search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96201"

    • பிரபல நடன இயக்குனர் ஷெரீஃப் ஜூபாப் நடன செயலியை தொடங்கியுள்ளார்.
    • உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.

    'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.


    தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

    ஜூபாப் செயலி குறித்து பேசிய ஷெரீஃப், "உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம்" என்று கூறினார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


    மணிரத்னம் -கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 'கேஎச்234' படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கமல்ஹாசனோடு பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    வித்யா பாலன் -கமல்ஹாசன்

    நடிகை வித்யா பாலன், அஜித் நடிப்பில் வெளியான 'நேர்க்கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.
    • கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    கோவை:

    கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து மக்களுக்கு இளநீர் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அந்தளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அமைதி பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம் தற்போது அந்த நிலைமையில் இருந்து மாறி சென்று வருகிறது.

    தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.

    மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறிய அவர்கள் தற்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊழல் கறை படிந்த காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் திகழ்ந்து வருகிறார்.

    பா.ஜ.கவை பொறுத்தவரை கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    பா.ஜ.கவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் அதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஏனென்றால் தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். இதனால் பாதிப்பு என்பது இல்லை.

    கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டார். இனி இதுபற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார்.
    • கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியான பா.ஜனதா, எதிர்கட்சியான காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    தேர்தலுக்கு 11 நாட்களே உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் கர்நாடகத்துக்கு சென்று தங்கள் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார். அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றது, டெல்லியில் அவருடன் ஒரு மணி நேரம் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியது, ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தது என பல்வேறு செயல்கள் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், அந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும், கர்நாடக தலைவரும் கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள கேட்டு கொண்டதாகவும், இதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

    இப்படிப்பட்ட சூழலில் தான் கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மே முதல் வாரத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கமல்ஹசானை தொடர்பு கொண்டு கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதுதொடர்பாக கோவையில் நடந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும், ராகுல்காந்தி கேட்டு கொண்டதற்கு இணங்க காங்கிரசுக்கு ஆதரவாக தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

    தற்போது அவர் வருகிற மே முதல் வாரத்தில் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்வார். இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் அவர் எந்த தேதியில் பிரசாரம் மேற்கொள்வார் என்பது தெரியவரும் என தெரிவித்தனர்.

    காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதிமய்யம் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • சாதி, மதத்தை சாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

    கோவை :

    மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி ரோடு சின்னியம் பாளையம் திருமண மண்டபத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. இதற்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. எனவே கட்சிக்கு புதிய உறுப்பினர்களாக ஒரு பூத்திற்கு 20 பேரை சேர்க்க வேண்டும். இதன் மூலம் ஒரு தொகுதிக்கு 6 ஆயிரம் பேரை கட்சியில் இணைக்க முடியும். சாதி, மதத்தை சாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்களுக்கு எதிராக எது உள்ளதோ அதை நான் சாடுவேன்.

    ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஒரு பிள்ளையை வளர்ப்பது போல ஜனநாயகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். திறந்த கதவு தான் என் வீடு. மற்றவர்களுக்கு தேவைப்படுவதை பதுக்கி வைத்தால் அங்கு பூட்டு வேண்டும்.

    தலைமை பொறுப்பு என்பது மேடை ஏறி பேசுவது மட்டுமல்ல. புது கட்சி ஆரம்பித்தால் எவ்வளவு வேகமாக வேலை செய்வீர்களோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். கட்சியில் பூர்த்தி செய்யப்படாத இடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே செவி சாய்ப்பேன். நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஈரோட்டிலும் தெரிந்தது.

    ராகுல்காந்தி இன்று (நேற்று) காலை என்னுடன் செல்போனில் பேசினார். அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பினார். அது பற்றிய முடிவை விரைவில் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? கோவையில் போட்டியிடுவீர்களா?

    பதில்:- அது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கிறோம். இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    கேள்வி:- கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்திற்கு செல்ல உள்ளீர்களா?

    பதில்:- பெங்களூரு பிரசாரத்திற்கு செல்வது குறித்து நாளைக்குள் (இன்று) முடிவு சொல்லப்படும். எங்களது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம். முடிவெடுத்த பின்னர் சொல்லப்படும்.

    கேள்வி:- சட்டமன்றத்தில் தவறவிட்ட வெற்றியை, பாராளுமன்றத்தில் பெற திட்டமா?

    பதில்:- இருக்கலாம். அது நல்ல எண்ணம்தானே. வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகி வருகின்றன.
    • பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகி வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

    கோவையில் நாளை மறுநாள் (28-ந்தேதி) மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம் கட்சியினருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் 28-ந்தேதி மதியம் 2 மணி அளவில் கோவை சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை, சேலம் மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் சேலம், கோவை மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் 600 பேரும், நிர்வாக மற்றும் செயற்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் 50 பேரும் கலந்துகொள்ள இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    பூத்கமிட்டிகளை பலப்படுத்தி பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுவாக்க கமல்ஹாசன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாகவும் கோவை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி அதன் பின்னர் நடைபெற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை தனித்தே சந்தித்தது. உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே களம் கண்டது.

    இந்த நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல் ஹாசனின் கவனம் கூட்டணி அரசியல் நோக்கி திரும்பியது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் கமல்ஹாசன் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    இந்த கூட்டணி பயணத்தை பாராளுமன்ற தேர்தலிலும் தொடர கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாகவும் கோவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கமல்ஹாசன் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    • மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.
    • 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

    யார் சொல்கிறார்கள் என்பதைவிட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத்தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

    12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அறிமுக காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    கடந்த ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கும் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




    • மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி.
    • இவர் தாயார் பாத்திமா இஸ்மாயில் நேற்று காலமானார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் (99) வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    மம்முட்டி -பாத்திமா இஸ்மாயில்

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டியின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் கிளம்பியிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


      

    • கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


    மணிரத்னம் -கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'கேஎச்234' படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்து விட்டதாகவும் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலானது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

    • பிரபல நடிகர் கிரேஸி மோகனின் மனைவி நளினி.
    • இவர் இன்று இயற்கை எய்தினார்.

    நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த கிரேஸி மோகன், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி காலமானார். இந்நிலையில், இவரது மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று இயற்கை எய்தினார்.


    கமல்

    இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இந்தியன் -2

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பை முடித்த ஷங்கர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றார். இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.


    இந்தியன் -2

    இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள ஷங்கர் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "இத்தனை ஆற்றல் நிறைந்த படப்பிடிப்பிற்கு நன்றி கமல் சார். நாம் மீண்டும் மே மாதத்தில் இந்தியன் 2 கிளைமேக்ஸ் காட்சியில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், கமல் உடனான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


    ×