search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96268"

    கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்? என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார். #KarthikSubbaraj
    ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் தங்களுக்கென ஒரு இமேஜ் வளர்த்திருக்கின்றனர். அவர்களை இயக்கும் இயக்குனர்களும் அந்தந்த ஹீரோக்களுக்கு ஏற்பவே கதை தயார் செய்கின்றனர்.

    விஜய்சேதுபதி நடித்த பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார்.



    பொங்கலையொட்டி வெளியான இந்த படம் ஹிட்டானது. இந்நிலையில் கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, ‘என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்?’ என்றதற்கு பதில் அளித்தார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, ’கமலை வைத்து வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தை இயக்குவேன். விஜய்யை வைத்து கேங்க்ஸ்டர் படமும், அஜித்தை வைத்து காமெடி படமும் இயக்குவேன்’ என்றார். கார்த்திக் சுப்புராஜின் இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படத்திற்கு கர்நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு படம் ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ள காவிரி-கோதாவரி திட்டத்தால் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை தீரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் ஆலோசனைப் படி வீடு, வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை, திட்டங்களை எடுத்துக் கூறி, குறிப்பாக மோடியின் திட்டங்களால் பலன் பெற்ற வீடுகளில் தாமரை தீபம் ஏற்றுதல், இது பா.ஜ.க. குடும்பம், இது பா.ஜ.க. வீடு என்று அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    பலன் பெற்ற குடும்பத்தினரை பா.ஜ.க.வோடு இணைப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. எங்கள் வாக்குச்சாவடி பலமான வாக்குச்சாவடியாகும். இதனை நிரூபிக்கும் வகையிலான பிரசாரத்தை விரைவில் தொடங்குவோம்.

    தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரியுடன் கோதாவரியை இணைக்கும் திட்டம் குறித்த மத்திய மந்திரி நிதின் கட்கரியின் அறிவிப்பு சாத்தியப்படக்கூடியதாகும். இதன் மூலம் காவிரி பிரச்சனை தீரும், கோதாவரி தண்ணீரும் கிடைக்கும்.

    வருங்காலங்களில் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை வராது. திருச்சியில் நடந்த ராணுவ தளவாட வழித்தட தொடக்க விழா மூலம் திருச்சிக்கு ரூ.3,300 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இது திருச்சிக்கு மட்டுமல்ல, 4 மாவட்டங்களுக்கும் அடங்கும்.

    எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி 27-ந்தேதி வருகிறார். இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் பிரமாண்ட முயற்சியும் நடந்து வருகிறது. இது நாட்டிற்கு பெருமை ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்று வருகின்றன.


    ஆனால் இதையெல்லாம் மறந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி வருகிறார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்ற நடிகர் அஜித்தின் அறிக்கை பாராட்டுக்குரியது. அது தெளிவான அறிக்கை.

    திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் எங்கள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். நான் மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, நடிகர் அஜித் உதவி செய்ததாக பெற்றோர் கூறினர். இதன் அடிப்படையில் நல்ல கட்சியில் ரசிகர்கள் சேர்ந்தது வரவேற்கத்தக்கது.

    அரசியலில் இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். அது விஜய், அஜித் என யாருடைய ரசிகர்களாவும் இருக்கலாம். ரஜினிகாந்த் தனது திட்டத்தை தெளிவாக கூறிவிட்டார். வாக்கு எந்திரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருவது பொய்யான கூற்றாகும்.

    தேர்தல் ஆணையமே தெளிவான அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்த செயல்விளக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஏனென்றால் அவர்களால் வாக்கு எந்திரத்தில் முறைகேடு என்பதை நிரூபிக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
    அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #Ajith
    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் கூட்டம் நடைபெற்றது வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி முதல் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பேட்மாநகரம், பேரூர், முக்காணி, பழையகாயல் பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முத்தலாக் சட்டத்தில் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் பாதிக்கப்படுபவர்களின் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?. எனவே முத்தலாக் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை எதிர்ப்போம். கொடநாடு விவகாரத்தில் வக்கீல்கள் யாருக்காக வேண்டுமானாலும் ஆஜராகலாம். ஜாமீன் எடுக்கலாம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை வைத்து ஆஜராகக்கூடாது என எப்படி சொல்ல முடியும்.

    தலைமை செயலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் யாகம் வளர்த்தது தவறு தான். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின்போது கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. மத்திய-மாநில அரசுகள் 40 நாட்கள் கூட வேலை கொடுப்பதில்லை. சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இன்று தமிழகத்திற்கு எத்தனையோ நல்ல திட்டங்கள், தொழில் வளங்கள் வந்திருக்கும். மீனவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கும். மத்திய-மாநில ஆட்சிகள் இத்திட்டத்தை நிறுத்தக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.

    பெரியார் கோவிலுக்குள் செல்லமாட்டார். ஆனால் அனைவரும் கோவிலுக்குள் செல்ல போராடியவர். கோவிலுக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என போராடியது தி.மு.க. ஆனால் போகக்கூடாது என சொல்வது பா.ஜ.க.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கேட்டனர். அதற்கு அவர் அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார். #Kanimozhi #Ajith
    கட்சியில் சேரும்படி அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை என்று பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். #Ajith #BJP #Tamilisai Soundararajan

    சென்னை, ஜன.22-

    திருச்சியில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை பேசும்போது நடிகர் அஜித்குமார் பற்றி பாராட்டி பேசினார். இதை அங்கிருந்த அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.

    இதையடுத்து அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் எந்தக் கட்சி மேடைகளிலும் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்.

    இந்த நிலையில் இதுபற்றி டாக்டர் தமிழிசை இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

     


    நான் அஜித்தை கட்சிக்கு வரும்படி அழைக்கவில்லை. எங்கள் கட்சியில் சேருவார் என்றும் சொல்லவில்லை.

    நான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்ற முறையில் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மனிதாபிமானத்துடன் அவர் செய்த உதவியை பாராட்டினேன். நல்ல உள்ளம் கொண்ட நடிகர் என்று குறிப்பிட்டேன். அழைக்கவில்லை. இது தவறா? அவர்கள் நடித்து கொண்டிருந்தால் நடித்து கொண்டிருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியலுக்கு வரமாட்டேன் என்று அஜித் சொல்லியிருப்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #Ajith #AjithKumar #Kanimozhi
    சென்னை:

    நடிகர் அஜித் ரசிகர்களில் சிலர் தமிழிசை சவுந்தராஜன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த செய்தி பரவியது.

    இந்த செய்திக்காக தனது அரசியல் நிலைப்பாடு பற்றி அஜித் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். ‘அரசியலில் தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகள் உண்டு. ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி அரசியலில் ஈடுபடலாம். ஆனால் அதில் என் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தாதீர்கள். எந்த சமயத்திலும் அரசியல் பற்றி சினிமாவில் கூட நான் எதுவும் பேசியதில்லை’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


    இதுபற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘அஜித் சிறந்த நடிகர். அவருடைய அரசியல் பற்றிய கருத்துக்கு நன்றி. அரசியலுக்கு வரமாட்டேன் என்று அஜித் சொல்லியிருப்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு’ என்று கூறினார். #Ajith #AjithKumar #Kanimozhi
    எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Ajith #Ajithkumar
    சில தினங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் குறிப்பிட்ட கட்சியில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்தது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அஜித் அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இதையறிந்த அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில  வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர்கள் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.

    என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப் படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும்.

    இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்ன வென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும், அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.



    அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

    எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடைமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘விஸ்வாசம்’ படம் குறித்து தயாரிப்பாளரிடம் எல்லாம் கடவுள் கையில் என்று அஜித் கூறியிருக்கிறார். #Viswasam #Ajith
    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது:-

    எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் இதை எதிர்பார்க்கவில்லை, அஜித் சாருடைய படங்களில் இது பெஸ்ட் என்று சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. 



    படம் வெளியான அன்று காலையில் அஜித் சாருக்கு போன் பண்ணி, ‘அனைத்து ஊர்களிலிருந்து வரும் ரிப்போர்ட் ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு சார். உங்களுடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றேன். அதற்கு ‘அனைத்துமே கடவுள் கையில் தான் இருக்கிறது’ என்றார். அவர் ரொம்ப கடினமாக உழைக்கும் மனிதர். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களுக்காக அதை கண்டிப்பாக பண்ணுவேன் என்று ரோபோ சங்கரிடம் கூறியிருக்கிறார். #Ajith #ThalaAjith
    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானதால் கடும் போட்டி நிலவியது.

    தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அஜித் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடி வரும் வேளையில், ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித்துடன் நடித்த ரோபோ ‌ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ரசிகர்கள் செய்யும் அனைத்து வி‌ஷயங்களையுமே அஜித் சார் பார்த்து ரொம்பவே சந்தோ‌ஷப்படுகிறார். இவ்வளவு அன்பு வைச்சுருக்காங்க... இதற்கு என்ன பண்ணப் போறேன். இவ்வளவு ஆபரே‌ஷனிலும் நான் எழுந்து நடிக்கிறேன், நடக்கிறேன், ஆடுறேன், பாடுறேன் என்றால் அனைத்துமே அவர்களுடைய ஆசி தான் ரோபோ ஜி என்று ரொம்பவே நெகிழ்ச்சியுடன் சொன்னார். 



    இவ்வளவு ரசிகர்களை நான் அடுத்தடுத்த படங்கள் கொடுத்து எப்படி சமாளிக்கப் போறேன் என்றார் அஜித் சார். அதற்கு நீங்கள் வருடத்துக்கு 2 படங்கள் இறக்குங்க. கொண்டாடிக்கிட்டே இருப்பாங்க. 2, 3 வரு‌ஷமெல்லாம் கேப் விடாதீங்க என்றேன். கண்டிப்பா பண்ணனும், ரசிகர்களுக்காகவே பண்ணனும் என்றார்’. இவ்வாறு ரோபோ ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.
    இணையதளத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. #Petta #Viswasam
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் இன்று வெளியானது. இவர்களது ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இரண்டு படங்களுக்கும் சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், இவ்விரு படங்களும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் வெளியிட தடை விதித்த நிலையில், தற்போது திருட்டு தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளது.



    பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜும், விஸ்வாசம் படத்தை சிவாவும் இயக்கியுள்ளனர். #Petta #Viswasam
    திருக்கோவிலூரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கட்-அவுட் சரிந்து விழுந்து ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith #Viswasam
    அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். கட் அவுட், பேனர், பால் அபிஷேகம் என்று திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.

    இதில் திருக்கோவிலூரில் விஸ்வாசம் படத்தின் பெரிய கட்-அவுட் வைக்கும் போது, சரிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 



    சிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
    அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்ற அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. #Viswasam #AjithKumar #ViswasamFDFS
    அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விஸ்வாசம்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது.

    சிவா இயக்க அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமய்யா, விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் நள்ளிரவு 1.30 மணிக்கு சில திரை அரங்குகளில் ரிலீசானது. கண் விழித்து பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் உதவியுடன் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

    வேலூரில் ஒரு திரையரங்கில் சில ரசிகர்கள் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் ரிலீசானதை கொண்டாடியதோடு வெற்றி அடைய பிரார்த்தனை செய்தனர். அதே நேரத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை சீண்டுவதைப் போல், கட் அவுட்டுகளில் வசனங்களையும் ரசிகர்கள் அச்சிட்டிருந்தனர்.



    வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அலங்கார் தியேட்டருக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சியில் படம் பார்க்க சென்றனர்.

    அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு ரசிகர்கள் முண்டியடித்தபடி தியேட்டருக்குள் சென்ற போது, பிரசாத்துக்கும், மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் பிரசாத்தை வயிற்றில் குத்தினர். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களிலும் வெட்டினர். இதனை தடுக்க வந்த ரமேசையும் தலையில் கத்தியால் வெட்டினர்.

    இதனை கண்ட ரசிகர்கள் தியேட்டரில் சிதறி ஓடினர். கடும் பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கத்தியால் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். #Viswasam #AjithKumar #ViswasamFDFS

    ×