search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96418"

    கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி மேற்கொண்ட சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதாக சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. #Modi #ShivSena
    மும்பை:

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த 14-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

    ஆனால் ஐ.நா.வின் அறிக்கை உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு இதனை புறக்கணித்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து கூறியிருப்பதாவது:-



    இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு நகைப்புக்குள்ளாகி இருக்கிறது. ரம்ஜான் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசை தான் குற்றம்சாட்ட வேண்டும். கடந்த 4 மாதங்களில் மட்டும் காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானோர் நமது ராணுவ வீரர்கள்.

    நாட்டின் ராணுவ மந்திரி உட்கட்சி விவகாரங்களில் பரபரப்பாக இருக்கும் நிலையில் பிரதமர் மோடியோ வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமரின் கடந்த 4 ஆண்டுகால வெளிநாட்டு பயணங்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படும் கருத்து காஷ்மீர் குறித்த தற்போதைய ஐ.நா. அறிக்கையை தொடர்ந்து தவிடுபொடியாகி விட்டது.

    பிரதமர் மோடி எண்ணற்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், காஷ்மீர் விவகாரத்தில் யாரும் இந்தியாவின் பக்கம் நிற்க தயாராக இல்லை. இவை பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதையே காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.   #Modi #ShivSena  #tamilnews
    தன்னுடைய அரசியல் எதிரி பா.ஜ.க. என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறிய நிலையில் அமித்ஷா நாளை அவரை சந்தித்து பேச உள்ளார். #BJP #Amitshah #UddhavThackeray
    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடைத்தேர்தல்களில் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.

    சிவசேனாவுக்கு ஆதரவாக இருந்த மாநில கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக கூட்டணியில் இருந்து வெளியேறியது தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

    அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ள நிலையில் தற்போதைய நிலை நீடித்தால் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாது என்ற அபாயத்துக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது.

    இந்த அபாயத்தை முன் கூட்டியே சரிப்படுத்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பழைய கூட்டணி கட்சிகளை மீண்டும் அரவணைத்து செல்லும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளார்.

    முதல்கட்டமாக மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவுடன் இணக்கமாக செல்ல பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. இதற்காக அமித்ஷா நாளை மராட்டியம் செல்கிறார்.

    அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அமித்ஷா சந்தித்து பேச உள்ளார்.

    அப்போது பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனாவை நீடிக்க செய்ய அமித்ஷா வலியுறுத்துவார் என்று தெரிகிறது. அதன்பிறகு மற்ற மாநில கூட்டணி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார். #BJP #Amitshah #UddhavThackeray
    தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.
    மும்பை:

    மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய சுயநலத்துக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்கிறது. தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சமீபத்தில் 4 மக்களவைத் தொகுதிகள், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலின் போது கர்நாடக, மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை செய்து தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்பட்டு, தன்னுடைய சுயலாபத்துக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்கிறது. நமது நாட்டில் ஜனநாயகம் நீண்ட நெடுங்காலமாக நீடித்து இருப்பதால்தான், உலகில் மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கிறது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் ஜனநாயகம் சீரழிகிறது.

    தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். இதே மின்னணு இயந்திரங்களை பாஜக எதிர்த்தது நினைவிருக்கும். இப்போது ஒட்டுமொத்த நாடே மின்னணு வாக்கு இயந்திரங்களை எதிர்க்கிறது. ஆனால், பாஜக அதை ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் மின்னணு வாக்கு எந்திரங்களை எதிர்க்கும் போது, ஏன் பாஜக அரசு மட்டும் ஆதரிக்கிறது.

    இவ்வாறு சிவசேனா கட்சித் தெரிவித்துள்ளது.
    பாரதிய ஜனதா ஒரு பைத்தியகார கொலைக்கார கட்சி, வழியில் யார் வந்தாலும் கொல்லும் என சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. #BJP #ShivSena
    மும்பை:

    பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, அக்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பாரதிய ஜனதாவை ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் கடுமையாக தாக்கி வருகிறது.

    மராட்டிய மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு கூட்டணி கட்சிகளான சிவசேனாவும், பாரதிய ஜனதாவும் தனித்தனியாக வேட்பாளரை இறக்கி உள்ளது. இரு கட்சிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்கையில் சிவசேனா துரோகம் செய்துவிட்டது என குற்றம் சாட்டினர்.

    அவர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாரதிய ஜனதா ஒரு பைத்தியகார கொலைக்கார கட்சி, வழியில் யார்வந்தாலும் கொல்லும் என கூறிஉள்ளார்.

    விரார் பகுதியில் அமைந்து உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற யோகி ஆதித்யநாத் கால் செருப்பை கழட்டவில்லை எனவும் சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. நாங்கள் முதுகில் குத்திவிட்டோம் என யோகி ஆதித்யநாத் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் பேசுவதற்கு பொருத்தமானது கிடையாது. பாரதிய ஜனதாதான் பால் தாக்கரேவை முதுகில் குத்தியவர்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளது என சிவசேனா கூறியுள்ளது. #BJP #ShivSena
    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் பாஜக முதுகில் குத்திவிட்டது என உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், விரார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை சேர்ந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று பேசியதாவது:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் இந்துத்துவா பாதையில் இருந்து திசைமாறி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியால் தான்  வளர்ச்சி சாத்தியமாகும்.

    எங்கள் கட்சி விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. பாஜக அதன் கூட்டணி கட்சியால் முதுகில் குத்தப்பட்டு வருகிறது. இதை காணும் ண்டால் பால் தாக்கரே ஆன்மா மிகவும் வருந்தும், துக்கப்படும்,

    பால்கர் தொகுதியில் பாஜகவினர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    மகாராஷ்டிரா மாநில மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் பெறும் வெற்றி மூலம் நிலையான ஆட்சி கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைவது உறுதி என தெரிவித்தார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    கர்நாடகத்தில் நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். #Karnataka #BJP #ShivSena #UddhavThackeray
    மும்பை:

    பா.ஜனதாவின் பழைய கூட்டணி கட்சியான சிவசேனா, பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உல்ஹாஸ் நாகரில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில் கர்நாடக விவகாரம் குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-

    எந்த கட்சிக்கு அதிக பலம் இருக்கிறதோ அந்த கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் கர்நாடகத்தில் நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை.

    கவர்னர் வஜுபாய் வாலா ஜன சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் கட்சி தொண்டர் போல் நடந்து கொள்கிறார். கர்நாடகத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் டெல்லி உத்தரவுப்படி நடக்கிறது. டெல்லி மேலிடம்தான் முடிவு எடுக்கிறது.


    கவர்னரைப் போல் முதல்-மந்திரிகளையும் நீங்களே நியமித்துக் கொண்டால் தேர்தல் எதற்கு? டெல்லியில் இருந்து முதல்-மந்திரியை நியமித்துக் கொள்ளுங்கள். அப்படி டெல்லியே நியமித்தால் தேர்தல் சமயங்களில் பிரசாரம் செய்ய வேண்டி இருக்காது. மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கும் இடையூறு இருக்காது.

    ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது ராமர் கோவில் கட்டுவோம் என்பார்கள். கர்நாடக தேர்தலில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தியதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எனவே வாக்கு சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karnataka #BJP #ShivSena #UddhavThackeray
    மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar
    மும்பை:

    மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையின் இன்றைய பதிப்புடன் வெளியாகியுள்ள இணைப்பு பகுதியில் ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:-

    பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவைப் போல் வீர சவர்க்காரும் ‘பாரிஸ்ட்டர்’ பட்டம் பெற்றவர்தான். ஆனால், ஜின்னா தனது படிப்பை பாகிஸ்தான் பிரிவினைக்கு பயன்படுத்தி கொண்டார்.

    வீர சவர்க்கார் தனது படிப்பை இந்த நாட்டுக்காக தியாகம் செய்தார். இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணாசிரம கொள்கையை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை அவர் ஆதரித்தார். இந்துத்துவா கொள்கைகளை மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாலும், மதம்சார்ந்த மூடப்பழக்கங்களை கண்மூடித்தனமாக அவர் ஆதரித்தது கிடையாது.

    அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருந்து முகமது அலி ஜின்னா புகைப்படத்தை நீக்கியதற்கு பதிலடி தரும் விதமாக சில அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வீர சவர்க்காரின் புகைப்படம் நீக்க வேண்டும் என்று கூக்குரல் எழுந்துள்ளது. ஜின்னாவை ஆதரிப்பவர்கள் வீர சவர்க்காரை வெறுப்பதை வைத்தே அவர் இந்து மதத்தின் எவ்வளவு பெரிய அடையாளமாக கருதப்படுகிறார்? என்பதை புரிந்து கொள்ளலாம்.

    இப்படிப்பட்ட வீர சவர்க்காருக்கு மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் பாரத ரத்னா பட்டம் தர வேண்டும். இல்லாவிட்டால், அரசியலுக்காக மட்டுமே நாங்கள் இந்துத்துவாவை பயன்படுத்துகிறோம் என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar 
    தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதிய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது என சிவசேனா பகிரங்கமாக சாடிஉள்ளது. #ShivSena #BJP #EVMs
    மும்பை:

    தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இந்தியரங்களில் மோசடி செய்யப்படுகிறது, ஹேக்கிங் செய்யப்படுகிறது என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது தொடர்கதையாகி வருகிறது. தேர்தல் நடைபெறுகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குப்பதிவானதை தெரிவிக்கும் விதமாக பா.ஜனதா சின்னத்தில் விளக்கு எரிகிறது என்ற குற்றச்சாட்டும் தேர்தல் நேரங்களில் முன்வைக்கப்பட்டது. இயந்திரத்தில் மோசடி என்பதை தேர்தல் ஆணையமும் மறுத்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதிய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது என பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா பகிரங்கமாக சாடிஉள்ளது.

    கர்நாடகாவில் பெருமளவு போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது, கர்நாடகாவில் தேர்தல் செயல்முறைகள் எப்படி மோசமான நிலையை எட்டி உள்ளது என்பதை காட்டுகிறது எனவும் சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.

    சிவசேனாவின் கட்சி பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில், “காங்கிரஸ் இல்லாத பாரதம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். காங்கிரசும் முடிவுக்கு சென்றுக்கொண்டு இருந்தாலும், அதனுடைய சிந்தனைகள் இறக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் குணங்களை கொண்டு அக்கட்சியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜனதா முயற்சி செய்கிறது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    “தேர்தல்களில் அதிகமான அளவு பணம் செலவு செய்யப்படும் என்பது வழக்கமானதாக இருக்கிறது. பாரதிய ஜனதாவிற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைக்கிறது இனியும் ரசியமாக இருக்காது, அது எல்லோருக்கும் தெரிந்தது. பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் பணம் புரளுவது வழக்கமானது. பணம் வழங்குவதை காங்கிரஸ் தொடங்கியது, இப்போது பா.ஜனதா பின்பற்றுகிறது.

    பாரதிய ஜனதா எங்களுடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். ஏமாற்றியோ, தவறான வழியிலோ தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கொள்கையை பாரதிய ஜனதா கையில் எடுத்து உள்ளது. பாரதிய ஜனதா தன்னுடைய கொள்கையை முன்னெடுத்து செல்கிறது என்பது காங்கிரஸ் பெருமைப்பட வேண்டும்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேர்தலில் பெருமளவு வெற்றியை தனதாக்கிய போது, சிவசேனா தலைவர் பால் தாக்கரே அவருடைய வெற்றி குறித்து கேள்வியை எழுப்பினார். இந்திராவால் பெற்ற வெற்றி கிடையாது, மையால் கிடைத்த வெற்றி என்றார். இப்போது மையை பயன்படுத்தும் முறையானது கிடையாது. ஆனால் பாரதிய ஜனதா தேர்தல்களில் வெற்றிப்பெற வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது, இப்போது உள்ள தேர்தல் முறையில் இனியும் மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்களுடைய முகமூடிதான் மாறிஉள்ளது, ஆனால் அதற்கு பின்னால் இருப்பவர்களின் முகமானது அப்படியே இருக்கிறது.

    காங்கிரஸை பாரதிய ஜனதா தோற்கடிக்கவில்லை, ஆனால் மோசடியில் அதனுடன் இணைந்து உள்ளது,” என சிவசேனா தெரிவித்து உள்ளது. #ShivSena #BJP #EVMs
    ×