search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    போச்சம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த வேடர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சீனன் (வயது62). இவரது மனைவி சாவித்ரி (57). இவர்களுக்கு 2 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர்.

    போச்சம்பள்ளியை அடுத்த வேடர்பட்டபசுல் கிராமத்தில் சீனன் தனது மகள்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார். அதனால் மகள்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சீனன் சென்றார். அப்போது அங்குள்ள ரேசன் கடையின் முன்பு நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பாலையம்பட்டி:

    மதுரையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது தலைமையில் 7 பேர் சிந்தலக்கரையில் உள்ள கோவிலுக்கு இன்று காலை ஆம்னி வேனில் புறப் பட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் ஆம்னி வேன் சென்று கொண்டி ருந்தது. அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு கார் பயங்கரமாக வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், வேனும் ரோட்டோரமாக பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

    ஆம்னி வேன், காரில் இருந்தவர்கள் கூக்குர லிட்டனர். உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த மாரிமுத்து, குமார், பால் பாண்டி, முத்தையா, ஈஸ்வரன், கட்டமுத்து, முருகையா மற்றும் காரில் வந்த கோவையைச் சேர்ந்த உதயகுமார் (வயது19), வளர்மதி (42), லதா மகேஸ் வரி (27) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து பந்தல் குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரிமங்கலம் அகரம் பிரிவு சாலையில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரிமங்கலம்:

    கரூரில் உள்ள திருமண நிகழ்ச்சிக்குசென்று விட்டு உறவினர்கள் பலருடன் காவேரிப்பட்டணத்தை நோக்கி மினிபஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த மினி பஸ்சை  கரூர் வெண்ணாம் பட்டியை சேர்ந்த பெரியசாமி (25) என்பவர் ஓட்டி வந்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பைபாஸ் ரோட்டில் கார் மற்றும் இந்த மினிபஸ் போட்டி போட்டுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் அகரம் பிரிவு சாலை அருகே சென்றபோது காரும் வெகுவேகமாக மினிபஸ்சை முந்திசெல்ல முயன்றுள்ளது.

    அப்போது கார் மீது மினிபஸ் மோதாமல் இருக்க மினிபஸ்சை வலது புறமாக டிரைவர் பெரியசாமி திருப்பியபோது, வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மனிபஸ் சாலையில் உருண்டு கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கரூர் பகுதியை சேர்ந்த திருப்பதிராஜா, சாந்தி, ரவி, செல்வம் ஆனந்தி என்பவர் உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கு கார் ஓட்டுநர் முக்கிய காரணமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கார் ஓட்டுநரிடம் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நடுரோட்டில் மினிபஸ் கவிழ்ந்ததால் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு ஏற்பட்டது.
    பொள்ளாச்சி அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கிட்டி மல்லன் புதூர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. கூலி தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மாலை வி‌ஷம் குடித்து விட்டார்.

    அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் அம்பராம் பாளையத்தை சேர்ந்த சுப்பு லட்சுமி (50), பேச்சியம்மாள் (40), கஞ்சிமலை (60), மாசாணி (55), அம்மாசை (50), சக்திவேல் (27), பிரேம் குமார் (24) ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆட்டோவை கனகராஜ் ஓட்டி வந்தார். இந்த ஆட்டோ நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளூவர் திடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கேரளா நோக்கி சென்ற வேன் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவர் கனகராஜ் மற்றும் அதில் பயணம் செய்த 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த டிரைவர் கனகராஜ், பேச்சியம்மாள், கஞ்சிமலை, மாசாணி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் வழியிலே டிரைவர் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர் அருகே பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

    காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். இளைஞர்களின் ஆரவாரத்தால் காளைகள் மிரண்டு போய் குறுக்கு நெடுக்குமாக ஓடின.

    அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    விழாவில் முகாமிட்டிருந்த டாக்டர்கள் குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவையொட்டி தாலுகா போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆம்பூர் அருகே பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சிவநேசன் (வயது 52). ஓட்டி வந்தார். இவர் உள்பட 110 பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

    போச்சம்பட்டு கூட்ரோடு அருகே சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மீது மோதி சாலை அருகே உள்ள புளிமரத்தில் மோதி நின்றது. இதில் டிரைவர் சிவனேசனின் கால்கல் துண்டானது. மேலும் 25 பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 45 பேரும், நரியாம்பட்டு அரசு சுகாதார ஆஸ்பத்திரியில் 15 பேரும் அனுமதித்தனர்.

    மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு பேரணாம்பட்டு மசிகம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மனைவி கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    தொப்பூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தருமபுரி:

    சென்னையில் இருந்து பருப்பு லோடு ஏற்றி கொண்டு லாரி சேலம் மாவட்டம் ஓமலூருக்கு சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயராஜ் (வயது35) என்பவர் டிரைவராகவும், ஸ்டாலின் என்பவர் கிளீனராகவும் இருந்தார்.

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்ட 2 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள தேவர்முக்குலம் பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் விஜய்குமார் (வயது28). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். சுருளிஅள்ளி பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன் (23). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை விஜய்குமாரும், மணிகண்டனும் சுருளி அள்ளியில் உள்ள பெருமாள் கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் அங்கு நள்ளிரவு திருவிழாவை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஏரிக்கரை என்று இடத்தில் சாலையோர மின்கம்பம் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆம்புலன்சில் போகும் வழியிலேயே விஜய்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆம்பூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    சென்னையில் இருந்து ஓசூருக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் ஆறுமுகம் (வயது 40). பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டர் கோபால் (45). உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதியது.

    இதில் டிரைவர் ஆறுமுகம், கண்டக்டர் கோபால், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ், போச்சம்பள்ளியை சேர்ந்த விக்ரமன் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணிம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    திருத்துறைப்பூண்டி அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியிலிருந்து செம்போடை நோக்கி ஒரு தனியார் பேருந்தும், இதேபோல வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. 2 பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கட்டிமேடு அருகே உள்ள தேவர் பண்ணை என்ற இடத்தில் வந்த போது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாண்டியன்( வயது 42), காடுவாகுடியை சேர்ந்த பாலகவுரி(40), வாட்டாரை சேர்ந்த சத்யா(40), வெள்ளிகிடங்கு பகுதியை சேர்ந்த ருக்மணி(30) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே பைக் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள ஏகணிவயலை சேர்ந்தவர்கள் சார்லஸ் (வயது 32), மார்கோணி (45). இருவரும் பைக்கில் மணமேல்குடி பகுதியில் உள்ள ஏகப்பெருமாளுரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக் விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மார்கோணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முசிறி அருகே பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முசிறி:

    அரியலூரில் இருந்து நாமக்கல் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. முசிறி அருகே உமையாள்புரத்தில் சென்ற போது, திருச்சியில் இருந்து முசிறி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் மோதியது. 

    இதில் பஸ்சில் பயணம் செய்த சேலத்தை சேர்ந்த கலைசெல்வி, முருகன், முத்து, துவரங்குறிச்சி சேர்ந்த சக்திவேல், தொட்டியம் மணி, திருவையாறு சந்திரசேகர், ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் நாமக்கல் அடுத்த காளி செட்டிபட்டியை சேர்ந்த சுந்தரராஜன்(53) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×