search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    ரஜினிக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவு செய்து ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவேன் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். #Rajinikanth #EVKSElangovan
    ராயபுரம்:

    நேரு பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்தின் பேச்சு இரட்டைவேடம் போடுவது போல உள்ளது. அவர் முதல் நாள் பேசியது சொந்தக்கருத்து. இரண்டாம் நாள் குருமூர்த்தியை பார்த்து விட்டு பேசியுள்ளார்.

    ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். ஒருவேளை கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவு செய்து கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவேன்.



    மோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற உண்மையை கண்டிபிடித்த தமிழிசைக்குத்தான் நோபல் பரிசு முதலில் தர வேண்டும்.

    கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்ய வேண்டும். கமல் மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ளவராக இருக்கின்றார்.

    தமிழகத்தில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    ரபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை முறைகேடுகள் நடந்திருப்பதால்தான் உச்சநீதிமன்றமே ரபேல் தொடர்பான ஆவணங்களை ராணுவ அதிகாரிகளே கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

    ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் என கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. அது தேர்தலுக்காக அல்ல. மதசார்பற்ற நாடாக இந்த நாடு நீடிக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #EVKSElangovan
    சர்கார் படத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Sarkar #Rajini #Vijay
    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன. மேலும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், தமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிராக வன்முறை செய்யப்படுகிறது. படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை கிழித்தும், படத்தை திரையிட விடாமல் தடுத்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இன்று மாலை இயக்குனர் ஏ.ஆர்.  முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்வதற்காகவே போலீசார் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.



    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தணிக்கை குழுவால் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு திரைப்படத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #Sarkar #Rajini #Vijay
    பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். சென்னை வந்துள்ள இவர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருகிறார். #Rajini #MaryKom
    ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார். 

    இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.



    இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுடன் கலை, பண்பாட்டு மற்றும் விளையாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. #Rajini #MaryKom
    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தின் 100வது நாளை அமெரிக்க ரசிகர்கள் கறி விருந்து வைத்து கொண்டாடி இருக்கிறார்கள். #Kaala #Rajini
    ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் 100வது நாளை அமெரிக்க ரஜினிகாந்த் ரசிகர்கள் விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்கள். 

    கிடாக்கறி, கோழிக்கறி, பாயசம் என பலவகை உணவுகளுடன் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ‘காலா கறி விருந்து’ டல்லாஸ் மாநகரின் இர்விங் ஜெபர்சன் பார்க்கில் நடைபெற்றுள்ளது.



    இந்த பார்க்கின் பிக்னிக் திடலை, நகர நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் பேன்ஸ், (யு.எஸ்.ஏ.) சார்பில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.

    ரஜினியின் அரசியல் குறித்து சாடிய முரசொலி நாளிதழின் ஆசிரியர் இனி யாருடைய மனதும் புண்படாதபடி கவனத்துடன் செயல்படுவோம் என விளக்கம் அளித்துள்ளார். #Rajini #Murasoli #RajiniPolitics
    சென்னை:

    தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் தனது மன்ற நிர்வாகிகளுக்கான அவரது அறிக்கை குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்த முரசொலி நாளிதழ், ரஜினியின் ரசிகரின் கேள்விகள் போன்று அமைக்கப்பட்டு இருந்தது.

    இது ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடுமையாக சாடியதாக பலராலும் பேசப்பட்டதோடு, விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், முரசொலியின் தலைமை ஆசிரியர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

     

    அந்த விளக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajini #Murasoli #RajiniPolitics
    பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த ரஜினி, பல இடங்களில் சிலிர்த்து விட்டேன் என்று பாராட்டி இருக்கிறார். #Rajini #PariyerumPerumal
    இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், கயல் ஆனந்தி, கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

    மேலும், ‘ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
    நடிகர் ரஜினி, ராட்சசன் படத்தை பார்த்து, அப்படத்தின் கதாநாயகனான விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். #Rajini #Ratsasan
    விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ராட்சசன்’. இதில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினி, விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இது குறித்து விஷ்ணு விஷால் கூறும்போது, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ராட்சசன் படத்தை பார்த்த அவர், பென்டாஸ்டிக், பென்டாஸ்டிக், பென்டாஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க, போலீஸ் யூனிபார்ம்ல செம்ம பிட். வில்லன் யாரு? சூப்பர் பாடி லாங்வேஜ், இயக்குனருடன் உங்கள் கூட்டணி சூப்பர்’ என்றார்.



    ரஜினியின் பாராட்டு படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ரஜினிக்கு படக்குழுவினர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
    பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘96’. இத்திரைப்படம் குறித்த கலந்துரையாடல் கூகை திரைப்பட இயக்கத்தின் நூலகத்தில் நடைபெற்றது.

    அப்போது விஜய்சேதுபதியிடம் பேட்ட படத்தில் ரஜினிகாந்த், நவாசுதீன் சித்திக்குடன் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, “நவாசுதீன் சித்திக் நல்ல நடிகர். ரஜினிகாந்த் வெளியில் பார்ப்பது போல் அல்ல. ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் அவர் மெனக்கெடுகிறார். அவர் மிகச்சிறந்த நடிகர்.

    அவரை பக்கத்திலிருந்து பார்த்து நான் அதனை உணர்ந்தேன். நவாசுதீன் சித்திக் மிகவும் இயல்பாக நடிக்கக்கூடியவர். அவர் தனது இயல்புத் தன்மை திரைமொழியோடு தொடர்பு கொள்ளும் என்று நம்பக் கூடியவர். நான் நிறைய சொல்வதை விட, படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். விரைவில் திரைக்கு வரும்” என்று கூறினார்.
    நடிகர் ரஜினியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்று தனியரசு எம்.எல்.ஏ கூறியுள்ளார். #Rajinikanth

    ஈரோடு:

    ஈரோட்டில் ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசு கலந்து கொண்டார்.

    பின்னர் தனியரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சிக்குள்ளேயே மாறுபட்ட சூழல் நிலவிவருகிறது. தற்போது டிடிவி தினகரன் குறிப்பிட்ட எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அரசுக்கு நெருக்கடியையும் ,சங்கடத்தையும், தடுமாற்றத்தையும் கொடுத்து வருகிறார். இதை டிடிவி தினகரன் தவிர்க்க வேண்டும். ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்ததுபோல் டிடிவியும் இணைய வேண்டும்.


    சபரிமலை விவகாரத்தை வைத்து கொண்டு அதில் கட்சியை உருவாக்கி மாநில முதல்வராக ஆசைப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த் இதில் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுமதிப்பதாகவும் அதே சமயத்தில் ஐதீகம் மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார் .

    இந்த கருத்து முரண்பட்டதாக உள்ளது இதன் மூலம் ரஜினி ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளார் என்பது தெளிவாகிறது. ரஜினியை அரசியலிலிருந்து தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். அவரை ஏற்க மாட்டார்கள். ரஜினி கட்சி தொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் அவரை ஒரு அரசியல் தலைவராக மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர் ரஜினியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது.

    இவர் அவர் கூறினார். #Rajinikanth

    சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

    கடந்த வாரம் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேதுபதி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.



    தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். மேலும் 15 நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நன்றிகள். அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என்று மாளவிகா மோகனன் கூறியிருக்கிறார். #Petta #Rajini #MalavikaMohanan
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும் ஒப்பந்தமானார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

    கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்குகிறார். பேட்ட படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்கம், சென்னை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா மோகனன் அதுபற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    “சிறு குழந்தை போன்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்திய சினிமாவின் முக்கியமான நடிகரான ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறேன். எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்” என்று பதிவிட்டுள்ளதுடன் பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டரை பதிவேற்றியுள்ளார்.
    ரஜினிக்கு வில்லனாக நடித்த பிரபல நடிகர், அடுத்ததாக கமல் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். #Rajini #Kamal #Indian2
    ‌சங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான ‘2.0’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்து சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் சத்தமின்றி நடந்து வருகின்றன.

    இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே கமல், சங்கரிடம் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.0’ படத்தில் அக்‌‌ஷய் குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை சங்கர் ஒப்புக்கொண்டார்.



    இதற்காக தொடக்கத்தில் அஜய் தேவ்கன் உட்பட சில நடிகர்களை அணுகி இருக்கிறார்கள். யாருடைய தேதிகளும் ஒத்துவரவில்லை. கடைசியில் அக்‌‌ஷய் குமார் தேதி கிடைக்க அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ரஜினியைத் தொடர்ந்து கமலுக்கும் வில்லனாகி விட்டார் அக்‌‌ஷய். தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்கள் நடித்தால் அகில இந்திய அளவில் வியாபார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதால் இந்தி வில்லன்கள் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இனி அதிகரிக்கலாம்.
    ×