search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96268"

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெய், கார் ஓட்டுவதில் அஜித்தை வழியை பின்பற்றுவது போல், தற்போது மற்றொரு விஷயத்திற்கும் அவரை பின்பற்றி வருகிறார். #Ajith #Jai
    பைக்ரேஸ், கார்பந்தயம் ஆகியவற்றில் அதிக விருப்பம் உள்ளவர் அஜித். இதில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சுடுவதில் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். மேலும் துப்பாக்கி சுடுவதற்கு முறையான பயிற்சி பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

    தற்போது நடிகர் ஜெய்யும் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தான் துப்பாக்கி சுடும் புகைப்படத்தை நடிகர் ஜெய் தனது சமூக வலைத்தில் பதிவு செய்திருக்கிறார்.



    ஏற்கனவே அஜித் போல் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட நடிகர் ஜெய், அதற்கான போட்டிகளில் கலந்துக் கொண்டிருந்தார். தற்போது துப்பாக்கி சுடுவதையும் அஜித் வழியில் பின் பற்றி வருகிறார்.
    விசுவாசம் படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருவது போல், பிரபல நடிகரும் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

    இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

    இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையாவும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். 



    இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், பொங்கல் திருநாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விஸ்வாசம்' படம் குறித்து பரவி வந்த வதந்திக்கு, அஜித்தின் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் விளக்கம் அளித்துள்ளார். #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ஐதராபாத்தில் அரங்கு அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் நடக்கும் கதை என்றும், பிளாஷ்பேக்கில் ஒரு அஜித்குமார் வட சென்னை தாதாவாக வருவதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. எனினும் படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 



    சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதேநேரத்தில் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் விஸ்வாசம் படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. 

    இந்த நிலையில், தான் விஸ்வாசம் படத்தில் நடிக்கவில்லை என்றும், காஞ்சனா 4 மற்றும் சித்தார்த் நடிக்கும் படத்தில் தான் நடித்து வருவதாக கபிர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Viswasam #AjithKumar

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம் என்று படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். #Viswasam #AjithKumar #Nayanthara
    அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    விஸ்வாசம் என்ன மாதிரியான கதை என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படம் குறித்த புதுப்புது தகவல் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றங்களில் நடிக்கிறார்.

    இந்த நிலையில், சமீபத்தில் படத்தின் இயக்குநர் சிவாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, விஸ்வாசம் படம் குறித்து கேட்டனர். அவர்களிடம் “இது, தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம்” என்று சிவா பதில் அளித்தார். அதைக்கேட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். 



    இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தில் கவுதம மேனனின் ‘என்னை அறிந்தால்’ கனெக்‌ஷன் ஏற்பட்டுள்ளது. #Ajith #Viswasam
    கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும் மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.

    அஜித் அனிகா நடிப்பில் உருவான உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது படமான விசுவாசத்திலும் அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.



    விசுவாசம் படத்தில் அஜித் அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடிக்கிறார். எனவே அண்ணன் அஜித்தின் மகளாக அனிகா நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். வடசென்னையை கதை களமாக கொண்ட இப்படத்தில் ஒரு அஜித்துக்கு போலீஸ் கதாப்பாத்திரம் எனக்கூறப்பட்டு வருகிறது.
    `என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா, அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் `விஸ்வாசம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Viswasam #AjithKumar #Nayanthara
    அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 



    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். 

    மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `விஸ்வாசம்'. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் துவங்கிய நிலையில், படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதன்படி விஸ்வாசம் படத்தில் நயன்தாரா டாக்டராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.



    விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், சென்னை மற்றும் மும்பையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

    இந்த படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பில் வெள்ளை முடி, தாடியுடனான தோற்றத்தில் நடித்த அஜித், விரைவில் இளமை தோற்றத்திற்கு மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஐதராபாத் சென்றுள்ள நிலையில், அஜித்தின் தற்போதைய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் - சிவா 4-வது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியிருக்கிறது. அதற்காக விஸ்வாசம் படக்குழு சென்னையில் நேற்று ஐதராபாத் சென்றுள்ளது. 

    அஜித், இயக்குநர் சிவா சென்னை விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் வெள்ளை முடி, தாடியுடன் வீரம் பட லுக்கில் தோற்றமளிக்கிறார். இன்று நடக்கும் விஸ்வாசம் படப்பிடிப்பில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களும் பங்கேற்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் படக்குழு அடுத்ததாக, அஜித்தின் இளமை தோற்றம் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இருக்கிறது.

    இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Viswasam #AjithKumar
    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் திரைப்படம், விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படத்துடன் மோத விரும்பாமல் ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கிறார். #Ajith #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். 

    இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

    இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 40 சதவிகிதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதால், இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



    இதனால், தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படமும், சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Ajith #Viswasam
    சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் விவேக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #Ajith #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு 27-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்துடன் நடிகர் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கபட்டது. விவேக் கடைசியாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்திருக்கிறார்.

    விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிப்பது குறித்து நடிகர் விவேக் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `அன்பு நண்பர் அஜீத்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்.' என்று குறிப்பிட்டிருக்கிறார். 
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Ajith #Viswasam #Vivekh

    சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசுவாசம்’ படத்தில் நான்கு வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #Ajith #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் 27ம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்துடன் நடிகர் விவேக் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அஜித்துடன் நடிகர் விவேக் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருக்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.



    இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வரும் விசுவாசம் படக்குழுவினர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். #Siva #Thala #Ajith #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.

    அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. சென்னையில் முக்கிய இடங்களில் வரும் 27 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு அனுமதி, பாதுகாப்பு குறித்து திரைப்பட குழு திட்டமிட்டு வருகிறது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    அஜித் படங்களுக்கு தொடர்ந்து வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு சென்னை படப்பிடிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது படக்குழு.
    ×