search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96268"

    அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும், அதில் அஜித் இளமை தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘.

    இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் போனது. சமீபத்தில் ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது. 



    மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறாராம். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்தனர். 

    படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். #Viswasam #AjithKumar #Nayanthara

    அஜித் நடிப்பில் விஸ்வாசம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடியவிருக்கும் நிலையில், படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் இயக்குநர் சிவா தீவிரமாக இருக்கிறாராம். #Viswasam #AjithKumar
    அஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘.

    இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆனது.

    வரும் போது வரட்டும். படப்பிடிப்பாவது தொடங்கினால் சரிதான் என்ற மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். ஐதராபாத்தில் தயாராக இருந்த அரங்கில் தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அஜித், நயன்தாரா உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள்.

    முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த உள்ளனர்.



    மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதனால், வருகிற தீபாவளியை அஜித் படத்துடன் கொண்டாடலாம் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Viswasam #AjithKumar #Nayanthara

    கமல், அஜித்துடன் நடித்த பார்வதி நாயர் தனக்கு பிடித்தவர் யார் என்று மனம் திறந்து சொல்லியிருக்கிறார். #Ajith #Thala #ParvathyNair
    என்னை அறிந்தால், உத்தம வில்லன் என்று கமல், அஜித் படங்களில் நடித்ததவர் பார்வதி நாயர். மலையாளத்தில் மோகன்லாலுடன் நீரலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தவருடன் மாலைமலருக்காக பேசினோம்.

    கமல், அஜித் இப்போது மோகன்லாலா?

    பெரிய நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று இல்லை. ரொம்ப தேர்ந்தெடுத்து என் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடிக்கிறேன். பெரிய நடிகர்கள் உடனும் பெரிய இயக்குநர்களுடனும் தொடர்ந்து வேலை பார்ப்பது சந்தோ‌ஷம் தான். ஆனால் என்னுடைய கதாபாத்திரம் தான் முக்கியம். என்னுடைய படங்களை பார்த்தாலே இது புரியும். என்னை சந்திக்கும் ரசிகர்களின் விமர்ச்னங்களுக்கு நான் முக்கியத்துவம் தருகிறேன்.

    மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் உடல் வாகை அப்படியே பராமரிக்கிறீர்களா?

    நான் இன்னமும் மாடலின் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் உடல்வாகுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. நான் எந்த உணவுக் கட்டுப்பாடும் கடைப் பிடிப்பதில்லை. நன்றாக சாப்பிடுவேன். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்போது ஒரு ஆக்‌‌ஷன் படத்துக்காக உடம்பை ஒல்லியாக்கி இருக்கிறேன். அதனால் வேறு ஒரு படத்தை இழந்தேன். சாப்பாட்டில் எனக்கு தமிழ்நாட்டு தோசை ரொம்ப பிடிக்கும். சரவணபவன் மசாலா தோசை சென்னையில் மறக்காமல் சாப்பிடும் உணவு.

    ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?

    சின்ன வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம். அம்மா நன்றாக வரைவார். வீட்டில் அம்மா வரைந்த ஓவியங்கள் இருக்கின்றன. ஒருவேளை மரபணுவிலேயே வந்திருக்கும்போல... சூழ்நிலை அமையவில்லை. அமைந்து இருந்தால் ஓவியம் தொடர்பாகவே படித்திருப்பேன்.

    ஓவியத்துக்கு பொறுமை அவசியம் தேவைப்படுமே?

    எனக்கு வாழ்க்கையில் பொறுமை இருக்காது. உங்களிடம் பேசும்போதுகூட நடந்துகொண்டு தான் இருக்கிறேன். ஆனால் ஓவியம் வரையத் தொடங்கினால் நான் வேறு ஒரு உலகத்துக்கே சென்றுவிடுவேன். அந்த பார்வதி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பொறுமை காப்பாள்.

    எப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆசை?

    நான் ஆசைப்பட்ட வேடங்களில் இதுவரை நடிக்கவில்லை. இன்னும் நல்ல வேடங்கள் கிடைக்க வேண்டும். என்னுடைய உண்மையான சுபாவம் இதுவரை திரையில் வெளிப்படவே இல்லை. நான் ரொம்ப ஜாலியான பொண்ணு. ஆனா படங்களில் தொடர்ந்து சீரியஸான வேடங்கள் தான் கிடைக்கின்றன.



    கமல் அரசியல் கட்சி தொடங்கியுள்ளாரே... அழைப்பு வந்தால் செல்வீர்களா?

    எனக்கு அரசியலில் சுத்தமாக ஆர்வம் கிடையாது. ஆனால் அரசியல் தொடர்பான புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் சிலகாலம் போனால் தான் எனது அரசியல் பார்வைகள், அபிப்ராயங்கள் பற்றி பேச முடியும். யாரை ஆதரிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் மக்களுக்கு நல்லது செய்யும் நேர்மையான தலைவரை தான் ஆதரிப்பேன்.

    தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மூன்று மாநிலங்களும் தொடர்புடையவர் நீங்கள். இந்த 3 மாநிலங்களுக்குள்ளும் நிலவும் தண்ணீர் பிரச்சினை?

    காவிரி தொடர்பான செய்திகளை படிக்கிறேன். இதில் ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால் இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் சுயலாபத்துக்கு நடத்தப்படும் நாடகம். இன்று மாநில எல்லைகளை மறந்து மக்கள் திருமணம் கூட செய்துகொள்கிறார்கள். தண்ணீர் கொடுப்பதற்கு எந்த மக்களும் தயங்க மாட்டார்கள்.

    உங்க ரோல் மாடல் யார்?

    ஒவ்வொருத்தர் கிட்டேருந்தும் ஒவ்வொண்ணு எடுத்துக்குறேன். ஆனா மாதுரி தீட்ஷித், ஷோபனாகிட்டருந்து அதிகம்.

    பிடிச்ச ஹீரோ, ஹீரோயின்?

    அஜித் தான். முன்னாடியே பிடிக்கும். இப்ப ரொம்ப பிடிக்குது. ஹீரோயின்ல நயன்தாரா.
    சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித், அமீர்கான் வழியில் உடலமைப்பை மாற்றி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
    அஜித்துக்கு எப்போதுமே இரட்டை வேட செண்டிமெண்ட் உண்டு. அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி. அஜித் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் அசல் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

    எனவே இரட்டை வேடங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இரட்டை வேடங்கள் என்கிறார்கள். இப்போது வயதான வேடத்துக்கான படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கிறது.



    அடுத்து இளமையான அஜித்துக்கான காட்சிகள் படம் பிடிக்கப்படும். இந்தியில் அமீர்கான் தங்கல் படத்தில் நடித்தபோது முதலில் தொப்பையுடன் கூடிய வயதான வேடத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் உடலை குறைத்து இளமையாக நடித்தார். அது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதேபோன்றதொரு ரிஸ்க்கை தான் அஜித்தும் எடுத்திருக்கிறார். முதலில் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித், அதன் பின்னர் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித் புதிய கெட்-அப்புக்கு மாறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Viswasam #AjithKumar
    ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு  துவங்கியதில் இருந்தே விஸ்வாசம் படம் குறித்து பல தகவல்களும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணமாக உள்ளன. 

    படக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அஜித் இந்த படத்தில் இரண்டு கெட்-அப்புகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இளைஞராகவும், வயதான தோற்றத்திலும் வருகிறாராம். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாற இருக்கிறாராம். தாடியை முழுமையாக எடுத்து கருப்பு முடியுடன் இளமை தோற்றத்தில் அஜித் வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கிலும் ஒரு சில காட்சிகளில் வருகிறாராம்.



    சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    முதலில் கறுப்பு தாடி, முடியுடன் வலம் வந்த அஜித், தற்போது வெள்ளை முடி தாடியுடன் வலம் வருகிறார். இந்த நிலையில், அவர் விஸ்வாசம் படத்தில் இரண்டு கெட்அப்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
    சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது.

    இப்போது, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அஜித் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாதோ என்று வருத்தத்துடன் உள்ளனர்.



    இந்த நிலையில், இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளைஞராகவும் வயதான தோற்றத்திலும் வருகிறார். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar

    விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித்தை சந்தித்தது குறித்து இசைமைப்பாளர் இமான் டுவிட்டர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar
    விஸ்வாசம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து பல தகவல்கள் வந்த வண்ணமாக உள்ளன. படக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், விஸ்வாசம் படக்குழுவில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக், மெர்சல் படத்தில் நடித்த குருவி பாட்டி உள்ளிட்ட பலரும் படக்குழுவில் இணைந்துள்ளனர். மேலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    அதேபோல் இசையமைப்பாளர் இமான், நடன இயக்குநர் அசோக் ராஜா, ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் உள்ளிட்ட பலரும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



    இதில் இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பாடல் காட்சி உருவாக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரத்தில் எளிமையான மனிதரான அஜித், எனது இசைக்கு ஆனந்தமாக நடனமாடுவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு கூறியுள்ளார். 

    சிவா இயக்கும் இந்த படத்தை சத்யோஜாதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    பில்லா, ஏகன், ஆரம்பம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கியதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. #Thala #Ajith #Nayanthara
    சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.

    முதல் ஷெட்யூலில் அஜித் - நயன்தாரா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்த படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

    படத்தில் அஜித்துக்கு நிகரான முக்கியத்துவம் நயன்தாராவுக்கும் தரப்பட்டுள்ளதாம். அஜித்தும் நயன்தாராவும் இதற்கு முன்பு பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆனால் அந்த படங்களை விட இந்த படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நயன்தாரா ஒரு ஹீரோ அளவுக்கு வளர்ந்துவிட்டார். எனவே அவருக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் தரப்பட வேண்டும் என்று அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் வந்தது.

    படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இதற்காக அஜித்துக்கு நன்றி கூறினாராம் நயன்தாரா. கிராமத்து பின்னணியில் குடும்பம் மற்றும் திகில் கதையாக அமைந்த படமாக உருவாகி வருகிறது. விஸ்வாசம் படம் மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான்.
    ×