search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96460"

    ஒரத்தநாட்டில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் செயல்படும் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார்.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி மாணவியின் தந்தை ஒரத்தநாடு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (20) என்ற வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரியவந்தது.

    அவரை நேற்று இரவு 11 மணி அளவில் போலீசார் கைது செய்து மாணவியை மீட்டனர். பின்னர் அவர் மாணவியை பலாத்காரம் செய்தாரா? என்பதை தெரிந்து கொள்ள அவரை இன்று மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் ஒரத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம் ஆசிரியை காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் இந்திராகாந்தி சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் கிரிராஜன். இவரது மனைவி மீரா. கிரிராஜன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் காயத்ரி (வயது31). இவர் கும்பகோணம் எல்.பி.எஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை காயத்ரி பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அப்போது பள்ளியிலிருந்து மகாமகம் குளத்தின் வடகிழக்கு மூலை நுழைவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் காயத்ரியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயத்ரி கீழே விழுந்ததும் அவரை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர். இதில் திருச்சி- திண்டுக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள கேமராவை ஆய்வு செய்யும் போது அதில் ஆசிரியையை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியையை மீட்க தனிப்படை பிரிவு போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளனர்.

    கோவை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    கோவை வரதராஜபுரத்தை அடுத்துள்ள எம்.கே. தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்த கோபால் (66). ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவருடன் தொழில் ரீதியாக கோவையை சேர்ந்த டென்னிஸ் பழகி வந்துள்ளார். இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்த கோபாலிடம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி உள்ளார்.

    இதற்கு நடந்த கோபாலும் சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 26-ந் தேதி நந்த கோபாலை சந்தித்த டென்னிஸ் திருப்பூரில் உள்ள தனது நண்பர்களையும் சீட்டு நிறுவனத்தில் சேர்த்து விடலாம் என கூறி இருக்கிறார்.

    இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்தகோபால் காரிலே அவரையும், அவரது நண்பர் ராமமூர்த்தியையும் திருப்பூரை அடுத்துள்ள கணியாம் பூண்டி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு டென்னிஸ் நண்பர்களான செல்வா, போலீஸ் கார்த்தி, ரகு ஆகியோர் ஒரு வீட்டில் இருந்தனர்.அங்கு நந்த கோபால், ராமமூர்த்தி ஆகியோரை அழைத்து சென்று அவர்களது கைகளை கட்டி போட்டு சிறை வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் ரூ. 1 கோடி எடுத்து வர சொல்லுமாறும் இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.இதற்கிடையே கணியாம்பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் நடமாடுவதாக அனுப்பர்பாளைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அங்குள்ள வீட்டில் நந்தகோபால், ராமமூர்த்தி அடைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் மீட்டனர். நந்த கோபால் காரும் கைப்பற்றப்பட்டது.

    அங்கு நிறுத்தி வைத்திருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கார்த்தி காரையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வருவதை அறிந்த டென்னிஸ், செல்வா, கார்த்தி ஆகிய 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். ரகு மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஒரு தனிப்படையினர் கோவைக்கும் விரைந்து உள்ளனர். நந்த கோபாலை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணியாம்பூண்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.அதன் உரிமையாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் வீட்டை பார்க்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர். அவரும் வேறு ஒருவர் மூலம் சாவியை கொடுத்துள்ளார்.

    அங்கு தான் நந்தகோபால், ராமமூர்த்தியை கடத்தி வைத்து உள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேர் மீதும் திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #tamilnews
    மேல்மலையனூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் சாலையோரத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேல்மலையனூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா அரும்பலூரை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது 28). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஜெகதீசன் பணிக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கணபதிபுரம் சாலையோரத்தில் ஜெகதீசன் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    பிணத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சாய்ந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின்னர் அவர் அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு சாலையோரம் பிணமாக கிடந்த ஜெகதீசன் உடலை பார்வையிட்டனர். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது.

    அவரது யாராவது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கொலை செய்து பிணத்தை வீசி சென்றார்களா? அல்லது வாகனம் மோதி அடிப்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஜெகதீசன் இறந்த தகவல் குறித்து அரும்பலூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானில் இருந்து வந்த ரூ.50 கோடி ஹெராயினை காரில் கடத்திச் சென்ற கணவன் - மனைவியை பஞ்சாப் மாநில போலீசார் கைது செய்தனர். #Rs50croreheroin #heroinrecovered
    சண்டிகர்:

    காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு சாலை வழியாக ஹெராயின் கடத்தப்படவுள்ளதாக பஞ்சாப் சிறப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைதொடர்ந்து, லூதியானா மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது வாதுமை பருப்பு பைக்குள் சுமார் 10 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    அந்த காரில் வந்த முகமது அர்பி மற்றும் அவரது மனைவி ஜமிலா பேகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் சுஞ்சாமா கிராமத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஹெராயின், காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதி வழியாக கடத்தி வரப்பட்டு, லூதியானாவில் உள்ள இடைத்தரகருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #Rs50croreheroin #heroinrecovered 
    மகளிர் சுய உதவிக்குழு தவணை செலுத்தாததால் சிறுவனை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்த ராஜூ மனைவி சுலோச்சனா (வயது48). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த குழுவில் குலாளர்பாளையத்தை சேர்ந்த வீரணன் மனைவி ராணி (29). உறுப்பினராக உள்ளார்.

    இவர் ரூ.25 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை தவணை செலுத்தி வந்தார். கடந்த 2 மாதமாக ராணி தான் வாங்கிய கடனுக்கு தவணை கட்டாமல் இருந்துள்ளார்.

    ஆத்திரம் அடைந்த சுலோச்சனா, ராணியின் வீட்டில் வந்து சத்தம்போட்டு சென்றார். நேற்று மாலையில் ராணியின் மகன் செல்வகணபதி (11) என்பவனை சுலோச்சனா பள்ளி முடிந்து வரும்போது வழியிலேயே மடக்கி கடத்தி சென்று விட்டார். தன் மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததை அறிந்த ராணி பள்ளியில் தேடி பார்த்தார். அங்கு தனது மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் கேட்டபோது சுலோச்சனா அழைத்து சென்றதாக கூறினர்.

    அப்போது ராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய சுலோச்சனா நீ கட்ட வேண்டிய தவணை தொகையை செலுத்தி விட்டு உன் மகனை அழைத்து செல் என கூறினார். இதை கேட்டதும் பதறி போன ராணி போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சுலோச்சனா வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுவன் செல்வகணபதியை மீட்டனர். மேலும் பணத்திற்காக சிறுவனை கடத்தி சென்ற சுலோச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை அறையில் அடைத்து கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் அழகுபாண்டி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இவர் பிளஸ்-1 படித்து வந்தார். நாளடைவில் இவர்கள் பழக்கம் அதிகரிக்கவே பிரேமாவை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    பின்னர் சம்பவத்தன்று அவரை பல்லடத்தில் உள்ள தனது நண்பர் வினோத் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    தனது மகளை காணாமல் திடுக்கிட்ட பிரேமாவின் பெற்றோர்கள் அழகுபாண்டி கடத்திச் சென்றது தெரிய வரவே அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்தனர். பிரேமாவை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து வாலிபர் மற்றும் ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.#ChennaiAirport
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் தனது பையை விமான நிலைய தற்காலிக ஊழியரிடம் கொடுத்தார். அந்த பையை விமான நிலையத்தின் வெளியே வந்து அந்த வாலிபரிடம் ஊழியர் கொடுத்தார்.

    இதை கண்காணித்த அதிகாரிகள் 2 பேரையும் பிடித்தனர். பையை சோதனை செய்தபோது அதில் 1.2 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ38 லட்சம் ஆகும்.

    விசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவரிடமும், விமான நிலைய ஊழியரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport
    காஷ்மீரில் இருந்து ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து டெல்லி எடுத்துச் செல்லப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #NCB #HeroinSeized
    புதுடெல்லி:

    பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து, ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள், ஆப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். குப்ராவா மாவட்டத்திலிருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாகவும், டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். #NCB #HeroinSeized
    ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். #StudentsKidnap #CameroonKidnap
    யவுன்ட்:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேரும், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவரும் கடத்தப்பட்டனர்.

    கடத்தப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எதற்காக கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு இருந்தது.



    இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 78 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஓட்டுனரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் கடத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள்ளனர்.

    அவர்களை கடத்தியதற்கான காரணம் மற்றும் பயங்கரவாதிகளின் கோரிக்கை குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. #StudentsKidnap #CameroonKidnap
    நாகை அருகே மதுபாட்டில்களை கடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு பயன்படுத்திய கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுவிற்பனையை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாகை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திட்டச்சேரி போலீஸ் சரகம் அண்ணா மண்டபம் அருகே தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் அருண்மொழித்தேவன் மெயின்ரோட்டை சேர்ந்த காளிமுத்து மகன் வடிவேல் (வயது 35), அவரது மனைவி சித்ரா (34) ஆகியோர் புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய வடிவேல், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கரூர் அருகே காரில் கடத்தப்பட்ட 118 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் காந்திகிராமத்தில் கரூர்- திருச்சி மெயின்ரோட்டில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் இந்துராணி தலைமையிலான போலீசார் கடந்த 17-ந் தேதி மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு காரினை வழிமறித்து போலீசார் சோதனை செய்த போது, அதில் மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தபோது அவர், தாந்தோன்றிமலை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பழனிவேல் என்கிற அசோக்(வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் அவர், கரூரில் பதுக்கி வைத்து விற்பதற்காக புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர். அவரிடமிருந்து கார், 118 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×