search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96360"

    குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இடத்தில் நடந்த அதிரடி சோதனையில் 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Gujarat #FakeCurrency
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது உறுதி செய்யப்பட்டது.

    அந்த இடத்தில் இருந்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு கொண்ட புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்த போலீசார் ஜாகித் ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    ஜாகித் ஷேக் 10 வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர் என்பதும், கடந்த 1 மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து பயன்படுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #Gujarat #FakeCurrency
    குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில், 50 மதிப்பெண் கொண்ட தேர்விற்கு, 80 மதிப்பெண் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ExamMarks
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் இந்த ஆண்டின் முற்பகுதியில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கணித தேர்வுக்கு மொத்த மதிப்பெண்களே 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மாணவர் ஒருவர் கணிதத் தேர்வில் 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும், கூடுதல் மதிப்பெண் கிடைத்ததற்காக மகிழ்ந்தார்.
     
    இதற்கிடையே, இதுகுறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தும்படி மாநில கல்வித்துறை உத்தரவிட்டது.  விசாரணையில், அந்த மாணவனுக்கு தவறுதலாக 80 மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. உண்மையில், அந்த மாணவர் பெற்றது வெறும் 8 மதிப்பெண் மட்டுமே.

    இதேபோல், 12-ம் வகுப்பு தேர்வுகளின் போதும் தவறான பதிலுக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. 

    ஆசிரியர்களின் இத்தகைய செய்கையால் மாநில கல்வி வாரியம் எரிச்சல் அடைந்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தலில், இதுபோன்ற குளறுபடிகளை செய்தது தொடர்பாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் தேர்வுக்கே வராத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய பீகார் கல்வித்துறை  மாணவர்கள், பெற்றோரின் அதிருப்திக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. #ExamMarks
    அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என மத்திய மந்திரி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #RamdasAthawale #HardikPatel
    அகமதாபாத்:

    மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக இருந்து வருபவர் ராமதாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சி தலைவரான இவர், நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்துக்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ஆனால் கடந்த முறை பெற்ற இடங்களை விட 30 முதல் 40 இடங்கள் குறைவாக கிடைக்கும்.

    குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் பதிதார் இனத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தயார். பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். #RamdasAthawale #HardikPatel
    குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் லாரியுடன் கார் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் பல்சானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பலேஷ்வர் கிராமம் அருகில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 11 பேர் பயணம் செய்தனர். 

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி எதிர்ப்புறம் சென்றது. அப்போது அங்கு வந்த லாரி கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். விபத்தில் பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    குஜராத் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஷாம்ஜி சவுகான் மற்றும் முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் ஆகிய இருவரும் இன்று காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். #Gujarat #BJP #Congress
    அகமதாபாத்:

    குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநில தலைவர் அமித் சத்வா, மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராஜிவ் சடவ் ஆகியோர் முன்னிலையில், பாஜக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஷாம்ஜி சவுகான், மற்றும் முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசியபோது, மத்தியில் ஆளும் மோடி அரசு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும், பாஜக அரசின் இந்த அநீதியை எதிர்த்து போராடவே தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது பாஜகவில் இருந்து விலகியுள்ள முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gujarat #BJP #Congress
    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்ற எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையிலான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். #Gujarat #JaiSamadhi
    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்றனர். ஜவுளி சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

    லலித் வசோயாவுக்கு ஆதரவாக மேலும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் உள்பட பலர் புகி கிராமத்தில் கூடியிருந்தனர். அப்போது போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர்.   #Gujarat #JaiSamadhi   #tamilnews 
    குஜராத்தில் சாலை விதிகளை மீறிய பதிதார் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு போக்குவரத்து போலீசார் 600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பதிதார் இன மக்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர்  ஹர்திக் படேல். இவர் மீது பல்வேறு  வழக்குகளை மாநில போலீசார்  பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், குஜராத்தில் சாலை விதிகளை மீறிய பதிதார் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு போக்குவரத்து போலீசார் 600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில்,  போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த ஹர்திக் படேல் காரை போக்குவர்த்து போலீசார் தடுத்து நிறுத்தினர். 

    அவரது கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது கார் டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சாலை விதிகளை மீறியதாக ஹர்திக் படேலுக்கு 600 ரூபாய் அபராதம் விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
    குஜராத்தில் அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி ஹர்திக் படேலை கைது செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #HardikPatel
    அகமதாபாத்:

    கடந்த 2015-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். அப்போது, மேஹ்சனா மாவட்டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. 

    இதுதொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பட்டேல், லால்ஜி பட்டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி ஹர்திக் படேலை கைது செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.#HardikPatel

    இதுதொடர்பாக, மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டே கூறுகையில், குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களின் குரல்களை அடக்க நினைக்கிறது. மேலும், மாநில அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார். #HardikPatel
    ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தால் தாம் கட்சியை விட்டு விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான எச்.எஸ் புல்கா தெரிவித்துள்ளார். #Congress #AamAadmiParty
    சண்டிகர்:

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக செயல்படுகின்றன. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய முயற்சி செய்து வருகின்றன.

    இந்த ஒன்றிணையும் திட்டத்துக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தாம் கட்சியை வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.எஸ்.புல்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புல்கா, காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கைக்கோர்த்தால் தாம் கட்சியில் இருந்து விலகும் முதல் நபராக நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். #Congress #AamAadmiParty
    கணவர் மீதான வன்கொடுமை வழக்கில் ஆஜராவதற்காக இன்று சூரத் நீதிமன்றத்துக்கு வந்த 27 வயது இளம்பெண் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் லிம்பயாத் காவல்நிலையத்தில் தனது கணவர் கொடுமை செய்வதாக சில்பா லால்சந்த் சிங் என்ற 27 வயது பெண் அளித்திருந்த புகார் மீது இன்று சூரத் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜராவதற்காக சில்பா லால்சந்த் சிங் நீதிமன்றம் வந்தடைந்தார்.

    அப்போது, தீடீரென நீதிமன்றத்தின் 9-வது மாடியில் இருந்து சில்பா குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
    குஜராத்தில் மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் வெள்ளம் பாதித்த பகுதிகளை காரில் சென்று பார்வையிட்டார் முதல் மந்திரி விஜய் ரூபானி. #VijayRupani
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட முதல் மந்திரி விஜய் ரூபானி நேற்று ஹெலிகாப்டரில் சென்றார்.  

    சோம்நாத் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றபோது அங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அவர் சென்ற ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து, ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜெட்பூர் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காரில் சென்றார். அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
    #VijayRupani
    பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை அடுத்து குஜராத் மாநில பா.ஜனதா துணை தலைவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தை சேர்ந்த 53 வயதாகும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பானுசாலி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பா.ஜனதா தலைவர் ஜிது வாகானிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய ராஜினாமாவை பா.ஜனதா ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பானுசாலி கடந்த 2007 முதல் 2012 வரையில் அப்தாசா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

    சூரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் பானுசாலிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்யக்கோரி புகார் கொடுத்தார். இதுவரையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கமிஷனர் சதிஷ் சர்மா கூறியுள்ளார். பேஷன் டிசைன் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஏமாற்றி என்னை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

    என்னை மிரட்டுவதற்கு, அவருடைய உதவியாளர்களில் ஒருவர் செல்போனில் இச்சம்பவத்தை படம் எடுத்து உள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் எனக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார் பானுசாலி.
    ×