search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா"

    பணக்காரர்களுக்கு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி காவலாளியாக உள்ளார் என்று பிரியங்கா கூறியுள்ளார். #PriyankaGandhi #IndiraGandhi #Congress

    பிரயாக்ராஜ்:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக அவர் நேற்று உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். நேற்று காலை பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று நாளை வாரணாசியை சென்றடைய பிரியங்கா திட்டமிட்டுள்ளார்.

    இந்த படகு பயணத்தின் போது ஆங்காங்கே கரையோரங்களில் உள்ள கிராம மக்களை சந்தித்து பிரசாரத்தையும் பிரியங்கா மேற்கொண்டுள்ளார். 145 கிலோ மீட்டர் தொலைவுக்கு கங்கையில் படகு பயணம் செய்யும் பிரியங்கா தினமும் மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    நேற்று மாலை அவர் சிர்சா பகுதியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடியை மிக மிக கடுமையாக தாக்கி பிரியங்கா உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    எனது படகு பயணத்தின் தொடக்கத்தின்போது எனது பாட்டி இந்திராகாந்தியின் நினைவு எனக்கு வந்தது. அவர் என்னை இந்த பகுதிக்கு பல தடவை அழைத்து வந்துள்ளார்.

    அவர் மடியில் நான் இங்கு தலைவைத்து தூங்கி இருக்கிறேன். அப்போ தெல்லாம் அவர் என்னிடம், “பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. துணிச்சலுடன் போராட வேண்டும்” என்று கூறுவார். அந்த வழியில் நான் பயணிக்க தொடங்கி இருக்கிறேன்.

    பிரதமர் மோடி தனது பெயருக்கு முன்பு காவலாளி என்று போட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரையும் அப்படி போடும்படி சொல்கிறார். அவர் யாருக்கு காவலாளியாக இருந்துள்ளார். பணக்காரர்களுக்கு மட்டுமே அவர் காவலாளி.

    ஏழை விவசாயிகளுக்கு அவர் காவலாளியாக இருக்கவில்லை. நேற்று நான் சில விவசாயிகளை சந்தித்து பேச நேரிட்டது. அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு விவசாயிகள்தான் காவலாளி. வேறு யாரும் அல்ல என்று தெரிவித்தனர். இதை மோடி உணர்ந்து கொள்ள வேண்டும்.

    உத்தரபிரதேசத்தில் வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. எந்த நலத்திட்ட பணிகளும் முறையாக நடக்கவில்லை. அனைத்து துறைகளிலும் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்து இருக்கிறது.

    இந்த குறையை திசை திருப்பவே பிரிவினை அரசியலை அவர்கள் நடத்துகிறார்கள். ஜாதி, மதத்தை பெரிதாக காட்டி பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து மறைக்கிறார்கள். இந்த நிலைமாற வேண்டும்.

    உத்தரபிரதேசத்தில் இப்போதைய நிலையை மாற்ற என்னால் முடியும். இங்குள்ள மக்களை நான் நன்கு அறிந்துள்ளேன். எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மாநிலத்தின் தலைவிதியை மாற்றலாம்.

    இவ்வாறு பிரியங்கா ஆவேசமாக பேசினார். #PriyankaGandhi #IndiraGandhi #Congress

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜுக்கு எதிராக 7 தொகுதிகளில் போட்டி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், மாயாவதி- அகிலேஷ் கருத்திற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். #Congress #Priyanka
    பிரயாக்ராஜ்:

    பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் எண்ணத்துடன் களமிறங்கியுள்ளன. அதேப்போல், காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவை வீழ்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் முதன்முறையாக களமிறங்கியுள்ள பிரியங்கா, பல்வேறு பிரச்சாரங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தங்களுக்கான தொகுதிகளில் வெற்றி பெறவும், காங்கிரஸ் கட்சியினை பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைக்க வேண்டும் எனும் முனைப்புடனும் செயலாற்றி வருகின்றனர்.



    இந்நிலையில், ராகுல்- பிரியங்கா போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என மாயாவதி- அகிலேஷ் கூட்டணி தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர்கள் 7 பேரின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

    இதற்கு மாயாவதி- அகிலேஷ் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.  ‘எந்த கட்சியினரையும், கூட்டணியையும்  காங்கிரஸ் கட்சியினர் எவ்விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. எங்களுக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களது ஒரே நோக்கம், பாஜகவை வீழ்த்துவதே ஆகும். காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அதற்கான முயற்சிகளிலும், பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்’ என பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.   #Congress #Priyanka
      
    பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா, பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. #MaheshSharma #PriyankaGandhi #Puppy
    நொய்டா:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜனதா கட்சியினர் ‘பப்பு’ என்று கேலியாக கூறுவது வழக்கம். இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா உத்தரபிரதேச மாநிலத்தில் தனது தொகுதியில் உள்ள சிகந்தராபாத் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “தான் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்று பப்பு கூறுகிறார்.



    மாயாவதி, அகிலேஷ் யாதவ், பப்பு.... இப்போது பப்புவின் பப்பியும் (பிரியங்கா) வந்திருக்கிறார். பிரியங்கா தேசத்தின் மகள் அல்ல, காங்கிரசின் மகள். அவர் என்ன புதிதாக கொண்டுவரப்போகிறார்? எதிர்காலத்தில் அவர் அரசியலில் நீடிக்கமாட்டார்” என்று கூறினார். அதோடு மம்தா பானர்ஜி, குமாரசாமி ஆகியோரையும் அவர் கேலி செய்தார்.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேற்கு உத்தரபிரதேச காங்கிரஸ் இணை பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார், “இதெல்லாம் அவரது எண்ணத்தில் இருப்பதால் தான் வார்த்தைகளாக வந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் ஒரு பெண் மீது இப்படிப்பட்ட வார்த்தையை கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.  #MaheshSharma #PriyankaGandhi #Puppy
    உத்தரபிரதேசத்தில் ஜன அதிகார் கட்சியுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்காவை காங்கிரசார் முற்றுகையிட்டனர். #UttarPradesh #PriyangaGandhi
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்ததால், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே மாநிலத்தில் உள்ள சில சிறிய கட்சிகளுடன் அந்தக்கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதில் முன்னாள் மந்திரி பாபுசிங் குஷாவாகாவின் ஜன அதிகார் கட்சியும் ஒன்று.

    இந்த கட்சியுடன் கூட்டணி வைப்பதை மாநில காங்கிரசார் விரும்பவில்லை. ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற குஷாவாகாவுடன் கூட்டணி வைப்பது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா நேற்று உத்தரபிரதேசம் சென்றார். லக்னோவில் கட்சி அலுவலகத்தில் அவர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு வந்தனர்.

    பின்னர் பிரியங்கா அங்கிருந்து காரில் வெளியேற முயன்ற போது, அந்த தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு குஷாவாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சாலையில் அமர்ந்தும் அவர் கள் மறியலில் ஈடுபட்டனர். எனவே பிரியங்கா மாற்று பாதை வழியாக அங்கிருந்து வெளியேறினார். எனினும் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறே அவரது காரை பின்தொடர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக் காது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறினார். #YogiAdityanath #BJP #Priyanka
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி பிரியங்காவை இந்த முறை பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது. அவரது சேவையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான இது ஒரு உட்கட்சி பிரச்சினை. காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதற்கு முன்னரும் பிரசாரம் செய்திருக்கிறார், இந்த முறையும் பிரசாரம் செய்கிறார். அவரது வருகை தேர்தலில் பா.ஜனதாவை எந்தவகையிலும் பாதிக்காது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகளுக்காக இரண்டு கட்சிகளும் போட்டிபோடுகிறது. இந்த கூட்டணி முயற்சி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ‘பொய் அலாரம்’ தவிர வேறு ஒன்றுமில்லை.

    நாடு யாருடைய கைகளில் இருந்தால் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்குமோ அவருக்கே, அந்த கட்சிக்கே மக்கள் ஓட்டு போடுவார்கள். பாகிஸ்தான் பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா உலகில் சக்திமிக்க நாடாக உருவாகியுள்ளது.

    ராமர் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவரை தங்கள் முன்மாதிரியாகவும் கருதுகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் தேவை. முன்பு எதிர்க்கட்சிகளால் சாத்தியம் இல்லாதது, இப்போது மோடியின் தலைமையில் பா.ஜனதாவால் சாத்தியமாகி உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 74 இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும்.
    பிரதமர் மோடியின் தலைமையுடன் ராகுல் காந்தியையோ, பிரியங்காவையோ ஒப்பிட முடியாது என சிவசேனா கூறுகிறது. #ShivSena #PMModi
    மும்பை :

    மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதிலும் எதிர்க்கட்சிகளையும் மிஞ்சி, பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சிவசேனா வசைபாடி வந்தது. பா.ஜனதாவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்று சிவசேனா தலைவர் அறிவித்தார்.

    ஆனால் திடீர் திருப்பமாக கடந்த திங்கட்கிழமை பா.ஜனதாவுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமின்றி, மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கும் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கூட்டணி உருவான நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு பிரதமர் மோடியை சிவசேனா கட்சி புகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இடையேதான் அதிக கேள்விகள் எழுந்து இருக்கின்றன. எங்கள் கூட்டணியால் பூச்சிகள் போன்ற எதிர்க்கட்சிகள் நசுக்கப்படும்.



    2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல்காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. பிரியங்காவும் உதவியாக இருக்கிறார். ஆனால், இருவரையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே கருத்துவேறுபாடுகள் எழுந்த நிலையில் ஏன் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்? ராமர் கோவில் கட்டப்படுமா?, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரப்படுமா? என்பவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த கேள்விக்கான பதில், மராட்டியத்தின் நலனுக்காகவே கூட்டணி முடிவை சிவசேனா எடுத்து உள்ளது.

    சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்தவிதமான பகைமையும் இல்லை. பீகார் முதல்-மந்திரி நிதி‌ஷ் குமாருக்கு பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும்கூட, அதையெல்லாம் மறந்து அவர் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர முடியும், காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முடியும் என்கிறபோது, சிவசேனா எப்போதும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கமாக இருக்கும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பலையும், மோடிக்கு ஆதரவான அலையும் காணப்பட்டது. ஆனால், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அலையின் அடிப்படையில் போட்டி இருக்காது. ஆனால் கொள்கைகள், வளர்ச்சிப்பணிகள், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ShivSena #PMModi
    புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட உ.பி. மாநிலத்தை சேர்ந்த வீரரின் இல்லத்துக்கு இன்று சென்ற ராகுல் காந்தியும் பிரியங்காவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். #RahulPriyanka #CRPFjawan #UPCRPFjawan
    லக்னோ:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2019 அன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    வீரமரணம் அடைந்த அனைவரின் உடல்களும் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் மற்றும் தகனம் செய்து முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தாக்குதல் ஏற்படுத்திய சோகம் இந்திய மக்களின் மனங்களில் ஆறாத ரணமாக பதிவாகி விட்டது.



    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த அமித் குமார் கோரி என்ற வீரரின் நினைவாக இன்று அவரது இல்லத்தில் பிரார்த்தனையுடன் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா, உத்தரப்பிரதேசம் மாநில கரும்பு உற்பத்தித்துறை மந்திரி சுரேஷ் ராணா உள்ளிட்டோர் பங்கேற்று அமித் குமார் கோரியின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    அப்போது அமித் குமார் கோரியின் குடும்பத்தாரிடையே பேசிய ராகுல் காந்தி, இந்த துயரமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருப்பதை தெரிவிப்பதற்காக இங்கே வந்திருக்கிறோம். தனது மகனை இழந்து வேதனைப்படுவதாக தெரிவித்த அமித் குமாரின் தந்தை, அவர் நாட்டுக்காக உயிர் துறந்ததை எண்ணி பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.

    இந்த நாட்டுக்காக தனது அன்பையும், உடலையும், உயிரையும் தியாகம் செய்த அந்த பெருமைக்குரிய மகனை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம். இந்த தியாகத்தை நாங்கள் ஒருநாளும் மறக்க மாட்டோம்.

    உங்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய எனது தங்கை பிரியங்கா எங்கள் தந்தை ராஜிவ் காந்தியும் பயங்கரவாதத்துக்கு பலியானதால் உங்கள் துயரத்தையும் வேதனையையும் எங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றார்.



    இந்தியா என்பது ஒரே நாடு. இந்த இந்தியா நம் அனைவருக்குமானது. இது அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவும் நாடு. எங்களது இதயத்தின் அடித்தளத்தில் இருந்தும் இந்த நாட்டின் சார்பாகவும் உங்கள் மகனுக்கும் இந்த குடும்பத்தார் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    பின்னர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இதே ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த வீரர் பிரதிப் குமார் இல்லத்துக்கு சென்ற ராகுல் காந்தியும், பிரியங்காவும் அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். #RahulPriyanka #CRPFjawan #UPCRPFjawan
    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #Priyanka #Congress #UttarPradesh
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தனது பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். லக்னோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் உத்தரபிரதேசத்தில் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அதற்கான காரணங்களை பட்டியலிட்டனர். மேலும் அங்குள்ள சிறிய கட்சியான மகான் தளத்துடனும் கூட்டணி வைக்கக்கூடாது என அவர்கள் பிரியங்காவிடம் தெரிவித்தனர்.

    நிர்வாகிகளின் இந்த கருத்துக்களை அறிந்து கொண்ட பிரியங்காவும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதைப்போல உத்தரபிரதேசத்தின் பதேப்பூர், லக்னோ, கோரக்பூர், வாரணாசி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரியங்கா போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்கா, தான் அவ்வாறு போட்டியிட்டால் பிற தொகுதிகள் மீதான கவனம் சிதறி விடும் என கூறியதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Priyanka #Congress #UttarPradesh

    உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #PriyankaGandhi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

    அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

    பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் லக்னோவில் கூட்டாக ரோடு ஷோ நடத்தினர்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தி பொறுப்பில் உ.பி.யில் 41 பாராளுமன்ற தொகுதிகளை ராகுல்காந்தி ஒதுக்கி உள்ளார். லக்னோ, அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், கோரக்பூர், வாரணாசி, பூல்பூர், அலாகாபாத் உள்ளிட்ட 41 தொகுதிக்கு பிரியங்கா காந்தி பொறுப்பு வகிப்பார்.

    இதேபோல் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், மொராதாபாத், காஜியாபாத், மதுரா, பிலிபித், கான்பூர் உள்ளிட்ட 39 தொகுதிகளின் பொறுப்புகளை ராகுல் வழங்கி உள்ளார்.

    பிரதமர் மோடி வென்ற வாரணாசி தொகுதி பிரியங்கா காந்தி பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #PriyankaGandhi

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கும் பிரியங்கா காந்திக்கு லக்னோ நகரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. #PriyankaGandhi #RahulGandhi #Lucknowroadshow
    லக்னோ:

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக சோனியா, ராகுலை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்து உள்ளார்.

    பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல் அறிவித்தார்.

    பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்ற 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அவர்கள் இருவரும் இன்று உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர்.

    இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தபோது  காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

    லக்னோ நகரின் மையப் பகுதியில் மால் அவென்யூ எனும் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான “நேரு பவன்” நோக்கி வேனின்மீது நின்றவாறு அவர்கள் பேரணியாக சென்றனர்.



    சுமார் 15 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த பேரணியால் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பேரணி செல்லும் வழிநெடுக பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும், பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.   லக்னோ நகரில் திரும்பிய திசையெல்லாம் பிரியங்காவை வரவேற்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளன.

    முதல்முறையாக பொறுப்பு ஏற்க வருவதால் பிரியங்காவுக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 15 கி.மீ. தூரப்பாதையில் 32 இடங்களில் பிரியங்காவுக்கு காங்கிரசார் வரவேற்பு கொடுக்க உள்ளனர். ஓரிரு இடங்களில் பிரியங்கா தொண்டர்கள் மத்தியில் பேச மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    ஹசரத்கஞ்ச்-ல் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சிலைகளுக்கு ராகுல், பிரியங்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதன் பிறகு கட்சி அலுவலகமான நேருபவன் முன்பு இருக்கும் நேரு சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உள்ளே சென்று கட்சிப் பொறுப்பை ஏற்க பிரியங்கா திட்டமிட்டுள்ளார். #PriyankaGandhi  #RahulGandhi #Lucknowroadshow

    பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri

    புதுடெல்லி:

    ராகுல்காந்தி தலைமையில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

    அங்கு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோரை தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய அழைத்திருக்கிறேன். பிரியங்கா இந்த மாதம் வருகிறார்.

    ராகுல்காந்தியும், இந்த மாதம் 2 முறை தமிழகம் வர இருக்கிறார். பிரசார பயண திட்டம் தயாராகி வருகிறது. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடைய வெற்றிக்காகவும் காங்கிரஸ் முழுமையாக பாடுபடும்.

    இதன் அடிப்படையில், காங்கிரஸ் பிரசார வியூகம் அமைக்கப்படும். ராகுல், பிரியங்கா பிரசாரம் அனைத்து மக்களையும் சந்திக்கும் வகையில் இருக்கும்.

    கமல்ஹாசன் மதசார்பற்ற கருத்துடையவர். அவருடைய கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றாக உள்ளது. எனவே அவர் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எங்களுடன் வந்தால் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிரான ஓட்டுகள் சிதராமல் கிடைக்கும்.

    கமல் வந்தால் எங்கள் கூட்டணி இன்னும் பலமாகும். எனவே அவர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார். #Congress #KSAlagiri

    பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை பாராட்டிய அகிலேஷ் யாதவ் காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள விரும்புவதாக தெரிய வந்துள்ளது. #AkhileshYadav #Congress
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அகிலேஷ்யாதவும், மாயாவதியும் தலா 38 தொகுதிகளை எடுத்துக்கொண்டு அஜித்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக்கு 2 தொகுதிகள் அளித்தன.

    சோனியா மற்றும், ராகுல் காந்தி தொகுதியில் மரியாதை நிமித்தமாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்தனர்.



    இந்தநிலையில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பிரியங்கா தீவிர அரசியலில் இறங்கினார். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தது.

    இதன்காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் மும்முனைப்போட்டி ஏற்பட்டு வாக்குகள் பிரியும் நிலை உருவானது. இது பா.ஜனதாவுக்கு சாதகமாகிவிடும் என்று கருதப்படுகிறது.

    பிரியங்காவின் வருகையாலேயே அகிலேஷ் யாதவிடம் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை அகிலேஷ் யாதவ் பாராட்டி இருந்தார். பிரியங்கா வருகையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அவரும் கருதுகிறார். எனவே காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள அவர் விரும்புவதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்கை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி முடியாவிட்டால் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது’’ என்றனர். #AkhileshYadav #Congress

    ×