search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    தே.மு.தி.க. நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #ministerrajendrabalaji #dmdk #admk

    சிவகாசி:

    சிவகாசி நகராட்சி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. புதிய தமிழகம், தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தே.மு.தி.க. நிச்சயம் எங்கள் அணிக்கு வரும்.

    ஜெயலலிதா இருந்த போது பா.ம.க. எங்கள் அணிக்கு வரவில்லை. தற்போது அம்மா இல்லாததால் வலுவான கூட்டணி அமைக்க பா.ம.க,வுடன் சேர்ந்துள்ளோம். கமல், ரஜினியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் தற்போது அமைத்துள்ளதுதான் வலுவான கூட்டணி.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அமைச்சர்களும், பா.ஜனதாவினரும் கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். த.மா.கா. தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.

    த.மா.கா.வுக்கு ஒரு இடம் தருவதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த கட்சி வந்தால் அதற்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இந்த கூட்டணி முடிவானால் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னும் 2 நாளில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டு விடும் என்று த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. உறுதியாக வரும். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். #pollachijayaraman #admk #dmdk

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசிடம் இருந்து தொடர்ந்து நிதிபெற்று தந்து பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    மருத்துவமனை விரி வாகத்திற்காக 5 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.10.50 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை செவ்வாய்கிழமை நடைபெற்றது.

    பூமிபூஜையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடங்கி வைத்தார். மகேந்திரன் எம்.பி., முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப் பினர்கள் ஜேம்ஸ்ராஜா, நீலகண்டன், அதிமுக நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூமிபூஜையின்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது,

    பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு என அனைத்து சிகிச்சை பிரிவுகளும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறை, பழனி, தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றார்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. உறுதியாக வரும். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி. தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த காலங்களில் தி.முக. வை கடுமையாக விமர்சித்துள்ளன.

    இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தன. ஆனால், தற்போது, திமுகவுடன் அதே கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது எப்படி என்று தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார். #pollachijayaraman #admk #dmdk

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமானது என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார். #admk #dmdk #parliamentelection

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அ.தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

    இந்த கண்காட்சியை கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் அமைச்சர் துரைகண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பட்டுகோட்டை எம்.எல்.ஏ. சி.வி.சேகர், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சியோடு கூட்டணி சேர மற்ற கட்சிகளோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் ஆத்மா எங்களை வழி நடத்துகிறது. இதனால் தான் 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட சிலரால் முடியவில்லை. எந்த கட்சி தான் எந்த கட்சியை விமர்சனம் செய்யாமல் இருந்துள்ளது. எனவே கூட்டணி என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு.

    தே.மு.தி.க. இடைதேர்தலில் எம்.எம்.ஏ. மற்றும் மாநிலங்களவையில் எம்.பி. சீட் கேட்பதால் தான் அவர்களுடன் கூட்டணியில் இழுபறி என கருத்து நிலவுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, இதையெல்லாம் நாங்கள் வெளியில் சொல்ல முடியாது. இது ரகசியமானது.

    கூட்டணி பற்றி ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு கருத்துகளை கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என்ன சொல்கிறார்களோ அது தான் கட்சியின் இறுதியான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #admk #dmdk #parliamentelection

    தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் இணையும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #DMDK
    தூத்துக்குடி:

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி வருகிறார். இதையொட்டி அங்கு நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 1-ந் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகைக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று வைகோ கூறியுள்ளார். கருப்பு கொடி வெத்து போராட்டமாக மாறி வருகிறது.

    வைகோவின் கருப்பு துண்டுக்கும் மரியாதை இல்லை. கருப்பு கொடிக்கும் மரியாதை இல்லை. அவர் கருத்துக்கும் மரியாதையும் இல்லை.

    தே.மு.தி.க. எங்களோடு நட்புறவோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். கூட்டணி அமைவது என்பது இரண்டாவது. அவர்கள் எங்களோடு நல்ல நட்புறவில் உள்ளனர். எங்கள் கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியும் இணைவார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    கிராம சபை கூட்டம் மூலம் ஸ்டாலின் புதியதாக மக்களை சந்தித்துவிட்டு ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டார். இப்போது அவருக்கு தெரிஞ்சிருக்கும் யார் ஆட்சிக்கு வருவார் என்று. நீங்கள் கிராம சபை கூட்டம் எப்படி கூட்டுகின்றீர்கள்? என்று மக்களுக்கும் தெரியும். மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்.

    பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த தொகுதிகளில் கூட்டணி கட்சி சார்பில் அ.தி.மு.க பேட்டியிடும். கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக வந்த தகவல் குறித்து நிருபர்கள் கேட்டபோது ‘கட்சி எந்த தொகுதியில் நிற்க சொல்லுகின்றதோ அங்கு நிற்பேன்’ என்றார்.

    முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் டுவிட்டரில் அழைப்பு விடுத்திருக்கிறாரே?

    பதில்:- நாங்கள் அரசியல் கட்சிகள் எல்லாம் இணைந்து கூட்டணி அமைத்து வெற்றிகரமாக தேர்தலை சந்திக்க இருக்கிறோம். நான் இந்த கருத்தைத்தான் சொல்ல முடியும்.

    அ.தி.மு.க.- பா.ஜனதா, பா.ம.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் மாற்று ஏற்பாடு எதுவும் தமிழகத்தில் பலன் தராது என்பது எனது கருத்து.

    கே:- மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்திவிட்டு அந்த கூட்டம் முடிந்தவுடனே அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது அவருக்கு தெரிந்து விட்டதாக சொல்கிறார்.

    ப:- நான் சொல்கிறேன், தமிழகத்தில் பா.ஜனதா - அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி அமைந்த பிறகு ஏறக்குறைய 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற சூழல் உருவாகி உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி தான் பலவீனமாக உள்ளது.

    கே:- ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்காததால் ஆதங்கத்தில் உள்ளார்களே?

    ப:- தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை பல கட்சிகளுடன் நடத்தினோம். இதில் சில கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படவில்லை.

    வருங்காலத்தில் சில கட்சிகள் கூட்டணியில் இணைக்கப்படலாம். அதை எல்லாம் பிற்காலத்தில்தான் முடிவு செய்ய முடியும்.

    கே:- தே.மு.தி.க.வுக்கு உரிய மரியாதை கொடுக்கும் கூட்டணியில்தான் இடம் பெறுவோம் என்று பிரேமலதா கூறி இருக்கிறாரே? பா.ம.க.வுக்கு கொடுத்த மரியாதை தே.மு.தி.க.வுக்கு கொடுக்கப்படவில்லையா?

    ப:- நாங்கள் எல்லா கட்சிகளுக்கும் மரியாதை கொடுக்கத்தான் செய்கிறோம். எங்கள் கூட்டணியில் எண்ணிக்கை பெரிதல்ல. எண்ணம்தான் பெரிது என்று நினைக்கிறேன்.

    அதனால்தான் பா.ஜனதா தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகக்தில் அ.தி.மு.க. கூட்டணிக்காக எண்ணிக்கையில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்தவில்லை. தமிழகத்தில் நல்ல கூட்டணி அமைய வேண்டும். அதற்காக இந்த முறை ஒன்றிரண்டு இடங்களை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை என்ற சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.

    அதனால் தே.மு.தி.க.வுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டணிக்கு அவர்கள் வந்தாலும் உரிய மரியாதை கொடுக்கப்படும் என்று எங்கள் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் சொல்லி உள்ளனர். மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேரிலும் இதை வலியுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #DMDK
    அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்மா வழியில், முதல்-அமைச்சர் மற்றும் துணை-முதல் அமைச்சர் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.

    இதனை கண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்கள், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் அம.மு.க.வில் இருந்து விலகி, மீண்டும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோடு அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில கட்சிகள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணியை பொருத்தவரை முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவு எடுப்பார்கள்.

    தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #DMDK
    சென்னை:

    கோயம்பேட்டில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லதே நடக்கும். இந்த கூட்டணி அமையக்கூடாது என எதிரிகள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது.

    பா.ம.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் வேலைகளை சிலர் செய்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே திரித்து கோபம் வரும் அளவுக்கு சிலர் கருத்து சொன்னாலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடு தேர்தலை சந்திப்போம். கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். இது தேர்தல் கூட்டணி. தி.மு.க.-காங்கிரசை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தே.மு.தி.க. குறித்து சொன்ன கருத்து கட்சி கருத்து அல்ல. இதற்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #DMDK

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக தே.மு.தி.க.வுடன் பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #DMDK
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை இந்திய விமானப்படை அழித்துள்ளது சரியான பதிலடி. வீரம், திறமை நிறைந்த விமானப்படைக்கு ஒரு இந்தியனாக எனது நன்றி.

    ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன். இதற்கு போன் வசதியும், மனதும் உண்டு.



    தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம். தேவைப்பட்டால் தான் தனித்து போட்டி. அதுக்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் கருத்து வேறுபாடு உடையவர்களுடன் கூட்டணி கிடையாது.

    21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். ரஜினி எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பாரா? அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு அளிப்பாரா? என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ஆதரவு குறித்து பேசுவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 28-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை விருப்ப மனு படிவம் வழங்கப்படும்.

    இதில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மட்டும் இல்லாது உறுப்பினர் அல்லாதவர்கள், சிறந்த எம்.பி. ஆக வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுவை ரூ.10 ஆயிரம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.

    அரசியலில் விமர்சனம் இயல்பு. கூட்டணி வைப்பது இயல்பு. ஆனால் கருத்து ஒத்துப்போவது என்பது மிக முக்கியம்.

    ‘பி டீம்’ என்பதற்கு சரியான பதிலடியாக மீண்டும் கெட்ட வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். செயலின் மூலம் பதிலடி இருக்கும்.

    அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பணத்திற்காகத்தான் என்று எழும் விமர்சனத்திற்கு மக்களின் எண்ணம் எதுவோ அதுவே எனது எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #DMDK

    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது தங்கள் கட்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் #ADMK #RajendraBalaji #DMDK
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இன்று நம்மிடம் இல்லாத நிலையில் கட்சியையும், ஆட்சியையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக வழி நடத்தி செல்கின்றனர்.

    ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை வாங்கி கொடுத்து முன்வாசல் வழியாக வைகோவை அழைத்து சென்ற கட்சி அ.தி.மு.க.தான். பம்பரம், மாம்பழம், தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்தது எல்லாமே புரட்சித் தலைவியால்தான் நடந்தது.



    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது எங்கள் கட்சிதான். தே.மு.தி.க.விடம் கூட்டணி பேச்சுவார்த்தை மரியாதை நிமித்தமாகதான் நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க.காரன் எதையும் கண்டு பயப்பட மாட்டான்.

    எதிரில் மதம் கொண்ட யானை வந்தால் கூட சிங்கம் போல் நின்று வென்று காட்டக்கூடிய திறமை அ.தி.மு.க.காரனிடம் உண்டு. எங்களிடம் எந்த கட்சியின் நாடகமும் செல்லு படியாகாது.

    46 வயது இளைஞன்தான் அ.தி.மு.க. ஆனால் டி.டி.வி.க்கு ஒரு வயது, தே.மு.தி.க.விற்கு 10 வயது, ம.தி.மு.க.விற்கு 14 வயது. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் ஓட்டே கிடையாது. எங்கள் கட்சியை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. அ.தி.மு.க. பலமான கட்சி.

    தி.மு.க.வினர்களை கொள்ளைகாரர்கள் என்று விமர்சனம் செய்த விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்ததில் உள்நோக்கம் உள்ளது. அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்த களிலும் மாபெரும் வெற்றி பெறும். எங்களிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது. இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #RajendraBalaji #DMDK
    தேர்தலுக்கு பின் தே.மு.தி.க. காணமல் போகும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார். #Congress #EVKSElangovan #DMDK
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுமை காலனியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்சி கொடியேற்று விழா மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்ராஜப்பா மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக் திருச்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக தான் பலமான கூட்டணி. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு கட்சிகள் விரைவில் இந்த அணியில் இணைகிறது.

    புதுச்சேரி உள்பட 40தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

    பிரதமர் மோடி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பொய் பேசுவதில் மோடி பெரிய புழுகன் என்றால், ராமதாஸ் ஜூனியர் மோடியாக உள்ளார்.

    மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதே போல் ராமதாசும் கொடுத்த பல வக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.



    பா.ம.க, பதவிக்கு வரும் போது தனது குடும்பத்தினர் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்று கூறினார். ஆனால் தன் மகனை மத்திய அமைச்சராக்கினார். அதிமுக ஊழல் கட்சி அதில் சேர மாட்டேன் என்று கூறினார்.

    ஆனால், தேர்தலுக்காக அரசியல் வியாபாரியாகவும், தரகராகவும், மாறிவிட்டார்கள்.

    அதிமுக, பாமக கூட்டணியை அவர்களின் கடசித் தொண்டர்களே ஏற்கவில்லை. கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    அதிமுக தனித்து நின்றால் கூட 40 தொகுதிகளில் டெபாசிட் பெறலாம். ஆனால் பாமக., கூட்டணியால் அதுவும் கிடைக்காது.

    தே.மு.தி.க.வுடன், பேச்சுவார்த்தை கடைசி வரை இழுபறியாக இருக்கும். தேர்தலுக்கு பின் தேமுதிக காணமல் போகும். புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தெரியாது. அதை ஒரு கட்சியாகவே நான் மதிப்பது இல்லை.

    திமுக- காங்., தொகுதி ஒதுக்கீடு பேசி முடிவெடுக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan #DMDK
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் படுதோல்வி அடையும் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk #dmk

    மதுரை:

    மதுரை பாண்டி கோவிலில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடங்கி வைத்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணபலம்தான் உள்ளது. மக்கள் பலம் இல்லை. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் எண்ணம் எடுபடாது. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிபெறும். அ.ம.மு.க. கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம்.


    ஜெயலலிதாவுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. அ.தி.மு.க.வை கேவலமாக விமர்சித்த பா.ம.க.வுடனான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி யாகும்.

    விஜயகாந்தின் உடல் நிலையை விசாரிக்க வரும் தலைவர்கள் குறித்து அவரது மகன் விமர்சிப்பது தவறான செயலாகும். அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகள் தேர்தலில் படுதோல்வி அடையும். அ.ம.மு.க. வெற்றி பெற்று தமிழக உரிமைகளை பெற பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk #dmk

    தேமுதிக மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.

    எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தகுதி உள்ளவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம்.



    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம். தே.மு.தி.க., இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. வேறு சிலபேர் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நல்லவர்கள் கூட நிற்பார்கள். எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kamalHaasan
    ×