search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    ஜெயங்கொண்டம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம்குரு வாலப்பர் கோவில்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் மாலதி. இவர் பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தில் வசித்து வருகிறார். இந் நிலையில் ரங்கநாதன் கடந்த வாரம் இறந்தார். இது தொடர்பாக நேற்று இரவு துக்க நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மாலதி தனது உறவினர்கள் சுமார் 30 பேரை அழைத்துக் கொண்டு ஓலைப்பாடியைச் சேர்ந்த வேன் ஒன்றில் புறப்பட்டு செந்துறை வழியாக குரு வாலப்பர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் - குவாகம் பிரிவு பாதை அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கல்லை கிராமத்தை சேர்ந்த மாலதி கணவர் நாராயணசாமி (60), வசந்தா,கொளஞ்சி அம்மாள், ராணி,திலகவதி, ராசாயாள்,சந்திரலேகா, சுகுணா , சின்னம்மாள், சின்ன பிள்ளை , பூங்கொடி உள்ளிட்ட சுமார் 25 பேர் படுகாயமடைந்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 25 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    திருச்சி அரியமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    திண்டுக்கல் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 12 பேர் நசுங்கினர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    திண்டுக்கல்:

    கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் செம்பட்டி அருகே புதுச்சத்திரம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதனால் பஸ்சில் வந்த பயணிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். பஸ் டிரைவர் பெரியசாமி, பயணிகள் வேல்முருகன், குருவம்மாள், ரவிக்குமார், முனியம்மாள், மாரியம்மாள், ஜெயஸ்ரீ உள்பட 12 பேர் விபத்தில் நசுங்கினர்.

    இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    மத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஊத்தங்கரை:

    கர்நாடக மாநிலம்  பெங்களூருவை அடுத்த யஷ்வந்தபூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது31). இவர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (31), சரவணன் (28), ராமு (26), பிரதீபா(30), பாண்டியன் (26), அர்ஜுனன் (26), பாஸ்கர் (28), ஸ்டாலின் (26), தீனா (28) ஆகியோருடன் டாடா சுமோ காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தார். நேற்று திருமணம் முடிந்ததும் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்வதற்காக காரில் புறப்பட்டனர். காரை கோவிந்தராஜ் ஓட்டி வந்தார்.

    அப்போது கார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொடமாண்டபட்டி வந்தபோது ஒரு வளைவில் உள்ள புளிய மரத்தில் மோதியது. பின்னர் அந்த கார் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 2 கார்களின் முன்புறமும் நொறுங்கியது. டாடா சுமோ காரில் வந்த கோவிந்தராஜ் உள்பட 8 பேரும் படுகாயம் அடைந்தனர். 2 பேருக்கு மட்டும் எந்த காயம் ஏற்பட வில்லை.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மத்தூர் போலீசார் உடனே அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஸ்டாலின் என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் அவரை மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாதேஸ்வரன் மலையில் வளைவில் திரும்பியபோது அரசு பஸ் -தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மேட்டூர்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மேட்டூர், மாதேஸ்வரன் மலை கோவில் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். காலை 7.30 மணிக்கு பஸ் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் இருந்து மலை பாதையில் ஏறி ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்று கொண்டிருந்தது.

    அதே நேரத்தில் மலை உச்சியில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலில் இருந்து ஒரு தனியார் பஸ் பயணிகளுடன் புறப்பட்டு மேட்டூரை நோக்கி மலை பாதை வழியாக கீழே இறங்கி கொண்டிருந்தது. நடுமலை மாதேஸ்வரன் கோவில் அருகே வளைவில் திரும்பும்போது தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் வேகமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் டமார் என உடைந்து சிதறியது. பயணிகள் பயத்தில் அலறினார்கள். இந்த விபத்தில் 2 பஸ் டிரைவர்கள் உள்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து மாதேஸ்வரன் மலை கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது பலத்த காயமடைந்த பிளஸ்டூ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு, பிளஸ்டூ மாணவி ஒருவர் தனியாக சென்றுள்ளார். அப்போது அவரை சில நபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிய மாணவியை கடுமையாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.



    பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில் இன்று அவசரமாக தரையிறங்கிய விமானம் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர். #Boeingjetcrashlands #Guyanaairport #Guyanaairportcrashland
    ஜார்ஜ்டவுன்:

    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

    இந்நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏர் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடா நாட்டில் உள்ள டொரான்ட்டோ நகரை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.

    வானில் உயரக் கிளம்பிய சில நிமிடத்தில் இயந்திர கோளாறு உள்ளதை அறிந்த விமானி அந்த விமானம் உடனடியாக ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

    இதைதொடர்ந்து ,கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை  விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் இருந்த கம்பி வேலியை உடைத்துகொண்டு நின்றது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட சில பகுதிகள் சேதம் அடைந்தன.

    இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Boeingjetcrashlands #Guyanaairport #Guyanaairportcrashland
    கொடுமுடி அருகே இன்று பக்தர்கள் சென்ற வேன் ரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நம்பியூர், கீரனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஈரோட்டில் இருந்து ராமேசுவரம் கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் நேற்று ஈரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த வேனை சென்னிமலையை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வேன் கொடுமுடி அருகே கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் வாழநாயக்கன்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. வேனில் தூங்கிக் கொண்டு இருந்த பக்தர்கள் விபத்து காரணமாக வேனுக்குள் சிக்கி சத்தமிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கொடுமுடி போலீசாருக்கும் இதுபற்றிய தகவல் தெரியவந்தது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    வேனின் இடிபாடுகளுக் குள் சிக்கிய பக்தர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர், பக்தர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

    1. சத்யராஜ் (26),

    2. குமராயாள் (48),

    3. ஜெயந்தி (28),

    4. கண்ணம்மாள் (20),

    5. அருக்காயி (60),

    6. லட்சுமணன் (23),

    7. சண்முகம் (50),

    8. சாந்தி (40),

    9. மீனா (23).

    இன்னொருவர் பெயர் விவரம் தெரியவில்லை.

    காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூர் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தீபாவளிக்காக விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார்.

    நேற்று இரவு 6 மணிக்கு ஈட்டியம்பட்டியில் இருந்து அரூர் அருகே உள்ள புறாக்கள் குட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. பனியன் நூற்பாலை வைத்துள்ள இவருக்கு ஜெனிதா என்ற மனைவியும், அபினேஷ் (வயது 11) என்ற மகனும், ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர்.

    நெல்லை மாவட்டம், கயத்தாறில் உள்ள உறவினர் வீட்டு விசே‌ஷத்தில் பங்கேற்பதற்காக முருகையா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோட சுவற்றில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஹரிணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த முருகையா, ஜெனிதா, அபினேஷ் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் இன்று வேகமாக வந்த லாரி கார் மற்றும் ஜீப்பின் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். #12killed #truckramscar #truckramsjeep #Sonipat
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா-பானிபட் நெடுஞ்சாலை வழியாக இன்று மாலை சுமார் 6 மணியளவில் வேகமாக வந்த ஒரு லாரி முட்லானா கிராமத்தின் அருகே ஒரு கார் மற்றும் ஜீப்பின்மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #12killed #truckramscar #truckramsjeep #Sonipat
    எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். #CopticChristians #7deadinEgypt
    கெய்ரோ:

    காப்டிக் எனப்படும் பழைமைவாத கிறிஸ்தவர்கள் எகிப்து உள்ளிட்ட சில நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எகிப்து நாட்டில் மிக அதிகமாக உள்ளனர். 

    இந்நிலையில், எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #CopticChristians #7deadinEgypt
    ×