என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96201"
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் -2'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஷங்கர்
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பை முடித்த ஷங்கர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் அமெரிக்க சென்றார். அங்கு தற்போது படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
- இப்படத்தின் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தியன் -2
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் -2 படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Bye Bye Taipei #indian2 P.C @dop_ravivarman pic.twitter.com/dGyUcmAKwP
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 7, 2023
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
- தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை இயக்குனர் ஷங்கர் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தைவானில் ஷங்கர்
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
#Indian2 at enthralling Taiwan pic.twitter.com/iAQdwyFWRj
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 2, 2023
- டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை இணையத்தில் பதிவு செய்து வந்தனர்.
இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில், நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது." என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. https://t.co/k9gZaDH0IM
— Kamal Haasan (@ikamalhaasan) March 31, 2023
- கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் படப்பிடிப்புக்காக கமல் 4 நாட்கள் தைவான் நாட்டிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பூத் கமிட்டிகளை அமைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.
- சென்னை வடகிழக்கு, வடமேற்கு, மத்திய கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை:
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட தயாராகி வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்குள் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் விதத்தில் பூத் கமிட்டிகளை அமைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்குமாறு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், நகரச்செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், இணை செயலாளர்கள் உள்ளிட்டோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. சென்னை தென் கிழக்கு, தென் மத்தி, தென் மேற்கு, மத்திய மேற்கு, மத்திய வடக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் காலையில் ஆலோசனை நடைபெற்றது.
12 மணிக்கு பிறகு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாலையில் சென்னை வடகிழக்கு, வடமேற்கு, மத்திய கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
மொத்தம் 16 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறைத்தலைவர் மவுரியா, தங்கவேலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
- நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
- இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தம்பி அஜித்குமாரின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து.
- நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது என்றார்.
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.
2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-
இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் நிறைய சோதனைகளையும், நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான தங்களின் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’டிக் டிக் டிக்’.
- இந்த படத்தில் கதாநாயகிகள் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோர் நீச்சல் உடையில் நடித்திருந்தனர்.
தமிழ் திரைத்துறையில் இன்று நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது என்பது வெகு சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் 1980-களில் இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கதாநாயகிகள் இல்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்று தனியாக நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடுவது பெரிய விஷயமாகப் பேசப்படும். அந்த கட்டுப்பாடான நேரத்தில் 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் கதாநாயகிகள் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோரை நீச்சல் உடையில் நடிக்க வைத்து அதிரடி செய்திருப்பார்.
நடிகை ராதா பகிர்ந்த புகைப்படம்
கமல்ஹாசனை சுற்றி நிற்கும் மூன்று கதாநாயகிகளின் இந்த போட்டோ அன்றைய நாளில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் புகைப்படத்தைத் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்த ராதா நினைவுகளை எழுதியிருக்கிறார். அதில், அன்றைய நாளில் எங்களுக்கு இது வேலையாகத் தெரிந்தாலும் இப்போது நினைத்துப் பார்த்தால் அது போராட்டமான காலமாகவே தெரிகிறது. எனக்குப் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று. மாதவி எங்களைவிட இதில் உணர்வுப்பூர்வமாக இருந்ததை மறக்க முடியாது. எங்களுக்காக வாணி கணபதி இந்த அழகான ஆடைகளை வடிவமைத்திருந்தார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- நடிகர் கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர்.
- சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார். கடந்த 2008-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் கண்டு வந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றே கமல்ஹாசன் தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் எப்போதுமே கதர் ஆடைகள் பற்றியும் நெசவாளர்கள் நலன் குறித்தும் அடிக்கடி பேசுவார். கதர் ஆடைகளை அணிவதிலும் அதிக ஆர்வம் கொண்டவரான கமல்ஹாசன் அனைவரும் கதர் ஆடைகளை விரும்பி அணிய வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் கதர் ஆடைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவும் நவீன மாடல்களில் கதர் ஆடைகளை உருவாக்கும் விதத்திலும் கமல்ஹாசன் கதர் ஆடை நிறுவனம் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு கே.எச். (ஹவுஸ் ஆப் கதர்) என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த விற்பனையகம் மூலமாக பல்வேறு வடிவிலான கதர் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 'ஆன்லைன்' விற்பனையகமான இந்த நிறுவனத்தின் மூலமாக பலர் கதர் ஆடை களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
பேஷன் ஷோக்களிலும் கதர் ஆடைகளின் அணி வகுப்பு அதிகரித்துள்ளது. இப்படி ஸ்டைலான கதர் ஆடைகளும் அதிகமாக ஜவுளி சந்தைகளில் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அதுபோன்ற ஆடைகளையே கமல்ஹாசனின் கே.எச்.விற்பனையகம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த கதர் ஆடை விற்பனை தொழிலை மேம்படுத்தும் வகையில் கமல்ஹாசன் இத்தாலிக்கு சென்றிருக்கிறார். கதர் ஆடை துணிகளின் வடிவமைப்புகளுடன் கமல்ஹாசன் விமானத்தில் இத்தாலிக்கு பறந்துள்ளார். இவர் இத்தாலி சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சியின் ஒரு பகுதி படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தென் ஆப்ரிக்கா மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பு 14 நாட்கள் நடைபெறும் என்றும் இந்த சண்டை காட்சி ரயிலில் நடப்பது போன்று படமாக்கப்படுவதாகவும், இது உலக தரம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார்.
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார். இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.
சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்