search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    மினி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மகுடஞ்சாவடி:

    திருவண்ணாமலையில் இருந்து பக்தர்கள் 27 பேர் நேற்று இரவு ஒரு மினி பஸ்சில் புறப்பட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடி சந்தை அருகே மெயின் ரோட்டில் பஸ் வந்தபோது திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி, கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 46), சீனிவாசன் (35) மற்றும் இவரது மனைவி புஷ்பம்(28), விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த அங்கமுத்து (55) உள்பட 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள், பஸ்சுக்குள் சிக்கிய அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 19 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மினி பஸ்சை மோதியிருப்பது தெரியவந்தது.

    ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் தனியார் பஸ்-வேன் மோதிய விபத்தில் விவசாயிகள் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளை தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயம் சார்ந்த கண்காட்சியை பார்வையிட மதுரை மற்றும் விருதுநகர் பகுதிக்கு 6 வேன்களில் அழைத்து செல்லப்பட்டனர். விருதுநகரில் இருந்து நேற்று மாலை தேனிக்கு புறப்பட்டனர்.  

    இரவு 7.45 மணியளவில் தேனி-மதுரை மாவட்ட எல்லையான கணவாய் மலைப்பகுதியில் வந்த போது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி வேகமாக வந்த ஒரு தனியார் பஸ் விவசாயிகள் சென்ற ஒரு வேனில் மோதியது. 

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தர்மாபுரியை சேர்ந்த விவசாயிகள் வேல்முருகன்(44), காளிமுத்து(75), முருகன்(50), சுரேஷ்(28), மாயாண்டி(64), முத்துவேல்(27), அழகர்(43), குணசேகரன்(47), தெய்வேந் திரன்(49), பிருந்தாவனம்(47) போடியை சேர்ந்த வேன் டிரைவர் ஆண்டிச்சாமி(43) ஆகியோரும், தனியார் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த கோதண்டராமன்(35), வடுகபட்டியை சேர்ந்த பாண்டியன் (40), பெரிய குளத்தை சேர்ந்த சேகர்(52), ஆண்டிப்பட்டி ஏத்தகோவிலை சேர்ந்த ஜெயராமன்(40), கண்டம னூரை சேர்ந்த மணி கண்டன்(45), உசிலம்பட்டியை சேர்ந்த மகேஷ்வரி(32), மேல்மங்கலத்தை சேர்ந்த நீலமேகம்(66) ஆகிய 18 பேர் படுகாயம் அடைந்தனர். 

    இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    பாபநாசம்:

    பாபநாசம் திருப்பாலைத் துறை மெயின்ரோட்டில் வசித்து வரும் குருநாதன் மகன் குகன் (வயது 15). இவர் பாபநாசத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம்  பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு தந்தை குருநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    பாபநாசம் கானியாளர் தெரு வழியாக வந்தபோது தியாகசமுத்திரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. 

    இதில் குகன் பலத்த காயமடைந்தார். உடனே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குகன் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிங்கம்புணரியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கிழக்காட்டு ரோடு ஆர்.ஆர்.டி. நகர் பகுதியில் வசிப்பவர் பொன்னுத்தாய் (வயது50). இவர் குடும்பத்தினருடன் திருப்பத்தூர் அருகே வைரன்பட்டில் உள்ள சாய்பாபா கோவிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். முதல்வாகனத்தில் பொன்னுத்தாயின் மகள் திருமலைக்குமாரி, உறவினர் விஜி (33) மற்றும் 2 குழந்தைகள் சென்றனர். விஜி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்றொரு வாகனத்தில் பேச்சியப்பன், பொன்னுத்தாய் ஆகியோர் சென்றனர்.

    திருப்பத்தூர் சாலையில் சிவபுரிபட்டி வகுத்துப்பிள்ளையார் கோவில் அருகே செல்கையில் திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக விஜி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    இதில் அதில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அதிர்ச்சியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுத்தாய் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு விஜி மற்றும் அவருடைய குழந்தைகள் ஜனனி மற்றும் பிரியதர்சினி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமலைக்குமாரி மற்றும் பொன்னுத்தாய் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருமலைக்குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அறை சேதமானது. 2 தொழிலாளிகள் பலத்த காயடைந்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஜமீன் தல்வார்பட்டியில் ஜான் பாக்கியராஜ் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள், மருந்து கலவை தயாரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் அந்த அறை இடிந்து சேதமானது. அங்கு பணியில் இருந்த பள்ளப்பட்டி ஆரோக்கியராஜ் (வயது 37), பம்புவிட்டான்சந்தை முருகன் (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்த னர். அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    புதுவையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் படுகாயம் அடைந்தார்.

    புதுச்சேரி:

    ஜெர்மன்நாட்டை சேர்ந்தவர் ஹெலாமரியாஸ் (வயது75). இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு புதுவைக்கு வந்து ஆசிரம விடுதியில் தங்கி அசிரமத்துக்கு சொந்தமான பள்ளியில் இசை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    இன்று காலை பள்ளிக்கு செல்ல ஹெலாமரியாஸ் ஆசிரம விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பிரான்சுவா மர்த்தேன்வீதியில் வந்த போது இவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஹெலாமரியாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.
    ராமேசுவரம்:

    மத்திய பிரதேச மாநிலம் சினா என்ற இடத்தில் இருந்து ஓம்கார்சாகு (வயது 46) என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 15 பேருடன் திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் ஒரு சுற்றுலா வேன் மூலம் ராமேசுவரம் வந்தனர். ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்றனர்.

    இந்த வேனை திருப்பதியை சேர்ந்த செல்வக்குமார் ஓட்டி வந்தார். அப்போது எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலையில் குவிந்திருந்த மணலில் சிக்கி அந்த வேன் கவிழ்ந்தது. இதில் ஓம்கார்சாகு, சோபன்சாகு (38), வினய்(45), லதா(40), அபின்ஷா(15), ஆரோம்கா(14), பிரதேஷ்(14) ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, திலகராணி, தனுஷ்கோடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், ரத்தினவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி பகுதியில் கடந்த இருதினங்களாக பலத்த காற்று வீசி வருவதால் எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலையை மணல் மூடியுள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. எனவே தனுஷ்கோடி பகுதியில் சாலையை மூடியுள்ள மணலை அகற்ற சம்பந்தபட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். 
    கீரனூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கீரனூர்:

    பரமக்குடியை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). இவர் தனது உறவினர்கள் வீரபாண்டி (39), நாகேஸ்வரி (32) ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு திருச்சிக்கு நேற்று அதிகாலை காரில் வந்து கொண்டிருந்தார். அந்த கார் கீரனூர் புறவழிச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டு அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து நின்றது.

    இதில் அந்த மின்கம்பம் உடைந்து காரின் மேல் விழுந்தது. இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பெண் உள்பட 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர் கீழ்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த நாய் திடீரென வள்ளியை விரட்டி சென்று கடிப்பதுபோல் சென்றது.

    இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி அங்கிருந்து வேகமாக ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்ற வள்ளி தனது கணவர் ரவியிடம் நடந்ததை கூறினார்.

    பின்னர் ரவி தனது மனைவி வள்ளி மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தட்டிக்கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும், ரவி மற்றும் அவரது மனைவி வள்ளியும் படுகாயம் அடைந்தனர்.

    பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அசோக், குப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அசோக்கை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் ரவி, திவான், ராதா, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் திவானை கைது செய்தனர்.

    இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉஷேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    திண்டுக்கல் அருகே இன்று மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள குட்டியபட்டியில் இருந்து அனுமந்தராயன் கோட்டைக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அந்த பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. பஸ்சை தர்மத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது25) என்பவர் ஓட்டி வந்தார். கருப்பையா என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    கொட்டப்பட்டி அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர்.

    படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் வழியிலேயே பொன் மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த இன்னாசி மகன் மார்க்ராஜா (19) என்பவர் உயிரிழந்தார். இவர் திருஇருதய கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த விபத்தில் அபிநயா (13), பிரியதர்ஷினி (17), செல்லாயி (42), தங்கத்துரை (59), மைதிலி (15), ராமசாமி (32), செல்வி (40), சவுந்தர் (20), தமிழ்ச்செல்வன் (14), பிரகாஷ் (16), சுவேதா (17), ஜெயந்தி (20) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகள் ஆவார்கள். இதனால் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு டிரைவர் தங்கவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே பயணிகள் கூட்டத்தில் ஆம்னி பஸ் புகுந்த விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நள்ளிரவு 1 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே செக்குறிச்சி என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று பழுதானது.

    உடனே டிரைவர் அந்த பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வேகமாக வந்தது. அந்த பஸ் திடீரென்று பழுதாகி நின்ற அரசு பஸ் மீது மோதி விட்டு அருகில் நின்று கொண்டிருந்த பயணிகளின் கூட்டத்தில் புகுந்தது.

    இதில் விக்னேஷ்குமார் (வயது 19) என்ற வாலிபர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 5 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    பாலக்காடு ரெயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான 3 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் ஓட்டலும், கீழத்தளத்தில் பேக்கரி, லாட்டரி உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வருகிறது.

    60 வருட பழமையான கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    நேற்று மதியம் மேல் மாடியில் உள்ள ஒரு தூணை மாற்றும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூணை அகற்றியபோது கட்டிடத்தின் மேல்மாடி வலுவிழுந்தது. இதனால் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து தகவல் கிடைத்தும் கலெக்டர் பாலமுரளி, எஸ்.பி. தேபேஸ்குமார் பெகரா மற்றும் பாலக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் என மொத்தம் 45 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத தூண்கள் அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய ஜான் (வயது 51), ஜெகதீஷ் (57), பிரவீனா (20), சாலினி (30), சித்தார்த் (28), சுனில் (43), ஷாபி (29), ராமன் (38), ‌ஷமீர் (28), உஷா (28) ஆகிய 10 பேரையும் படுகாயத்துடன் மீட்டனர். 3 பெண்கள் உள்பட 10 பேரையும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×