search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96528"

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் முன்பை விட இப்போது தெளிவாக பேசுகிறார் என்று கரூரில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி பேசினார். #dmdk #vijayakanth
    கரூர்:

    கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான ஆய்வு கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் வரவேற்று பேசினார். 

    மாற்றுத்திறனாளி அணி செயலாளர் பவர்டெக்ஸ் கே.செல்வராஜ், நெசவாளர் அணி செயலாளர் ராமநாதன், தொழிற்சங்க பேரவை துணை தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை  செயலாளர் முன்னாள்  எம்.எல்.ஏ. பார்த்தசாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்கள் அ.தி.மு.க- தி.மு.க. மீது வெறுப்பில் இருக்கிறார்கள். அரசியலுக்கு புதிதாக வரும் ரஜினி, கமலை பற்றியும்    பேசவில்லை. மாறாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பே மக்களிடம் உள்ளது. 

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் முன்பை விட இப்போது தெளிவாக பேசுகிறார். என்னிடம் அவ்வப்போது ஆய்வு கூட்டம் பற்றி கேட்டறிந்து வருகிறார். விஜயகாந்த் திரும்பி வரும்போது தமிழகத்தில் அ.தி.மு.க -தி.மு.க. இருக்காது. மக்கள் தே.மு.தி.க. பக்கம் வந்துவிட்டனர். எனவே ஒற்றுமையாக கட்சி பணி யாற்றுங்கள். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அரிவின்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் விஸ்வநாதன், சோமூர் ரவி, முன்னாள் துணை செயலாளர் குமார், நவநீதன், நகர செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் சிவம் ராஜேந்திரன், ஜெயக்குமார், கேப்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dmdk #vijayakanth
    ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் திருடர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது என்று விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். #IdolSmuggling
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோவில் சிலைகளும், விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சாமி சிலைகளையும், பொருட்களையும் மீட்டுள்ளனர். உதாரணமாக வெளிநாடுகளில் இருந்தும், குஜராத்திலிருந்தும் ராஜராஜசோழன் சிலையை மீட்டு கொண்டுவந்தார்கள்.

    இதை பாராட்டி தமிழக அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்றார். பல சாமி சிலைகள் திருடு போயிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து 100 கிலோ தங்கத்திற்கு மேலாக காணிக்கையாக பெறப்பட்டு, முழுமையாக திருடப்படிருப்பதை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


    இதைத் தொடர்ந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அவர்களை கைதும் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து, சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் கண்டனத்திற்குறியது.

    ஒரு துறையில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி, அதில் நடந்திருக்கும் குற்றங்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில், நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு துணைநின்று ஊக்கப்படுத்தாமல், திருடர்களுக்கு சாதகமாக அரசு முடிவு எடுப்பது, திருடர்களை காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சாமி சிலைகளையும், கோவில் சொத்துக்களையும் கொள்ளையடிப்பவர்களை சட்டத்தின் படி இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

    மேலும் கோவில் சொத்துக்களை திருடுபவர்களையும், அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களையும் “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்”.

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல், தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைகள் செயல்படுவதன் மூலம் தான் உண்மையான குற்றவாளிகள் கண்டரியப்படுவார்கள். பல ஆண்டுகளாக கடத்தப்பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்திலே ஏற்பட்டுள்ளது. ஆகவே நேர்மையான அதிகாரிகள் பணியில் தொடரவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #IdolSmuggling #Vijayakanth
    தமிழக மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்காமல் உடனடியாக சொத்துவரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விஜயகாந்த் வலியுறுதியுள்ளார். #DMDK #Vijayakanth #PropertyTax
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற அதிமுக அரசு சொத்து வரியை 50 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவிகிதமும், வாடகை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரியை உயர்த்தி, வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களுக்கும், கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை இந்த என்கவுண்டர் எடப்பாடி அரசு ஏற்படுத்தி உள்ளது.

    சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு, வாடகையை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படும். இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.

    மேலும் வாடகை உயர்வால் வணிகர்கள் தாங்கள் வணிகம் செய்யும் பொருளின் மீது கூடுதல் விலையை ஏற்றி, விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய நெருக்கடியான சூழலை உருவாக்க காரணம் என்ன?

    கையாலாகாத அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெற வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை இன்னமும் பெற முடியாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுபடுத்த முடியாத நிலையிலும், ஆளும் அ.தி.மு.க. அரசு சொத்துவரியை மட்டும் உயர்த்தி வாடகைதாரர்கள், வணிகப் பெருமக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் வண்ணம் மக்களை சொல்லொணாத் துயரத்தில் இந்த நிர்வாகத் திறமையற்ற அ.தி.மு.க. அரசு தள்ளியிருக்கிறது.

    மக்கள் விலைவாசி உயர்வால் ஒருபுறம் தவித்துக் கொண்டிருக்க, அதைப்பற்றியெல்லாம் துளி கூட பொருட்படுத்தாமல் பேருந்து கட்டணத்தை ஒரே நாளில் வானளவு உயர்த்தி ஏழை-எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்த, இடையில் வந்த எடப்பாடி அரசு சொத்துவரி உயர்வு மூலம் பொதுமக்களின் தலையில் மீண்டும் பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்து தாங்க முடியாத சுமையை உருவாக்கி உள்ளது.


    சொத்துவரி உயர்வை சிறிது, சிறிதாக உயர்த்தி இருந்தால் மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வரி உயர்வை எதிர்கொள்ள தயாராவார்கள். ஆனால் அதனையெல்லாம் விடுத்து, பேருந்து கட்டணத்தை ஒரே நாளில் உயர்த்தியது போல சொத்துவரியையும் 100 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியது பெரும் கண்டனத்திற்கு உரியது.

    மேலும் இங்கு உள்ளாட்சி அமைப்புகளினுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அந்தந்த இருப்பிடத்திற்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் இங்கு இன்னும் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்படாத நிலையில், அதிகாரம் உள்ளவர்களே இல்லாது மக்களுக்கு நெருக்கடியான துன்பத்தை தருக்கின்ற எந்த திட்டத்தையும் அறிவிக்க முடியாது.

    எனவே அதிகாரமே இல்லாது அவசரகால நெருக்கடியில் சொத்து வரியை 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மக்களை நெருக்குகின்ற சொத்து வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    தவறும் பட்சத்தில் மக்களுக்கான களத்தில், போராட்டம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தே.மு.தி.க. இறங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, ஏற்கனவே பல நெருக்கடியில் உள்ள தமிழக மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்காமல் உடனடியாக சொத்துவரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth #ChennaiCorporation #PropertyTax
    தா.பேட்டை அருகே விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் கிராமத்தில் கொல்லிமலை அடி வாரத்தில் அமைந்துள்ள நரசிங்கபெருமாள் கோவிலில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். அப்போது தே.மு.தி.க நிறுவன தலை வர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    இதில் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, பிள்ளாபாளையம் ஊராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
    விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் பூரண நலத்துடன் தமிழகம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
    கரூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் பூரண நலத்துடன் தமிழகம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

    கரூர் திருக்காம்புலியூர் மாரியம்மன் கோவிலில் விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் அரவை முத்து, பொருளாளர் கே.எஸ். அரிவின்ஸ் தலைமை தாங்கினர்.  மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

    இதில் மாநில மாற்றுத் திறனாளிகள் அணி செயலாளர் பவர் டெக்ஸ் செல்வராஜ்,  பேரவை துணை தலைவர் பொன். இளங்கோவன், சோமூர் ரவி, துணை செயலாளர் விஸ்வ நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் சுப்பையா, தொழிற்சங்கம் இளங்கோவன், ஆனந்த், கேப்டன் மன்றம் பெரியண்ணன், முன்னாள் துணை செயலாளர் குமார்,  யசோதா, சாந்தி, சுப்பிரமணியன், கோபி, தொண்டரணி பழனிச்சாமி மற்றும் தே.மு.தி.க. வினர் திரளாக கலந்து கொண்டனர்.
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை:

    தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய இடத்தை பிடித்தார்.

    முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தார்.

    அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்து தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளிலும் கட்சியினர் அங்கம் வகித்தனர். தமிழக அரசியல் கட்சிகளில் 3-வது இடத்திற்கு வளர்ந்து வந்த தே.மு.தி.க. கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

    கடந்த சில வருடங்களாக விஜயகாந்தின் பேச்சுத் திறன் குறைந்து குரல் வளமும் பாதித்தது. மேலும் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பொது இடங்களில் அவரால் நீண்ட நேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பொதுக் கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை கூட அவர் தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்ற அடைய தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்தனர்.


    இதற்காக அவர் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கின்றார். விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் செல்கிறார்கள்.

    அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் அங்கு 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது.

    அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அவற்றை குணமாக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து அதன் பிறகு சென்னை திரும்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜயகாந்த் சுகம் பெற்று திரும்பி வர கட்சி தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா செல்வதற்காக அவர் குடும்பத்தினருடன் இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். தொண்டர்கள் யாரும் தன்னை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    விஜயகாந்த் முழுமையாக உடல்நலம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் வியாசர்பாடி ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. #Vijayakanth

    பெரம்பூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாளை அமெரிக்கா செல்கிறார்.

    விஜயகாந்த் முழுமையாக உடல்நலம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் வியாசர்பாடி ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று புத்ரினா ஜெய ஹோமம் நடந்தது.

    புரோகிதர்கள் நெருப்பு குண்டம் வளர்த்து மந்திரம் ஓதினார்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த யாகம் மதியம் வரை நடந்தது.

    தே.மு.தி.க . துணை பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் இதில் கலந்து கொண்டு பயபக்தியுடன் வழிபட்டார். வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் மதிவாணன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, யு.சந்திரன் உள்பட 500-க்கும் அதிகமான தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டு விஜயகாந்த் நலம்பெற வேண்டுதல் செய்தனர். #Vijayakanth

    மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் வருகிற 7-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுகிறார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

    வேகமாக நடக்க முடியாமலும், தெளிவாக நீண்ட நேரம் பேசமுடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தே.மு.தி.க. சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் சில நொடிகள் மட்டுமே பேசிவருகிறார்.

    கடந்த மாதம் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கூட அவர் நன்றியுரை மட்டுமே ஆற்றினார். அந்த நிகழ்ச்சியில் அவரது மைத்துனரும், தே.மு.தி.க. துணை செயலாளருமான எல்.கே.சுதீஷ் பேசும்போது, “விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் (இம்மாதம்) வெளிநாடு செல்கிறார். செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சி ஆண்டுவிழாவில் அவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவார்”, என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தநிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேமலதாவும் செல்கிறார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறும் விஜயகாந்த், அடுத்த மாதம் (ஆகஸ்டு) தனது பிறந்தநாளான 25-ந் தேதிக்குள் தாயகம் திரும்புவார் என்று தே.மு.தி.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 
    போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, போக்குவரத்து கழகத்திற்கு போதுமான நிதியினை ஒதுக்கவேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சரிசெய்ய வேண்டும் எனில் 3-ந் தேதி போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, போக்குவரத்து கழகத்திற்கு போதுமான நிதியினை ஒதுக்கவேண்டும்.

    போக்குவரத்து துறையின் சார்பாக நாள் ஒன்றுக்கு 22 ஆயிரத்து 456 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் 90 லட்சம் கிலோமீட்டர் ஓட்டப்படுகிறது.

    இதற்கு 18 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 12 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதற்கு மத்திய, மாநில அரசு வாட் வரியாக 24.99 சதவிகிதம் செலுத்துவதன் மூலம், நாள் ஒன்றுக்கு 3 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 230 ரூபாயும், ஆண்டுக்கு 1148 கோடியே 76 லட்சம் ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பணிக்கொடை சட்டம் 1972-ன் படி போக்குவரத்து தொழிலாளி வாங்கும் ஊதியத்தில் வருடத்திற்கு 15 நாள் ஊதியமாக பணிக்கொடை ஊக்கத்தொகை நிர்வாகம் கொடுக்க வேண்டும். சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் எனில், 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, வருடத்திற்கு ரூபாய் 210 கோடி தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து நிர்வாக செலவுக்கு பயன்படுத்துகிறது.

    தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையின் ஊக்கத்தொகையை நிர்வாகத்தால் கொடுக்க முடியவில்லை.

    போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை பணத்தை, ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பிரீமியமாக செலுத்தி, அதன் மூலம் தொழிலாளர்கள் ஓய்வு பெரும் அன்றே பணப் பலன்கள் வழங்கப்படும் என்ற உத்தரவை வெளியிட்டால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேதனை சற்று குறையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #Vijayakanth
    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    கோவை:

    கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது.

    கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டசபை தொகுதிகளில் 47-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று, கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்துக் காட்டியது.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ஐ கைப்பற்றியது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதற்கு கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜெயலலிதா முன்னுரிமை வழங்கினார். அவரது நம்பிக்கைக்குரிய மாவட்டமாக திகழ்ந்ததால் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்து செயல்படுத்தினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதில் அனைத்து கட்சியினரும் குறியாக உள்ளனர். குறிப்பாக புதிய கட்சி தொடங்கியுள்ள கமலஹாசன் இந்த மாதத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மேலும் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தார்.

    கொங்கு மண்டலத்தில் கால் பதிப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனையில் அவர் இருப்பதால் கோவை சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார்.


    இதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தனது முதல் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இதற்கு முன் ஏற்பாடாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் தாங்கள் முத்திரை பதிக்க ரஜினி, கமல்ஹாசன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வும் தற்போது களத்தில் குதித்துள்ளது.

    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்ட விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் மாநாட்டை அறிவித்திருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமலை தொடர்ந்து விஜயகாந்தும் கொங்கு மண்டலத்தை குறிவைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொங்கு மண்டலம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குமா? அல்லது இவர்களுக்கு சாதகமாக அமையுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    சென்னையில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

    புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர். வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் சென்னையில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    சமீபத்தில் தமன்னாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் சௌந்தராஜா, தன் மனைவியுடன் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். #Vijayakanth #Soundararaja
    நடிகர் சௌந்தரராஜாவிற்கும் தமன்னாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, விஷால், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் சௌந்தரராஜா. இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில், ‘தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர். 

    அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய விஜயகாந்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.
    ×