search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த ஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்த நரேஷ். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றார். அதில் 9 பேர் பயணம் செய்தனர்.

    ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.

    கார் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் நரேஷ், ஆட்டோவில் பயணம் செய்த பூண்டி அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்த நதியா, இவரது மகள் ஹர்‌ஷவர்தினி, தாஸ், நாகசுந்தரி, காட்டம்மாள், ரித்விக், சேகர், செல்வம், கோவர்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதே போல் காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    திண்டுக்கல் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    திண்டுக்கல்:

    நெல்லையில் இருந்து கோவை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் திண்டுக்கல் - பழனி சாலையில் பாலம் ராஜக்காபட்டி அருகே இன்று பிற்பகலில் வந்தது. அப்போது எதிரே பெருந்துறையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரி பயங்கரமாக பஸ் மீது மோதியது. விபத்தை தவிர்ப்பதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையோரம் திருப்பிய போது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    உடனே பஸ்சில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த் கிளார்க் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஜீனூர் பகுதியைச் சேர்ந்தவர் கெம்பன் மகன் காவேரியப்பன் (57). இவர் கலெக்டர் அலுவலகத்தில் ரெக்கார்டு கிளார்க்காக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று மதியம் தனது பைக்கில் ஓசூர்-கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே ரோட்டில் பின்னால் வந்த கார் காவேரியப்பன் மீது மோதியது. இதில் காவேரியப்பன் பலத்த காயமடைந்தார். 

    காயமடைந்தவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவேரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது திருமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 40). விவசாயி.

    இவர் புத்தாண்டையொட்டி நேற்று இரவு தனது வீட்டு வாசல் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.

    இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(25), மணிகண்டன்(27) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் திடீரென்று கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தவர்கள் அருகில் விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.

    ஆத்திரமடைந்த வீரப்பன் மற்றும் சிலர் முத்துராமன், மணிகண்டன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தமோதல் குறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். மோதல் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புத்தாண்டு கொண்டாடத்தின்போது மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    அரூர் அருகே முருக பக்தர்கள் சென்ற வேன் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
    அரூர்:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் அறுபடைவீடு முருகன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒரு வேனில் 21 பக்தர்கள் பெருந்துறையில் இருந்து புறப்பட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தீர்த்தமலை அருகே உள்ள ஆண்டியூர் என்ற பகுதியில் செல்லும்போது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மூர்த்தி (வயது 51) என்ற பக்தருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காளிதாஸ் மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் இளங்கோணி ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று 108 ஆம்புலன்சுகள் வந்து காயம் அடைந்த பக்தர்களை ஏற்றி அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #Buscrash #Mexico
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.

    லேகான் நகரத்தின் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிறைமாத கர்ப்பிணி உள்பட காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Buscrash  #Mexico
    ஓசூரில் இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து கார் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் சினிமா டான்ஸ் மாஸ்டர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    ஓசூர்:

    ஈரோடை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சரவணப்பிரியன்(32). இவர் சென்னையில் சினிமா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவர் தனது காரில் சென்னையை சேர்ந்த தீபா(29) என்ற பெண் நண்பருடன் பெங்களூரு நோக்கி சென்றார்.

    இன்று காலை 8 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்து. இந்த விபத்தில், சரவணப்பிரியன் மற்றும் தீபா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 

    உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சாலையில் நடந்த இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். 

    கார் நடுரோட்டில் கவிழ்ந்ததையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
    தா.பழூர் அருகே வீடுகள் மீது அரசு சொகுசு பஸ் புகுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். இதில் வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கிராமத்தை சேர்ந்தவர் வினோதன்(வயது 52). அரசு சொகுசு பஸ் டிரைவரான இவர், நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து அரசு சொகுசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சவூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். தா.பழூர் அருகே மதனத்தூர் கிராமத்தில் கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் அருகில் இருந்த முருகானந்தம்(36) என்பவரது வீட்டில் மோதி நின்றது. இதில் வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. 

    இதில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. மேலும் அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட், ஜெயலட்சுமி(65) என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்த கதிரவன்(35), கொடுக்கூர் குடிகாடு நடுத்தெருவை சேர்ந்த சம்பத்(30), அரசு பஸ் டிரைவர் வினோதன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அரசு பஸ்சை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
    பாட்டவயல் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சின் முன்பாகம் சேதம் அடைந்தது.
    கூடலூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர், ஊட்டி, மேட்டுப்பாளையம் கிளை அலுவலகங்களில் இருந்து மைசூரூ, பெங்களூரூ, கேரளாவுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்துக்குள் மட்டும் பெரும்பாலும் பழுதடைந்த பஸ்களே இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம், ஊட்டியில் இருந்து மைசூரூ, பெங்களூரூ பகுதிக்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு நல்ல நிலையில் இயங்கக்கூடிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி, மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் அடிக்கடி ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10 விபத்துகள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் மாலையில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா பயணி ஒருவரின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது ஊட்டி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பாகம் சேதம் அடைந்தது. மேலும் காரும் அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது காரில் இருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பீரான்(வயது 65), ஆயிஷாபீ (60) ஆகியோர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதேபோல் சுல்தான்பத்தேரியில் இருந்து கூடலூருக்கு நேற்று தமிழக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பாட்டவயல் அருகே நம்பிக்கொல்லி என்ற இடத்தில் வந்தபோது, கார் ஒன்று பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. இந்த விபத்தில் பஸ் சேதம் அடைந்தது. மேலும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழக அரசு பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக பஸ்கள் புதியதாகவும், நல்ல நிலையிலும் இயக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாத சுற்றுலா பயணிகளால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு, தமிழக பஸ் சேதம் அடைந்து வருகின்றன. குறிப்பாக புதிய பஸ்களும் விபத்துகளில் சிக்குவது கவலை அளிப்பதாக உள்ளது. 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பல்லடம் அருகே பனியன் கம்பெனியில் வேலை பார்த்த தொழிலாளி எந்திரத்தில் சிக்கி பலியானார்.

    பல்லடம்:

    பல்லடம் மகாலட்சுமி நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் பல்லடம்- திருப்பூர் இடையே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக இருந்தார். நேற்று மாலை வேலை செய்தபோது எந்திரத்தில் சிக்கினார். 

    காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். 

    இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை அருகே பைக் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ராணுவ வீரர் படுகாயமடைந்தார். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கலஸ்தம்பாடியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 21), ராணவ வீரர். இவர் நேற்று வீட்டில் இருந்து மங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    நூக்கம்பாடி என்ற இடத்தில் சென்ற போது ஈரோட்டில் இருந்து எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் மணிவண்ணன் படுகாயமடைந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாப்பாரப்பட்டி அருகே சாலையில் காய்கறிகள் லோடு ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 45) என்பவரும், பாப்பாரப்பட்டியை சேர்ந்த மினிவேன் டிரைவரான சபீர் மகன் யாசின் (22) என்பவரும் மினிவேனில் நேற்று பெங்களூருவுக்கு காய்கறிகள் லோடு ஏற்றுவதற்காக சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு இன்று காலை தருமபுரிக்கு வந்து கொண்டு இருந்தனர். மினி வேனை சின்னசாமி ஓட்டினார். அப்போது பெங்களூரு-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் புலிக்கரை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் சின்னசாமி மற்றும் யாசின் ஆகிய 2 பேருக்கும் பலத்த படுகாயம் ஏற்பட்டது. 

    மினிவேனில் இருந்த காய்கறிகளும் சாலையில் சிதறிக்கிடந்தன. அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையில் காய்கறிகள் லோடு ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×