search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96360"

    குஜராத் அருகே கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடற்படை வீரர்கள், 8 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். #CoastGuard #Fishermen
    போர்பந்தர்:

    குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய மீனவர்கள் 8 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய படகு திடீரென கடலில் மூழ்கியது. அதில் இருந்த 8 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனடியாக அவர்கள் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை கப்பலை தொடர்பு கொண்டு உதவி புரியும்படி அபயக்குரல் எழுப்பினார்கள்.

    இதனை தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல் அங்கு விரைந்து சென்று மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. சுற்றிலும் இருள் சூழ்ந்த நிலையிலும், கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடற்படை வீரர்கள், 8 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்பு அவர்களை கடற்படை கப்பலில் ஏற்றி போர்பந்தர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். 
    இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சின், சகோதரி நைனாபா ஆகியோர் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். #Congress #Anirudhsinh #Nainaba
    அகமதாபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா . இவரது மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா கடந்த மாதம் பா.ஜனதாவில் இணைந்தார். 

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சின், சகோதரி நைனாபா ஆகியோர் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு ஜடேஜாவின் தந்தை அனிருத்சின் மற்றும் மூத்த சகோதரி நைனாபா ஆகியோர் இன்று சென்றனர்.

    அங்கு பதிதார் இன போராட்ட தலைவர் ஹர்திக் படேல் மற்றும் ஜாம்நகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முலு கண்டொரியா முன்னிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். #Congress #Anirudhsinh #Nainaba
    குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது. ஆனால் காங்கிரஸ் தான் பாதிப்புக்குள்ளானது என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    ஜுனாகார்க்:

    குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23ம் தேதி  ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குஜராத்  மாநிலத்தில் ஜுனாகார்க் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஏழைக் குழந்தைகளின் உணவுகளை பறித்து காங்கிரஸ்  தலைவர்களின் வயிற்றை நிரப்புகிறது. காங்கிரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.



    ஊழல் செய்து காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு அவபெயர்களை பெற்றுள்ளனர். ஆனால், நான் 5 ஆண்டுகளாக என்ன சாதனை செய்திருக்கிறேன் என்பதை கூறவே இங்கு வந்திருக்கிறேன்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் என்ன செய்யவேண்டுமென்று கட்டளை இடுங்கள், செய்து முடிப்பேன்.

    உங்கள் மகன், இந்த காவலாளி செய்த செயல்கள் உங்களுக்கு பெருமையாக உள்ளதா? ஊழலே இல்லாமல் நான் நடத்திய 5 ஆண்டுகால ஆட்சி உங்களை பெருமை படுத்துகிறதா? . மேலும் உங்கள் மகனும், காவலாளியுமான என்னை அகராதியில் உள்ள அனைத்து அவதூறான வார்த்தைகளையும் கூறி காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.  

    பாலக்கோட்டில் நடத்திய தாக்குதல், பயங்கரவாதிகளை அழிக்கத்தான். ஆனால் அதனால் பாதிப்புக்குள்ளானது காங்கிரஸ் கட்சியினர் ஆவர். மேலும் ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019   

    ஆந்திராவில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்ற மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு மோடியை குஜராத்துக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக தெரிவித்தார். #peopleareready #sendModi #ChandrababuNaidu
    விசாகப்பட்டினம்:

    தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டனம் நகரில் தனது ஆதரவு கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

    இன்றிரவு நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அங்கு திரண்டிருந்தவர்களிடையே பேசிய சந்திரபாபு நாயுடு, மக்களின் நன்மைக்காக பாடுபடுவதால் ஆந்திராவில் எனது தலைமையிலான அரசுக்கும், டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கும், மேற்கு வங்காளத்தில் மம்தா அரசுக்கும் பிரதமர் மோடி இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், அவரை குஜராத்துக்கு அனுப்பி வைக்க மக்கள் தயாராகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

    இதே கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு ஆதரவு தரும் சில அமைப்புகளை சந்தித்து இனியும் மோடியை ஆதரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

    பின்னர் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திராவை அதிநவீன மாநிலமாக உருவாக்குவதற்காக பாடுபட்ட சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து இந்த தேர்தலிலும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

    கடந்த 70 ஆண்டுகால இந்திய வரலாறில் மோடி தலைமையிலான இந்த ஆட்சி மிக மோசமான ஊழல் மலிந்த ஆட்சியாக இருந்தது. 5 ஆண்டுகளில் மோடியும், அமித் ஷாவும் நாட்டை அழித்து விட்டதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.  
    #peopleareready #sendModi #ChandrababuNaidu
    குஜராத் மாநிலத்தில் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாக விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஹர்திக் பட்டேல் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

    சமீபத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது.  குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த  ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

    அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
    குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி சங்கர்சின் வகேலா வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். #GujaratCM #ShankersinhVaghela
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 1996-97-ல் முதல்-மந்திரியாக இருந்தவர் சங்கர்சின் வகேலா. இவரது வீடு காந்திநகரின் புறநகர் பகுதியான பெதப்பூரில் உள்ளது. சொகுசு மாளிகை போல அமைந்திருக்கும் இந்த வீட்டில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் நேபாளத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் வகேலாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை மாயமானது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வகேலா வீட்டில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த ஒரு தம்பதிதான் இந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அவர்கள் தாய்நாடு திரும்பிய நிலையில் அப்போதே இந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெதப்பூர் போலீசில் தற்போது புகார் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    குஜராத்தில் மாயமான ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் ஒரு கால்வாயில் இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன. #GujaratCanalAccident
    சூரத்:

    குஜராத் மாநிலம் டாப்பி மாவட்டம் கப்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் கமீத்(65), ஷர்மிளா(62), தர்மேஷ்(41), சுனிதா(36), ஊர்வி(6) ஆகியோர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

    இந்நிலையில், சூரத் அருகே உள்ள மதி கிராமத்தில் நேற்றிரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கால்வாய் ஒன்றில் கார் விழுந்து  கிடந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து மீட்புப்படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், காரை மீட்டனர். அதில் 5 பேரின் சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதனையடுத்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது, அவர்கள் குடும்பத்துடன் பர்தோலி பகுதியில் உள்ள கோவிலுக்கு பிரார்த்தனைக்காக சென்றதாகவும்,  திரும்பி வரும்போது இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.  #GujaratCanalAccident 
    அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது என பிரியங்கா முதன்முறையாக இன்று பேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார். #Congress #RahulGandhi #PriyankaGandhi #BJP
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.

    அதன்பின்னர், காந்தி நகரில் உள்ள அடலஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் கட்சியில் பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

    வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் தங்களின் எதிர்காலத்தை தேர்வு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, விவசாயிகளின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் முக்கியமாக இருக்கும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

    அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது என பிரியங்கா முதன்முறையாக இன்று பேசிய கட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.



    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜக வெறுப்பு அரசியலை கையாண்டு வருகிறது. தன்னாட்சி அமைப்புகளை பாஜக சீர்குலைக்கிறது. பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் பணம் பணக்காரர்களுக்கு தரப்பட்டது. விவசாயி களிடம் இருந்து லாபம் வந்தாலும் அது 15 கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே செல்கிறது என குறிப்பிட்டார். #Congress #RahulGandhi #PriyankaGandhi #BJP
    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது என குஜராத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #CongressWorkingCommittee #CWCMeeting
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு சோனியா, மன்மோகன்சிங், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு காரிய கமிட்டி கூட்டம் தொடங்கப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட், நாராயணசாமி, சித்தராமையா, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 



    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தேசத்தின் பாதுகாப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

    தேசப் பாதுகாப்பு பிரச்னையில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடி, அதை ஏற்காமல் பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு ஏற்பட்டுள்ள மகத்தான தோல்விகளில் இருந்தும், போலியான கூற்றுக்களை மறைக்கும் வகையிலும், தொடர்ந்து பொய்களை கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார்.

    இந்தியா ஜனநாயகத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்ட நாடு. நமது ராணுவ படையால் நாம் பெருமிதம் கொள்வோம். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் நமது ராணுவம் எப்போதும் தோற்கடிக்கப்பட கூடாது என்பதே நமது எண்ணம்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெண்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை உள்ளதை இந்த கமிட்டி கண்டிக்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேறின. #CongressWorkingCommittee #CWCMeeting
    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரசாரத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் தலைவர்கள், சபர்மதி ஆசிரமத்தில் இன்று பிரார்த்தனை செய்தனர். #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது. கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்திற்கு வந்திருந்த சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று காலை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர்.  மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.



    வல்லவாய் படேல் தேசிய நினைவிடத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காரிய கமிட்டி கூட்டம் முடிவடைந்ததும் கட்சி சார்பில், பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியிடப்படும்.

    காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு காந்திநகரின் அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    சமீபத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வந்த பிரியங்கா காந்தி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #CongressCWC #Gujarat
    ஆமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத் தலைநகர் காந்திநகரில் நடக்கிறது. கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் வியூகம் மற்றும் கூட்டணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் பிரசார திட்டம், தேர்தல் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் இணைந்து பங்கேற்கும் முதல் உயர்மட்டக்குழு கூட்டம் இதுவாகும்.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து கட்சி சார்பில் காந்திநகரின் அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    மேலும் கட்சியின் பொதுச்செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரியங்காவும் இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறார். தீவிர அரசியலில் இணைந்தபின் பிரியங்கா உரையாற்றும் முதல் கூட்டம் இதுவாகும். பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களை பங்கேற்கச்செய்ய மாநில காங்கிரசார் திட்டமிட்டு உள்ளனர்.

    முன்னதாக கட்சியின் மூத்த தலைவர்கள் அங்குள்ள காந்தி ஆசிரமத்துக்கு செல்கின்றனர். காந்தியடிகள் தண்டி யாத்திரை தொடங்கிய தினம் மற்றும் அவரது 150-வது பிறந்த ஆண்டையொட்டி அங்கு அவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் புகழ்மிக்க காரியக்கமிட்டி கூட்டம் குஜராத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டு நடந்திருந்தது. அந்தவகையில் 58 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக தங்கள் மாநிலத்தில் மீண்டும் காரியக்கமிட்டி கூடுவதால் மாநில காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    முன்னதாக கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த காரியக்கமிட்டி கூட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    குஜராத் மாநிலத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். #PMModi #projectsinGujarat
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த இடமான குஜராத் மாநிலத்துக்கு இருநாள் பயணமாக மார்ச் 4ம் தேதி செல்கிறார். 

    முதல் கட்டமாக, மார்ச் 4ம் தேதி அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி, அங்கு மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், அரசு மருத்துவமனையை தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல், மார்ச் 5ம் தேதி மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என பிரதமரின் சுற்றுப்பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi #projectsinGujarat
    ×