search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96187"

    ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களுக்கென பிரத்யேக ஸ்னாப்டிராகன் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SnapdragonWear3100



    குவால்காம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ஸ்மார்ட்வாட்ச்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    அல்ட்ரா-லோ பவர் சிஸ்டம் சார்ந்த வடிவமைப்பு அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அதிக இன்டராக்ஷன்களை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் சிப் சீராக வேலை செய்ய, கூகுள் நிறுவனத்தின் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக குவால்காம் தெரிவித்துள்ளது.

    மேலும் ஃபாஸில் குழுமம், லூயிஸ் வியூட்டன் மற்றும் மான்ட்பிளாக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களில் தனது சிப்கள் வழங்கப்பட இருப்பதை குவால்காம் உறுதி செய்துள்ளது.



    குவால்காம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸரில் குவாட்கோர் ஏ7 பிராசஸர்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., அல்ட்ரா-லோ பவர் கோ-பிராசஸர் QCC1110 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த கோ-பிராசஸர் மிகவும் சிறியதாகவும், குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்திருக்கும் வியர் 3100 பிராசஸரில் புதிய டி.எஸ்.பி. ஃபிரேம்வொர்க் சப்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த தலைமுறை சென்சார் பிராசஸிங் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும். புதிய வியரபிள் பவர் மேனேஜ்மென்ட் சப்-சிஸ்டம் வழங்கபப்ட்டுள்ளதால் குறைந்த மின்சாரம் மற்றும் அதிக இன்டகிரேஷன் உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும்.



    ஸ்னாப்டிராகன் வியர் 3100 (MSM8909w / APQ8009w) சிறப்பம்சங்கள்:

    - அதிகபட்சம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
    - QCC1110 கோ-பிராசஸர் மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மற்றும் பிரத்யேக ஸ்போர்ட் மற்றும் வழக்கமான வாட்ச் மோட்களை சப்போர்ட் செய்கிறது. பிரசாஸருடன் இணைந்தும் தனியாகவும் இயங்கும்.
    - அட்ரினோ 304 GPU: OpenGL ES 3.0, அணியக்கூடிய சாதனங்களில் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பவர்
    - 400 MHz LPDDR3, eMMC 4.5, இது 4×4 மற்றும் 8×8 போன்ற அமைப்புகளில் சப்போர்ட் செய்யும்
    - அதிகபட்சம் 640x480 டிஸ்ப்ளேவினை 60fps, கொண்டுள்ளது. அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது, MIPI மற்றும் SPI சப்போர்ட்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் X5 LTE மோடெம், அதிகபட்சம் 1 Gbpsடவுன்லோடு வேரம் மற்றும் to 150 Mbps வேகத்தில் அப்லோடு செய்யும் வசதி
    - WCN3620 – லோ-பவர் வைபை மற்றும் ப்ளூடூத், அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது 802.11b/g/n (2.4GHz), குவால்காம் லொகேஷன் தொழில்நுட்பம், யுஎஸ்பி 3.0, ப்ளூடூத் 4.1 + ப்ளூடூத் லோ எனெர்ஜி, இன்டகிரேட்டெட் என்.எஃப்.சி. மற்றும் NXP சப்போர்ட்
    - குவால்காம் நாய்ஸ் மற்றும் எக்கோ கான்செலேஷன், குவால்காம் வாய்ஸ் சூட், குவால்காம் வாய்ஸ் ஆக்டிவேஷன், குவால்காம் அகௌஸ்டிக் ஆடியோ கோடெக் மற்றும் ஸ்பீக்கர் ஆம்ப்ளிஃபையர்
    - ஜென் 8C சாட்டிலைட்: ஜென் 8C சாட்டிலைட்: ஜி.பி.எஸ்., க்ளோனஸ், பெய்டௌ, கலீலியோ, டெரெஸ்ட்ரியல்: வை-பை, செல்லுலார், PDR3.0

    ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் வேலை செய்யும்படி மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2018 நான்காவது காலாண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் கேலக்ஸி வாட்ச் அந்நிறுவனத்தின் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை சொடர்ந்து பார்ப்போம். #GalaxyWatch


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் நியூ யார்க் நகரில் நடைபெற்ற அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 46எம்.எம். மற்றும் 42எம்.எம். ஆப்ஷன்களில் 1.3 இன்ச் மற்றும் 1.2 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் கேலக்ஸி வாட்ச் வட்ட வடிவ சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    டைசன்-சார்ந்த வியரபிள் பிளாட்ஃபார்ம் 4.0 மூலம் இயங்கும் கேலக்ஸி வாட்ச் 5ATM+IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட், மிலிட்டரி தர டியூரபிலிட்டி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை என்.எஃப்.சி. மற்றும் மாக்னெடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் பே மூலம் மொபைல் பேமென்ட் செய்ய முடியும். மேலும் பில்ட்-இன் ஸ்பீக்கர் இருப்பதால் வாய்ஸ் மெசிஜிங், மியூசிக் மற்றும் ஜி.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    பயனரின் மன அழுத்தத்தை டிராக் செய்யவும், மூச்சு பயிற்சி சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் புதிய டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் டிராக்கர் உறக்கத்தை டிராக் செய்கிறது. இத்துடன் வீட்டிலேயே செய்யக்கூடிய 21 உடற்பயிற்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வாட்ச்-இல் மொத்தம் 39 உடற்பயிற்சிகள் உள்ளன.



    சாம்சங் கேலக்ஸி வாட்ச் சிறப்பம்சங்கள்

    – 1.2-இன்ச் / 1.3-இன்ச் 360×360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    – 1.15 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் எக்சைனோஸ் 9110 பிராசஸர்
    – 768 எம்பி (ப்ளூடூத்) / 1.5 ஜிபி ரேம் (எல்.டி.இ)
    – 4 ஜிபி மெமரி
    – டைசன் சார்ந்த வியரபிள் ஓ.எஸ். 4.0
    – 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL STD 810G
    – 3ஜி/எல்.டி.இ. (ஆப்ஷன்), ப்ளூடூத் 4.2, வைபை, என்.எஃப்.சி., ஏ-ஜி.பி.எஸ்.
    – 472 எம்.ஏ.ஹெச். (46 எம்.எம்.) / 270 எம்.ஏ.ஹெச். (42 எம்.எம்.) பேட்டரி
    – வயர்லெஸ் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 43 எம்.எம். வெர்ஷன் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,070) என்றும், 42 எம்.எம். மிட்நைட் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு வெர்ஷன்கள் விலை 329.99 டாலர்கள் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி வாட்ச் விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி வாட்ச் எல்.டி.இ. வெர்ஷன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை. #GalaxyUnpacked #GalaxyWatch
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி வாட்ச் சாதனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote9 #smartwatch



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் FCC தளத்தில் SM-R815U மாடல் நம்பருடன் சான்று பெற்றிருக்கிறது. இதில் வாட்ச் சாதனம் 51.2 x 43.4 அளவில் 30.2 மில்லிமீட்டர் அல்லது 1.19 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்திருக்கிறது.

    சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என தெரிவித்திருந்தது.



    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களிலும் கேலக்ஸி வாட்ச் மற்றும் நோட் 9 ஒரே நிகழ்வில் அறிமுகமாகி, விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மட்டும் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருப்பதை சாம்சங் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.

    கேலக்ஸி வாட்ச் சாதனம் டைசன் ஓ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் வெவ்வேறு அளவுகளில், இரண்டு வித வேரியண்ட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்த சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட உடல்நலம் சார்ந்த அம்சங்கள், உடற்பயிற்சி சார்ந்த தலைசிறந்த செயலிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    கேலக்ஸி வாட்ச் முன்பதிவுகள் ஆகஸ்டு 14-ம் தேதி துவங்கலாம் என கூறப்படுகிறது, இதே தினத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகளும் துவங்கயிருக்கிறது. கேலக்ஸி சீரிஸ் முதல் வாட்ச் என்பதால், இந்த சாதனம் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. #GalaxyNote9 #smartwatch
    ஃபோர் ரன்னர் 645 மியூசிக் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கார்மின் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.





    கார்மின் நிறுவனம் தனது ஃபோர் ரன்னர் 645 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் ஆஃப்லைன் மியூசிக் ஸ்டோர் செய்யும் வசதி கொண்ட கார்மின் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆக அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்சம் 500 பாடல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம் என்H வகையில், பாடல்களை ப்ளூடூத் ஹெட்செட் மூலம் கேட்க முடியும்.

    இதனால் ஸ்மார்ட்போன் உதவியின்றி ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பாடல்களை கேட்க முடியும். உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது ஸ்மார்ட்போன் எடுத்து செல்ல முடியாத இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

    கார்மின் ஃபோர் ரன்னர் 646 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச்-இல் 24/7 இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி, ஓட்ட பயிற்சி சார்ந்த விவரங்களை மிக துல்லியமாக வழங்குகிறது. இதே போன்று பல்வேறு உடல் அசைவுகளை மிக நுனுக்கமாக டிராக் செய்கிறது. மெட்டல் பெசல்கள், அதிக உறுதியான கிளாஸ், பேன்ட்களை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியை கண்காணித்து, தானாகவே மதிப்பீடு செய்யும். இந்த தகவல்களை கொண்டு உடற்பயிற்சியை சிறப்பாக செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.



    கார்மின் ஃபோர் ரன்னர் 645 மியூசிக் அம்சங்கள்:

    - 1.2 இன்ச் 240x240 பிக்சல் சன்லைட்-விசிபில், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி இன் பிக்சல்
    - ப்ளூடூத் ஸ்மார்ட் மற்றும் ANT+
    - ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் சப்போர்ட்
    - 500 பாடல்களை சேமிக்கும் வசதி
    - ப்ளூடூத் ஹெட்போன் சப்போர்ட்
    - ஆஃப்லைன் ஸ்ட்ரீமிங் வசதி
    - மேம்படுத்தப்பட்ட ஃபிட்னஸ் அம்சங்கள்
    - ரிஸ்ட்-சார்ந்த இதய துடிப்பு சென்சார்
    - 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்
    - ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப்
    - ஜிபிஎஸ் மோட் மற்றும் மியூசிக் வசதியுடன் 5 மணி நேர பேக்கப்

    கார்மின் ஃபோர் ரன்னர் 645 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் அல்லது செர்ஸி பேன்ட் விலை ரூ.39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசான், கார்மின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பேடிஎம் மால் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    கார்மின் நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் 5எஸ் சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச் மாடல்கள் - 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் மாடல்கள் அறிமுகம்.




    கார்மின் நிறுவனம் ஃபீனிக்ஸ் 5 சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. 

    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்களில் பில்ட்-இன் ரூட் செய்யக்கூடிய டோபோகிராஃபிக்கல் மேப்ஸ், மியூசிக் பிளேலிஸ்ட்களுக்கான ஸ்டோரேஜ், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி, ரிஸ்ட் சார்ந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. 42 மில்லிமீட்டர் முதல் 51 மில்லிமீட்டர் அளவுகளில் கிடைக்கும் ரக்கட் ஸ்மார்ட்வாட்ச்களை நேரடி சூரிய வெளிச்சத்திலும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

    முந்தைய ஃபினிக்ஸ் 5 மாடல்களை போன்று புதிய ஸ்மார்ட்வாட்ச்களிலும் ரிஸ்ட்-சார்ந்த ஹார்ட் ரேட், மல்டிஸ்போர்ட் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேப்களை கொண்டு ரவுன்ட்-ட்ரிப் கோர்ஸ் க்ரியேட்டர் எனும் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு மேப்களில் வழங்கப்பட்டு இருக்கும் வழித்தடங்களில் ஓட்டப்பயிற்சி அல்லது சைக்கிள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

    வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை டிராக் செய்து அவற்றை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிரெயினிங் ஸ்டேட்டஸ்-களை தானாக மதிப்பீடு செய்து, சில சமயங்களில் அதீத பயிற்சி செய்யும் போது, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும். கனெக்ட் ஐகியூ கொண்டிருப்பதால், பயனர்கள் தங்களது வாட்ச்-இன் விட்ஜெட்கள், டேட்டா ஃபீல்டுகள், வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஆப்ஸ்களை கஸ்டமைஸ் செய்ய முடியும்.

    ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டால், பயனர்கள் அழைப்பு, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன்களை தங்களது வாட்ச்-இல் பெற முடியும். இவை மல்டி-நெட்வொர்க் சாட்டிலைட் வசதியை கொண்டிருப்பதால், ஜிபிஎஸ் இல்லாத இடங்களிலும் சிறப்பான சேவையை இது வழங்குகிறது.



    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 240x240 பிக்சல் சன்லைட்-விசிபிள், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி-இன்-பிக்சல் டிஸ்ப்ளே
    - சிறிய மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச், இதயதுடிப்பு தொழில்நுட்பம்
    - ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல், பட்டன்கள் மற்றும் ரியர் கேஸ்
    - வாட்ச்-இல் 500 பாடல்களை சேமிக்கும் வசதி
    - ப்ளூடூத் ஹெட்போன்களுடன் இணைக்கும் வசதி
    - கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி
    - நேவிகேஷன் சென்சார்கள் 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - ரிஸ்ட்-சார்ந்த ஆக்சிமீட்டர்
    - ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப் வழங்கும் பேட்டரி

    பிவிடி-கோட்டிங் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் கொண்டிருக்கும் ஃபீனிக்ஸ் 5 பிளஸ் சீரிஸ் வாட்களில் சிலிகான் வாட்ச் பேன்ட் மற்றும் டைட்டானியம் பிரேஸ்லெட் வெர்ஷனில் டைட்டானியம் பெசல் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் விலை 699.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.47,735) முதல் துவங்கி 1149.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.78,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்களில் முன்னதாக கிசுகிசுக்கப்பட்ட தேதியிலேயே கேலக்ஸி நோட் 9 அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் புதிய நோட் ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனம் கியர் எஸ்4 சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    முந்தைய மாடல் போன்று இல்லாமல் புதிய கியர் எஸ்4 சாதனத்தில் பேனல் லெவல் பேக்கேஜிங் வழங்கப்படுகிறது. இது முந்தைய சாதனத்தை விட மெல்லியதாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகஸ்டு 9-இல் அறிமுகமாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை விட நோட் 9 இரு வாரங்கள் முன்னதாக வெளியாகும்.

    இத்துடன் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 மாடலுடன் கியர் எஸ்4 சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் PLP வழிமுறை சார்ந்த சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியீட்டு தேதி மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், கியர் எஸ்4 சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2018 கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் அதிகளவு பேட்டரி திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஸ்மார்ட் சாதனங்களின் புரட்சி உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. 

    நமது அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான பல்வேறு அவசர தகவல்களில் துவங்கி, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் தீர்வு வழங்கும் அசாத்திய பணிகளை நமது கையடக்க சாதனங்கள் மிக சுலபமாக செய்து முடிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் செய்யும் பணிகளில் பாதியை ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் பறித்துக் கொள்கின்றன.

    இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல் மற்றும் இதர மின்சாதனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. இந்நிறுவனம் கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 'ஸ்மார்ட் டைம் 200' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஸ்மார்ட்போனினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் இணைந்து கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை க்ளிக் செய்து வாட்ச் மூலம் பேசலாம். இதன் இன்பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் படி தேவையான அளவு ஒலியெழுப்புகிறது. 

    அழைப்புகள் சார்ந்த விவரம் மட்டுமின்றி எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான நோட்டிஃபிகேஷன்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பீடோமீட்டர் அம்சம் நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை வழங்கும். இத்துடன் உங்களது உறக்கம் சார்ந்த விவரங்களையும் டிராக் செய்து வழங்குகிறது.  



    ஸ்மார்ட் டைம் 200 சிறப்பம்சங்கள்:

    - 2.71 செ.மீ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

    - நானோ சிம் ஸ்லாட் வசதி

    - மைக்ரோ SD கார்டு ஸ்லாட்

    - BT வயர்லெஸ் வசதி

    - தொடு திரை வசதி

    - இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது

    - பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர்

    - முன்பக்க கேமரா

    ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தில் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ SD கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. 380 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் டைம் 200 வட்டவடிவத்தில் 2.71 சென்டிமீட்டர் அளவில் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 

    இத்துடன் மைக்ரோ சிம் / நானோ சிம் ஸ்லாட் வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஒரு முழுமையான தனி சாதனமாகவும் பயன்படுத்த முடியும். இன்-பில்ட் ஸ்பீக்கர், முன்பக்க கேமரா, சவுண்ட் ரெகார்டர், பிரவுசர், ஃபைல் மேனேஜர் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட் டைம் 200 உங்களின் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இருக்கிறது.
     
    இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் டைம் 200 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செவ்வகம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தை இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
    கார்மின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:


    கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 500 பாடல்களை பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும். 

    விவோஆக்டிவ் 3 அறிமுகம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட ஃபிட்னஸ் அம்சம், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் உள்ளிட்டவை புதிய சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 



    கார்மின் விவோஆக்டிவ் 3 சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 240x240 பிக்சல் ஃபுல்-கலர் கார்மின் க்ரோமா டிஸ்ப்ளே
    - வாட்டர் ரெசிஸ்டன்ட் (5 ATM)
    - ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் வசதி
    - ஸ்டெப் கவுன்ட்டர், மூவ் பார்
    - ஆட்டோ கோல்
    - ஸ்லீப் மானிட்டரிங், கலோரி உள்ளிட்ட உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி
    - மியூசிக் ஸ்டோரேஜ்: அதிகபட்சம் 500 பாடல்களை பதிவு செய்யும் வசதி
    - பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் ஸ்போர்ட் செயலிகள் 

    ஸ்மார்ட்வாட்ச் மோடில் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குவதோடு, ஜிபிஎஸ் மற்றும் மியூசிக் மோடில் 5 மணி நேர பேக்கப், மியூசிக் இல்லாமல் ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோஆக்டிவ் 3 மியூசிக் பிளாக் சிலிகான் 20மில்லிமீட்டர் பேன்ட் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் இந்த சாதனம் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 299.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,265) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ([ஜிபிஎஸ் + செல்லுலார்) விற்பனை துவங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆப்பிள் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடலின் விற்பனையை இந்தியாவில் துவங்கியுள்ளது. 

    இந்தியாவில் மே 4-ம் தேதி முன்பதிவு துவங்கிய நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பேஸ் மாடல் விலை ரூ.39,080 முதல் துவங்குகிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இசிம் பயன்படுத்துவதால், பிரத்யேக சிம் கார்டு தேவைப்படாது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% வேகமாக இயங்கும், புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வேகமான வைபை, 50% சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளையும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி கொண்டுள்ளது.



    அறிமுக சலுகைகள்:

    ஏர்டெல் சார்பில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.5000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் (JioEverywhereConnect) சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் சேவை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.



    பல்வேறு நாடுகளில் விற்பனை:

    இந்தியா மட்டுமின்றி ஸ்வீடன், டென்மார்க் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 9ஜிபிஎஸ் + செல்லுலார்) ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இந்திய விலை:

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் 38 மில்லிமீட்டர் சில்வர் அலுமினியம் கேஸ் ஃபாக் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / கோல்டு அலுமினியம் கேஸ் மற்றும் பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், கிரே ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.39,080 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆரம்ப விலை ரூ.39,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேஸ்கள், மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை மாறுகிறது. ஆப்பிள் வாட்ச் எடிஷன் (ஜிபிஎஸ் + செல்லுலார்) 42 மில்லிமீட்டர் செராமிக் கேஸ், சாஃப்ட் வைட் / பெப்பிள் ஸ்போர்ட் பேன்ட் கொண்ட மாடலின் விலை ரூ.1,22,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் விலை உயர்ந்த் சீரிஸ் 3 வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ×