search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா"

    ராகுலை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #RahulGandhi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவேகவுடா ஈடுபட்டு வருகிறார்.

    இது சம்பந்தமாக அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

    கேள்வி:- எதிர்க்கட்சி கூட்டணி சம்பந்தமாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, வலுவான ஆட்சி வேண்டுமா? பலவீனமான அரசு வேண்டுமா? என்று கேட்டு இருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி அணியை சந்தர்ப்பவாத, நகைப்புக்குரிய அணி என்று கூறி இருக்கிறாரே?

    பதில்:- எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினைகள் என்ன என்பதை உணர்ந்து தீர்வு ஏற்படுத்திக்கொண்டால் மோடி போன்றவர்கள் இது போன்ற விமர்சனங்களை செய்யும் நிலை ஏற்படாது.

    இந்த நாட்டின் மக்கள் நிலையான அரசைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க் கட்சியினர் தங்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு நிலையான அரசை ஏற்படுத்துவது சம்பந்தமாக ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    எப்படி அந்த அரசை 5 ஆண்டுகள் நீடிக்க செய்வோம் என்ற வி‌ஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மதசார்பற்ற நிலைக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

    தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களுக்கும் இதில் தீர்வுகாண வேண்டும். அதை காங்கிரஸ் முன்னின்று செய்ய வேண்டும். ஆனால், காங்கிரசுக்கும், பிராந்திய கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் மோடி விமர்சிக்கிறார்.

    நாட்டின் பாதுகாப்பு, அனைத்து அரசியல் சாசன அமைப்புகள் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியில் மோடி ஈடுபட்டு வருகிறார். அதை தடுப்பதற்கு எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம்.

    கே:- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் எது தடையாக உள்ளது?

    ப:- மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி 10 இடங்களை தான் கேட்டார். ஆனால், அதைக்கூட காங்கிரஸ் விட்டு கொடுக்கவில்லை. பின்னர் அவர் தனித்து நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 6 இடங்களில் வென்றுள்ளார்.

     


     

    அப்போதே காங்கிரஸ் விட்டு கொடுத்து இருந்தால் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருக்காது. இதன் காரணமாகத்தான் மாயாவதி உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் சேர்ந்து தனி கூட்டணியை ஏற்படுத்தி விட்டார்.

    காங்கிரஸ் அங்கு தனியாக போட்டியிடும் நிலை உருவாகி இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை உருவாகாமல் பார்த்து இருக்கலாம்.

    இப்போதுகூட ஒன்றும் பிரச்சினை இல்லை. நினைத்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையலாம். குமாரசாமி பதவி ஏற்பு விழாவின்போது அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தேன். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவது நல்லது.

    கே:- கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒன்றிணைவதற்கு இப்போது வாய்ப்பு இருக்கிறதா?

    ப:- நிச்சயமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அணுகி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸ் அதை முன்னெடுத்து சென்றால் அவர்களும் இறங்கி வருவார்கள். ஒரு சரியான உருவகத்தை ஏற்படுத்த முடியும்.

    கே:- எதிர்க்கட்சி அணியில் யார் பிரதமர்? என்று பாரதிய ஜனதா கேள்வி விடுக்கிறது.

    ப:- ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பது இயற்கையான ஒன்று. எங்களில் யாரும் அவருக்கு போட்டியாக இல்லை. அந்த வகையில் காங்கிரஸ் தனது செயல்பாட்டை முழுமையாக்கி கொள்ள வேண்டும்.

    கே:- பிரியங்கா வருகையால் காங்கிரஸ் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

    ப:- ராகுல்காந்தியை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் என நான் கருதுகிறேன். அவருடைய தோற்றம், சில வகை நடவடிக்கைகள் அவரது பாட்டி இந்திராகாந்தி போலவே இருப்பதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

    பிரியங்காவின் வருகை நிச்சயம் கட்சிக்கு பெரிய உதவியாக இருக்கும். அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #RahulGandhi

    பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #akhilesh #rahulgandhi #Priyanka

    லக்னோ:

    காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த 23-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது அரசியல் பிரவேசத்தை கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பிரியங்காவால் உத்தரபிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதனால் அகிலேஷ் யாதவ் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார். நேற்று முதல் முறையாக பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், “பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன்” என்றார்.


    அதே சமயம் ராகுல்காந்தி சமீபத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவை மதிக்கிறேன் என்று கூறியிருப்பதால் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்று அகிலேஷ் யாதவிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    தொடர்ந்து அகிலேஷ் யாதவ் பதில் அளிக்கையில் பா.ஜனதாவை மட்டுமே விமர்சித்தார். காங்கிரஸ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தார். #akhilesh #rahulgandhi #Priyanka

    தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்காவை கண்டு பா.ஜனதா விமர்சனம் செய்வது ஏன்? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். #kushboo #bjp #congress #Priyanka

    சென்னை:

    பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் இறங்குகிறார்.

    இதையடுத்து பிரியங்கா குறித்து பா.ஜனதாவினர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அளித்த பதில் வருமாறு:-

    பிரியங்கா காந்தி எத்தனையோ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். பல முறை தேர்தல் பிரசாரங்களும் செய்துள்ளார்.

    எங்கள் கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெண் முன்னேறி இருக்கிறார். அவரும் வரட்டுமே. பா.ஜனதாவினர் ஏன் பயப்பட வேண்டும்.

    அவர்களுடைய விமர்சனத்தின் மூலமே, பிரியங்காவை கண்டு அவர்கள் பயந்து நடுங்குவது தெரிகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்தான் மோடி தொகுதியும், யோகி ஆதித்யநாத் தொகுதியும் வருகிறது. எங்கே நாம் தோற்று விடுவோமோ என்று பயந்து நடுங்குகிறார்கள். ஒரு மாநிலத்தின் பொறுப்புக்கு வந்ததும், நாடு முழுவதும் பா.ஜனதாவினர் பிரியங்காவை விமர்சிப்பது ஏன்?

    குடும்ப அரசியல் என்கிறார்கள். பா.ஜனதாவில் குடும்ப அரசியல் இல்லையா. 44.4 சதவீதம் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைவர்களின் பின்புலத்தில் வந்த வாரிசுகள் தான். எனவே பா.ஜனதாவினருக்கு குடும்ப அரசியல் பற்றி பேச தகுதி இல்லை.


    தமிழக காங்கிரசில் நிலவும் குழப்பம் குறித்து டெல்லி மேலிடத்திடம் புகார் செய்வதற்காக எல்லோரும் சென்றதாக கூறுகிறார்கள். இது தவறு. ஒவ்வொரு வரும் தனிப்பட்ட அரசியல் பணிகளுக்காக எல்லோரும் ஒரே சமயத்தில் டெல்லி சென்று இருந்தோம். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    காங்கிரசை ராகுல் காந்தி கட்சி என்று சொல்ல மாட்டார். இயக்கம் என்றுதான் கூறுவார். அந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் அவரது பாணியிலேயே செயல்பட வேண்டும். அதை விட்டு விட்டு நானே ராஜா, நானே மந்திரி என்பது போல் நடந்து கொள்ளக் கூடாது.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #kushboo #bjp #congress #Priyanka

    ரேபரேலி தொகுதியில் எம்.பி. ஆக உள்ள சோனியாகாந்திக்கு 5 தடவையும் தேர்தல் பணி செய்தது பிரியங்காதான் என்பதால் இந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Parliamentelection #PriyankaGandhi
    நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

    பிரியங்காவை பொருத்தவரை அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல தொடர்பில் இருப்பவர். அந்த இரு தொகுதிகளிலும் அவருக்கு அபரிதமான செல்வாக்கு இருக்கிறது.

    இதில் அமேதி தொகுதியில் ராகுல் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி. ஆக இருந்து வருகிறார். எனவே நான்காவது முறையாக அவர் அமேதியில் போட்டியிட உள்ளார்.



    சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இந்த தடவை அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற பேச்சு நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

    ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் வெற்றி 100 சதவீதம் உறுதியானதாகும். அத்தகைய சூழ்நிலையில் அவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா 5 முறை எம்.பி. ஆக இருந்துள்ளார். அந்த 5 தடவையும் தேர்தல் பணி செய்தது பிரியங்காதான். எனவே ரேபரேலி தொகுதியின் சந்து பொந்துகள் கூட பிரியங்காவுக்கு தெரியும். இது பிரியங்காவின் மிகப்பெரிய பலமாகும்.

    அதுமட்டுமின்றி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்போது “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்”என்ற கோ‌ஷத்தை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு வலிமை சேர்க்கும் வகையில் அயோத்தி ராமர் கோவில் உள்பட பல்வேறு இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்க ராகுலும், பிரியங்காவும் வியூகம் வகுத்துள்ளனர். எனவே தேர்தல் சமயத்தில் உத்தரபிரதேசம் ‘களை’ கட்டும். #Parliamentelection #PriyankaGandhi

    பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Modi #PriyankaGandhi
    சென்னை:

    காங்கிரஸ் கட்சி பிரியங்காவை களத்தில் இறக்கி இருப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை நினைத்தும் அதன் தலைவரை பார்த்தும் அந்த கட்சி தொண்டர்கள்தான் பரிதாபப்பட வேண்டும். பிரியங்கா தேர்தல் களத்துக்கு வருவது இதுபுதிதல்ல. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பிரசாரத்துக்கு களம் இறக்கி பரிசோதித்து பார்த்து தோல்வி கண்டவர்கள்தான்.

    பிரியங்கா வருகையை கொண்டாடும் காங்கிரசார் ராகுலின் தோல்வியையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று பிரதமர் வேட்பாளராகவும் முன் நிறுத்தப்பட்டவர்.

    அவர் மீது அவரது கட்சிக்காரர்களுக்கும் நம்பிக்கை இல்லை. கூட்டணி கட்சியினருக்கும் நம்பிக்கை இல்லை. அவ்வளவு ஏன் ராகுலுக்கே தன் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான் பிரியங்காவையாவது இறக்கி பார்ப்போம் என்று முயற்சிக்கிறார்.



    ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் எடுபடப்போவதில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பமே இந்த நாட்டை ஆள முடியும் என்ற நிலை இருந்தது. சாமானியனும் ஆள முடியும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது. மோடியால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஒரு குடும்பத்தின் கைகளில் நாட்டை ஒப்படைக்க மக்கள் விரும்புவார்களா? காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா வருகையை கொண்டாடலாம். மக்கள் கொண்டாட மாட்டார்கள்.

    பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக இருக்கும். மோடியை கண்டு பயந்து பிரியங்காவை கொண்டு வந்திருப்பவர்கள் மோடி பயந்துவிட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.

    தேர்தல் நேரத்தில் மக்கள் ரசித்து பார்க்கும் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒன்று. இவர் அதற்கு சரிபட்டு வர மாட்டார் என்று கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டாளியும் ஏற்றுக்காள்ளவில்லை.

    மீண்டும் இந்திரா வந்து விட்டதாக வாழ்த்துப்பாடும் தமிழக அரசியல் தலைவர்கள் மீண்டும் நெருக்கடி நிலை வரவேண்டும் என்று வரவேற்பார்களா? எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று அந்தர் பல்டி அடிக்கும் கட்சிகள் நடத்தும் காட்சிகளை மக்கள் பார்த்து சிரிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Modi #PriyankaGandhi
    பிரியங்காவுக்கு பதவி அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியில் வழக்கமான குடும்ப அரசியல் நடப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பா.ஜ.க.வில் உள்கட்சி ஜனநாயகம் செழிப்பதாக தெரிவித்தார். #Modislams #dynasticpolitics #Congressdynasticpolitics #PriyankaGandhi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார்.

    வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஆதரித்து அரைகுறை மனதுடன் பாராளுமன்றத்தில் வாக்களித்த சிலர் தற்போது நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளதாக மோடி குற்றம்சாட்டினார்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசம் மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்த மோடி, பிரியங்காவுக்கு பதவி அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பா.ஜ.க.வில் எப்போதுமே உள்கட்சி ஜனநாயகம் மதிக்கப்படுதாக தெரிவித்தார்.

    நாட்டின் பல பகுதிகளில் குடும்பம்தான் கட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பா.ஜ.க.வில் மட்டும்தான் கட்சியே ஒரு குடும்பமாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து விடுபட்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று நான் கூறிவருவது காங்கிரஸ் கட்சியில் உள்ள வாரிசு அரசியலையும் சேர்த்துத்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    பா.ஜ.க.வின் ரத்தநாளங்களில் ஜனநாயகத்தின் மதிப்புமிக்க கலாச்சாரம் ஊறியிருப்பதாக குறிப்பிட்ட மோடி, எந்தவொரு தனிநபரோ அல்லது குடும்பத்தினரோ நினைப்பதை நம் கட்சியில் சாதித்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.  #Modislams #dynasticpolitics #Congressdynasticpolitics #PriyankaGandhi
    ஆசிப் குரைஷி இயக்கத்தில் உதயா அழகப்பன் - பிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உத்தரவு மகாராஜா' படத்தின் விமர்சனம். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka
    உதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நண்பர்களிடம் பொய்கள் கூறி தன்னை பற்றி பில்டப் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். திடீரென்று காணாமல் போகும் உதயா ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்புகிறார். ஆனால் அவருக்கு தான் காணாமல் போனதும், ஒரு மாதம் எங்கே இருந்தோம் என்பதும் தெரியவில்லை.

    அந்த நினைவுகனை முழுமையாக அவரால் கொண்டுவர முடியவில்லை. இதற்கிடையே உதயாவுக்கு திடீரென்று வித்தியாசமான குரல்கள் கேட்க தொடங்குகின்றன. இதனால் நிம்மதியை இழக்கிறார். உதயாவை மனநோயாளியாக மாற்றும் அந்த குரல்கள் யாருடையது? உதயா நல்லவரா? கெட்டவரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உதயா மன நோயாளி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து இருக்கிறார். படம் முழுக்க ஆக்கிரமிக்கும் வேடம் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார். நிம்மதி இழந்து அவர் தவிக்கும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். உதயாவை ஆட்டுவிக்கும் டாக்டராக பிரபு. படம் சற்று தொய்வடையும்போது எல்லாம் பிரபு நுழைந்து நிமிர வைக்கிறார். நடிப்பில் வழக்கமான கம்பீரம்.

    கதாநாயகிகள் பிரியங்கா, சேரா இருவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, ஆடம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மனோபாலாவின் அடியாட்களாக மனோஜ்குமார், ஹரிகிருஷ்ணன், கண்ணன் ஆகியோரும் நிறைவான நடிப்பு.



    அறிமுக இயக்குனர் ஆசிப் குரேசி குழப்பமான திரைக்கதையை 2 ஆம் பாதியில் புரிய வைத்ததன் மூலம் கவனிக்க வைக்கிறார். ஒரு சைக்கோ திரில்லரில் எமோ‌ஷனல், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் நீளத்தை குறைத்து, வேகத்தை அதிகரித்திருக்கலாம்.

    நரேன் இசையும், பாலாஜி ரங்கா ஒளிப்பதிவும் சைக்கோ திரில்லருக்கு ஏற்றபடி சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `உத்தரவு மகாராஜா' கவனிக்க வைக்கிறான். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka

    ரேபரேலி தொகுதியில் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing
    ரேபரேலி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி. ஆவார். அங்கு சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகள் பிரியங்காதான் கட்சி நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவர் தொகுதிக்கு செல்லவில்லை என தெரிகிறது.



    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தொகுதிவாசிகள் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ரேபரேலி தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் எனக்கூறும் சோனியா குடும்பத்தினர், தற்போது அதை மறந்துவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளால் தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மாநில காங்கிரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing 
    மாநில சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா சாம்பியன் பட்டம் பெற்றார்.
    மாநில சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி கரூரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 21-12, 21-6 என்ற கணக்கில் ஜெர்லின் அணிகாவை (மதுரை) வீழ்த்தினார். இவரது சகோதரர் சங்கர் முத்துசாமி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் 21-17, 10-21, 10-21 என்ற கணக்கில் சதீஷ்குமாரிடம் (கோவை) தோற்றார்.

    சிறந்த வீரருக்கான விருது சங்கர் முத்துசாமிக்கும், சிறந்த வீராங்கனைக்கான விருது லட்சுமி பிரியங்காவுக்கும் வழங்கபட்டது. இருவரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். சங்கர் முத்துசாமியும், லட்சுமி பிரியங்காவும் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது தானும், பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். #Prabhakaran #RahulGandhi #Priyanka
    ஹம்பர்க்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். ஹம்பர்க் நகரில் உள்ள புசிரியஸ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு நிகழ்வில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனது பாட்டி, தந்தை ஆகியோரை பயங்கரவாதத்துக்கு பறிகொடுத்து இருக்கிறேன். இந்த வன்முறையை வெல்வதற்கும், அதை கடந்து வருவதற்கும் ஒரே வழி, மன்னிப்பு மட்டுமே. வன்முறைக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பதை பலவீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மன்னிப்புதான் வலிமையானது.



    எனது தந்தை 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டார். எனது தந்தையின் சாவுக்கு காரணமானவரும் சில ஆண்டுகளுக்குப்பின் கொல்லப்பட்டார். உடனே எனது சகோதரிக்கு தொலைபேசியில் அழைத்து, ‘நம் தந்தையின் சாவுக்கு காரணமாக இருந்தவர் கொல்லப்பட்டு விட்டார். ஆனாலும் என் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. என்னுடைய இதயம் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறது’ என்றேன்.

    அதற்கு பிரியங்காவும், ‘சரியாக சொன்னாய், எனக்கும் மகிழ்ச்சி ஏற்படவில்லை’ என்றுதான் கூறினார். இவ்வாறு, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது நானும், பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை.

    அதற்கு காரணம், பிரபாகரனின் குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்னை வைத்து பார்த்தேன். எனது தந்தையை இழந்தபோது நான் கதறி கண்ணீர் விட்டது போன்றுதான் அந்த குழந்தைகளும் கதறும் என்று உணர்ந்தேன். வன்முறையை எதிர்த்து போரிட அகிம்சையால் மட்டுமே முடியும்.

    என்னை பற்றி பிரதமர் மோடி வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் நான் அவரிடம் அன்பை மட்டுமே காட்டுகிறேன்.

    நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நான் அவரை கட்டிப்பிடித்ததை எனது கட்சியை சேர்ந்த சிலர்கூட விரும்பவில்லை. ஆனால் வெறுப்புக்கு பதிலாக வெறுப்பையே காட்டுவது முட்டாள்தனமானது. எந்த பிரச்சினைக்கும் இது தீர்வாகாது.

    வேலையில்லா திண்டாட்டத்தை மிகப்பெரும் பிரச்சினையாக பார்க்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். இந்த பிரச்சினையை முதலில் உணர்ந்து கொண்டால்தான் அதற்கான தீர்வுகளை காண முடியும்.

    தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களை வளர்ச்சி திட்டங்களில் இருந்து பா.ஜனதா அரசு புறக்கணித்து வருகிறது. இது மிகப்பெரும் ஆபத்தில் முடியும். 21-ம் நூற்றாண்டில் மக்களுக்கான பார்வையை மறுப்பது, அவர்களை ஒதுக்குவது என்பது விபரீதத்தை ஏற்படுத்தி விடும்.

    உலகின் எந்த பகுதியிலும் பெருவாரியான மக்களை வளர்ச்சித்திட்டங்களில் இருந்து ஒதுக்கிய போது, கிளர்ச்சிக்குழுக்களே உருவாகி இருக்கின்றன. இதற்கு உதாரணம்தான் ஐ.எஸ். அமைப்பு.

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பெண்கள் வாழ இந்தியா தகுதியற்ற நாடு என்னும் கருத்தை ஏற்கமாட்டேன். பெண்களை, ஆண்கள் சமமாக பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.  #Prabhakaran #RahulGandhi #Priyanka #tamilnews 
    சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க இருந்த பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அதில் இருந்து விலகினார். தற்போது அதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. #PriyankaChopra
    சல்மான்கான் - பிரியங்கா சோப்ராவை ஜோடியாக வைத்து ‘பாரத்’ என்ற இந்தி படம் தயாராவதாக அறிவித்தனர். இந்த படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.13 கோடி சம்பளம் பேசி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். 

    பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசும் காதலிக்கின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. இதற்காகவே சல்மான்கான் படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது. 

    பிரியங்கா சோப்ராவை படக்குழுவினர் கண்டித்தனர். அவருக்கு பதில் கத்ரினா கைப்பை தேர்வு செய்துள்ளனர். கத்ரினாவை வரவேற்று சல்மான்கானும் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவை புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். 



    இந்த படத்தில் நடிப்பதற்காகவே அவர் பாரத் படத்தில் இருந்து விலகியது தெரிய வந்துள்ளது. பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஹாலிவுட் படத்துக்கு ‘ஹவ்பாய் நிஞ்சா விக்கிங்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகனாக கிறிஸ் பிராட் நடிக்கிறார். இவர் ஜூராசிக் வேல்ட், த கார்டியன் ஆப் த கேலக்ஸி, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பிரியங்கா சோப்ரா ஏற்கனவே ‘எ கிட் லைக் ஜேக்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
    டி.வி. நடிகை பிரியங்கா நேற்று தற்கொலை செய்துக் கொண்டதற்கு காரணமாக அவருக்கு, குழந்தை பெற தடை விதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Priyanka
    டி.வி. நடிகை பிரியங்கா நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ‘குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்று தொலைக்காட்சி நடிகைகளுக்கு கட்டுப்பாடு போடப்படுவதாகவும் பிரியங்காவும் அதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்காவின் தோழிகள் சிலர் கூறியதாவது, ‘தற்போதைய சூழலில் உச்சத்தில் நடித்து வரும் பல நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்வதை வாய்ப்புக்காக தள்ளிப்போடுகிறார்கள்.

    நடிக்க வரும்போது எந்தக் கேரக்டரில் நடிக்க வருகிறார்களோ அதைப் பொறுத்து இத்தனை வருடங்களுக்கு நான் தாய்மை அடையமாட்டேன் என்கிற ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்கள்.

    ஒருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவர் தாய்மை அடைந்து வயிறு பெரியதாகத் தெரிய ஆரம்பித்தால் அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்காது. அதனால் தான் இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது.

    இதுபோன்ற ஒப்பந்தங்கள் கட்டாயம் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தற்போது சீரியல்களில் நடித்துவரும் நடிகைகளுக்கும் இதுபோன்ற மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தொடர்களில் நடிக்கும் நடிகைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. டிவி தொடர்பான சங்கங்கள் இதற்கு மனிதாபிமான அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    ×