search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96418"

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு இந்த தேர்தலில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். மே 23-ம் தேதி மக்களின் ‘மன் கி பாத்’ வெளியாகிவிடும் என சிவசேனா குறிப்பிட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    மும்பை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா, அவ்வப்போது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சில கருத்துகளையும் வெளியிட்டு வருகிறது.

    அவ்வகையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக நம் நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மற்ற பல நாடுகளின் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இவற்றை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? என அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  



    காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றெல்லாம் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    (இதில் எதுவும் நிறைவேற்றப்படாததால்) இந்த தேர்தலில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மக்களை நீண்டகாலத்துக்கு முட்டாள்களாக்க முடியாது என்பதை வரலாறு நமக்கு தெளிவுப்படுத்தி உள்ளது.

    மக்கள் தங்களிடம் உள்ள கேள்விகளுக்கு வாக்குமுறையின் மூலம் பதிலும் வைத்திருக்கிறார்கள். வரும் மே மாதம் 23-ம் தேதி மக்களின் பதில்கள் ‘மன் கி பாத்’ ஆக வெளியாகிவிடும் என்றும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்புபவர்களுக்கு பதில் அளித்த சிவசேனா, தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல என குறிப்பிட்டுள்ளது. #Patriotism #Patriotismmonopoly #ShivSena
    மும்பை:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி சமீபத்தில் பேரணி ஒன்றில் ராணுவத்தினர் அணியும் சீருடையுடன் கலந்து கொண்டார். இதை குறிவைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டி வருகின்றன. ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடி வருவதாக எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.

    இந்நிலையில்,  தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல என சிவசேனா கட்சி குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.

    விமானப்படையினர் நடத்திய தாக்குதல் என்பது அவர்களின் பணியின் ஒரு பகுதியாகும். யாரும் இட்ட வேலையை செய்வதற்காக அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தலைகணக்கு கேட்பவர்களும், தாக்குதலுக்கு உரிமை கோரும் வகையில் ராணுவ சீருடையில் ஊர்வலமாக செல்பவர்களும் சரிசமமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

    இதுதொடர்பாக கேள்வி எழுப்புபவர்கள் அரசியல் எதிரிகள் என்பதால் அவர்களின் கருத்துரிமையை தேசத்துரோகம் என்று யாரும் கூற முடியாது.

    புல்வாமா தாக்குதலில் இருந்து நமது வீரர்களின் உயிர்களை பாதுகாக்க நாம் அடிப்படையில் தவறி விட்டோம். ஆனால், பல மாதங்கள் சிரமப்பட்டு, பயிற்சி பெற்ற பின்னர் ராணுவ வீரர்கள் அணியும் சீருடையில் சிலர் அரசியல் ஊர்வலம் நடத்துகின்றனர்.



    தேர்தல் கமிஷனே நேரடியாக தலையிட்டு இதுபோல் செய்ய கூடாது என எச்சரிக்கும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. தேசபக்தி என்பது எந்த ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட ஏகபோக உரிமையும் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Patriotism #Patriotismmonopoly #ShivSena
    ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தான பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. #ShivSena #Pakistan #GlobalMap #IndiaPakistanWar
    மும்பை:

    ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தான பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உலக வரைபடத்தில் பாகிஸ்தான் துடைத்தெறியப்படும் வரை உலகம் முழுவதும் அமைதி என்பது இருக்காது. பாகிஸ்தான் போன்ற நாடு இந்தியாவுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆபத்தானது. அங்கு தொடரும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் வரை, நமது நாட்டு ராணுவ வீரர்களின் நடவடிக்கையும் தொடர வேண்டும்.

    பாகிஸ்தானின் மண்ணில் அல் கொய்தா தலைவரான ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுட்டுக்கொன்றது. அதே பாணியில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் ஆசார் அழித்தொழிக்கப்பட வேண்டும்.

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1971-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றினார். பிரதமர் மோடி ஆட்சியில் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    முதல் மந்திரி பதவியை சுழற்சி முறையில் ஆள வேண்டும் இல்லையென்றால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவோம் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. #RamdasKadam #ShivSena #BJP
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே பல்வேறு வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் பா.ஜனதாவின் திட்டங்களை சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்தது.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாரதிய ஜனதா 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் செய்துள்ளன.



    கடந்த திங்கட்கிழமை இதற்கான உடன்படிக்கையில் பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷாவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கையெழுத்திட்டனர். ஆனால் மறுநாளே இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் உருவானது.

    சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “கடந்த 25 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கூட்டணி கொள்கையை நிராகரித்து விட்டேன். இனிவரும் தேர்தல்களில் பா.ஜனதா, சிவசேனா இரு கட்சிகளும் சரிசமான இடத்தில் போட்டியிட வேண்டும். அனைத்துப் பதவிகளையும் இரு கட்சிகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் வகிக்க வேண்டும் என்றேன். எனது இந்த கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகே கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது” என்றார்.

    சிவசேனாவின் இந்த கருத்தை பா.ஜனதா அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்தார். அவர் கூறுகையில், “எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவர் முதல்- மந்திரி பதவியைப் பெறுவார்” என்றார்.

    இது சிவசேனா தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிவசேனா அமைச்சர் ராம்தாஸ்காதம் கூறியதாவது:-

    ராம்தாஸ்காதம்

    மராட்டியத்தில் பா.ஜனதாவும், சிவசேனாவும் இரண்டு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஒப்பந்தம் செய்துள்ளன. கொங்கன பகுதியில் மேற்கொள்ள உள்ள நனார் சுத்திகரிப்பு திட்டத்தை கைவிட வேண்டும். முதல்- மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் என்ற முறையில் சுழற்சி முறையில் ஆள வேண்டும்.

    இந்த இரு திட்டங்களையும் பா.ஜனதா மீறினால் அதன் கூட்டணியில் இருந்து சிவசேனா உடனே விலகும். தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூட்டணியை முறித்து விடுவோம்.

    இவ்வாறு சிவசேனா மந்திரி ராம்தாஸ் காதம் கூறினார்.

    இதனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #RamdasKadam #ShivSena #BJP
    பிரதமர் மோடியின் தலைமையுடன் ராகுல் காந்தியையோ, பிரியங்காவையோ ஒப்பிட முடியாது என சிவசேனா கூறுகிறது. #ShivSena #PMModi
    மும்பை :

    மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதிலும் எதிர்க்கட்சிகளையும் மிஞ்சி, பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சிவசேனா வசைபாடி வந்தது. பா.ஜனதாவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்று சிவசேனா தலைவர் அறிவித்தார்.

    ஆனால் திடீர் திருப்பமாக கடந்த திங்கட்கிழமை பா.ஜனதாவுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமின்றி, மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கும் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கூட்டணி உருவான நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு பிரதமர் மோடியை சிவசேனா கட்சி புகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இடையேதான் அதிக கேள்விகள் எழுந்து இருக்கின்றன. எங்கள் கூட்டணியால் பூச்சிகள் போன்ற எதிர்க்கட்சிகள் நசுக்கப்படும்.



    2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல்காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. பிரியங்காவும் உதவியாக இருக்கிறார். ஆனால், இருவரையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே கருத்துவேறுபாடுகள் எழுந்த நிலையில் ஏன் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்? ராமர் கோவில் கட்டப்படுமா?, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரப்படுமா? என்பவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த கேள்விக்கான பதில், மராட்டியத்தின் நலனுக்காகவே கூட்டணி முடிவை சிவசேனா எடுத்து உள்ளது.

    சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்தவிதமான பகைமையும் இல்லை. பீகார் முதல்-மந்திரி நிதி‌ஷ் குமாருக்கு பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும்கூட, அதையெல்லாம் மறந்து அவர் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர முடியும், காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முடியும் என்கிறபோது, சிவசேனா எப்போதும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கமாக இருக்கும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பலையும், மோடிக்கு ஆதரவான அலையும் காணப்பட்டது. ஆனால், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அலையின் அடிப்படையில் போட்டி இருக்காது. ஆனால் கொள்கைகள், வளர்ச்சிப்பணிகள், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ShivSena #PMModi
    மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ShivSena #BJP #LokSabhaelections #DevendraFadnavis #ShivSenaBJPpact
    மும்பை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள பன்ட்ரா பகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார். #ShivSena #BJP #LokSabhaelections #DevendraFadnavis #ShivSenaBJPpact 
    பாராளுன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மும்பையில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact
    மும்பை:

    மத்தியிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் பா.ஜனதா கூட்டணி அரசில் உள்ள சிவசேனா, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. 2019- பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனியாக போட்டியிடுவோம் என அவ்வப்போது கூறிவந்தன.

    ஆனால், அப்படி தனித்து போட்டியிட்டால் விபரீதமான விளைவு ஏற்படும் என இரு கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து இருந்தனர். இதனால், கூட்டணி அவசியம் என்ற நிலைக்கு இரு கட்சிகளும் தள்ளப்பட்டன,

    இதனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது.
      
    இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், பன்ட்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்னும் சிலமணி நேரத்தில் இரு தலைவர்களும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. 

    கடந்த 2014-பாராளுமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதில் பாஜக 23 தொகுதிகளையும், சிவசேனா 18 தொகுதிகளையும் பிடித்திருந்தது நினைவிருக்கலாம்.

    அதே ஆண்டில் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுக்கு பின்னர் அங்கு பாஜக ஆட்சி அமையை சிவசேனா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact 
    மேற்கு வங்காளத்தில் நாடளுமன்ற தேர்தலை முன்வைத்து பா.ஜனதா நாடகத்தை அரங்கேற்றுவதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. #ShivSena #BJP
    மும்பை :

    மேற்கு வங்காளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் மீது ரூ.20 ஆயிரம் கோடி மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அனுமதிக்காமல் மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து மத்திய மற்றும் மராட்டிய பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி, அதன் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

    கொல்கத்தாவில் நடந்து வரும் சம்பவங்கள் அனைத்தும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும். கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரிக்க சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் முறையான சம்மன் கூட எடுத்து செல்லவில்லை.



    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடந்த 4½ ஆண்டுகளாக சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் ஏன் தீவிரம் காட்டவில்லை.

    மேற்கு வங்கத்தில் நிலவும் நெருக்கடி நிலையை நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து பார்க்கவேண்டும், பா.ஜ.க.வின் தலைவராக இருந்து பார்க்கக் கூடாது.

    வரும் தேர்தலில் வடஇந்தியா முதல் மராட்டியம் வரை உள்ள 100 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா குறைவான இடங்களிலேயே வெற்றிபெறும். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக மேற்கு வங்கத்தில் கூடுதலாக 15 இடங்களை கைப்பற்ற அக்கட்சி திட்டமிடுகிறது.

    மம்தா பானர்ஜிக்கும், சி.பி.ஐ.க்கும் இடையேயான மோதல் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதாவால் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.

    மம்தா பானர்ஜிக்கும், எங்களுக்கு கருத்துவேறுபாடு உள்ளது. ஆனாலும், அவர் மத்திய அரசுக்கு நேர்மையுடன் பதிலடி கொடுத்து வருகிறார்.

    இவ்வாறு அதில் சிவசேனா கூறியுள்ளது. #ShivSena #BJP
    தொகுதி பிரச்சினையை மட்டும் பாருங்கள் பா.ஜனதாவுடனான கூட்டணி பிரச்சினையை என்னிடம் விட்டுவிடுங்கள் என எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். #UddhavThackeray #ShivSena
    மும்பை :

    சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று முன்தினம் மாதோ இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தாலும் எப்போதும்போல் நாங்கள் தான் பெரிய அண்ணனாக இருப்போம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனில் பா.ஜனதா எங்களிடம் வரவேண்டும்” என்று கூறினார்.

    இதற்கு சுடச்சுட பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “ நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அப்படி வைத்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை” என பதில் அளித்தார்.

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளிடையே நிலவி வரும் இந்த கருத்துவேறுபாடு காரணமாக கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.



    இந்த நிலையில் நேற்று எம்.பி. எம்.எல்.ஏ.க்களுடனான பேச்சுவார்த்தையின் போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறிய தகவல்களை அவரது நெருங்கிய உதவியாளரான ஹர்சால் பிரதான் நேற்று வெளியிட்டார்.

    இதில், “ சிவசேனா இந்த தேர்தலில் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி போராடும். பதவியில் இருக்கும் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நிலவும் பிரச்சினைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். மற்றொரு முறை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இல்லை என்றால் மற்றவர்களுக்கு வழிவிடுங்கள்.

    பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று உத்தவ் தாக்கரே அவர்களிடம் கேட்டுக்கொண்டதாக ஹர்சால் பிரதான் கூறினார்.

    மேலும், பயிர்க்காப்பீடு கட்டணம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளிடம் விசாரிக்குமாறும், களத்தில் இறங்கி வேலை செய்யுமாறும் உத்தவ் தாக்கரே அவர்களிடம் கோரியதாக தெரிவித்தார். #UddhavThackeray #ShivSena
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜனதாவுக்கு சிவசேனா திடீர் நிபந்தனை விதித்து உள்ளது. எப்போதுமே நாங்கள் தான் பெரிய அண்ணன் என்பதால், பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தான் எங்களிடம் வர வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது. #ParliamentElection2019 #BJP #ShivSena
    மும்பை :

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கூட்டணி இழுபறியில் உள்ளது. சிவசேனாவுடன் தேர்தல் கூட்டணி வைக்க விரும்புவதாக சமீப நாட்களாக பா.ஜனதா பல தடவை தெரிவித்தது. ஆனால், சிவசேனாவோ அதை பற்றி பேசவே இல்லை. பா.ஜனதா அரசை வசைபாடுவதிலேயே குறியாக உள்ளது.

    இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தனது மாதோ இல்லத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதில், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் வெளியே வந்த சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் பதிலளித்து கூறியதாவது:-

    மராட்டியத்தை பொறுத்தவரை கூட்டணியில் எப்போதும் சிவசேனா கட்சி தான் பெரிய அண்ணனாக செயல்பட்டது. இனியும் பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் சிவசேனாவே பெரிய அண்ணனாக செயல்படும். அவர்கள்(பா.ஜனதா) கூட்டணி வைக்க விரும்பினால் எங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பேச்சுவார்த்தைக்காக யாராவது அழைப்பு விடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.

    பாந்திராவில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ வீட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அங்கு சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் வந்த போது எடுத்தபடம்.

    வருமான வரி விலக்கை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. பின்னர் ஏன் அவர்களுக்கு வருமான வரி விலக்கிலும் ரூ.8 லட்சம் அனுமதிக்க கூடாது.

    மேலும் மாநிலத்தில் நிலவும் வறட்சி, ரபேல் போர் விமான முறைகேடு தொடர்பாக வரும் தேர்தல் பிரசாரத்தில் பேசுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் ஜல்னாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் பேச்சுக்கு சுடச்சுட பதில் அளித்துள்ளார்.

    அதில், “பா.ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. ஆனால் கண்டிப்பாக கூட்டணி வைக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. நாங்கள் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையிலும், ஊழலுக்கு எதிராக போராடவே கூட்டணி அமைக்க விரும்புகிறோம். 60 ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட குண்டு, குழிகளை வெறும் 5 ஆண்டுகளில் சரிசெய்ய முடியாது. நாங்கள் இந்த வேலையை தொடர விரும்புகிறோம்” என்றார்.

    2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை சிவசேனா, பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டியே அந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பிளவு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.

    தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection2019 #BJP #ShivSena
    பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் என சிவசேனா தெரிவித்துள்ளது. #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
    மும்பை:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

    தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 
     
    பிரியங்காவுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள்  என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷா கயாண்டே கூறுகையில், பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி குணங்கள் தென்படுகிறது. எனவே, வரும் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியின் முகத்தை காண்பார்கள் என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
    மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #ShivSena #PMModi #BJP
    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜனதாவையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.



    இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைக்காது. நாங்கள் அந்த கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இல்லை. 2014 தேர்தல் போல் பா.ஜனதாவுடன் எங்கள் உறவு இல்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற வார்த்தை இனி எங்கள் அகராதியில் கிடையாது.

    இந்த தேர்தலில் தொங்கு பாராளுமன்றம் தான் உருவாகும். அப்படி உருவானால் பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை முன்னிறுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாங்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம். மோடியை முன்னிறுத்தினால் நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிட போவதாக சிவசேனா அறிவித்தது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. 25 தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளது.

    பா.ஜனதா அல்லாத சிறிய கட்சியுடன் கூட்டணி அமைத்து அந்த மாநிலத்தில் போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் சிவசேனாவை சமாதானப்படுத்த கூட்டணி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    சிவசேனாவின் நிறுவன தலைவரான பால்தாக்கரேக்கு நினைவு மண்டபம் கட்ட ரூ.100 கோடியை ஒதுக்கி மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. #ShivSena  #PMModi #BJP

    ×