சதுக்குப் பிறகு, நல்ல நண்பர் ஆகிட்டார்.

    உங்களை அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே?

    தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டே இருக்கிறதுல அர்த்தமில்லை. கொஞ்சமா நடிச்சாலும், நச்சுனு கேரக்டர்ஸ் பிடிக்கணும். என் நடிப்பில் அடுத்து இன்னும் சில படங்கள் வர இருக்கு.

    நடிக்க வந்ததன் காரணம்?

    காரணம் தெரியலை. நான் செம கியூட்டா இருக்கேன்னு ப்ரெண்ட்ஸ், வீட்டுல இருக்கிறவங்க சொல்வாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான், ‘சினிமாவுக்கு முயற்சி பண்ணிப்பாரு’னு சொல்ற அளவுக்கு வளர்ந்துடுச்சு. முதலில் ‘தில்லாலங்கடி’யில ஒரு கேரக்டர் கிடைச்சது. அந்த வேடத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை முழு நேர நடிகையாக்கி விட்டது.

    தமிழ் ரசிகர்கள் எப்படி?

    அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி நினைச்சு பேசுறாங்க. ஒருநாள் ஷூட்டிங்ல இருக்கும்போது, ‘ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறோமே?ன்னு குடும்பத்தோட வருவாங்க. இதையெல்லாம் நினைச்சாலே சந்தோ‌ஷமா இருக்கும். ஓப்பனா சொன்னா, சென்னை ரசிகர்களுக்காகவே தமிழ்ல நிறைய படங்கள்ல நடிக்கணும். ஏன்னா, என்னை ரசிகர்கள் நேசிப்பதற்கு மேல் நான் அவர்களை நேசிக்கிறேன்.

    பிடித்த கதாநாயகி?

    கஜோல். அவங்க கண்ணு அவ்ளோ அழகு. வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டை கஜோலுக்காக திரும்பத் திரும்பப் பார்ப்பேன்.

    கனவு வேடம்?

    அப்படி எந்த எண்ணமும் இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தர்ற எல்லா வேடமுமே எனக்கு கனவு வேடம்தான்.

    பிடித்த கதாநாயகன்?

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.
    ரஜினிக்கும், கமலுக்கும் சம அளவு முக்கியத்துவத்தை நானும் எனது குழுவும் அளித்து வருகிறோம் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். #Anirudh
    அனிருத் சினிமாவுக்கு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ரஜினி படத்துக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகி விட்டார். ரஜினி படத்தை தொடர்ந்து கமல் படத்துக்கும் இசையமைக்க இருக்கிறார்.

    ‌ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் தான் இசை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது. ஏற்கனவே இதன் படப்பிடிப்புக்காக அரங்கு அமைக்கும் பணிகள் கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

    பேட்ட படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில் முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றும் அனுபவம் குறித்து அனிருத் பேட்டியளித்துள்ளார். அதில், “இரண்டு பெரிய வாய்ப்புகள் கிடைத்திருப்பது சிறப்பான அனுபவம்.

    திரையுலகில் இது எனது ஏழாவது ஆண்டு, 18-வது ஆல்பம், திரைத்துறையில் உள்ள இரு ஜாம்பவான்களோடு இணைந்து பணியாற்றுவது பெரிய கவுரவமாக உணர்கிறேன். இரண்டுக்கும் சம அளவு முக்கியத்துவத்தை நானும் எனது குழுவும் அளித்து வருகிறோம்” என்று அனிருத் தெரிவித்துள்ளார்.



    இந்த ஆண்டு அவர் தெலுங்கில் அறிமுகமான ‘அஞ்ஞாதவாசி’ படம் அங்கும் அவருக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது. இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாவிட்டாலும் அனிருத்தின் பாடல்கள் கவனம் பெற்றன.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் ரோபா ரஜினியின் உருவ பொம்மை ஒன்றை அனிருத் தனது ஸ்டூடியோவில் வைத்துள்ளார். #Rajini #Anirudh
    ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 29-ம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘2.0’. எந்திரன் படத்தின் கதாபாத்திரங்களான டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி.

    சில கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஹீரோயினாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். ‌ஷங்கர் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 3டியில் வெளியாகும் இந்தப் படம், இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிட்டி ரோபோ கதாபாத்திரத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிட்டியின் அசாத்தியத் திறமைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கவரப்பட்டுள்ளனர்.



    எந்திரன் படம் வெளியானபோது, பெரும்பாலான தியேட்டர்களில் சிட்டியின் உருவ பொம்மைகளை வைத்து ரசிகர்களை கவர்ந்தனர். தற்போது 2.0 ரிலீசாக இருப்பதால், மறுபடியும் சிட்டி ரோபோ பிரபலமாக தொடங்கியுள்ளது. இசையமைப்பாளரான அனிருத், தன்னுடைய ஸ்டூடியோவில் சிட்டி ரோபோ ரஜினியின் உருவ பொம்மை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிருத்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் நீக்கப்பட்ட வசனங்களின் விவரம் வெளியாகியுள்ளது. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை.

    ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.



    அத்துடன் ‘9’ என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘9’ என்ற எண்ணை, ‘வார்த்தை’ என சென்சார் குழு குறிப்பிட்டிருப்பதன் காரணம் அது ஒரு தனி நபரைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும்.
    ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம், புதிய தொழில் நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாக இருக்கிறது. #Rajini #Muthu #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியானது.

    1998-ம் ஆண்டு அக்டோபரில் 50 திரையரங்குகளில் ஒடொரு மகாராஜா (டான்சிங் மகாராஜா) என்ற பெயரில் ரிலீசான முத்து படம் அங்கு வெற்றி பெற்றது.

    100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. 2006-ம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றத்தில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றும்போது முத்து படத்துக்கு அங்கே கிடைத்த வரவேற்பை பற்றி குறிப்பிட்டார். ரஜினிக்கும், மீனாவுக்கும் ஜப்பான் நாட்டில் ரசிகர்கள் உருவானார்கள்.

    ஜப்பானில் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் அந்த தாக்கம் இன்னும் இருப்பதால் படத்தை தற்போதைய தொழில்நுட்ப வசதிகளான 4கே திரை மற்றும் 5.1 ஒலி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.

    டிசம்பர் மாதம் வெளியிடுவதற்காக படத்தை டிஜிட்டலாக மாற்றி தொழில் நுட்பத்தை புகுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    படம் தொடங்குவதற்கு முன்னர் ரஜினி திரையில் தோன்றி ஜப்பான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார். இந்த வீடியோவை படத்துக்கான விளம்பரத்திலும் பயன்படுத்த இருக்கிறார்கள். ஈடன் என்டெர்டெயின்மெண்ட் என்ற ஜப்பானிய பட நிறுவனம் 25 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்படலாம் என்கிறார்கள். வெளிநாடுகளில் மறுவெளியீடான படம் என்ற பெருமையை முத்து படம் பெற இருக்கிறது.
    சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை என்று ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Rajini #2Point0
    ரஜினி நடித்து சங்கர் இயக்கி உள்ள 2.0 படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘ரஜினி நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்கானும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படவேண்டும்.

    திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக்கூடாது. ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.

    இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அதில் கூறியுள்ளார்.



    ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில நிர்வாகிகள் 200 ரூபாய் டிக்கெட்டை, 2000, 3000 என்று விற்று வந்தனர். இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி மன்றத் தலைமையின் அறிவிப்பு வந்துள்ளது.

    விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கும் ரஜினி, தன் மீதோ தன் மன்ற நிர்வாகிகள் மீதோ எந்த புகாரும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

    நேர்மையானவர்கள் மட்டுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். மற்ற அரசியல் வாதிகள் தன் மீது குற்றம் சாட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
    சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் வில்லன் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #2PointO
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.



    தற்போது வில்லன் அக்‌ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. #2Point0 #AkshayKumar
    ×