search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    மேலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 20 பேர் கொல்லிமலைக்கு வேனில் சுற்றுலா சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். வேனை சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று காலை 9 மணியளவில் வேன் மேலூர் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டயர் வெடித்ததால் வேன் தாறுமாறாக ஓடி ரோட்டில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்.

    உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசாரும், டோல்கேட் விபத்து வாகன மீட்பு பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினரும் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த பெண்கள் உள்பட 15 பேரை மேலூர், சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சுரண்டையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    சுரண்டை:

    சுரண்டை வரகுணராமபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த பால்சாமி (50) என்பவருடன் பரங்குன்றாபுரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் சுரண்டை இலந்தைகுளத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது. இதில் மாடசாமியும், பால்சாமியும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நேசமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். #60killed #Ghanabuscollision #buscollision
    அக்ரா:

    கானா நாட்டின் தெற்கு பகுதியில் சமீபத்தில் கிழக்கு போனோ என்னும் தனி மாகாணம் உருவாக்கப்பட்டது.

    இந்த மாகாணத்தின் வழியாக சென்ற இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாக கிழக்கு போனோ போலீஸ் உயரதிகாரி ஜோசப் அன்ட்வி கியாவு தெரிவித்துள்ளார். 

    அம்போமா நகரின் அருகே நடந்த இவ்விபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #60killed #Ghanabuscollision #buscollision
    காரமடை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிந்தார்.

    காரமடை:

    கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 23). பி.இ. பட்டதாரி. சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.

    இவர் தனது நண்பர்கள் கவுசிகன், பிரதீப், சஞ்ஜய் ஆகியோருடன் கோவையில் இருந்து கல்லாறு நோக்கி காரில் சென்றனர். அப்போது கார் கரியம்பாளையம் காரமடை இடையே எம்.ஜி.ஆர் நகர் அருகில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோஜ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோட்டக்குப்பத்தில் இன்று காலை நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் இந்திராநகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி. (வயது 45). இவர் இன்று காலை 6.15 மணியளவில் கோட்டக்குப்பம் சறுக்கு பாலம் அருகே பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அங்குள்ள சாலையை கடந்து செல்ல முயன்ற போது காலாப்பட்டில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மகேஸ்வரி மீது மோதியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீதும் மோதியது.

    இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற தனியார் கல்லூரி பஸ் மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் மகேஸ்வரி, மோட்டார் சைக்கிளில் வந்த பிள்ளைச்சாவடியை சேர்ந்த சிவக்குமார் (19), தமிழ் செல்வன் (23) மற்றும் காரை ஓட்டி வந்த ஆந்திராவை சேர்ந்த ஏமன் (21) மற்றும் காரில் வந்த இவரது நண்பர் கிருஷ்ணன் (25) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ஏமன் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான ஏமன் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கபிஸ்தலம் அருகே ஆடு மேய்த்த தகராறில் கோஷ்டி மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 57) விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் சண்முகன் மகன் சுரேஷ் (32) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் ஆடு மேய்த்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பழனிசாமியை சுரேஷ் தரப்பினர் திட்டியதாக கூறி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஆயுதங்களுடன் மோதினர். இதில் சண்முகம், சுரேஷ், மேகநாதன், லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகிய 6 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ,ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி கொடுத்த புகாரின் சண்முகம், சுரேஷ், மேகநாதன், ஆகியோர் மீதும், சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள பழையபேட்டை கொத்தபேட்ட காலனி பகுதியை சேர்ந்த மேனகா (55), பாஸ்கி(27), பாலு(25) ஆகியோர் கடந்த 6-ம் தேதி ஆட்டோவில் குப்பம் - கிருஷ்ணகிரி சாலையில் சின்னமட்டாரபள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் சென்ற ஆட்டோ எதிர்பாரதவிதமாக நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் ஆட்டோவில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேனகா கொடுத்த புகாரின்பேரில், கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி கார் ஒன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணம் செய்தனர். காரானது பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகில் வந்த போது திடீரென்று டயர் பஞ்சர் ஆனது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் தடுப்பு சுவரை உடைத்து மறு சாலைக்கு (கிருஷ்ணகிரி - சென்னை) சென்று கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வள்ளியூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்:

    குமரி மாவட்டம் நெய்யாற்றின் கரையை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது33). இவரது மனைவி மோனிஷ் (28). இவர்களுக்கு கிரிஷ் (3) என்ற மகன் உள்ளான். நேற்று அவர்கள் காரில் குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் உறவினர்கள் அம்மு, சூர்யா, சகி உள்ளிட்டோரும் சென்றனர்.

    பின்பு அவர்கள் நள்ளிரவு காரில் ஊர் திரும்பினர். கார் பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே இரும்பு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக காரும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மனைவி மோனிஷ், குழந்தை கிரிஷ் மற்றும் கார் டிரைவர் ரெஜி உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான உன்னிகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மரத்தில் பஸ் மோதிய விபத்தில் கூடலூரை சேர்ந்த பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சீபுரத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி பாத்துமா (வயது 66), மகள் சுபேரா (40). இவர்கள் 2 பேரும் கேரளாவில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா சென்றனர். திருமணம் முடிந்து நேற்று மஞ்சேரியில் இருந்து வழிக்கடவுக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். பாத்துமாவும், சுபேராவும் பஸ்சின் முன்பக்கம் இடதுபுறம் அமர்ந்து இருந்தனர்.

    இந்த சமயத்தில் பகல் 1.30 மணிக்கு நிலம்பூரில் இருந்து மஞ்சேரி செல்வதற்காக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார். எடவண்ணா குண்டுத்தோடு பகுதியில் மோட்டார் சைக்கிளும், தனியார் பஸ்சும் மோதியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் பாத்துமா, சுபேரா உள்பட 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனிடையே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு மஞ்சேரி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாத்துமா, சுபேரா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    பின்னர் 3 உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சேர்த்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பெயர் அர்ஷத் (28) என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த விபத்து குறித்து மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரும்பாறை அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள ஆடலூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை முகவனூத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே லாரி வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி நொறுங்கியது. விபத்தில் பஸ் டிரைவர் செல்வராஜ், லாரி டிரைவர் டேனிஸ் அந்தோணி, கண்டக்டர் சுதாகர், பயணிகள் குப்பம்மாள்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வி, லட்சுமி, கொங்கப்பட்டி பழனிச்சாமி, வெங்கலப்பட்டி பார்வதி, கடையமலை நாகலட்சுமி, நாட்ராயன், கல்லக்கிணறு பூபதி, ஆடலூர் மாரீஸ்வரி, பெரும்பாறை சேர்ந்த வீரமணி, செந்தில்குமார் ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் கே.சி.பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    லாலாப்பேட்டை அருகே லாரி மீது மினிவேன் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    லாலாபேட்டை:

    பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயராமபாண்டியன் (வயது 59) என்பவர் ஆமினி வேனை ஓட்டி வந்தார். வேன் நேற்று முன்தினம் கோவையில் இருந்து திருநல்லார் சென்ற பின்னர் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    திருச்சி-கருர் தேசிய நெடுஞ் சாலையில் மகாதான புரம் பெட்ரோல்பங்க் அருகில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் (41) என்பவர் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த சந்திரசேகர் (62) சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மேலும் கோவையைச் சேர்ந்த பத்மாவதி (56), சோனியா (29), சரண்யா(27), நிவேதா (27), உஷாநந்தினி(29) விஷ்ணு (29) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்த சந்திரசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×