search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருமே ஹீரோவாகவே நடிச்சிட்டுப் போகட்டும் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார். #Rajini #Kamal
    சுகாசினி தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடிக்கிறார். மற்றபடி கணவர் மணிரத்னத்துக்கு பக்கபலமாக இருக்கிறார். ஒரு பேட்டியில் அவரிடம் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் இன்னும் ஹீரோக்களாகவே நடிக்கிறார்களே என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்திருக்கும் அவர் `16 வயதினிலே' படத்துல கமலோ, ரஜினியோ ஹீரோவா இருந்தாங்களா? ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினி ஹீரோவா இருந்தாரா? இல்லையே... நாகேஷ் நடிச்ச எல்லா படங்களிலும் ஹீரோவா இருந்தாரா? ஹீரோயின் என்பது ஒரு பெரிய வி‌ஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இப்ப ஹீரோயினா இல்லாததால ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு.

    கலர் கலரா டிரஸ் போட்டுட்டு, நிறைய மேக்கப் போட்டுட்டு டான்ஸ் ஆடுற வேலையெல்லாம் இல்லாம, நடிக்கிற கேரக்டர் கொடுக்கும்போது சந்தோ‌ஷமாதான் இருக்கு. கமல்கூட நான் ஜோடியா நடிச்சதில்லை. ரஜினியோடு நடிச்சிருக்கேன்.



    மற்றபடி என்னோடு ஹீரோவா நடிச்சு இப்பவும் ஹீரோவா நடிக்கிறவங்களை பார்த்து சந்தோ‌ஷமா இருக்கு.

    அவங்க ஹீரோவா நடிச்சிட்டுப்போகட்டுமே... பரவாயில்லை. இது வாழ்க்கைதானே...’ என்று பதில் அளித்திருக்கிறார்.
    தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் ரஜினி, சோபியா விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காததிற்கு கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார். #Rajini #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் இறங்கி உள்ளார். தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்தும் வருகிறார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டபோது ரஜினிகாந்த் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் போராட்டத்துக்கு எதிராகவும் அரசுக்கு சாதகமாகவும் அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையானது.

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் பயணித்த மாணவி சோபியா பாஜக அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    ரஜினி நேற்று படப்பிடிப்புக்காக உத்தர பிரதேசம் புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் சோபியா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பதில் அளித்தார். இது நேற்று சமூக வலைதளங்களில் பரபரப்பானது.



    அரசியலுக்கு வருவதாக அறிவித்தவர் கருத்து சொல்ல தயங்குவது ஏன் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிப்பதும், தெரிவிக்காததும் தனி மனிதனின் விருப்பம். ரஜினி கருத்து சொன்னால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்று ரஜினி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ரஜினி கருத்து சொல்லாததை விமர்சித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஊரே விவாதிக்கும் வி‌ஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமல் இருப்பதும் தவறுதான்’ என்று பதிவிட்டு அதில் ரஜினியையும் சேர்த்துள்ளார்.
    சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.O படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Rajinikanth #2PointO #2PointOTeaser
    ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’  கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

    இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.

    கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். 



    இந்நிலையில், இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சங்கர் அறிவித்திருக்கிறார். #Rajinikanth #2PointO
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம் இணைந்திருக்கிறார். #Rajini #Rainikanth
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். வடஇந்தியாவில் படமாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ‘ஜிகர்தண்டா’, ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற குரு சோமசுந்தரம், ரஜினி படத்தில் இணைந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்று வந்தது. முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில் அரங்கில் படமானது. 



    இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. #Rajinikanth165 #Rajinikanth #KarthikSubbaraj
    தமிழில் பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், வில்லியாக செண்டிமெண்ட்டை பின்பற்றுகிறார். #Simran
    சிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி அடையும் என்று ஒரு செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இந்த படங்கள் அத்தனையும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. சிம்ரன் உச்சத்தில் இருக்கும்போது இந்த செண்டிமெண்ட் காரணமாக இதுபோன்ற வேடங்களே அவருக்கு அதிகமாக வந்தன.



    மீண்டும் நடிக்க வந்துள்ள சிம்ரன் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடித்துள்ளார். காளீஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் அதிரடி வில்லியாக நடித்துள்ள சிம்ரனுக்கு தொடர்ந்து வில்லி வேடங்கள் வருகின்றன.
    ரஜினி தனது கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கிய விதிகள் அடங்கிய புத்தகம் வெளியாகி இருப்பது விரைவில் அவர் தனிக்கட்சி தொடங்க இருப்பதை உறுதிபடுத்தி உள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.

    கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    ரஜினி மக்கள் மன்றத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கடந்த சில தினங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இந்நிலையில் ரஜினி தனது கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கிய விதிகள் அடங்கிய 36 பக்க புத்தகம் வெளியானது. ஆகஸ்டு முதல் வாரத்தில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட இந்த புத்தகம் இந்த வாரம் தான் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    ரஜினி மக்கள் மன்ற விதிகளில் முக்கியமானவை:-

    நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். பொது மக்கள் குறிப்பாக பெண்கள், முதியோர்கள் இடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். மன்ற கொடிக்கு துணியால் செய்த கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலிமாசு குறித்த அரசின் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூம்பு வடிவக் குழாய் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துதல் கூடாது. ஒலி பெருக்கிப் பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    நிகழ்ச்சிகள் சிக்கனமாகவும் ஆடம்பரம் இன்றியும் நடத்தப்பட வேண்டும். எந்த மன்றக் கூட்டங்களிலும் சால்வைகள் மாலைகள் பூங்கொத்துகள் பரிசு பொருட்கள் பகிர்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    நிகழ்ச்சி முடிந்த உடனேயே பேனர்கள், தோரணங்கள், பிற விளம்பரப் பதாகைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகி இதனை உறுதி செய்ய வேண்டும். கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டே ஒப்படைக்க வேண்டும்.

    தலைமையின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப்பதாகைகள் அரசின் உரிய அனுமதி பெற்றே வைக்க வேண்டும். பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அமைத்தல் வேண்டும்.

    நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சமூக வலைதளங்களில் கவனமாக கருத்துகளை பதிவிட வேண்டும். நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது. ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியில் திருநங்கைகளும் எவ்வித பாகுபாடின்றி சேரலாம். நிர்வாக பொறுப்புக்களையும் வகிக்கலாம். மன்ற நிர்வாகிகளை மதித்து நடக்க வேண்டும்.

    நிர்வாகிகளின் நடவடிக்கைகளில் குறை ஏதேனும் இருந்தால் மன்ற உள்கூட்டங்களில் அதைப்பற்றி விவாதிக்க வேண்டுமேயன்றி பொதுவில் ஒருபோதும் எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.



    விவசாய அணியின் குறிக்கோளாக ‘தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான விவசாயத்தை கேள்விக்குறியாக்கி உள்ள பாசன நீர் பற்றாக்குறையை போக்க நதிகள் இணைப்பு, தமிழக ஆறுகள் இணைப்பு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். மேற்கண்டவாறு கட்டுப்பாட்டில் கூறப்பட்டு உள்ளது.

    இதுபோலவே மீனவர் அணி, வழக்கறிஞர் அணி, வணிக அணி, மருத்துவர் அணி, நெசவாளர் அணி, தொழில்நுட்ப அணி என்று அணிகளை பிரித்து அவர்களுக்கு கொள்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

    ரஜினியின் இந்த விதிகள் புத்தகத்துக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது திட்டமிடலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

    ரஜினியின் இந்த புதிய விதிகள் பற்றி நிர்வாகிகள் கூறியதாவது:-

    ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே அவரது கொள்கை என்ன என்று கேட்டு கிண்டல் செய்தார்கள். இப்போது இந்த விதிகள் புத்தகத்தின் மூலம் அவர்களுக்கு பதில் கூறிவிட்டார்.

    கொள்கையை விட கட்சிக்கு கட்டுப்பாடு முக்கியம் என்பதால் தான் மாற்றத்தை எங்களிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார். ரஜினியின் அரசியலில் வேகமும் விவேகமும் இருக்கிறது என்பதன் வெளிப்பாடே இந்த விதிகள். கட்சி கொள்கைகள் தனியாக புத்தகமாக வெளியிடப்படும்.

    விரைவில் தனிக்கட்சி தொடங்க இருப்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. அக்டோபரில் கட்சியை தொடங்கி நவம்பரில் மாநாடு நடத்த ஒரு திட்டம் இருக்கிறது.

    பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு இரண்டையும் வைத்து தேதியில் மாற்றம் வரலாம். ஆனால் இன்னும் 3 மாதத்துக்குள் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் உறுதி’ என்றார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினி, தற்போது ஒரு இயக்குனருக்கு போன் செய்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். #Rajini #Rajinikanth
    நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் `கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தில் யோகி பாபு, ஜாக்குலின் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சினிமா நட்சத்திரங்களும் படம் பார்த்துப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில் ரஜினிகாந்த், படம் பார்த்து விட்டு இயக்குநர் நெல்சனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். 



    இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் நெல்சன், “எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கால் வந்தது. அது ரஜினிகாந்த் தான். அவர் என்னிடம் சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன் என்றார். நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார். ரஜினியின் வாழ்த்து கிடைத்ததால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.
    வருகிற தேர்தலில் த.மா.கா. கூட்டணி என்பது எந்த யூகத்தின் அடிப்படையிலும் அமையாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan

    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணிகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

    தலைவர்கள் மறைவால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளே கூட்டணி விசயத்தில் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த நிலையில் சிறிய கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது? என்ன முடிவெடுப்பது? என்ற பெருங் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளன.

    முதல் முறையாக கடந்த முறை தேர்தல்களத்தை சந்தித்த த.மா.கா.வுக்கு அந்த தேர்தல் ஒரு அக்கினி பரீட்சையாகவே அமைந்தது.

    கடைசி நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் சேரும் முடிவை ஜி.கே.வாசன் எடுத்தார். அந்த முடிவு மிகப்பெரிய சறுக்கலாகவே அமைந்தது.

    எனவே வருகிற தேர்தலில் மிகவும் ஜாக்கிரதையாகவே கூட்டணி தொடர்பான முடிவை எடுப்பார் என்று அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

     


    ரஜினி, கமல் இருவரது அரசியல் பிரவேசமும் அரசியல் கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.

    ரஜினியுடன் த.மா.கா.வை சேர்க்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.

    அதேநேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜி.கே.வாசனுடன் நட்பு வைத்துள்ளார். 26-ந்தேதி நெல்லையில் நடைபெறும் கருணாநிதி புகழ்வணக்க கூட்டத்துக்கு ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரும் கலந்துகொள்கிறார்.

    இந்த நெருக்கம் கூட்டணிக்கும் கைகொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுபற்றி ஜி.கே.வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இவை எல்லாமே யூகங்களான தகவல்கள் தான். யூகங்கள் மட்டுமே கூட்டணியை உருவாக்கி விடாது.

    ரஜினி அரசியலுக்கு வருவதாக செய்திகள்தான் வருகிறது. ஆனால் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? என்று எதையும் அறிவிக்கவில்லை. வெளிவரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள் தான்.

    கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யவேண்டியது. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. எனவே அதுபற்றிய சிந்தனையும் இல்லை. யோசிக்கவும் இல்லை. சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சியை பலப்படுத்தும் பணியைதான் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம்.

    வருகிற தேர்தலில் த.மா.கா. கூட்டணி என்பது எந்த யூகத்தின் அடிப்படையிலும் அமையாது. மக்கள் மனநிலையும், தொண்டர்களின் உணர்வையும் அறிந்து அதற்கேற்ப முடிவு செய்வோம் என்றார்.

    தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் ரஜினி பேசியிருப்பதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசியிருப்பாரா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். #MinisterJeyakumar #Rajinikanth
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் வராததையும் விமர்சித்தார்.

    இந்நிலையில்  அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

    ரஜினிக்கு தமிழக அரசியல் மற்றும் வரலாறு தெரியாது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் பேசியது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் வரவில்லை.



    எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா? அப்போது பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். அவர்கள் மறைந்தபிறகு இப்போது பேசுவது கோழைத்தனமானது. மறைந்த தலைவரின் இறப்பை சாதகமாக்கிக்கொள்ள ரஜினி நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJeyakumar #Rajinikanth
    அ.தி.மு.க.வில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தொண்டர்களாகி படிப்படியாகத்தான் முன்னேற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #ministersellurraju #Rajini

    மதுரை:

    அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் மதுரை முனிச்சாலையில் இன்று புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இன்றைக்கு புதிய உறுப்பினர்களாக சேரும் இளைஞர்கள் கூட தகுதியும், திறமையும் இருந்தால் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

    அதற்காக கட்சியின் தலைமையிடத்தில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

    தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் உரிய பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.


    ஊழியர்களின் போராட்டத்தால் நாளை ரேசன் கடை பொருட்கள் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்கும் அ.தி. மு.க.வின் கோட்டை ஆகும். அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும்.

    அ.தி.மு.க.வில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தொண்டர்களாகி படிப்படியாகத்தான் முன்னேற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கலைச்செல்வம், முனிச்சாலை சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #Rajini

    காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக மேலும் 2 படங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajini
    ரஜினிகாந்த் ரசிகர்களை திரட்டி அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ளதாக அறிவித்ததும் உடனடியாக கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். 

    ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார். 

    காலா படம் திரைக்கு வந்ததும் கட்சி பெயரை அறிவிப்பார் என்று நம்பிய ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க போய்விட்டார். இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடக்கும் இதன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இரண்டு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்கும் திட்டத்தில் உள்ளனர். 

    அதன்பிறகு கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மேலும் 2 படங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதுதான் எங்கள் திட்டம் என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிற்க மாட்டோம் என்றும் ஏற்கனவே அவர் தெளிவுபடுத்தி உள்ளார். 

    அடுத்த வருடம் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு கட்சி ஆரம்பித்தால் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமும், ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். அதை தவிர்க்க நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மத்தியில் புதிய ஆட்சி உருவான பிறகு கட்சி ஆரம்பிப்பது ரஜினியின் திட்டமாக இருக்கிறது. 

    எனவே அதற்கு முன்பு மேலும் 2 படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 



    அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வந்த முத்து, படையப்பா படங்கள் பெரிய வெற்றிபெற்றன. படையப்பாவின் 2–ம் பாகத்தை எடுக்கலாமா? என்று ஆலோசிப்பதாகவும் தெரிகிறது. 

    ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட மேலும் சில இயக்குனர்களிடமும் ரஜினி கதை கேட்டு இருக்கிறார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ரஜினியுடன் மோத இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajini #Rajinikanth #Kangana
    பிரபல இந்தி பட நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் நடித்தவர். அதன் பிறகு இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். குயின் படம் மூலம் தேசிய விருது வாங்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர். அவர் அடுத்து நடிக்கும் படம் மணிகர்ணிகா.

    சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய ராணியான ஜான்சிராணியின் வாழ்க்கை வரலாற்று படமான இதை கிரிஷ் இயக்குகிறார். இதற்காக கங்கனா வாள் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட பலவித போர் பயிற்சிகளை எடுத்து இருக்கிறார். இந்த படம் முதலில் ஏப்ரலில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடியாததால் ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிப்போனது.



    ஆனால் ஆகஸ்டிலும் வெளியாவது சிரமம் என்று நவம்பர் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இவர்கள் அறிவித்திருக்கும் தேதியில் தான் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் 2.0 வெளியாக இருக்கிறது. இந்த மோதலை தவிர்க்க 3வது முறையாக மணிகர்ணிகா படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பார்களா என்பது தான் பாலிவுட்டில் கேள்வியாக எழுந்துள்ளது.
    ×