search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96528"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல் 81.28 ரூபாய்க்கும், டீசல் 73.06 ரூபாய்க்கும், மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.2.12 காசுகள் உயர்த்தி, 481.84 ரூபாயாகவும், மானியம் இல்லாத வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.49.50 காசுகள் உயர்த்தப்பட்டு, 712 ரூபாயாகவும் உள்ளது. எனவே இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் சாமானிய பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால், காய்கறிகள், மளிகைப்பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.#ThoothukudiFiring #VijayakanthProtest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் மே 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன், கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடத்து. அப்போது, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என விஜயகாந்த் தெரிவித்தார். #ThoothukudiFiring #VijayakanthProtest
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest

    சென்னை:

    தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு காவல் துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest
    விஜயகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ThoothukudiShooting #VijayakanthFlight
    மதுரை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவியும் கட்சியின் மகளிரணி தலைவியுமான பிரேமலதா ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்னை புறப்பட்டனர். அந்த விமானத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 65 பேர் பயணம் செய்தனர்.

    ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் மதுரையை நெருங்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டறிந்த விமானி, மதுரை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக  தரையிறக்குவதற்கு அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், மதுரையில் விமானம் தரையிறக்கப்பட்டது. 

    விமானத்தில் பயணித்த விஜயகாந்த், பிரேமலதா, சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    முன்னதாக, துப்பாக்கி சூட்டினால் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #ThoothukudiShooting #VijayakanthFlight
    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், அதில் 12 பேர் பலியானதும், பலர் படுகாயம் அடைந்ததும் நெஞ்சை பதற செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இப்படி ஒரு அராஜக போக்கை போலீசார் நடத்தியிருப்பதை கடுமையான கண்டிக்கிறோம்.



    மத்திய-மாநில அரசுகளுக்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். போராட்டத்தில் படுகாயம் அடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளித்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்த அரசாங்கத்தால் முடியாது. எனவே இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. எனவே இனியும் இந்த அ.தி.மு.க. அரசு ஆட்சியில் தொடராத வகையில் கலைக்கப்பட வேண்டும். அதற்கான முக்கிய முடிவுகளை தமிழக கவர்னர் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்த் எனது நண்பர்கள் என்று தான் சொன்னதில்லை என்று நெல்லையில் சரத்குமார் தெரிவித்தார். #Sarathkumar #KamalHaasan #Rajinikanth
    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு சிறிதும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் வாரியம் என்று கூறாமல் ஆணையம் என்று தாக்கல் செய்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு என்ன தண்டனை என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவுப்படுத்த வேண்டும்.

    கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி மெஜாரிட்டியை பெற்று உள்ளது. ஆனால் அதை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதிய ஜனதாவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாக்குவதற்கு பாரதிய ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்து உள்ளார். பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா ஆட்சி அமைத்தது குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்திலும் தொங்கு சட்டசபை உருவாகலாம். அப்படி தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படாமல் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்களை சந்தித்து வருகிறது.

    சமத்துவத்தை விரும்புகின்ற படித்த, அறிவுள்ள, தன்னம்பிக்கை, நேர்மை, திறமையுள்ள சரத்குமாரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். வருகிற சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெற்று நான் முதல்-அமைச்சர் ஆவேன்.

    எனக்கு வாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. இறைவன் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைத்து இணைந்து செயல்படுவேன், இணைந்து ஆட்சி அமைப்போம். இதுகுறித்து தேர்தல் நேரத்தில் ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் பேசி கூட்டணி முடிவு எடுக்கப்படும். கமல், ரஜினி எனது நண்பர்கள் என்று நான் சொன்னதில்லை.

    அவர்கள் என்னுடன் திரைத்துறையில் ஒன்றாக பயணிப்பவர்கள். நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து மக்களை சந்திப்பது வரவேற்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே அதுபற்றி கருத்து கூறவிரும்பவில்லை.

    மக்களை பாதிக்கக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நான் தென்காசி தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். விடுபட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிட உள்ளேன். அந்த தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். விரைவில் தென்காசியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநாடு நடத்தப்படும்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார். #Sarathkumar #KamalHaasan #Rajinikanth
    வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்று பாளையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection
    நெல்லை:

    ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு அருதி பெரும்பான்மை இருந்தும் அது தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என கூறி பா.ஜனதாவை ஆட்சிக்கு அழைத்தது தவறு.


    இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவியவர்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection
    ×