search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.என்.எல்."

    பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்கும் துறைகளை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் சில பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்தும், குத்தகைக்கு விட்டும் பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரூ. 70 ஆயிரம் கோடி மறுமலர்ச்சி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மறுமலர்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    இரு நிறுவனங்களின் சொத்து விபரங்களை டி.ஐ.பி.ஏ.எம். இணைய தளத்தில் மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. அதில் ஐதராபாத், சண்டிகர், பாவ் நகர், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான மனை மற்றும் குடியிருப்புகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

    இவற்றுக்கான அடிப்படை விலை ரூ. 660 கோடி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மும்பையில் வசாரி ஹில் மற்றும் கோரேக்கான் பகுதிகளில் உள்ள எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் பட்டியலிடப்பட்டு அடிப்படையாக ரூ. 310 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    விற்பனை பட்டியலில் உள்ள மும்பை, ஓஷிவாரா பகுதியில் எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பின் விலை ரூ. 52.26 லட்சம் முதல் ரூ. 1.59 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்.டி.என்.எல். நிறுவனத்தின் சொத்துக்களுக்கான இணையவழி ஏலம் வருகிற டிசம்பர் 14-ந் தேதி நடக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த இரண்டு நிறுவனங்களின் ரூ. 37 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொதுத்துறை நிறுவனங்களில் நஷ்டத்தில் இயங்கும் துறைகளை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் சில பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்தும், குத்தகைக்கு விட்டும் பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ. 6 லட்சம்கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இதையும் படியுங்கள்... திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் நல்லடக்கம்

    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,575 வரையிலான கேஷ்பேக் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    விலை உயர்ந்த முதல் மூன்று நிரந்தர மாதாந்திர ரீசார்ஜ்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாகவும், மற்ற விலை குறைந்த போஸ்ட்பெயிட் சலுகைகளை தேர்வு செய்வோர் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தும் போது 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    ஆறு மாத சலுகைகளுக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்குகிறது. எனினும் இதற்கான தொகை குறைவாகும். ரூ.1,525 விலையில் வருடாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஒருவர் தேர்வு செய்யும் போது ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். மாதம் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகை ரூ.18,300 முழுமையாக செலுத்தும் போது பயனர்களுக்கு ரூ.4,575 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.1,125 மாதாந்திர சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தா தொகையை முழுமையாக செலுத்தும் போது ரூ.3,375 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தாவை முழுமையாக செலுத்தினாலும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    விலை குறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் பி.எஸ்.என்.எல். 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா மட்டுமின்றி ஆறு மாதங்களுக்கான தொகையை செலுத்துவோருக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கு ஆறு மாதங்களுக்கான தொகையை முழுமையாக செலுத்தும் போது 12 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு ரூ.1,098 வரை கேஷ்பேக் கிடைக்கும். ரூ.1,125 மற்றும் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 12 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    பி.எஸ்.என்.எல். ரூ.725 மற்றும் ரூ.525 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு 8 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு நான்கு சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய கேஷ்பேக் சலுகை முதற்கட்டமாக கேரளா வாடிக்கையார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சலுகை மற்ற வட்டாரங்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 25 சவிகிதம் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது.
    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் என தெரியவந்துள்ளது. #TRAI



    இந்திய டெலிகாம் சந்தையில் பிப்ரவரி 2019 மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 29.72 கோடியாக இருந்தது. இது ஜனவரியில் இருந்ததை விட 77.93 லட்சம் அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 8.99 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11.62 கோடியாக இருக்கிறது.



    சமீபத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 118.36 கோடியாக இருக்கிறது. பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 57.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அந்த வகையில் வோடபோன் ஐடியா பயனர் எண்ணிக்கை தற்சமயம் 40.93 கோடியாகும்.

    இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனமும் 49,896 வாடிக்கையாளர்களை இழந்து, பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் 34.03 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.19 விலையில் வைபை ஹாட்ஸ்பாட் வவுச்சர்களை வழங்குகிறது. #BSNL



    இந்தியாவில் மொபைல் கெக்டிவிட்டி மற்றும் 4ஜி பரப்பளவு இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கும் நிலையில், அரசாங்கம் வைபை கனெக்டிவிட்டியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் மத்திய தொலைதொடர்பு மந்திரி மனோஜ் சின்கா 2019 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் பத்து லட்சம் வைபை ஹாட்ஸ்பாட்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் என்றும் இதற்கென டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

    அந்த வகையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. பி.எஸ்.என்.எல். வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி நாட்டின் முக்கிய நகரங்களில் வைபை ஹாட்ஸ்பாட் பயன்படுத்த புதிய வவுச்சர்களை அறிவித்துள்ளது.



    இந்தியா முழுக்க 20 டெலிகாம் வட்டாரங்களில் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல். தற்சமயம் தனது வாடிக்கையாளர்களுக்கு வைபை ஹாட்ஸ்பாட் வவுச்சர்களை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வைபை ஹாட்ஸ்பாட்களுக்கென நான்கு புதிய திட்டங்களை இதற்கென அறிவித்திருக்கிறது.

    நான்கு புதிய திட்டங்களின் விலையும் ரூ.100-க்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றின் துவக்க விலை திட்டம் ரூ.19 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது திட்டம் ரூ.39 விலையில் ஏழு நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்குகிறது.

    மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.59 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 15 ஜி.பி. டேட்டா 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நான்காவது திட்டத்தில் ரூ.69 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 30 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து திட்டங்களுக்கான கட்டணமும் சேவை வரியுடன் சேர்த்தது தான் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. பயனர்கள் இந்த சலுகையை ஆன்லைனிலேயே தேர்வு செய்து கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
    இந்திய பிரீமியர் லீக் 2019 போட்டிகள் துவங்கியதை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவன பீரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #BSNL #IPL2019



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் தொடர் துவங்கியிருப்பதை தொடர்ந்து புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

    ரூ.199 மற்றும் ரூ.499 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளில் பயனர்களுக்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச கிரிகெட் எஸ்.எம்.எஸ். அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் போட்டி பற்றிய தகவல்கள் பயனர்களுக்கு எஸ்.எம்.எஸ். வடிவில் அனுப்பப்படும்.

    பி.எஸ்.என்.எல். ரூ.199 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இலவச அழைப்புகள் ஒரு வட்டாரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பயனர்கள் மற்ற வட்டாரங்களில் பேச தனி கட்டணம் வசூலிக்கப்படும். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தவிர பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.



    28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இச்சலுகையில் பயனர்களுக்கு ஐ.பி.எல். கிரிகெட் போட்டிகள் தொடர்பான தகவல்கள் எஸ்.எம்.எஸ். வடிவில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ரூ.199 மற்றும் ரூ.499 சலுகைகள் இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.

    ரூ.499 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங்குடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., இலவச கிரிகெட் போட்டி தொடர்பான எஸ்.எம்.எஸ்.கள் வழங்கப்படுகிறது. இச்சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. 

    தினமும் 1 ஜி.பி. டேட்டா போதாது என்போருக்கு ஜியோ ரூ.149 விலையில் வழங்கும் சலுகையை பயன்படுத்தலாம். இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    புதிய சலுகை பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். இதனை ஆக்டிவேட் செய்து கொள்ள வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதுவரை அதிகாரப்பூர்வமாக சேவை துவங்கப்படாத ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். புதிய முடிவினை எடுத்திருக்கிறது.

    பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பிராட்பேண்ட் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ததும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் முகவரியில் கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.



    வழக்கமான பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோர் இதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டும், அந்த வகையில் புதிய சலுகையின் பேரில் இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இலவச பிராட்பேண்ட் சேவை மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். மேலும் சில இலவசங்களை வழங்குகிறது.

    இந்த இணைப்பின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது. 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். தற்சமயம் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. இதனால் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். 

    புதிய சலுகையின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க முயற்சிக்கிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆண்டு சலுகைகளை வாங்கும் போது 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை அறிவிக்கப்பட்டு தற்சமயம் மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

    புதிய ரூ.599 சலுகை மும்பை மற்றும் புது டெல்லி அல்லாத வட்டாரங்களில் கிடைக்கிறது. இச்சலுகையில் அதிவேக டேட்டா பலன்கள் வழங்கப்படவில்லை என்றாலும், இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி, டேட்டா மட்டும் வழங்கும் சில சலுகைகளை நிறுத்துவதாக அறிவித்தது. 



    ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் புதிய ரூ.599 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள் (மும்பை மற்றும் டெல்லி தவிர பகுதிகளில்) உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வேலிடிட்டியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

    புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும் நிலையில், இதில் எவ்வித டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை. முதற்கட்டமாக இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

    ஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.549, ரூ.561, ரூ.2798, ரூ.3998 மற்றும் ரூ.4498 உள்ளிட்ட சலுகைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இவற்றில் முறையே 60, 80, மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்து தற்சமயம் பத்து நாட்கள் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. #BSNL #Offer



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக ரூ.399 சலுகையை பி.எஸ்.என்.எல். மாற்றியமைத்தது. புதிய மாற்றத்தின் மூலம் ரூ.349 சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கும். 

    ரூ.349 சலுகையை தேர்வு செய்யும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு இனி தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 64 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது.

    பி.எஸ்.என்.எல். ரூ.349 சலுகை பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ரூ.349 சலுகையின் மாற்றம் கொல்கத்தா மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட்டாரங்களில் அமலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுதவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.2 ஜி.பி. டேட்டா ஏப்ரல் 30 வரை வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவினை தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் ஒப்பிடும் போது பி.எஸ்.என்.எல். ரூ.349 சலுகையில் பயனர்களுக்கு குறைந்த வேலிடிட்டியில் 500 எம்.பி. குறைவான டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் ரூ.349 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.298 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.297 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    போட்டி நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது. முன்னதாக போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இலவச தினசரி டேட்டா பலன்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது. 

    புதிய ரூ.298 சலுகை பி.எஸ்.என்.எல். சிறப்பு வவுச்சராக அறிவிக்கப்பட்டிருப்பதாக டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது. இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்படும் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    புதிய ரூ.298 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ரூ.299 சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்களுக்கு 84 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். 3ஜி மற்றும் 2ஜி சேவையை வழங்குகிறது. வோடபோன் நிறுவனம் ரூ.255 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.269 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 2.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #bsnl #offers



    குடியரசு தினத்தை முன்னட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    ரூ.269 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 26 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இத்துடன் 2.6 ஜி.பி. டேட்டா, 2600 நிமிடங்கள் வாய்ஸ் கால், 260 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இச்சலுகை குடியரசு தினத்தையொட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 



    அந்த வகையில் புதிய ரூ.269 சலுகையை வாடிக்கையாளர்கள் ஜனவரி 26 (குடியரசு தினம்) முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இச்சலுகை நாடு முழுக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இச்சலுகை குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்து. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை மட்டும் வழங்கும் இச்சலுகையில் ஏற்கனவே 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

    இதுதவிர ரூ.899 விலையில் பி.எஸ்.என்.எல். புதிய சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 50 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை துவங்கியது. ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஒரு ஜி.பி. டேட்டா ரூ.1.1 விலையில் வழங்கப்படுகிறது. #bsnl #Broadband



    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியதும், டெலிகாம் சேவை கட்டணம் முழுமையாக மாறிப்போனது. ஜியோவின் மலிவு விலை டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைக்க ஆரம்பித்தன. 

    டெலிகாம் சேவையை தொடர்ந்து பிராட்பேண்ட் சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், போட்டிக்கு தயாராகும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேணேட் சேவைகளை துவங்தியுள்ளது.

    பாரத் ஃபைபர் என அழைக்கப்படும் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100 எம்பி. வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கானதாகும். இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 வாடகை செலுத்த வேண்டும். 



    பிராட்பேண்ட் சலுகைகளை பொருத்த வரை பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் ரூ.777 விலையில் துவங்குகிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் 500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் விலை உயர்ந்த சலுகை ரூ.16,999 விலையில் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் 3500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 10Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 1 ஜி.பி. மெமரியுடன் இலவச மின்னஞ்சல் அக்கவுண்ட் ஒன்று வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.399 சலுகையில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் படி மாற்றப்பட்டுள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.399 சலுகை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 74 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்களுக்கு மொத்தம் 237.54 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    பி.எஸ்.என்.எல். நிறுவன வலைதளங்களின் வெவ்வேறு வட்டாரங்களில் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3.21 ஜி.பி. வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1 ஜி.பி. டேட்டாவை விட 2.21 ஜி.பி. வரை அதிகம் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 3.21 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.



    கூடுதல் டேட்டா தவிர ரூ.399 பி.எஸ்.என்.எல். சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை கடந்த ஆண்டு ராக்கி பண்டிகைக்கு அறிவித்தது. பிரீபெயிட் பயனர்களுக்கு 2.21 ஜி.பி. கூடுதல் டேட்டா ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
    ×