search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96553"

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பிப். 5-ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். #swineflu #Rajasthanswineflu
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 5-ம் தேதிவரை 2,522 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு இன்றுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகமாக ஜோத்பூரில் 28 பேர் இறந்துள்ளனர் என்றும், 11, 811 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 2,522 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது என்றும் என அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #swineflu  #Rajasthanswineflu
    ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #RahulGandhi #CAtopper

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரை சேர்ந்தவர் ஷதாப் உசேன். இவரது அப்பா டெய்லராக வேலை பார்த்து வருகிறார். ஷஹாப் உசேன் சமீபத்தில் சிஏ தேர்வை முதல் முறையாக எழுதினார். 

    இதற்கிடையே, சிஏ தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. அதில் ஷதாப் உசேன் 800 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது 74.63 சதவீதமாகும்.



    இந்நிலையில், ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறுகையில், வாழ்த்துக்கள் ஷதாப். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் பயணத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #CAtopper
    ராஜஸ்தான் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல் மந்திரி சோக் கெலாட் அறிவித்துள்ளார். #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்.

    தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

    சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு ரே‌ஷன் கடையில் வழங்கப்படும். இதன்மூலம் ரூ.1.53 கோடி மக்கள் பயன் அடைவார்கள். சிறிய மற்றும் வயதான விவசாயிகள் தற்போது பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளனர். அவர்களும் பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்

    பால் கொள்முதல் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.2 போனஸ் வழங்கப்படும் 5 ஆயிரம் பால் பூத்துக்கள் திறக்கப்படும். விவசாயிகள் சிறப்பு சலுகையாக சிறிய கால கடன்தொகை வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி, நில வளர்ச்சி வங்கியில் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முற்பட்டோர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தானில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AshokGehlot

    ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. #Rajasthan #LocalbodyBypolls #BJP #Congress
    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தலைவர் பதவி மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கான தேர்தல் நடந்தது.

    இதில் ஆல்வார் மாவட்ட உள்ளாட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வெற்றி பெற்றது. மேலும், பில்வாரா, சுரு, டவுசா, டோல்பூர், கோடா, நகவுர், பாலி மற்றும் சிகார் உள்ளிட்ட 13 பஞ்சாயத்து ஒன்றியங்களில் பாஜக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இதேபோல், காங்கிரஸ் கட்சி 5 பஞ்சாயத்து ஒன்றியங்களில் வெற்றி பெற்றுள்ளது. #Rajasthan #LocalbodyBypolls #BJP #Congress
    ராஜஸ்தானில் 13 கேபினட் மந்திரிகள் மற்றும் 10 இணைமந்திரிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். #AshokGehlot #Sachinpilot
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து ராஜஸ்தானில் புதிய மந்திரிசபை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடந்தன. 200 சட்டசபை தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 15 சதவீதம் கணக்குபடி 30 எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளாக நியமனம் செய்ய முடியும்.

    அந்த அடிப்படையில் புதிய மந்திரிகள் நியமனத்திற்கான பட்டியலை முதல்-மந்திரி அசோக் கெலாட் தயாரித்தார். அந்த பட்டியலில் 40 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.

    அந்த பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது முதல் கட்டமாக மந்திரிசபையில் 23 பேருக்கு இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.



    அதில் 22 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். ஒருவர் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களது பெயர் பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் நேற்று இரவு டெல்லியில் இருந்து ராஜஸ்தான் திரும்பினார்கள்.

    இன்று மதியம் 12 மணியளவில் தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. 23 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    23 மந்திரிகளில் 13 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 10 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள்.

    புதிதாக பதவி ஏற்ற 23 மந்திரிகளும் இன்றே தங்களது அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினார்கள். ராஜஸ்தானில் 2-ம் கட்டமாக மேலும் ஒரு சில மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் மந்திரிசபையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் சச்சின் பைலட் மிகவும் தீவிரமாக இருந்தார். 50 சதவீத மந்திரி பதவிகளை கேட்டார். ஆனால் அசோக் கெலாட் அனுபவம் வாய்ந்தவர்களையே மந்திரிகளாக நியமிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்று உள்ளார்.

    இதனால் ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை புதிய மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர். #AshokGehlot #Sachinpilot
    இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #zikaVirus
    வாஷிங்டன் :

    இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கண்ட மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைரஸ் தாக்கினால், கடுமையான குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும். எனவே கர்ப்பிணிகள் அங்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. #zikaVirus
    ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். #MKStalin

    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான அசோக்கெலாட், அதன் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

    அதேபோல் மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோர் பதவி ஏற்பு விழா நாளை நடக்கிறது. இருவரின் பதவி ஏற்பு விழாவிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    இதற்காக மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கிறார். அங்கு ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் மத்திய பிரதேச மாநிலம் போபால் செல்கிறார். அங்கு முதல் மந்திரி கமல்நாத் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார். #MKStalin

    ராஜஸ்தானில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அம்மாநில ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது. #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியையும் சந்தித்தனர்.



    ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட்டையும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டையும் தேர்வு செய்தனர்.

    இதையடுத்து, முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அசோக் கெலாட் மற்றும் துணை முதல் மந்திரியாக தேர்வான சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து உரிமை கோரினர்.

    டிசம்பர் 17ம் தேதி அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடுவும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே, காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இரவில் அவர்கள் ஜெய்ப்பூர் திரும்பினர்.



    இதையடுத்து, ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட்டை தேர்வு செய்துள்ளனர்.

    மேலும் சச்சின் பைலட் துணை முதல் மந்திரியாகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்படுவார் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், புதிய முதல் மந்திரியை ராகுல் காந்தி தேர்வு செய்வார் என முடிவானது.

    இதற்கிடையே, காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இன்று காலை டெல்லி சென்றனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அதன்பின்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தினர்.



    இதையடுத்து, ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான அசோக் கெலாட் ஆகியோர் தங்களது தொண்டர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற தோல்வி குறித்து வசுந்தர ராஜே சிந்தியா கூறுகையில் மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை முதலே அங்கு காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    இறுதியில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியை ஏற்று, முதல் மந்திரி பதவியை வசுந்தர ராஜே சிந்தியா ராஜினாமா செய்தார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள். மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றியாகும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்றிரவு சுமார் 8 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த்தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
     
    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றி. இந்த வெற்றி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    ’சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றானவை, பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டவை.

    காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கான புதிய முதல் மந்திரிகளை தேர்வு செய்வது பெரிய காரியமல்ல. அது சுமுகமாக முடிந்துவிடும். எங்களை வெற்றிபெற வைத்த மாநில மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்து, அவர்கள் பெருமைப்படும் வகையில் அவற்றை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்.

    இந்த நாட்டின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுத்தபோது, ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயிகள் பிரச்சனை ஆகிய மூன்று விவகாரங்களை முன்வைத்து தேர்வு செய்தனர். பிரதமர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என்று மக்கள் மனதில் இருந்தது. ஆனால், இப்போது பிரதமரே ஊழல்வாதி என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.



    பா.ஜ.க.வை பற்றி நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை இந்த தீர்ப்பின் மூலம் பிரதமருக்கு மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு என்றொரு சித்தாந்தம் உள்ளது. அதை எதிர்த்து போராடி நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று அவர்களை நாம் தோற்கடித்து இருக்கிறோம். 2019-பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம். ஆனால், யாரையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    ×