search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96360"

    உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் வங்காளதேச தீவிரவாதியை ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். #Bangladeshi
    ஆமதாபாத்:

    வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில், அன்சாருல்லா பங்ளா குழுவும் ஒன்று. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அசோம் சம்சு ஷேக் என்கிற பக்கிர் (வயது 52), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது தீவிரவாதி பக்கிர், குஜராத் மாநிலம் பரூச்சில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது நடமாட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் நேற்று ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, பக்கிர் கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலைமறைவாக வசித்து வந்ததும், இந்திய முகவரியில் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரிய வந்தது. பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் துப்பாக்கி வெடித்தபோது, குண்டு பாய்ந்ததில் ஒரு பெண் பரிதாபமாக பலியானார். #SuratCelebratoryfiring
    அகமதாபாத்:

    வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள் நம்மூர் திருவிழாக்கள் போல் களை கட்டும். ஆட்டம், பாட்டு, நடனம் என வெகு உற்சாகமாக திருமண நிகழ்ச்சிகள் அங்கு சிறப்பாக இருக்கும். உற்சாக மிகுதியில் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வேடிக்கை காட்டுவதுண்டு.

    இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் உள்ள வராச்சா பகுதியில் திருமண ஊர்வலம் இன்று மதியம் நடைபெற்றது. அதில் இருந்தவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் இருந்து சாவித்ரி பென் வட்ஜுகர் என்ற 47 வயது பெண்மணி திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென துப்பாக்கியில் இருந்த குண்டு சாவித்ரி பென் மீது பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சாவித்ரி பென் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டத்துக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuratCelebratoryfiring
    சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
    தேனி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சி.கே.நாயுடு கோப்பைக்கான 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 4 நாட்கள் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 414 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது. 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து இருந்தது.

    4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து களம் இறங்கிய தமிழ்நாடு அணி வீரர்கள் போட்டியை டிராவை நோக்கி கொண்டு செல்லும் போக்கில் ஆடினர். முகுந்த் (54 ரன்), லோகேஸ்வர் (57) ரன் ஆகியோர் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்களில் ஆதித்யா பரூயா 31 ரன்னும், விஷால் வைத்யா 33 ரன்னும் எடுத்து இருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது.

    இந்த போட்டியோடு தமிழ்நாடு அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளது. குஜராத் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா கண்டுள்ளது.
    குஜராத்தில் போலீஸ் எழுத்து தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவினர் உள்பட 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #GujaratConstableRecruitmentExam #PaperLeak
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவிருந்தனர்.

    ஆனால், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினாத்தாள் வெளியானதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.



    இந்நிலையில், வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய 2 பாஜகவினரையும், அவர்களுக்கு உதவிய மேலும் 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாஜகவை சேர்ந்த மன்ஹர் படேல், முகேஷ் சவுத்ரி மற்றும் அவர்களுக்கு உதவிய ரூபால் ஷர்மா, வி.பி.படேல் ஆகியோரை கைது செய்துள்ளோம். இதில் தலைமறைவாகி உள்ள முக்கிய குற்றவாளியான யஷ்பால் சோலங்கி குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர். #GujaratConstableRecruitmentExam #PaperLeak
    குஜராத்தில் வினாத்தாள் வெளியானதால் இன்று நடைபெற இருந்த போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #GujaratConstableRecruitmentExam #PaperLeak
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.

    இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இன்று நடைபெற இருந்த போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வினாத்தாள் வெளியானதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

    இதுகுறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறுகையில், ஆளும் கட்சி இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. #GujaratConstableRecruitmentExam #PaperLeak
    குஜராத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். #Vadodara #FireAccident
    வதோதரா:

    குஜராத்தின் வதோதரா நகருக்கு அருகே உள்ள நந்தசாரி என்ற பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் பலர் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது இந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 2 தொழிலாளர்கள் என 3 ஒப்பந்த ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் அவர்கள் உடல் கருகி பலியானார்கள். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் அணிகள் வெற்றியை ருசித்தது. #ProKabaddi #Bengaluru #Gujarat
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 45-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 32-37 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சிடம் வீழ்ந்தது. குஜராத்துக்கு இது 8-வது வெற்றியாகும். போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.
    புரோ கபடி லீக் போட்டியில் 69-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் சமனில் முடிந்தது. #ProKabaddi
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் புனே அணி 13-12 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதியில் முன்னிலை பெற்ற பெங்கால் அணி அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது.

    முடிவில் பெங்கால் அணி 26-22 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தியது. 69-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    குஜராத் மாநிலம், வதோதரா நகரில் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரம் சதுரடியில் 30 பேர் உருவாக்கிய ரங்கோலி கோலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. #Rangoli #VadodaraRangoli
    அகமதாபாத்:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் பதிவானது.

    இந்நிலையில், குஜராத் மாநிலம், வதோதரா நகரில்  தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரம் சதுரடியில் 30 பேர் உருவாக்கிய ரங்கோலி கோலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.



    மகாராணி சிம்னாபாய் பள்ளியில் ஏக்தந்த் ரங்கோலி கலாக்கர் என்ற குழுவை சேர்ந்த 30 பேர் சுமார் ஐந்தரை மணிநேர உழைப்பில் இந்த மெகா ரங்கோலி கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. #Rangoli  #VadodaraRangoli 
    குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை மன்னித்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார். #YashwantSinha #Modi #Farmers
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஜுனாகட் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
     
    குஜராத் மாநில அரசு அனைத்து வழிகளிலும் தோற்றுப்போன அரசு. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தலித்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.



    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்ததற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

    ஆனால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் மோடியை மன்னிக்கக் கூடாது. விவசாயிகளுக்காக அவர் எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். #YashwantSinha #Modi #Farmers
    சர்தார் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் படேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். #SardarVallabhbhaiPatel
    இந்தியாவின் ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள படேல் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 



    நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. 



    படேல் சுதந்திர இந்தியாவின் முதலாவது துணைப் பிரதம அமைச்சராகவும், முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் படேல் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SardarVallabhbhaiPatel #StatueOfUnity

    புரோ கபடி தொடரில் நேற்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. #ProKabaddi2018 #Gujarat #PuneriPaltan #TeluguTitan #PatnaPirates
    பாட்னா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பாதியில் 16-12 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற குஜராத் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டு 37-27 என்ற புள்ளி கணக்கில் புனேயை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 6 புள்ளிகளை எடுத்த புனே அணியின் நட்சத்திர வீரர் நிதின் தோமர், இந்த சீசனில் 100 ரைடு புள்ளிகளை (மொத்தம் 102 புள்ளி) கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 11-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 53-32 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4-வது வெற்றியை சுவைத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியில், ரைடு செல்வதில் கில்லாடியான ராகுல் சவுத்ரி 17 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி-புனேரி பால்டன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    ×